வடிவேலு படத்திற்கு லண்டனில் மெட்டு போடும் பிரபல இசையமைப்பாளர்

வடிவேலு படத்திற்கு லண்டனில் மெட்டு போடும் பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார்.

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிகை சிவாங்கி, ‘டாக்டர்’ பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப்படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து படத்திற்கு இசையமைக்கும் பணிகள் தொடங்கின. வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதால், இந்தப் படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்துக்கொள்ள படக்குழுவினர் விரும்பினர். இதனை ஏற்றுக்கொண்ட லைகா நிறுவனம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படக்குழுவினருடன் கலந்துரையாடி உருவாக்கினர்.

இதன்போது படத்தின் தயாரிப்பாளரும் , தொழிலதிபருமான லைகா குழும உரிமையாளர் சுபாஷ்கரன், அந்நிறுவனத்தின் துணை தலைவர் பிரேம், அந்நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி G.K.M தமிழ்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

‘வைகைப்புயல்’ வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடிப்பதாலும், அவர் இந்த படத்தில் பாடுவதாலும் லண்டனில் நடைபெற்று வரும் படத்திற்கான இசையமைப்பு பணி கவனம் பெற்றிருக்கிறது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான ‘பாரிஸ் ஜெயராஜ்’, ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘சர்பட்டா பரம்பரை’ ஆகிய படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால், அவரின் இசையில் உருவாகிவரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் பாடலுக்கும் அதிகளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Naaisekar Returns songs getting composed in London work in full swing

‘மௌனமே பார்வையாய்’… மதுமிதா இயக்கத்தில் இணைந்த நதியா & ஜோஜு ஜார்ஜ்

‘மௌனமே பார்வையாய்’… மதுமிதா இயக்கத்தில் இணைந்த நதியா & ஜோஜு ஜார்ஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘புத்தம் புது காலை விடியாதா..’ என்ற தொடர் மூலம் இயக்குநர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் டிஜிட்டல் தளங்கள் வாய்ப்பளிப்பதாக நடிகை நதியா தெரிவித்திருக்கிறார்.

நமது சமூகத்தின் அங்கமாகத் திகழும் பல்வேறு கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும் பிரதிபலிக்கும் பல்வேறு வகையான கதைகளை சினிமா சித்தரித்து வருகிறது.

இதற்கு அண்மைய உதாரணமாக அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தொடராக ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட தமிழ் தொகுப்பாக வெளியாகும் ‘புத்தம் புது காலை விடியாதா..’ தொடர். இந்த தொடரில் காதல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கம் குறித்த பல்வேறு கதைகளை பார்வையாளர்கள் கண்டு ரசிக்க இயலும். இந்த தொகுப்பில் ஐந்து அத்தியாயங்கள் உள்ளன.

அவற்றில் ‘மௌனமே பார்வையாய்’ என்ற அத்தியாயமும் இடம்பெற்றிருக்கிறது. இதனை இயக்குநர் மதுமிதா இயக்கியிருக்கிறார். இதில் நடிகை நதியா மொய்து மற்றும் நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளனர்.

இந்நிலையில் முன்னணி நடிகையும் திரை உலகில் மூத்த நடிகையுமான நதியா மொய்து, ஓ டி டி எனப்படும் டிஜிட்டல் தளங்களின் வருகை குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில்…

,” நடிகர்களை விட இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு டிஜிட்டல் தளங்கள் முன்னுரிமை கொடுக்கின்றன. இதனால் அவர்கள் தங்களது கதைகளை நேர்த்தியாக சொல்ல இயலும்.

மேலும் ஓ டி டி உலக அளவிலான பார்வையாளர்களை வழங்குகிறது. நீங்கள் எந்த மொழியில் பார்க்கிறீர்கள் என்பது முக்கியமல்ல.. நிச்சயமாக நீங்கள் உங்களது தாய்மொழியில் படைப்புகளை பார்த்துக்கொண்டிருப்பது பெரியதொரு சவுகரியத்தை தருகிறது.

ஆனால் வெவ்வேறு மாநில மக்கள், அவர்களின் கலாச்சாரங்கள்.. ஆகியவற்றை, உலகின் வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தங்களுடைய விசயங்களை எவ்வாறு பார்க்கப்படுகின்றன என்பதை இத்தகைய டிஜிட்டல் தள படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. இவை அனைத்தும் மக்கள் வித்தியாசமாக சிந்திக்க உதவுகிறது.” என்றார்.

‘நோக்கேத தூரத்து கண்ணும் நாட்டு’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் 1985ஆம் ஆண்டில் நடிகை நதியா அறிமுகமானார். மோகன்லால் மற்றும் பத்மினியுடன் இணைந்து அவர் மலையாள திரைப்படப் பிரிவில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார்.

அதன் முதல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரை உலகில் சிறந்த நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

‘திரிஷ்யம் 2’ படத்திற்குப் பிறகு நடிகை நதியா மொய்து நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர், ‘புத்தம் புது காலை விடியாதா’, 2022 ஜனவரி 14ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலக அளவில் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியாகிறது.

‘புத்தம் புது காலை’ தொடரின் முதல் பாகத்தைத்தொடர்ந்து இரண்டாம் பாகமாக தயாராகியிருக்கும் ‘புத்தம் புது காலை விடியாதா..’துன்பங்களை எதிர்கொள்ளும் மன உறுதி மற்றும் மன உறுதியை கொண்டாடும் இதயத்தை தூண்டும் கதையுடன் பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது.

Putham Pudhu Kaalai Vidiyaadhaa… Actress Nadiya Moidu talks about OTT giving opportunities to technicians & directors

மோடி விவகாரம் : சாம்பியன் சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் சித்தார்த்

மோடி விவகாரம் : சாம்பியன் சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜனவரி 5 அன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்ருக்கு பிரதமர் மோடி சென்றார்.

பிரதமர் மோடி செல்லும் வழியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டக்காரர்கள்.

இதனால் 20 நிமிடங்கள் வரை காத்திருந்த பிரதமர் பின்னர் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பஞ்சாப் பயணத்தை ரத்து செய்து பாதியில் டெல்லி திரும்பினார் மோடி.

அப்போது… “தான் உயிருடன் பத்திரமாக ஏர்போர்ட் வந்துவிட்டதாக பஞ்சாப் முதல்வரிடம் தெரிவிக்குமாறு மோடி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதனால் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜகவினரிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

அப்போது we stand with Modi எனும் ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆனது.

இந்த டிரெண்டில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் பங்கேற்று… ”ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு இருந்தால், எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது,

பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டிக்கிறேன்”. என பதிவிட்டார்.

சாய்னா நேவாலின் டிவீட்டிற்கு நடிகர் சித்தார்த்… சாய்னா நேவாலின் பேட்மிட்டன் (இறகு பந்து) விளையாட்டினை இணைத்து இழிவுபடுத்தும் வகையில் (06.01.2022) அன்று பமிவிட்டார்.

இந்த டிவீட்டிற்கு கடும் கண்டனங்கள் வந்தன.

நடிகை குஷ்பு ஆகியோர் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

மேலும் நடிகர் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யவும் தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிர காவல்துறை டி ஜி பி க்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் மீண்டும் 10.01.2022 டிவீட் செய்துள்ளார். அதில் தான் கூறிய பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

ஆனாலும் நடிகர் சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்யவும், மகாராஷ்டிர காவல்துறை டி.ஜி.பி-க்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியது.

மேலும் கண்டனங்கள் வலுத்த நிலையில், சித்தார்த் தனது ட்விட்டரில் , சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

“நான் எழுதிய பதிலில் இருந்த rude ஆன ஜோக்கிற்காக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார். அதே போல, எனது வார்த்தை விளையாட்டானது, எந்தவித தீய நோக்கம் கொண்டதில்லை என்பதையும் நான் வலியுறுத்திக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஒரு பெண்ணாக இருப்பதால் தான், உங்களை தாக்க வேண்டும் என்ற நோக்கம் நிச்சயமாக எனக்கு ஏற்படவில்லை, நீங்கள் என் கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன் என்றார்

மேலும், நீங்கள் எப்போதும் என் சாம்பியன் தான் என்று சித்தார்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

Actor Siddharth’s apology letter to Saina Nehwal

‘தாதா 87’ பட பாணியில் ‘சண்டிகர் கரே ஆஷிக்கி’.; பெருந்தன்மையுடன் பாராட்டிய விஜய்ஸ்ரீ

‘தாதா 87’ பட பாணியில் ‘சண்டிகர் கரே ஆஷிக்கி’.; பெருந்தன்மையுடன் பாராட்டிய விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் வெளியான இந்தி திரைப்படமான சண்டிகர் கரே ஆஷிக்கியின் மையக்கருவும் காட்சிகளும் தனது 2019-ம் ஆண்டு படைப்பான தாதா87-ஐ நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன என்று இரண்டு படங்களையும் பார்த்த நண்பர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும், இது குறித்து தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் இயக்குநர் விஜயஸ்ரீ கூறியுள்ளார்.

சாருஹாசன் நடிப்பில் வெளியான தாதா87-க்கு பிறகு பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் நாயகனாக நடிக்கும் பவுடர் திரைப்படத்தை இயக்கிவுள்ளவரும், வெள்ளி விழா நாயகன் மோகன் நீண்ட காலத்திற்கு பிறகு முதன்மை வேடத்தில் நடிக்கவுள்ள ஹரா படத்தின் இயக்குநருமான விஜயஸ்ரீ கூறுகையில்…

, “இந்திய சினிமாவில் முதன்முறையாக பெண் திருநங்கையாக நடித்த படம் என்ற பெருமையும் உலக சினிமா வரலாற்றிலேயே புகை, மதுவுக்கு எதிரான டைட்டிலில் கார்டுடன் பெண்களை அவர்கள் அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றம் என்ற வாசகம் இடம்பெற்ற படம் என்ற பெருமையும் தாதா87-ஐயே சேரும்.

காமத்தை விட அன்பின் வெளிப்பாடு தான் காதல் என்ற கருத்தை உலகத்திற்கு பதிவு செய்த படம் தான் தாதா87.

சமீபத்தில் வெளியான இந்தி திரைப்படமான சண்டிகர் கரே ஆஷிக்கியின் மையக்கருவும் காட்சிகளும் தாதா87-ஐ வலுவாக நினைவூட்டுவதாக இரு படங்களையும் பார்த்த நண்பர்கள் எனக்கு தெரிவித்தனர்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,…

“இன்றைய காலகட்டத்தில் சமுதாயத்திற்கு மிகவும் தேவையான கதைக்களத்தையும், கருத்துகளையும், காட்சிகளையும் தேர்ந்தெடுத்ததற்காக சண்டிகர் கரே ஆஷிக்கி படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என புன்னகையுடன் கூறினார்.

Dhadha 87 fame director Vijay Sri praises new hindi film

2022 ஜனவரி 12 நிலவரப்படி… பொங்கல் ரேஸில் ‘தேள்’ & மற்ற 9 படங்கள் பற்றிய பார்வை..

2022 ஜனவரி 12 நிலவரப்படி… பொங்கல் ரேஸில் ‘தேள்’ & மற்ற 9 படங்கள் பற்றிய பார்வை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொங்கல் சமயத்தில் வெளியாகவிருந்த ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ மற்றும் ‘வலிமை’ ஆகிய படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தன.

இதனையடுத்து மற்ற தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை பொங்கல் தினத்தில் வெளியிட முன்வந்துள்ளனர். ஒரு சில படங்கள் அறிவிக்கப்பட்டு பின் வாங்கியது.

தற்போது இன்றைய நிலவரப்படி பொங்கலுக்கு மோதவுள்ள படங்கள் பற்றிய ஒரு பார்வை இதோ… (சில படங்கள் ஓடிடியில் ரிலீசாகிறது)

1. சசிகுமார் நடித்த ’கொம்பு வச்ச சிங்கம்டா’ 2. விதார்த் நடித்த ’கார்பன்’ 3. சதீஷ் நடித்த ’நாய் சேகர்’ , 4. அஸ்வின் நடித்த ‘என்ன சொல்ல போகிறாய்’, மற்றும் 5. ‘மருத’ 6. ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா 7. ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த தேள், மற்றும் 8 பாசக்கார பய, 9 புத்தம் புது காலை விடியாதா?, 10 சினம் கொள் ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரி 13 மற்றும் 14ல் வெளியாகவுள்ள படங்கள் பற்றிய ஒரு பார்வை இதோ…

தேள்.

நடிகர் ஹரிகுமார் இயக்கியுள்ள தேள் படத்தில் பிரபுதேவா மற்றும் சம்யுக்தா ஜோடியாக நடித்துள்ளனர். பிரபுதேவா மகனாக ஈஸ்வரி ராவ் அம்மாவாகவும் நடித்துள்ளனர். இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது

ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா

லட்சுமிமேனன் கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா.

கே எஸ் ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ பாண்டி ஒளிப்பதிவில் கே.ஜெய் க்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு சந்திரகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்கிசோஃபிரினியா எனும் மன சிதைவு நோயை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

நாய் சேகர்

கிஷோர் ராஜ்குமாரின் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள படம் நாய் சேகர். சதீஷ், பவித்ரா லெட்சுமி ஜோடியாக நடித்துள்ளனர். அஜேஷ் இசையமைத்துள்ளார். வடிவேலு நடித்த ஒரு படத்தில் நாய்சேகர் என்பது அவரது கேரக்டர் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஜிஎஸ் குழுவினர் நாய் சேகர் பெயரை விட்டுக் கொடுக்காத காரணத்தினால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வருவது தனிக்கதை. இந்த படத்தை லைகா தயாரித்து வருகிறது.

கொம்பு வச்ச சிங்கம்டா

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், மடோனா செபஸ்டின், சூரி, மறைந்த இயக்குநர் மகேந்திரன், ஹரிஷ் பெரடி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. இந்தர் குமார் தயாரித்துள்ளார்.

கார்பன்

ஹிப் ஹாப் ஆதி நடித்த அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விதார்த். இந்த அன்பறிவு படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் விதார்த் நடிப்பை பாராட்டும்படியாக இருந்தது,

தற்போது விதார்த் நடிப்பில் 25வது படமாக உருவாகியுள்ள படம் “கார்பன். ஶ்ரீனிவாசன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

கனவில் காண்பவை எல்லாம் நிஜத்தில் அப்படியே அசலாக நடப்பதால் இந்த படத்திற்கு கார்பன் என பெயர் வைத்திருக்கிறார்களாம்.

தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ் (ஒண்டிகட்ட படப்புகழ்), பாவ்லின் ஜெஷிகா (வாய்தா படப்புகழ்) மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், மூர்த்தி (பிச்சைக்காரன் படப்புகழ்) டபுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மருத

பிக்வே பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜிஆர்எஸ் என்பவர் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘மருத’. இந்த படத்தில் நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சரவணன், விஜி, வேலா ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன சொல்ல போகிறாய்..

ஹரிஹரன் இயக்கத்தில் ட்ரைடன்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் என்ன சொல்ல போகிறாய். இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின்குமார் நாயகனாக நடித்துள்ளார்.
இவருடன் அவந்திகா, தேஜு அஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

புத்தம் புது காலை விடியாதா…

ஐந்து தனித்தனி கதைகளை உள்ளடக்கிய புத்தம் புது காலை திரைப்படம் கடந்த 2020ல் ரிலீசானது. சுதா கொங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் என 5 இயக்குநர்கள் இந்த படங்களை இயக்கியிருந்தனர்.

தற்போது இதன் இரண்டாம் பாகம் புத்தம் புது காலை விடியாதா என்ற பெயரில் உருவாகியுள்ளது.

இரண்டாவது கோவிட்-19 லாக்டவுனில் அமைக்கப்பட்ட இக்கதைகள், காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் குறித்துப் பேசுகின்றன. ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலிப் சுப்பராயன், கௌரி ஜி கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் நடித்துள்ள கதைகளை பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சூர்ய கிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனர்.

புத்தம் புதுக் காலை விடியாதா… வரும் பொங்கல், ஜனவரி 14, 2022 அன்று Amazon Prime Video-இல் ரிலீசாகிறது.

சினம் கொள்…

ரஞ்சித் ஜோசப் என்பவர் இயக்கத்தில் ‘சினம் கொள்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை Sky magic பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவன சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆண்டவன் கட்டளை, மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்த அரவிந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் நர்வினி டெய்சி, லீலாவதி, பிரேம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – M.R.பழனிக்குமார் இசை – N.R.ரகுநந்தன் வசனம் மற்றும் பாடல்கள் – தீபச் செல்வன். எடிட்டிங் – அருணாசலம் சிவலிங்கம். கலை – நிஸங்கா ராஜகரா. சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் – நித்தியானந்தம். தயாரிப்பு நிர்வாகம் – R.வெங்கடேஷ் தயாரிப்பு – காயத்ரி ரஞ்சித், பாக்யலட்சுமி வெங்கடேஷ். கதை, திரைக்கதை, இயக்கம் – ரஞ்சித் ஜோசப்.

படம் வருகின்ற (14.01.2022) பொங்கல் அன்று Eelam play என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Here’s full film details of 2022 pongal release

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துங்க.. – கீர்த்தி சுரேஷ்

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துங்க.. – கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

இளம் வயதிலேயே சிறந்த நடிகைக்கான (மகாநடி படம்) தேசிய விருதை வென்றவர் இவர்.

முன்னணி நாயகியாக இருந்தபோதும் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தனக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளார்.

அவரின் அறிக்கையில்…‛‛எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.
நான் கவனமாக முன்னெச்சரிக்கையாக இருந்ழம் கொரோனா பாதிப்பு தொற்றிக் கொண்டது. நான் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுகிறேன்.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தடுப்பூசி போடவில்லை என்றால் உடனே போட்டுக் கொள்ளுங்கள். விரைவில் குணமாகி மீண்டும் வருவேன்.

தயவு செய்து அனைவரும் கொரோனா விதிமுறை, கடைப்பிடிக்கவும்.” என தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh tested Covid positive and she advice fans

More Articles
Follows