ஷிங் இன் த ரெயின்…. வைகைப் புயல் வடிவேலுவை ஆட்டம் போட வைத்த பிரபுதேவா

ஷிங் இன் த ரெயின்…. வைகைப் புயல் வடிவேலுவை ஆட்டம் போட வைத்த பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபுதேவா – வடிவேலு இருவரும் சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இவர்கள் இணைந்த படத்தின் கிளாஸிக் காமெடியான… ‘சிங் இன் த ரெயின்…’ என்ற பாடலை அந்த வீடியோவில் வடிவேலு பாடியிருந்தார்.

தமிழில் மிகப்பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும், “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி கூட்டணியை தந்த, நடிகர் இயக்குநர் பிரபுதேவாவும், வைகைப்புயல் வடிவேலுவும் இப்படத்தில் ஒரு பாடலில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டற கலந்தவர் வைகைப்புயல் வடிவேலு, அவரது காமெடி இல்லாத வீட்டு திரையே தமிழ்நாட்டில் கிடையாது.

AK-61-62-63 படங்களின் அப்டேட்.. அஜித்துடன் இணையும் நயன்தாரா & வடிவேலு

இணைய உலகமே அவரது காமெடியில் தான் இயங்கி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நாயகனாக நடிக்கும் , “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது. படத்தின் டைட்டிலோடு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மிக அட்டகாசமான செய்தி வந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, மைசூர் முதலான பகுதிகளில் நடத்தப்பட்டது.

தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, மும்பை நடன கலைஞர்கள் பங்கேற்க, கோலகலமாக ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்திய நடன மேதை நடிகர் இயக்குநர் பிரபுதேவா இப்பாடலுக்கு நடனம் அமைக்கிறார். வில்லு படத்தை தொடர்ந்து, 14 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு கூட்டணி இப்பாடலில் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடதக்கது.

இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் தயாரிப்பு பணிகள் லைகா புரடக்சன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்லுக், இசை, டிரெயலர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகுமென தயாரிப்புகுழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் சுராஜ் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தை லைகா புரடக்சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார்.

தயாரிப்பு பணிகளை லைகா புரடக்சன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன் செய்து வருகிறார். ஒளிப்பதிவு – விக்னேஷ் வாசு, படத்தொகுப்பு- செல்வா RK,
கலை இயக்கம் – உமேஷ் J குமார்,
ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.

Prabhu Deva Shares A Video Of Vadivelu Crooning ‘Sing In The Rain’

உண்மையை பேசிய இளையராஜா என்றும் ராஜா தான்.; எதிர்ப்புக்கு பாஜக பதிலடி

உண்மையை பேசிய இளையராஜா என்றும் ராஜா தான்.; எதிர்ப்புக்கு பாஜக பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசியத் தலைவர் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு ‘அம்பேத்கர் அன்ட் மோதி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் சர்ச்சையாகியுள்ளன.

‘அம்பேத்கரும், மோடியும்’ என்று ஒரு நுாலுக்கு முன்னுரை எழுதி உள்ளார்.

அதில், ‘அம்பேத்கரும், மோடியும் ஏழ்மையையும், ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள்.

அம்பேத்கர் மோடி ஒப்பீடு.. இளையராஜாவுக்கு எதிராக கண்டனம்.; மாரி செல்வராஜ் வருத்தம்

பதிலடி அதை ஒழிக்க பாடுபட்ட இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவு கண்டதுடன், செயல்பாடுகளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு தி.மு.க. & அதன் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக பா.ஜ.க., வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வீடியோக்களை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என, பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மையை பேச தயங்கும் தமிழகத்தில், மனதில் பட்ட உண்மையை உள்ளபடியே சொன்ன இசைஞானி என்றும் ராஜா இளையராஜா’ என்று அந்த வீடியோ முடிகிறது.

BJP supports Ilaiyaraaja in Ambedkar Modis Controversial issue

‘புர்கா’-வில் ஒன்றாக இணையும் கலையரசன் மற்றும் மிர்னா

‘புர்கா’-வில் ஒன்றாக இணையும் கலையரசன் மற்றும் மிர்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘புர்கா’ படத்தில் கலையரசன் மற்றும் மிர்னா இணைந்து நடித்துள்ளனர்,

ஐரா, மா மற்றும் ப்ளட் மணி புகழ் சர்ஜுன் கே.எம் இயக்கியுள்ளார்,

SKLS கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரித்துள்ளனர். மதிப்புமிக்க நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் (NYIFF) மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது சிறந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ தேர்வுகளில் ஒன்றாகும்,

மேலும் படத்தின் முன்னணி ஜோடியான கலையரசன் மற்றும் மிர்னா சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

புரிஞ்சவன் புத்திசாலி …; ‘குதிரைவால்’ விமர்சனம்

2021 நவம்பரில் படப்பிடிப்பு நிறைவடைந்து, டிசம்பர் 2021 முதல் திரைப்பட விழா சுற்றுகளில் கலந்துகொண்டது.
இந்த மாத இறுதியில் NYIFF இன் 2022 பதிப்பில் புர்கா அதன் உலக
அரங்கேற்றத்தைக் கொண்டிருக்கும்.

படக்குழுவிவரம்:

ஜி பாலமுருகனின் ஒளிப்பதிவு, இசை ஆர் சிவாத்மிகா, எடிட்டிங் பி பிரவின் பாஸ்கர், ஆடை வடிவமைப்பு மீனாட்சி ஸ்ரீதரன் மற்றும் சிறப்புத்தோற்றம்  ஈடுணையற்ற மூத்த ஜாம்பவான் ஜிஎம் குமார் நடித்துள்ளார்.

வ்யூஃபைண்டர் ஃபிலிம் புரொடக்ஷன்ஸின் திலானி ஆர், திரைப்பட விழாக்கள் மற்றும் விருதுகளில் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது.

Kalaiyarasan and Mirna joins for Burga

நெகட்டிவ் விமர்சனத்தால் வீழ்ந்த ரஜினி விஜய் அஜித் படங்கள்.; கமலை நம்பியிருக்கும் ரசிகர்கள்.; லோகேஷ் என்ன சொல்றார்.?

நெகட்டிவ் விமர்சனத்தால் வீழ்ந்த ரஜினி விஜய் அஜித் படங்கள்.; கமலை நம்பியிருக்கும் ரசிகர்கள்.; லோகேஷ் என்ன சொல்றார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக தமிழகத்தில் தெலுங்கு கன்னட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வசூல் வேட்டையாடி வருகின்றன.

கடந்தாண்டே ‘புஷ்பா’ படம் வெளியாகி பட்டைய கிளப்பியது.

இந்தாண்டு 2022ல் ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்களும் இந்திய சினிமாவையே கலக்கி வருகிறது.

ஆனால் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ & அஜித் நடித்த ‘வலிமை’ & விஜய் நடித்த ‘பீஸ்ட்’ ஆகிய படங்கள் நெகட்டிவ் விமர்சனங்களால் படு வீழ்ச்சியடைந்தன.

இவ்வாறாக தமிழகத்தில் தமிழ் படங்களுக்கு மவுசு குறைந்து வருவதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துக்கள் உலா வருகின்றன.

இந்த நிலையில் கமல் நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘விக்ரம்’ படத்தை ரசிகர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில்.. “உங்களை தான் நம்பி இருக்கிறோம், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும், யோவ் ஏமாத்திடாதே என்றெல்லாம் ரசிகர்கள் லோகேஷிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்த பதிவை லோகேஷ் கனகராஜூம் லைக் செய்து ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

எனவே தற்போதைய நிலையில் கமலை மட்டுமே நம்பியிருக்கிறது தமிழ் சினிமா.

Fan Requested director Lokesh Kanagaraj After Watching “Beast”!! Check His Reaction

பூர்வீக கிராமத்தில் புதுவீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த சிவகார்த்திகேயன்

பூர்வீக கிராமத்தில் புதுவீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது டான், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இதில் சிபி சக்ரவர்த்தி இயக்கிய ‘டான்’ படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரைக்கு வருகிறது. இதன் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார்.

மற்றொரு படமான ‘அயலான்’ பட படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதன்பின்னர் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் எஸ்.கே.20 படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படம் மூலம் சிவகார்த்திகேயன் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை நடிக்கிறார்.

இந்த நிலையில் தனது பூர்வீக கிராமம் திருவீழிமிழலையில் அழகான புது வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

இவரது தாத்தாக்களான கோவிந்தராஜப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை ஆகியோர் நாதஸ்வர கலைஞர்கள் ஆவார்கள்.

அவர்கள் வாழ்ந்த அந்த கிராமத்தில் தான் தற்போது சிவகார்த்திகேயன் புதுவீடு கட்டி கிரஹப்பிரவேசம் நடத்தி இருக்கிறாராம்.

சில வருடங்களுக்கு முன் சென்னையிலும் ஓர் அழகான வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்திருந்தார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

SivaKarthikeyan New House Warming Ceremony at his native

சோப் விளம்பரமா மதம்.? மக்களை ஒரு நிலைக்கு கொண்டு வரும் படமே ‘நிலை மறந்தவன்’ – BJP ராஜா

சோப் விளம்பரமா மதம்.? மக்களை ஒரு நிலைக்கு கொண்டு வரும் படமே ‘நிலை மறந்தவன்’ – BJP ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் விரைவில் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’. அன்வர் ரஷீத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாகவும் அவரது மனைவி நஸ்ரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க திமிரு படத்தில் நடித்த விநாயகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி மூட நம்பிக்கைகளால் அவர்கள் உயிருடன் விளையாடும் மத வியாபார கும்பலை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது. .

மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ட்ரான்ஸ் என்கிற படம் தான் தற்போது சிவமணியின் வசன உருவாக்கத்தில் தமிழுக்கேற்றபடி நிலை மறந்தவன் என்கிற பெயரில் தயாராகி இருக்கிறது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

மதமாற்றத்துக்கு எதிராகவும் மத வியாபாரிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களான ஹெச்.ராஜா, அஸ்வத்தாமன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக பிரமுகர் கல்யாண ராமன், பத்திரிகையாளர் பிரபாகர் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

படத்தின் வசனகர்த்தா சிவமணி பேசும்போது….

, “பிராந்திய மொழிகளில் நல்ல நல்ல படங்கள் வருகின்றன. அதை தமிழில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அந்த வகையில் மலையாளத்திலிருந்து இந்த படத்தை தமிழுக்கு மாற்றி இருந்தாலும் எந்த மாற்றங்களும் செய்யாமல் அதேசமயம் தமிழ் படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும் விதமாக வசனங்களை எழுதியுள்ளேன்” என்று கூறினார்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசும்போது,…

“கேரளாவில் இப்படி ஒரு படத்தை தயாரிப்பது சாத்தியம் என்கிறபோது, தமிழில் இப்படி தயாரிக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுகிறது. இதுபோன்ற ஒரு படம் தமிழில் வரவேண்டும் என நினைத்தேன். அதற்கேற்றவாறு இந்த நிலை மறந்தவன் படம் வெளியாக இருக்கிறது இயேசுவுக்கோ கிறிஸ்துவிற்கோ நாங்கள் எதிரானவர்கள் அல்ல.. அவற்றை வைத்து மத வியாபாரம் செய்பவர்களுக்கு மட்டுமே எதிரானவர்கள்.. பீஸ்ட் படத்தில் காவியை கிழித்துக்கொண்டு ஹீரோ வருவது போல நாங்கள் எந்த மதத்தையும் கிழிப்பதற்கு வரவில்லை.

தமிழ் சினிமாவில் இந்துமத கருத்துக்களை முன் வைத்து படம் எடுப்பதற்கு ஆதரவு கிடைக்காது. சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் வ.உ.சி படத்தை வைத்திருந்தார்கள்.. பார்ப்பதற்கே பெருமையாக இருந்தது அந்த வகையில் சமீப காலமாக இந்திய இந்து தேசிய கருத்துக்களுக்கு மிகப்பெரிய மரியாதை உருவாகி வருகிறது இதை கிறிஸ்துவ மிஷனரிகள் தடுக்க முயற்சிக்கிறார்கள்.

தமிழக முதல்வர் சினிமாவையும் என்னையும் பிரிக்க முடியாது என்று சொல்கிறார்.. இவர் என்ன சூப்பர் ஸ்டாரா இப்படி சொல்லிக்கொள்வதற்கு சமீபத்தில் காஷ்மீரி பைல்ஸ் படம் வெளியாகி மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இந்த நிலை மறந்தவன் படமும் வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்

பாஜக தலைவர் ஹெச்..ராஜா பேசும்போது…

“தமிழகத்தின் மக்களை ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்டுள்ள படம் என்று இந்த நிலை மறந்தவன் படத்தை சொல்லலாம். விவேகானந்தர் கூறியது போல மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து யுத்தம் நடத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இந்த சோப்பை விட அந்த சோப் உயர்ந்தது என சோப் விளம்பரம் போல மதத்தை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு காவல்துறை அதிகாரியிடம் பேசும்போது, அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் மத்தியில் இந்துக்கள் சிறுபான்மையினர் தான் என்கிற அதிர்ச்சித் தகவலை கூறினார்..

அதேபோல இந்தப்படத்தில் ஒரு பாதிரியார் கதாபாத்திரம் பேசும்போது அரசாங்கத்தில் நமக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள், அதனால் பிரச்சனை இல்லை என்று கூறுவது தான் தற்போது நிஜத்திலும் நடந்து வருகிறது..

அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் விலைக்கு வாங்கி மதப்பிரச்சாரம் என்கிற பெயரில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்க முயற்சித்து வருகிறார்கள்.. அந்தவகையில் இந்த படம் உண்மையை, நாட்டில் நடப்பதை அப்படியே சொல்கின்ற ஒரு படம்தான்.

தமிழக மக்களுக்கு பாடமாக இந்த படம் வந்துள்ளது.. காஷ்மீரில் பைல்ஸ் போல கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகளை மையப்படுத்தி தமிழ்நாடு பைல்ஸ் என்கிற படம் எடுங்கள் என்று நான் கேட்டுவிட்டு போகிறேன்..

தொடர்ந்து ஆன்மீக தாக்குதல் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.. காஷ்மீரி பைல்ஸ் படத்திற்கு மக்கள் ஆதரவு எப்படி கிடைத்ததோ, அதே போல இந்த நிலை மறந்தவன் படத்திற்கும் மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். மக்களின் பயத்தை தெளிய வைப்பதற்காகவே இந்த படம் உருவாகியுள்ளது என்று சொல்லலாம்” என கூறினார்.

மேலும் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய ஹெச்.ராஜ…

“நாங்கள் கிறிஸ்துவையும் கிறிஸ்தவரையும் ஒருபோதும் எதிர்க்கவில்லை அவர்கள் அதை வியாபாரமாக்கும்போது, மூடநம்பிக்கைகளை திணிக்கும்போது அதற்கெதிராக குரல் கொடுக்கிறோம்.

இதேபோன்று அப்போதே ‘பராசக்தி’ படத்தில் இந்து மதத்தின் பெயரால் நடக்கும் மூடப்பழக்க வழக்கங்களை சாடியபோது இந்த கேள்வி அப்போது எழவில்லையே.. அந்தவகையில் மத வியாபாரிகளை வெளிப்படுத்தும் படம் தான். இந்த நிலை மறந்தவன்.

அதனால் இந்த படத்திற்கு எதிர்ப்பு என்பது தேவையில்லாத ஒன்று.. தன்நிலை மறந்தவன் தான் இந்தப் படத்தை எதிர்ப்பான். மதத்தை விற்காதீர்கள்.. அச்சுறுத்தி ஆசைவார்த்தை காட்டி மதம் மாற்றுவது தவறு என்கிற கருத்துக்களைத் தான் இந்த படம் கூறுகிறது.. அயோத்தியா மண்டபம் விவகாரத்தை இதனுடன் சேர்த்து பேச வேண்டாம் காரணம் அங்கே எந்த மத வியாபாரமும் நடக்கவில்லை என்றார்..

மேலும் இந்த படத்தில் ஜோதிகா, சற்குணம் மோகன் என்பது போன்ற பிரபலமானவர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதில் ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா என்று ஹெச்.ராஜாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இதற்கு முன்பு வெளியான ஒரு படத்தில் ஒரு காலண்டரில் அக்னிகுண்டம் படம் இடம்பெற்றபோது எத்தனையோ காலண்டர்களில் இதுபோன்று அக்னிகுண்டம் இடம்பெற்றிருந்தது அதில் இதுவும் ஒன்று என்று பதில் சொன்னார்கள் அல்லவா..? அதேபோல எத்தனையோ பேருக்கு ஜோதிகா என்று பெயர் இருக்கும் அதில் இதுவும் ஒன்று என்று தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்

பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அர்ஜுன் சம்பத், “தமிழ்சினிமா திமுகவின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறது எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போது அவர்கள் வசம் தமிழ் சினிமாவை எடுத்துக்கொள்கிறார்கள். பீஸ்ட் படம் கூட சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால்தான் இந்த அளவிற்கு வெளியாகி உள்ளது. திமுகவை விமர்சித்து பேசக்கூடாது அவற்றை விமர்சிப்பது போல் படம் எடுக்கக் கூடாது என்கிறார்கள். மன்னனே தொழில் செய்தால் மக்கள் பிச்சை எடுப்பார்கள் என்பது போல கடந்த காலத்தில் சினிமா அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததை ஞாபகப்படுத்திகொண்டு, இப்போதே விழிப்புணர்வு ஏற்பட்டு தன்னை மாற்றிக்கொண்டால் திமுகவிற்கு நல்லது” என்று கூறினார்

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு ; தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ்

இயக்கம் ; அன்வர் ரஷீத்

இசை ; ஜாக்ஸன் விஜயன் – சுஷின் ஷியாம்

ஒளிப்பதிவு ; அமல் நீரத்

படத்தொகுப்பு ; பிரவீன் பிரபாகர்

வசனம் ; சிவமணி

மக்கள் தொடர்பு ; KSK செல்வா

H Raja speech at Nilai Marandhavan trailer launch

More Articles
Follows