அனைத்தையும் மக்களுக்கே கொடுத்த ரியல் சூப்பர் ஸ்டார்

அனைத்தையும் மக்களுக்கே கொடுத்த ரியல் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nana patekar stillsஇன்றும் ஒரு விவசாயி தற்கொலை…. கடந்த சில ஆண்டுகளாக வறட்சியில் தவிக்கும் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் தினச்செய்தி இதுதான்.

இயற்கை கொடுத்த இந்த வறட்சியை தடுக்க அரசாங்கத்தாலும் முடியவில்லை.

எனவே தன் சொந்த மாநில மக்களுக்காக களத்தில் இறங்கினார் நடிகர் நானா படேகர்.

தமிழில பாராதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் இவர் நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சில காலம் சினிமாவை ஒதுக்கி வைத்துவிட்டு, தன் சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து ‘நாம் ‘ என்ற அறக்கட்டளையை தொடங்கினார்.

தான் சம்பாதித்த பணம் மற்றும் வசூலான பணம் என அனைத்தையும் மக்களுக்கே கொடுத்தார்.

தானே களத்தில் இறங்கி 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு உதவினார்.

உதவிய பணம் போக எஞ்சிய பணத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களை தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுத்துவிட்டது குறித்து கேட்டால்.. ‘இப்போதுதான் என் பிறப்பின் அர்த்தத்தை உணர்கிறேன்.” என்கிறார்.

இப்போ சொல்லுங்க, இவர் நிஜ சூப்பர் ஸ்டார்தானே…

கமலை பார்க்க விடாமல் ரஜினிக்கு தடா

கமலை பார்க்க விடாமல் ரஜினிக்கு தடா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and rajini stillsகடந்த ஜூலை 13ஆம் தேதி தன் அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்தார் கமல்ஹாசன்.

இதனையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது ஓய்வில் இருக்கிறார்.

தன் நீலாங்கரை வீட்டில் ஓய்வெடுக்க கமல் நினைத்தார்.

ஆனால் ஆஸ்பத்தியிலேயே ஒய்வு எடுக்குமாறு அவரை டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் இவரது உடல் நலம் குறித்து கமலின் உறவினர் சுஹாசினி லதா ரஜினியிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனால் கமலை உடனே சந்தித்து ஆறுதல் சொல்ல வேண்டும் என நினைத்தாராம் ரஜினி.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு சென்றால் இன்ஃபெக்‌ஷன் ஆகும் என ரஜினியின் குடும்ப டாக்டர்கள் அனுமதி கொடுக்கவில்லையாம்.

எனவே கமலை செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் சொல்லி இருக்கிறார் ரஜினி.

சிம்புவுடன் கைகோர்க்கும் கீர்த்தி சுரேஷ்

சிம்புவுடன் கைகோர்க்கும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and keerthy sureshசிவகார்த்திகேயனுடன் இணைந்த ‘ரஜினி முருகன்’ சூப்பர் ஹிட்டடித்தை தொடர்ந்து டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

விஜய்யின் தளபதி 60, தனுஷின் ‘தொடரி’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ (AAA) படத்தில் சிம்புவுடன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் சிம்பு மூன்று வேடம் ஏற்பதால் இவரையும் ஒரு நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம்.

பேச்சுவார்த்தைகள் முடிந்தவுடன் அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

தயாரிப்பாளராக தனுஷ் எடுத்த ‘தில்’லான முடிவு

தயாரிப்பாளராக தனுஷ் எடுத்த ‘தில்’லான முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush stillsகோலிவுட் முதல் பாலிவுட் வரை சென்று பிஸியாக இருக்கும் தனுஷ், அவ்வப்போது தரமான படங்களையும் தயாரித்து வருகிறார்.

எனவே தன்னுடைய படங்களின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளுக்காக ஒரு புதிய ஸ்டூடியோவை திறந்துள்ளார்.

சென்னை, அடையாறில் அமைந்துள்ள இந்த ஸ்டூடியோ ரூ. 10 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.

இவரின் படங்களின் எடிட்டிங், டப்பிங், பாடல் ரெக்கார்ட்டிங், பின்னணி இசை என அனைத்தும் தேவைக்கும் பணிகளையும் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இவையில்லாமல் மற்ற படங்களின் பணிகளுக்கும் இங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிம்பு-கெளதம் மேனன் பேச்சுவார்த்தை; இனி தள்ளிப் போகாதே…

சிம்பு-கெளதம் மேனன் பேச்சுவார்த்தை; இனி தள்ளிப் போகாதே…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and gautam menon stillsகெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘அச்சம் என்பது மடமையடா’.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ‘ஒன்றாக என்டர்டெயின்மன்ட்’ சார்பாக கெளதம் மேனன் தயாரித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் நிலையில், திடீரென கெளதம் மேனன் – சிம்பு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் பெரும் ஹிட்டடித்த பாடலான தள்ளிப் போகாதே பாடல் இல்லாமல் படம் வெளியாகும் என செய்திகள் வந்தன.

இந்நிலையில் இருவரும் பேசி சமாதானம் ஆனதை தொடர்ந்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது.

எனவே ‘தள்ளிப் போகாதே’ பாடல் படமாக்கப்பட்டு விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க உள்ளனர்.

கபாலியால் மோகன்லாலுக்கு எத்தனை கோடி லாபம்.?

கபாலியால் மோகன்லாலுக்கு எத்தனை கோடி லாபம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mohanlal got profit from Kabali theatrical rights in Keralaரஜினி நடித்த கபாலிக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாக படத்தின் கேரள உரிமைக்கு பலத்த போட்டி எழுந்தது.

எனவே ரூ. 7.8 கோடி கொடுத்து மோகன்லால் இப்படத்தை வாங்கினார்.

கேரளாவில் உள்ள 400 தியேட்டர்களில் 306 தியேட்டர்களில் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக வெளியிட்டார்.

கபாலி வெளியாகி ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 10.5 கோடியை வசூல் செய்து கொடுத்திருக்கிறதாம்.

மேலும் ‘ஜனதா காரேஜ்’ என்ற தெலுங்கு படத்தில் ஜுனியர் என்டிஆருடன் நடித்திருக்கும் மோகன்லால் அப்படத்தின் சம்பளத்தின் ஒரு பகுதியாக விநியோக உரிமையையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows