‘சூப்பர் ஸ்டாருடன் எடுத்த செல்ஃபி வைரலானது..’ – நமீதா ‘மகிழ்ச்சி’

‘சூப்பர் ஸ்டாருடன் எடுத்த செல்ஃபி வைரலானது..’ – நமீதா ‘மகிழ்ச்சி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

namithaபொதுவாக ஹீரோக்கள் தான் உடலை இளைக்கவும் ஏற்றவும் ரிஸ்க் எடுப்பார்கள். சிக்ஸ் பேக் கூட வைப்பார்கள்.

ஆனால் ஹீரோக்களை போல, நடிகை நமீதா, தான் நேசிக்கும் சினிமாவுக்காக இதுபோன்ற ரிஸ்க்கை எடுத்துள்ளார்.

தனது ரீ எண்ட்ரிக்காக சுமார் 20 கிலோ அளவுக்கு தனது உடலை இளைத்து ஆச்சர்யப்படுத்தினார்.

’இனி படங்களை​த்​ தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று சொன்னவர் தேர்வு செய்து நடித்த படம் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ​”​புலிமுருகன்​”​.

நேற்று வெளியான ​”​புலிமுருகன்​”​ இதுவரை மலையாள திரையுலகமே பார்த்திராத வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமாகி உள்ளது. தனது ரீ எண்ட்ரி படம் தான் நினைத்தது போலவே அமைந்த உற்சாகத்தில் இருந்த நமீதாவிடம் பேசினோம்.

​”​புலிமுருகன்​”​ படம் பற்றி…

கடந்த ஆண்டு ரீ எண்ட்ரிக்காக கதைகள் கேட்டபோது இந்த படத்தின் இயக்குனரிடமும் கேட்டேன். நம் தென்னிந்திய மொழிகளில் இதுவரை வந்திராத அளவுக்கு அட்வென்சர் வகை கதையாக இருந்தது.

மிகவும் வித்தியாசமான இந்தக் கதையை எப்படி எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமானது. படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ஜுலி. ஒரு பணக்கார குடும்பத்தில் இருப்பவள்​.​

namitha stills
புலிமுருகனின் குணத்தைப் பார்த்து அவர்மீது காதல்வயப்படும் கேரக்டர். படம் முழுக்கவே புலிமுருகனுடனேயே இருந்து அவருக்கு ஆதரவாக இருக்கும் வேடம்.

ஒரு சூப்பர்ஸ்டார் படத்தில் ​இடம் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா? உடனே ஓகே சொல்லிவிட்டேன்.

பொதுவாக மலையாள படங்கள் என்றாலே குறைவான பட்ஜெட்டில் தான் எடுப்பார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இந்த படம் சுமார் 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.

நான் எப்போதுமே பட்ஜெட், ஹீரோ ஆகியவற்றை பார்ப்பவள் இல்லை. ஆனால் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது சந்தோஷமாகத் தான் இருக்கிறது.

மோகன்லாலுடன் நடித்த அனுபவம்…

அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது நமக்கு தெரியும். ஆனால் நமக்கு அதிகம் தெரியாத அவரது இன்னொரு முகம் இண்டெலெக்சுவல்.

ஆமாம், அத்தனை புத்தகங்கள் படிக்கிறார். அவரது வாசிப்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது. புலிமுருகன் கேரக்டரில் மோகன்லால் தவிர வேறு ஒருவரை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

அந்த அளவுக்கு அந்த பாத்திரமாகவே மாறினார். படப்பிடிப்பில் திடீரென்று ஒரு ஆசை வந்தது.

அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும். கேட்டவுடனேயே ஓ… தாராளமா… என்று எடுத்துக்கொண்டார். அந்த படம் அத்தனை பெரிய வைரலாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

namitha 1

அரசியல் சினிமா இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?

ஏன் இதில் என்ன கஷ்டம்? இரண்டும் வேறு வேறு. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சத்தமில்லாமல் செய்துகொண்டும் இருக்கிறேன்.

அதற்காக மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சியான அதிமுகவில் இணைந்தேன். அதற்கும் சினிமாவுக்கும் தொடர்பு இல்லை.
​​
​பரத்துடன் நடிக்கும் ”பொட்டு” படம் அல்மோஸ்ட் ஓவர். ஜானி என்பவர் சொன்ன கதை நன்றாக உள்ளது. அடுத்த நகர்வுக்கு காத்திருக்கிறேன். இன்னும் சில படங்களி​ன்​ அறிவிப்பு​ம் வரும்​.

மலையாளம் போலவே தமிழ், தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன்.

namitha hot stills

முதல்வர் உடல்நலம் பற்றி…

மாண்புமிகு அம்மா அவர்கள் இதற்கு முன்பு எத்தனையோ சோதனைகளை தாண்டி வந்திருக்கிறார்.

அம்மாவுக்கு கடவுளின் ஆசி எப்போதுமே உண்டு. இத்தனை கோடி மக்கள் அம்மாவுக்காக பிரார்த்திக்கிறோம். அவர்கள் மீண்டு வருவார்​கள்​ என தீர்க்கமாக சொல்லி முடித்தார் நமீதா.

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் நயன்தாரா

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay nayantharaஇளைய தளபதி விஜய்யுடன் சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டவர் நயன்தாரா.

இதனையடுத்து வில்லு படத்தில் நாயகியாக நடித்தார்.

தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

விஜய்யின் 61வது படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படத்தில்தான் காஜலுக்கு பதிலாக நயன்தாரா நடிக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது.

அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

செஞ்சு காட்டிடுடோம்ல…. ‘மீசைய முறுக்கு’ம் ஹிப் ஹாப் ஆதி

செஞ்சு காட்டிடுடோம்ல…. ‘மீசைய முறுக்கு’ம் ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hiphop thamizhaதனி பாடல் ஆல்பங்களை வெளியிட்டு வந்த, ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி, சுந்தர்.சி-விஷால் கூட்டணியில் வெளியான ‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

மேலும் பல படங்களுக்கு இசையமைத்து வந்த இவர் ஜல்லிக்கட்டை ஆதரித்து ஒரு பாடலை வெளியிட்டு அசத்தினார்.

தற்போது ஒரு புதிய படத்திற்காக ஆறு துறை பொறுப்புகளை ஏற்று, அதனை வெற்றிக்கரமாக செய்துக் காட்டியிருக்கிறார்.

சுந்தர்.சி தயாரித்துள்ள, ‘மீசைய முறுக்கு’ என்ற படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை மற்றும் பாடல்கள் என முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ளார்.

இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை இன்று வெளியிட்டுள்ளார்.

மீண்டும் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன்

மீண்டும் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanவிஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகள் பிரபலமாக சிவகார்த்திகேயனும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.

இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் அது இது எது நிகழ்ச்சியும் ஒன்று.

இந்நிலையில், சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன், இன்று இந்த நிகழ்ச்சி வாயிலாக விஜய் டிவியில் தோன்றினார்.

அதில், ரெமோ படத்தை மையமாக வைத்து ஒரு எபிசோடு ஒளிபரப்பானது.

அப்போது அந்த நர்ஸ் கெட்டப்புக்கு தான் மேற்கொண்ட சிரமங்களை எடுத்து கூறினார்.

அதன்பின்னர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் திறமையான கலைஞர்களை தனது படங்களில் பயன்படுத்திக் கொள்வதாக உறுதி அளித்தார்.

சௌந்தர்யா ரஜினி படத்தில் தனுஷுடன் பாலிவுட் நடிகை

சௌந்தர்யா ரஜினி படத்தில் தனுஷுடன் பாலிவுட் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush Sonam Kapoorகோச்சடையான் படத்தை தொடர்ந்து, செளந்தர்யா ரஜினிகாந்த் தனது இரண்டாவது படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு  ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதன்  படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதை பார்த்தோம்.

இதில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நாயகி சோனம் கபூரும் நடிக்கவிருக்கிறாராம்.

இவர் ஏற்கனவே ரஞ்சனா படத்தில் தனுஷுடன் நடித்தவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் இதில்  மோகன்லால் மகன் பிரணவ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘விஜய் சொல்லிட்டாரு; ரஜினி என்ன சொல்லுவாரோ?’ ரெமோ வெயிட்டிங்

‘விஜய் சொல்லிட்டாரு; ரஜினி என்ன சொல்லுவாரோ?’ ரெமோ வெயிட்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijay sivakarthikeyanரெமோ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை பார்த்த நடிகர் விஜய்யும் சிவகார்த்திகேயனை பெரிதும் பாராட்டி இருக்கிறார்.

அப்போது குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் பிடித்த கேரக்டரை பண்ணியிருக்கிறீர்கள் என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், ரஜினிக்கு ரெமோ படத்தை திரையிட்டு காட்டப் போகிறார்களாம்.

ரஜினியின் தீவிர ரசிகர் சிவகார்த்திகேயன் என்பதால் ரஜினி என்ன சொல்வாரோ? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறாராம்.

More Articles
Follows