*சண்டி முனி* படத்திற்காக நட்ராஜ்-யோகிபாபு-மனீஷா கூட்டணி

*சண்டி முனி* படத்திற்காக நட்ராஜ்-யோகிபாபு-மனீஷா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nataraja Yogi Babu and Manisha yadav starring Chandi Muni updatesசிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு “சண்டிமுனி ” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் கதா நாயகனாக நட்ராஜ் நடிக்கிறார். கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார்.

மற்றும் மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர், அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ளசெந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா.எஸ்.செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் முனி 3 காஞ்சனா 2 படத்தில் உதவியாளராக பணியாற்றினார். இவர் இயக்கும் முதல் படம் இது.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 27 ம் தேதி பழனியில் துவங்குகிறது. தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடை பெற்று முடிவடைய உள்ளது.

படம் பற்றி இயக்குனர் மில்கா எஸ் செல்வகுமார் கூறியதாவது…

இது ஒரு ஹாரர் படம். நட்ராஜ் சண்டி என்கிற சிவில் இஞ்சினீயர் வேடத்தில் நடிக்கிறார். மனிஷா யாதவ் ராதிகா என்கிற ஆசிரியையாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஹாரர் காமெடியுடன் பேமிலி சப்ஜெக்ட்டாக சண்டிமுனி உருவாகுகிறது.

ஒரு பெண்ணுக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர்க்களமும் இவர்கள் இருவருக்கிடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் சண்டி என்கிற நட்ராஜ் கதாபாத்திரம்.

படத்தின் சுவாரஸ்யமாகவும் திகிலாகவும் இருக்கும் நான் பாடம் கற்றுக் கொண்ட இடம் அப்படி..ஒவ்வொரு காட்சியுமே கமர்ஷியல் கலக்கலாக இருக்கும் என்கிறார் மில்கா எஸ் செல்வகுமார்.

ஒளிப்பதிவு – செந்தில் ராஜகோபால்
இசை – ரிஷால் சாய்
எடிட்டிங் – புவன்
கலை – முத்துவேல்.
பாடல்கள் – வா.கருப்பன்
நடனம் – பிருந்தா, தினேஷ், சிவா லாரன்ஸ், சிவா ராக்
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்
தயாரிப்பு மேற்பார்வை – குமார்
தயாரிப்பு – சிவம் மீடியா ஒர்க்ஸ்

Nataraj Yogi Babu and Manisha yadav starring Chandi Muni updates

*ராட்சசன்* ஓடலேன்னா அடுத்த படமும் டில்லி பாபு சாருக்குதான் :- விஷ்ணு

*ராட்சசன்* ஓடலேன்னா அடுத்த படமும் டில்லி பாபு சாருக்குதான் :- விஷ்ணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vishnu Vishal talks about his movie Ratsasanராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் இணைந்து நடித்துள்ள படம் ராட்சசன்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நாயகன் விஷ்ணு விஷால் பேசியதாவது….

நல்ல கதையுள்ள படங்களை எடுக்கும் நோக்கத்தில் தான் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி இயங்கி வருகிறது. பொதுவாகவே திரில்லர், ஹாரர் படங்களின் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.

மரகத நாணயம் இயக்குனர் மூலம் தான் இந்த கதையை நான் கேட்க நேர்ந்தது. விஷ்ணு, அமலாவிடம் கதை சொல்லும்போது கொஞ்சம் பதட்டமாக இருந்த ராம், என்னிடம் கதையை மிகத்தெளிவாக சொன்னார், மிகச்சிறப்பான கதை.

இரண்டரை மணி நேரம் மிகவும் சீரியஸான, திரில்லர் படத்தை கொடுத்து ரசிகர்களை சீட்டில் உட்கார வைக்க முடியும் என்பதை ராம் நிரூபித்திருக்கிறார். படத்தின் ரிசல்ட்டை இப்போதே என்னால் உணர முடிகிறது.

காசு இருந்தால் யார் வேண்டுமானாலும் படத்தை எடுத்து விடலாம், ஆனால் அதை கொண்டு சேர்ப்பது தான் கஷ்டம். அதிர்ஷ்டவசமாக எங்கள் படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சார் ரிலீஸ் செய்கிறார்.

ஆக்சஸ் தொடர்ந்து நல்ல படங்களை எடுப்பதால் உங்களின் அடுத்தடுத்த படங்களையும் நானே ரிலீஸ் செய்கிறேன் என உறுதி அளித்திருக்கிறார்.

இந்த படத்தின் டீசர், டிரைலர் வந்தவுடன் பல்வேறு பிரபலங்கள் எங்களை பாராட்டினார்கள். அந்த அளவுக்கு படமும் நல்ல தரமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் டில்லி பாபு.

முண்டாசுப்பட்டி படத்தின்போதே, இயக்குனர் ராமிடம் நாம் இன்னொரு படம் பண்ணலாம் என்று கேட்டேன். அவர் கதை எழுதிட்டு இருக்கேன், கொஞ்சம் நேரம் ஆகும் என்றார். பின் அந்த கதை உங்களுக்கு செட் ஆகாது என்றார், எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

பின்னர் ரொம்ப நாள் கழித்து ஒரு நாள் என்னை அழைத்து கதையை சொன்னார், கதையில் ஆக்‌ஷன் அதிகமாகவே இருந்தது. எனக்கு அவ்வளவு ஆக்‌ஷன் செட் ஆகாது என்று கூறினேன்.

பல தடைகளுக்கு பிறகும் இந்த கதை என்னையே தேடி வந்தபோது தான் எனக்கு தான் இந்த கதை போல என்ற உணர்வு எழுந்தது. கதை ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நடக்கும்.

அதில் அமலா பால் கதாபாத்திரமும் ஒன்று. அவர் 25 நாட்களுக்கும் மேல் நைட் ஷூட்டிங்கில் நடித்துக் கொடுத்தார். படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் ரிலீஸ் நேர பயம் எனக்கு இல்லை.

இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், அப்படி படம் ஓடலைன்னா தயாரிப்பாளருக்கு அடுத்த படம் நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று இந்த மேடையில் சொல்லிக் கொள்கிறேன் என்றார் நாயகன் விஷ்ணு விஷால்.

Actor Vishnu Vishal talks about his movie Ratsasan aka Raatchasan

ratsasan team

 

நம்ம ஊரு திரில்லர்ன்னு பெருமையா சொல்லிக்கலாம்; *ராட்சசன்* பற்றி அமலாபால்

நம்ம ஊரு திரில்லர்ன்னு பெருமையா சொல்லிக்கலாம்; *ராட்சசன்* பற்றி அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We can proudly say Ratsasan movie as Namma ooru Thriller says Amalapaulஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ராட்சசன்’.

விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை முண்டாசுப்பட்டி வெற்றிப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அக்டோபர் 5ஆம் தேதி டரைடெண்ட் ஆர்ட்ஸ் மிக பிரமாண்டமாக இந்த படத்தை வெளியிடுகிறது. படத்தை பற்றி படக்குழுவினர் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்கும் முடிவில் நாங்கள் இருந்தோம். ராட்சசன் படத்தின் கதையை கேட்டு, இந்த படத்தில் நாங்களும் உங்களோடு சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்டோம். டில்லி பாபு சார் அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார்.

நாங்கள் பண விஷயத்தில் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் அதை பொறுத்துக் கொண்டார் டில்லி பாபு சார். இயக்குனர் ராம் என்ன கதை சொன்னாரோ, அதை விட மிகச்சிறப்பாக எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

நான் படம் பார்த்தேன், மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. கதை தெரியாத எனது நண்பர் ஒருவர் படம் பார்த்து விட்டு மிகப் பிரமாதமாக இருப்பதாக சொன்னார், அதுவே படத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன் என்றார் ஸ்கைலார்க் ஸ்ரீதர்.

பொதுவாக படங்களின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க எனக்கு பதட்டம் அதிகமாகி கொண்டே இருக்கும். ஆனால் இந்த படத்தின் மீதான நம்பிக்கையால் பயம் இல்லாமல் இருக்கிறேன்.

கதையை கேட்டவுடனே எனக்கு ரொம்பவே பிடித்தது. படத்தில் நடிகர்களின் நடிப்பு மிகச்சிறப்பாக இருக்கிறது, அது தான் பின்னணி இசையமைப்பில் எனக்கு உதவியாக இருந்தது என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

இந்த படத்தில் நடிக்கும் போதில் இருந்தே, படம் எப்போ ரிலீஸ் ஆகும் என ரிலீஸுக்காக ரொம்ப நாளாகவே காத்திருக்கிறோம். இயக்குனர் ராம் கதை சரியாக சொல்லவில்லை, பின் விஷ்ணு தான் அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர் என சொல்லி, அவரே கதையை எனக்கு விளக்கினார்.

கதை ரொம்பவே பிடித்தது. ராம் ரொம்பவே கடின உழைப்பாளி, நேரம் எடுத்து மிகவும் விரிவாக, தெளிவாக படத்தை எடுப்பார். சினிமாவில் எனக்கு அவ்வளவாக நண்பர்கள் கிடையாது, விஷ்ணு இந்த படத்துக்கு பிறகு எனக்கு நல்ல நண்பராகி விட்டார்.

நடிக்க வருபவர்களுக்கு விஷ்ணு ஒரு இன்ஸ்பிரேஷன். படத்துக்காக அவருடைய உழைப்பு அபரிமிதமானது. ஒட்டுமொத்த படக்குழுவும் படம் சிறப்பாக வருவதற்கு தங்கள் பங்களிப்பை கொடுத்திருக்கிறது.

திரில்லர் படம் என்றாலே ஹாலிவுட்டுடன் ஒப்பிடுவார்கள், ஆனால் இது நம்ம ஊரு திரில்லர் படம் என்று சொல்லும் அளவுக்கு நேட்டிவிட்டியுடன் இருக்கும். திரில்லர் படங்களில் இது ஒரு பெஞ்ச்மார்க்காக இருக்கும் என்றார் நடிகை அமலா பால்.

We can proudly say Ratsasan movie as Namma ooru Thriller says Amalapaul

தியேட்டரில் படம் பார்க்கும் யாரையும் *ராட்சசன்* ஏமாற்றாது… : ராம்குமார்

தியேட்டரில் படம் பார்க்கும் யாரையும் *ராட்சசன்* ஏமாற்றாது… : ராம்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ratsasan will not cheat any audience says Director Ramkumarமுண்டாசுப்பட்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு ராம்குமார் இயக்கியுள்ள படம் ‘ராட்சசன்’.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் முதன்முறையாக
இபடத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டைரக்டர் ராம்குமார் பேசியதாவது…

ராட்சசன் படத்தின் டீசர், டிரைலர் பார்த்து விட்டு எல்லோரும் சொன்ன கமெண்ட்ஸ் பார்த்து படத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.

முண்டாசுப்பட்டி படத்துக்கு பிறகு இந்த கதையை கிட்டத்தட்ட 20 தயாரிப்பாளர்கள் மற்றும் 17 ஹீரோக்களிடம் சொல்லி விட்டேன்.

சீரியஸ் படம் என்ற உடனே அவர்கள் யோசித்து சொல்கிறேன் என சொல்லி விட்டார்கள். ஆனால் டில்லி பாபு சார் தான் என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார்.

விஷ்ணு என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். படத்தை பார்க்கும்போது இந்த குழுவின் உழைப்பை நீங்கள் உணர்வீர்கள். ராதாரவி, நிழல்கள் ரவி சார் ஆகியோரின் குரலுக்காகவே இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம்.

அமலா பால் ரீ-டேக் வாங்கவே மாட்டார். அவருக்கு காட்சிகள் குறைவு என்றார்கள், ஆனால் அழுத்தமான கதாபத்திரமாக இருக்கும்.

காளி வெங்கட், ராமதாஸ் இருவருமே நல்ல நடிகர்கள். இந்த படத்தின் வெற்றியில் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு பாதி பங்கு உண்டு, பின்னணி இசை மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

மனதளவிலும், உடலளவிலும் சோர்ந்து போனாலும் எனக்கு சிறந்த பங்களிப்பையே செய்தார் எடிட்டர் ஷான் லோகேஷ். பிவி சங்கர் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும். இந்த படம் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் அருண்ராஜா காமராஜ்.

திரையரங்கில் போய் பார்க்கும் யாரையும் இந்த படம் ஏமாற்றாது என்றார் இயக்குனர் ராம்குமார்.

இந்த விழாவில் நடிகர் காளி வெங்கட், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், கலை இயக்குனர் கோபி ஆனந்த், ஒளிப்பதிவாளர் பிவி சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Ratsasan will not cheat any audience says Director Ramkumar

ratsasan audio launch

ரூ. 80 கோடி சொத்தை ஏழுமலையானுக்கு எழுதிய *அர்ஜுன் ரெட்டி* நடிகை

ரூ. 80 கோடி சொத்தை ஏழுமலையானுக்கு எழுதிய *அர்ஜுன் ரெட்டி* நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Famous actress Kanchana wrote her 80 Crores property to Lord Balaji1960 மற்றும் 70 -களில் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 150–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார் நடிகை காஞ்சனா.

இப்போது அவருக்கு 80 வயதாகிறது.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு பாட்டியாகவும் நடித்து இருந்தார்.

இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கையை பற்றி அவர் கூறியுள்ளதாவது…

‘‘நான் சினிமாவுக்கு வருவதற்கு முன் ஏர் ஹோஸ்ட்டராக இருந்தேன். பின்னர்தான் காதலிக்க நேரமில்லை படத்தில் என் பெயரை காஞ்சனா என மாற்றி நாயகியாக்கினார் ஸ்ரீதர்.

அதன்பின்னர் நிறைய மொழிகளில் 46 ஆண்டுகள் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து நடித்தேன்.

எனக்கு திருமணம் செய்து வைப்பதைக்கூட பெற்றோர்கள் மறந்துவிட்டனர். எனவே நானும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்துவிட்டேன்.

நான் சம்பாதித்த பணத்தில் சென்னை தி.நகரில் சொத்துக்கள் வாங்கினேன். ஆனால் எனது உறவினர்கள் அந்த சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர்.

எனவே அவற்றை மீட்க கோர்ட்டு வழக்கு என பல வருடங்கள் போராடி அலைந்தேன்.

சொத்துக்கள் மீண்டும் கிடைத்தால் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு எழுதிவைப்பதாக அப்போது வேண்டிக்கொண்டேன்.

தற்போது என் வேண்டுதலின்படி சொத்துக்கள் கிடைத்துவிட்டன.

உடனே ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிட்டேன்.

நான் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக சில தினங்களாக செய்திகள் வெளியானது. எனது தங்கை என்னை நன்றாக கவனித்துக்கொள்கிறார்.

இன்னொரு மனித பிறவி வேண்டாம் என்று கடவுளிடம் வேண்டியிருக்கிறேன்.’’ இவ்வாறு காஞ்சனா கூறினார்.

Famous actress Kanchana wrote her 80 Crores property to Lord Balaji

old actress Kanchana

பாடல் எழுதி பாடி நடித்து அசத்திய *ஹானஸ்ட்லி* ஆண்ட்ரியா

பாடல் எழுதி பாடி நடித்து அசத்திய *ஹானஸ்ட்லி* ஆண்ட்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Andreas single Honestly Music Video Releasedபிரபல நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியாவின் (Honestly) “ஹானஸ்ட்லி” ஆல்பம் சாங் கடந்த வாரம் வெளியானது.

இந்த வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பாடலை ஆண்ட்ரியாவே எழுதி பாடி நடித்தும் இருந்தார்.

இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா ஜெரிமியா (guitarist ) ஆகியோரும் இப்பாடலில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து பணியாற்றினர்.

யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களை ஆண்ட்ரியா பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Actress Andreas single Honestly Music Video Released

https://www.filmistreet.com/video/honestly-music-video-the-jeremiah-project/

More Articles
Follows