*ஓடு ராஜா ஓடு* படத்திற்காக தெருத் தெருவாக ஓடிய நடிகர் சங்க தலைவர்

actor nassarவிஜய் மூலன் டாக்கீஸ் தயாரிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் என இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள படம் ஓடு ராஜா ஓடு.

இப்படத்தில் ஜோக்கர் படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த குருசோமசுந்தரம் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் நாசர், ‘லென்ஸ்’ அனந்த்சாமி, லட்சுமி பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் செட்டப் பாக்ஸ் பிரச்சினையை சொல்வதுடன் சமூக விழப்புணர்வை ஏற்படுத்தும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிடி. செல்வகுமார் பெற்றுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது விழா மேடையில் நடிகர் நாசர் பேசும்போது தன் பட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

“இப்போது சினிமாவுக்கு வரும் இயக்குநர்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் வித்தியாசமான படங்கள் நிறைய வருகின்றன.

எல்லாப் படத்திற்கும் நாம் முழு உழைப்பையும் தந்துவிட மாட்டோம். ஒருசில படங்கள் மட்டுமே நாம் ஈடுபாட்டுடன் நடிக்கும் வகையில் இருக்கும். அந்தவகையில் இப்படத்தில் நான் அதிக ஈடுபாட்டுடன் நடித்தேன்.

படத்தலைப்பைப் போலவே, படப்பிடிப்பில் பல நாட்கள் நானும் தெருத்தெருவாக ஓடினேன்.

இலவசமாக எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கிறதோ, அங்கெல்லாம் ஓடினோம்” என நாசர் பேசினார்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

அறிமுக கதாநாயகியாக தான் நடித்த 'ஜோக்கர்…
...Read More
காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன்-மனைவியின்…
...Read More
எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ்…
...Read More

Latest Post