ரஜினிக்கு அரசியல் செட்டாகாது; காலா பட கலைஞர் நானா படேகர் பேட்டி

ரஜினிக்கு அரசியல் செட்டாகாது; காலா பட கலைஞர் நானா படேகர் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Nana Patekarரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து வரும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

இப்படத்தின் டப்பிங் பணிகளில் ரஜினிகாந்த் கலந்துக கொண்டதை பார்த்தோம்.

இந்நிலையில் காலா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நானா படேகர் அவர்கள் ரஜினியின் அரசியல் வருகை பற்றி கூறியுள்ளதாவது…

நம் நாட்டில் இன்றைய ஜனநாயகம் மோசமாக உள்ளது.

தற்போது ரஜினி அரசியலுக்கு வருகிற்றார். அவர் மிகவும் எளிமையான நல்ல மனிதர். அவருக்கு அரசியல் செட் ஆகாது” என தெரிவித்துள்ளார்.

மு.களஞ்சியத்தின் முந்திரிக்காடு படத்தில் முக்கிய வேடத்தில் சீமான்

மு.களஞ்சியத்தின் முந்திரிக்காடு படத்தில் முக்கிய வேடத்தில் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanதமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு

இப்படத்திற்கு முந்திரிக்காடு“ என பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – G.A. சிவசுந்தர்

இசை – A.K. பிரியன். ( இவர் A.R.ரகுமானின் இசைப்பள்ளி மாணவர் 17 வயது கொண்ட இளைஞர் )

பாடல்கள் – கவிபாஸ்கர் / எடிட்டிங் – எல்.வி.கே.தாஸ்

கலை – மயில்கிருஷ்ணன் / ஸ்டன்ட் – லீ.முருகன்

தயாரிப்பு மேற்பார்வை – டி.ஜி. ராமகிருஷ்ணன்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – மு.களஞ்சியம்.

படம் பற்றி இயக்குனர் பேசியதாவது…

முந்திரிக்காட்டு மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை இதில் பதிவு செய்கிறோம்.

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார். படத்தின் இயக்குனர் மு.களஞ்சியம், படத்தின் நாயகன் புகழ், நாயகி சுபபிரியா, இசையமைப்பாளர் A.K. பிரியன், ஒளிப்பதிவாளர் G.A. சிவசுந்தர், நடிகர் கலைசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். படம் விரைவில் வெளியாக உள்ளது.

மிருகம் போல மன்சூரலிகான் நடிக்கும் கடமான்பாறை; அவரது மகனும் நடிக்கிறார்

மிருகம் போல மன்சூரலிகான் நடிக்கும் கடமான்பாறை; அவரது மகனும் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mansoor ali khan in kadaman paraiதமிழ் சினிமாவில் அதிரடி வில்லனாக கலக்கியவர் மன்சூர் அலிகான்.

இதுவரை அனைத்து மொழிகளிலும் இவர் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

மேலும் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.

இந்நிலையில் அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மிளா, கனல்கண்ணன், முல்லை, கோதண்டம், கலக்க போவது யாரு பழனி, பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மகேஷ்.T / இசை = ரவிவர்மா

பாடல்கள் – சொற்கோ, ரவிவர்மா, மன்சூரலிகான்

கலை – ஜெயகுமார் / நடனம் – சந்துரு, சிவா, ஜெயா, சம்பத்ராஜ்

ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்

ஆக்கம் , இயக்கம் – மன்சூரலிகான்.

படம் பற்றி இயக்குனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்…

கலூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது.

செல்போன், மார்டன் டெக்னாலஜி அவர்களை தவறான வழிக்கு கொண்டு போகிறது. அப்படி தவறான வழியில் போகும் இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப் பட்டு எப்படி அமைகிறது என்பதே இந்த படத்தின் கரு. நகைச்சுவை கலைந்த திரில்லர் படமாக கடமான் பாறை உருவாகி வருகிறது.

படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

இந்த படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களுக்கு நடனமாட நாயகன் அலிகான் துக்ளக்கிற்கு இணையான இன்னொரு நாயகியை தேடிக்கொண்டிருக்கிறோம். விரைவில் அந்த பாடல்களுக்கான படப்பிடிப்பு நடைபெறும் என்றார் மன்சூரலிகான் .

விக்ரம் பிரபு- நிக்கி கல்ராணி-பிந்து மாதவி இணையும் பக்கா

விக்ரம் பிரபு- நிக்கி கல்ராணி-பிந்து மாதவி இணையும் பக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pakka Movie imagesஅதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “
விக்ரம்பிரபு நாயகனாக நடிக்க. கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.

முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.

S.S.சூர்யா என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

முழு நீள காமெடி படமாக உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ திருவிழாவை பார்த்திருபோம்.

ஆனால் நாங்கள் ஒரு திருவிழாவையே படமாக எடுத்திருக்கிறோம்.

இன்டீரியல் காட்சிகள் ( சுவற்றிற்குள்) இல்லாமல் படம் முழுக்க எக்ஸ்டீரியல் என்று சொல்லப்படும் வெளிப் புறங்களிலேயே படமாக்கப் பட்ட முதல் படம் இந்த பக்கா.

கள்ளக்குறிச்சி அருகில் உள்ள செம்படாப் குறிச்சி என்ற ஊரில் ஒரிஜினல் திருவிழாவே நடத்தி இசையமைப்பாளர் சத்யாவை அழைத்துச் சென்று இரவு முழுக்க அவரை பார்க்க வைத்து ஒரு கரகாட்ட சாங்கை கம்போஸ் பண்ணினோம். அந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும் பாடலாக நிச்சயம் இருக்கும்.

குற்றாலம் பக்கத்தில் ஒரு ஆற்றில் 1000 பேரை வைத்து ஆற்று திருவிழாவில் ஒரு வித்தியாசமான காட்சிகளை தத்ரூபமாக படமாக்கினோம். படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா.

ஒளிப்பதிவு – எஸ்.சரவணன் / இசை – C.சத்யா / பாடல்கள் – யுகபாரதி, கபிலன்

ஒரே அறையில் 5 வருடங்கள் அடைந்து கிடந்த கீ பட டைரக்டர் காலீஷ்

ஒரே அறையில் 5 வருடங்கள் அடைந்து கிடந்த கீ பட டைரக்டர் காலீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Kalees open talks about his Kee movie Starring Jiiva Nikki Galraniகாலீஷ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள படம் கீ.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் காலீஷ் மனம் திறந்து பேசியவை…

” இப்படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பன் சாருக்கு என் முதல் நன்றி.பல வருடமா இப்படத்த தயாரிக்க யாருமே முன் வரல.

ஒரு அறைக்குள் 5 வருடங்கள் தனியாக அடைந்துகிடந்தேன்.இறுதியா மைக்கேல் ராயப்பன் சார் தயாரிக்க ஒத்துக்கிட்டாரு. ஜிவா, நிக்கி கல்ராணி மற்றும் அனைவரும் நன்றாக ஒத்துழைத்து நடித்துள்ளார்கள்.

தயாரிப்பாளர்கள் எங்களை போல இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்து உதவுங்கள். பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ‘ கீ ‘படக்குழு சார்பாக நன்றிகள்.”

படத்தின் நாயகன் ஜிவா பேசியவை “படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தை மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா நடித்துள்ளார். மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.

நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.படத்திற்கு விஷால் அருமையாக இசையமைத்துள்ளார்.அருமையான கதையைக் கொண்டது இத்திரைப்படம்.

தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமையும்.தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பனுக்கும் மற்றும் இயக்குனர் காலீஷ் அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.”

விழாவில் நடிகை நிக்கி கல்ராணி பேசியவை “இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அவர்களுக்கும், காலீஷ் அவர்களுக்கும் நன்றி.ஜிவா மற்றும் பலருடன் இப்படத்தில் நடித்துள்ளேன்.

மகிழ்ச்சியாக உள்ளது.சமூகத்திற்கு நல்கக் கருத்தை தரும் படமாக அமையும்.தற்போது சமூகத்தில் பெண்கள் இருக்கும் ஓர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.விஷால் சூப்பரா மியுசிக் போட்டுக்காரு.”

“இப்படத்தில் இசையமைக்க என்னை பரிந்துரை செய்த R.J பாலாஜி அவவர்களுக்கு நன்றி.
வாய்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி.பாட்டு எல்லாமே அருமையாக
வந்துள்ளது.

உங்க அனைருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் அமையும்.பாடல்களை அழகாகக எழுதிய தாமரை,கார்கி,அமுதவன்,சுபு ஆகியோர்க்கு என் நன்றிகள்.” இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் கூறினார்.

இசை வெளியீட்டு விழாவில் கோவிந்த் பத்மசூரியா பேசியது…

” தமிழில் எனக்கு இது முதல் படம்.நான் ஜிவா படங்கள் நிறைய பாத்துருக்கேன். நான் அவருடைய ரசிகன். படப்பிடிப்பு துவங்கும் 2மாதங்களுக்கு முன்பே ட்டிரைலர்.ரெடி பண்ணிட்டாங்க.

நா ரொம்பவே வியந்தேன்.படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனருக்கும், தயாரிப்பயாளருக்கும் எனது நன்றி.விஷால் மிக அருமையாக மியூசிக் போட்டுள்ளார்.”

இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கூறியது…

“இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் பிரமாண்டமா இருக்கு.நண்பன் ஜீவாவிற்கு எனது வாழ்த்துக்கள்.

நிக்கி கல்ராணி மற்றும் இசையமைப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இயக்குனர் காலீஷ் அவர்களின் முதல் படத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் அவர்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து வளர வேண்டும்.”

இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசியவை

” படத்தின் பாடல்கள் மற்றும் ட்டிரைலர் பார்த்தேன்.மிக அற்ப்புதம் இருக்கு .படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.”

இசை வெளியீட்டு விழாவில் பேசிய R.B உதயகுமார் கூறியது

“சுகாசினியும் நானும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்கள்.

இந்த படம் போஸ்டர்களை பார்க்கும்போதே தெரிகிறது.தற்ப்போது இருக்கும் தலைமுறையினருக்கு நல்லக் கருத்தை தரும் படமாக அமையும்.ப்ளூ வேல் கேம் மாதிரி ஒரு ஆபத்தான விளையாட்டை எதிர்கொள்வதால் ஏற்ப்படும் விளைவுகளை இத்திரைப்படம் தெரிவிக்க உள்ளது.

இசையமைப்பாளர், இயக்குனர் மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.”

“இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்தத மைக்கல் ராயப்பன் அவர்களுக்கு நன்றி.படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்று இசை வெளியீட்டு விழாவில் இமான் அண்ணாச்சி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கே.வி ஆனந்த் பேசியவை” இசை வெளியீட்டு விழாவிற்க்கு என்னை அழைத்ததற்க்கு நன்றி.
ஜிவா திறைமையுள்ள நடிகர், விஜய் சேதுபதியும் அப்படித்தான்.ஜிவா பிஞ்சிலேயே பழுத்தவர்.விஜய் சேதுபதி பழுத்து பிஞ்சானவவர். பாடல்களும் காட்ச்சியமைப்பும் மிகவும் பிரமாண்டமாக உள்ளது.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகருக்கும், இயக்குனர் காலீஷ் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.தைரியமாக படத்தை தயாரிக்க முன் வந்த மைக்கல் ராயப்பனுக்கும் எனது வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் அபி நந்தன் மிகச் சிறப்பான வேலையை செய்துள்ளார்.

“38 வருடங்களுக்கு முன்பு படத்தில் நடிக்கும் போது எப்படி ஒரு படபடப்பு இருந்ததோ அதேபோல் தற்போது இப்படத்தில் நடிக்கும்போதும் இருந்தது.

பழைய காலங்களில் பெரியவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டோம்.தற்போது காலீஷ் போன்ற அறிமுக இயக்குனர்களான சிறியவர்களிடம் கற்றுக்கொள்கிறோம்.படத்தில் அனைவருடனும் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் ” என நடிகை சுகாசினி பேசினார்.

இத்திரைப்படம் பிப்ரவரி 9ம் தேதி திரைக்கு வெளிவர இருக்கிறது.

Director Kalees open talks about his Kee movie Starring Jiiva Nikki Galrani

Kee movie audio launch photos (8)

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன்-2 குறும்பட போட்டி 2ஆம் ஆண்டு அறிவிப்பு விழா

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன்-2 குறும்பட போட்டி 2ஆம் ஆண்டு அறிவிப்பு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Moviebuff First Clap Season 2 Launch eventமூவி பஃப் மற்றும் 2-டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து ‘ஃபர்ஸ்ட் கிளாப் சீசன்-2’ என்ற குறும் பட போட்டியை இரண்டாவது ஆண்டாக இந்தாண்டு நடத்தவிருக்கின்றன.

இதன் அறிவிப்பு விழா இன்று மாலை சென்னை ஜி.ஆர்.டி. கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னணி இயக்குநர்களான ராம், கார்த்திக் நரேன், நித்திலன், அருண் பிரபு புருஷோத்தமன் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான அரவிந்த் பேசுகையில், “தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த குறும் பட போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்க விழாவிற்கு வருகை தந்த இளம் தலைமுறை இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய கதைகளம், புதுமையான கதை சொல்லல், திறமையான படைப்பாளிகளை அடையாளம் காணுதல் போன்ற நோக்கங்களைக் கொண்டே இந்த குறும் பட போட்டியை தொடங்கியிருக்கிறோம்.

தற்போது உலகம் முழுவதுமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கதையை குறும் படமாக்கலாம். தங்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற அனுபவத்தை வைத்து ரசிகர்களை பரவசமடையச் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். இதற்கான பாதையைத்தான் நாங்கள் திறந்திருக்கிறோம்.

இதற்கு எங்களுடன் நடிகர் சூர்யாவின் 2-டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் தங்களுடைய பங்களிப்பை அளித்திருக்கிறது. இந்த குறும் படங்களுக்கு தேவையான தொழில் நுட்ப உதவியை அளிக்க நாக் ஸ்டுடியோஸ் முன் வந்திருப்பதையும் நாங்கள் மனதார வரவேற்கிறோம்.

சீசன்-1 இல் வெற்றி பெற்ற இளம் இயக்குநர் ஆனந்த் என்பவர் தற்போது முன்னணி நடிகர் ஒருவரை வைத்து திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் என்பதை பெருமிதத்துடன் சொல்ல விரும்புகிறோம்.

அத்துடன் கடந்த ஆண்டில் நடைபெற்ற குறும் பட போட்டியில் வெற்றிப் பெற்ற ஐந்து திரைப்படங்கள் தமிழகம் முழுவதும் உள்ள நாற்பதிற்கும் மேற்பட்ட நகரங்களில் இருக்கும் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதனை முப்பத்தைந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டு பாராட்டியிருக்கிறார்கள்.

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2-வில் மூன்று நிமிட கால அளவிற்குள் குறம் படத்தை அனுப்ப வேண்டும். போட்டியில் முதலிடத்திற்கு தேர்ந்தெடுப்பவர்களுக்கு மூன்று இலட்ச ரூபாயும், இரண்டாமிடத்தை வென்றவருக்கு இரண்டு லட்ச ரூபாயும், மூன்றாமிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு ஒரு லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.

முதலிடத்தை வென்ற போட்டியாளருக்கு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2-டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தில் தங்களின் கதை மற்றும் திரைக்கதையை கூற வாய்ப்பு அளிக்கப்படும். அத்துடன் அந்நிறுவனம் தயாரிக்கும் படங்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும்…” என்றார்.

இயக்குநர் ராம் பேசுகையில், “மக்களையும், படைப்பாளிகளையும் பரவசப்படுத்தும் இடமாக இன்றும் திரையரங்கம் மட்டுமேயிருக்கிறது. பெரிய திரை, சுற்றிலும் இருட்டு, நவீன ஒலியமைப்பு என பல விசயங்களை சொல்லலாம். ஆனால் குறும்படம் என்பது வேறு வகையிலான கலை வடிவம்.

இங்கு குறும்படம் என்பது பெரிய படங்களை இயக்குவதற்கான ஒத்திகையாகவும், முன் அனுபவமாகவும்தான் இருக்கிறது. அதனால் குறும் படங்கள் கோடம்பாக்கத்தையே சுற்றி சுற்றி வருகிறது.

இதை தவிர்த்து நீங்கள் கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை என எங்கேயிருந்தாலும், உங்களுடைய கதையை குறும் படமாக எடுத்தால், அது இந்த போட்டியில் வெற்றி பெற்றால், அது பெரிய திரையில் திரையிடப்படக் கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த போட்டியில் வெற்றிப் பெற்ற படத்தை தமிழகத்தில் மட்டும் திரையிடாமல் இந்தியா மற்றும் உலக அளவிலான அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்த தருணத்தில் முன்வைக்கிறேன்.

ஏனெனில் கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, யாழ்ப்பாணம் என பல இடங்களிலும் திறமையான இளம் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்கினால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்…” என்றார்.

Moviebuff First Clap Season 2 Launch event

knack studios

More Articles
Follows