தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புலிமுருகன், லூசிபர், படத்துக்கு பிறகு குருப் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் ஆர்.பி பாலா.
கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீஸால் தேடப்பட்ட குற்றவாளியுமான “குருப்” பின் கதையை மையமாக கொண்டு, இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘குருப்”.
இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அசத்தலான ஒளிப்பதிவு, பரபரக்கும் படத்தொகுப்பு, பிரமாண்ட மேக்கிங் என படத்தின் ஒவ்வொரு சிறு அசைவும், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
மொழி தாண்டி, அனைவரிடமும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘குருப்’ திரைப்படம் இந்த வாரம் நவம்பர் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் தமிழ், மலையாளம், இரண்டிலும் நேரடி படமாக, தெலுங்கு,கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது.
தமிழில் ஆர்.பி. பாலா வசனம் எழுதியுள்ளார்.
அது மட்டுமல்ல இப்படத்தில் வரும் மூன்று பாடல்களும் ஆர்.பி பாலா எழுதியுள்ளார். பிற மொழி மொழிமாற்று வடிவங்களுக்கும் டப்பிங் பொறுப்பேற்றுப் பணிபுரிந்துள்ளார்.
‘புலிமுருகன்”’லூசிபர் ” படத்துக்குப் பிறகு இந்த படம் பேசப்படும் வகையில் அமைந்துள்ளது. நாயகன் துல்கர் சல்மான் உள்பட படக்குழுவினர் பாலாவைப் பாராட்டி வருகின்றனர்.
Dulquer Salman praises dialogue writer RB Bala