JUST IN வந்துட்டான்யா வந்துட்டான்யா… வடிவேலு பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லைகா

JUST IN வந்துட்டான்யா வந்துட்டான்யா… வடிவேலு பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு
“நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்று படத்தின் தலைப்பினை அறிவித்தது லைக்கா நிறுவனம்

திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது

நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Vaigai Puyal Vadivelu – Director Suraj’s new film title is out

நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கத்தில் ஆண்ட்ரியா & ஆஷா சரத்

நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கத்தில் ஆண்ட்ரியா & ஆஷா சரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும் புரொடக்‌ஷன் No.3

தரமான படைப்புகளை தொடர்ந்து அளித்து வரும் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் அவர்களின் ஹோம் மூவி மேக்கர்ஸ் தற்போது பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும்”புரொடக்‌ஷன் No.3″ படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றது.

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

உடன் ஷா ரா, ஜப்பான் குமார், வினோதினி, பால சரவணன், யுவலக்‌ஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்திற்கு ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ் மேற்கொள்ள, ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்…

தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார் (ஹோம் மூவி மேக்கர்ஸ்)
இயக்கம் – பாபி ஆண்டனி
ஒளிப்பதிவு – அகில் ஜார்ஜ்
இசை – ரான் ஈதன் யோஹன்
படத்தொகுப்பு – சரத்குமார்
வசனம் – பாபி ஆண்டனி, ஆண்டனி பாக்யராஜ், சவரி முத்து
கலை – தினேஷ் குமார்
காஸ்டியும் டிசைனர் – அம்ரிதா ராம் (ஆண்ட்ரியா ஜெரிமியா), நவாதேவி ராஜ்குமார்
சண்டைப்பயிற்சி – GN முருகன்
எக்சிகியுடிவ் புரொடுயுசர் – சாய்
புரொடக்‌ஷன் எக்சிகியுடிவ் – சக்கரதாள்வார் G
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.

Andreah and Asha sarath joins for a new film

மக்களை பலிகடா ஆக்காமல் ‘அண்ணாத்த’ ரிலீஸை மாற்றலாமே.; ரஜினிக்கு கடைக்கோடி ரசிகனின் கடிதம்

மக்களை பலிகடா ஆக்காமல் ‘அண்ணாத்த’ ரிலீஸை மாற்றலாமே.; ரஜினிக்கு கடைக்கோடி ரசிகனின் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது ரசிகர் ஒருவர் அன்பான கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ரஜினியின் அரசியல் முற்றுப்புள்ளி குறித்தும் ‘அண்ணாத்த’ ரிலீஸ் குறித்தும் நெத்தியடி கேள்வி கேட்டுள்ளார்.

அந்த கடிதம் இதோ…

மக்களின் மீது பேரன்பும், அக்கறையும் கொண்ட தலைவா் திரு:ரஜினிகாந்த் அவா்களுக்கு… ஒரு கடைக்கோடி ரசிகனின் அன்பான வேண்டுகோள்

ரசிகா்களின் மீது நீங்கள் கொண்ட அன்பினால் என்னை நம்பி வந்தவா்களை நான் கொரோனா தாக்கத்தால் அவர்களை பலிகடாவாக்க விரும்பவில்லை என்று சொல்லி நீங்கள் அரசியலுக்கு வரும் முடிவையே கைவிட்டீா்கள்.

ஆனால் இப்பொழுது கொரோனாவின் தாக்கம் முழுவதுமாக முடிந்து விடவில்லை.

இந்த நிலையில் மூன்றாவது அலை வர அதிக வாய்ப்புள்ள பண்டிகை காலத்தில் அண்ணாத்த படத்தை வெளியிட்டால்..? ரசிகா்களும், மக்களும் பெரும் கூட்டமாக திரையரங்குகளுக்கு செல்வாா்கள்.

இதனால் மூன்றாவது அலை பரவுவதற்கு மிக அதிக வாய்ப்புள்ளது. அது உங்களால் உருவாகும்.

எனவே மக்களை காத்திட அண்ணாத்த படத்தின் வெளியீட்டை கொரோனா பரவல் முழுமையாக முடியும் வரை நீங்கள் நிறுத்தி வைக்கவும் அல்லது OTT தளங்களில் வெளியிட்டு மக்களை பலிகாடா ஆக்காமல் காப்பாற்றுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்”கொள்கிறோம்.

இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி செய்வாரா? பார்க்கலாம்..

Fan request Rajinikanth to postpone his movie release

சிவகார்த்திகேயனுடன் இணைந்த சிம்பு.; இது வேற லெவல் கூட்டணி ஆச்சே

சிவகார்த்திகேயனுடன் இணைந்த சிம்பு.; இது வேற லெவல் கூட்டணி ஆச்சே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘டாக்டர்‘.

இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இவர்களுடன் வினய் ராய், யோகி பாபு, இளவரசு, மிலிந்த் சோமன், அருண் அலெக்சாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இத கொஞ்சம் பாருங்க : என் ரத்தத்தின் ரத்தங்களே…; அரசியலுக்கு அடி போடும் சிம்பு..? திடீர் பரபரப்பு அறிக்கை

2 மணி 28 நிமிடம் ஓடக்கூடிய படம் இந்த படம் அக்டோபர் 9ல் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் ஓடக்கூடிய தியேட்டர்களில் சிம்புவின் மாநாடு பட டிரைலரும் திரையிடப்பட உள்ளதாம்.

கடந்த அக்டோபர் 2ம் தேதி ‘மாநாடு‘ பட டிரைலர் யு டியுபில் வெளியானது. நான்கு நாட்களில் மாநாடு டிரைலர் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு.

சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Maanaadu trailer will be screened at doctor movie theatres

100 வருடங்களுக்கு முன்பு நடந்த அதே சம்பவம்.; மனித சமூகத்தை மீண்டும் அழிக்க வரும் வைரஸ்

100 வருடங்களுக்கு முன்பு நடந்த அதே சம்பவம்.; மனித சமூகத்தை மீண்டும் அழிக்க வரும் வைரஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாஸ்க் அணிந்து கொள்வது, சமூக இடைவெளி, நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்கொள்வது இது இன்று மட்டும் நடக்கும் விஷயமல்ல. இன்றிலிருந்து சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் மனித சமூகம் இதே போன்று ஒரு நோய் தொற்றை சந்தித்தது.

‘இன்ப்ளுயன்சா வைரஸ்’ Influenza Virus கொத்துக்கொத்தாக மனிதர்களை அழித்தது.

இதன் விளைவாக மன அழுத்தம் அதிகமாகி மக்கள் இடையே மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டு மிகவும் மோசமான கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடை பெற்றது.

ஒரு வேளை அதே போன்ற மன நிலை இன்று மக்களுக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பது தான் – ‘தி புக் ஆஃப் ஏனோக்’ The Book of Enoch படத்தின் கதை.

இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

‘ஹாண்ட் ஆப் காட்’ புரொடக்ஷன்ஸ் சார்பில் ராபின் சாமுவேல் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் வெயிலோன் இயக்குகிறார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு பிரவீன் எஸ்.ஏ இசையமைக்கிறார். நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னை, திருத்தணி, வேலூர் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

The Book of Enoch movie kick starts today

ஆர்யாவின் ‘அரண்மனை 3’..; மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து விடும் சுந்தர் சி

ஆர்யாவின் ‘அரண்மனை 3’..; மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து விடும் சுந்தர் சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அரண்மனை 3’ திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்த சிலர் படத்தின் Climax காட்சிகள் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு மிகப்பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டடுள்ளதாகவும், படத்தின் VFX, CG காட்சிகள் மிக தத்ரூபமாக அமைந்துள்ளதாகவும் சிலாகிக்கின்றனர்.

‘அரண்மனை 3’ படத்தில் யோகிபாபு மற்றும் விவேக் காம்பினேஷனில் நகைச்சுவை காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளதாக படம் பார்த்த சிலர் சொல்கின்றனர்.

தியேட்டரில் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து சிதறப்போவது உறுதியாகியுள்ளது.

அரண்மனை சீரீஸ் படங்களில் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் இடம்பெற்றிருக்கும்.

அரண்மனை 3‘ படத்தில் இடம் பெற்றிருக்கும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் முந்தைய இரண்டு படங்களை விட மிகவும் உருக்கமாகவும் தாய்மார்கள் கண்ணீர் சிந்துவது போலவும் அமைந்துள்ளதாம்.

பொதுவாகவே அரண்மனை படங்களுக்கு தாய்மார்கள் ஆதரவு அதிகம்.

அரண்மனை 3 திரைப்படத்திற்கு தாய்மார்களின் அதீத ஆதரவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

‘அரண்மனை 1’ மற்றும் 2 படங்களில் வரும் கதாநாயகர்கள் கதாபாத்திரத்தை விட அரண்மனை 3 படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஆர்யாவின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

ஆர்யாவின் சினிமா கேரியரில் அரண்மனை 3 ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக அரண்மனை சீரிஸ் படங்களில் இயக்குனர் சுந்தர் C ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் .

அதே போல் அரண்மனை 3 படத்தில் பல மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து பல திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாம்.

இயக்குனர் சுந்தர் C படங்களில் கதா நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதுவும் குறிப்பாக அரண்மனை சீரீஸ் படங்களில் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது .

Sundarc plays an important role in Aranmanai 3

More Articles
Follows