ரம்யாவை காதலிக்கும் 3 நண்பர்கள். நட்புன்னா என்னானு தெரியுமா.?

New Project (4)வருகிற மே 17ஆம் தேதி 3 தமிழ் படங்கள் வெளியாகின்றன.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர். லோக்கல், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள மான்ஸ்டர் மற்றும் கவின் நடித்துள்ள நட்புன்னா என்னானு தெரியுமா ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

இதில் கவின் என்பவர் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் வேடத்தில் நடித்து பிரபலமானவர்.

நவீன் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். சிவா அரவிந்த என்ற புதுமுகம் இயக்கி உள்ளார்.

இவர்களுடன் அருண்ராஜா காமராஜா, இளவரசு, அழகம்பெருமாள், மன்சூரலிகான், மொட்ட ராஜேந்திரன், ரமா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

மூன்று நண்பர்களுக்கு ஒரே பெண்ணின் மீது காதல் வருகிறது. அதனால் அவர்கள் நட்பிலும் வாழ்க்கையிலும் ஏற்படும் பிரச்சினைகளை இப்படம் சொல்ல வருகிறதாம்.

யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தரண் இசையமைத்துள்ளார். லிப்ரா புரொடக்ஷன் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார்.

Overall Rating : Not available

Related News

‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படங்களை தொடர்ந்து…
...Read More
கவின், ரம்யா நம்பீசன் இணைந்து நடித்துள்ள…
...Read More

Latest Post