விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்..!

விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’.

இப்படம் 2023ல் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.

அதன் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67′ படத்தில் நடிக்கிறார் விஜய்.

இப்படத்தில் சஞ்சய் தத், விஷால், மிஸ்கின் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகையுள்ளார்கள்.

இந்நிலையில்,’தளபதி 67’ படத்தில் இருந்து இயக்குனரும்,நடிகருமான மிஸ்கின் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், விஜய்யின் ரசிகர்கள் சற்று கவலையில் உள்ளார்கள்.

mysskin left a ‘Thalapathy 67’

பிரசன்னா – சினேகா ஜோடி விவாகரத்து செய்கிறார்களா..?

பிரசன்னா – சினேகா ஜோடி விவாகரத்து செய்கிறார்களா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொண்டதில் பிரசன்னா – சினேகா ஜோடியும் ஒன்று.

சினேகா, 2009 ஆம் ஆண்டு ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் பிரசனையுடன் இணைந்து பணியாற்றியபோது இருவரும் காதலித்தார்கள்.

பிறகு, 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அவர்களுக்கு விஹான் என்ற மகனும் ஆதியாந்தா என்ற மகளும் பிறந்தனர்.

இந்த, ஜோடி விரைவில் விவாகரத்து செய்துகொள்ள போவதாக வதந்தி ஒன்று பரவி வந்தது.

சமீபத்தில், சினேகாவும் பிரசன்னாவும் ஒன்றாக போஸ் கொடுத்துள்ள படத்தைப் பகிர்ந்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சினேகா.

Prasanna Sneha couple getting divorcing

CHILDRENS DAY EXCLUSIVE : கோலிவுட் ஹீரோக்களே வன்முறைதான் வசூல் தருமா.?

CHILDRENS DAY EXCLUSIVE : கோலிவுட் ஹீரோக்களே வன்முறைதான் வசூல் தருமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சமீப காலமாக வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெறுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதுவும் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களே இந்த வன்முறையை கையில் எடுப்பது தான் வருத்தம் அளிக்கிறது.

அண்மையில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. இதில் ஒரு பெரிய அருவா தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் ரத்தக்கறைகள் இருந்தன.

அதுபோல கமல் நடிப்பில் இறுதியாக வெளியான ‘விக்ரம்’ படத்தில் துப்பாக்கி ஏந்தியப்படியே இருந்தார். படம் முழுவதும் வன்முறை தெளிக்கப்பட்டு இருந்தது நாம் அறிந்த ஒன்றுதான்.

அது போல அஜித்தின் ‘துணிவு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் அவர் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பீஸ்ட்’ பட போஸ்டரிலும் விஜய் கையில் துப்பாக்கி வைத்த படியே போஸ் கொடுத்திருந்தார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக பார்க்கப்படும் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய நால்வருமே வன்முறையை கையில் எடுத்து இருப்பதாகவே தெரிகிறது.

இதனால் இன்றைய தலைமுறை நடிகர்களும் இயக்குனர்களும் வன்முறை சார்ந்த படங்களையே தயாரித்தும் நடித்தும் வருகின்றனர்.

குழந்தைகளை மையப்படுத்தி வரும் படங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டது என்று கூட சொல்லலாம்.

தமிழில் சமீபத்தில் வெளியான 80% படங்கள் சென்சாரில் ஏ சர்டிபிகேட் அல்லது யுஏ சர்டிபிகேட் உடன் வருகின்றன.

இதனால் தங்கள் வீட்டு குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்துச் செல்லவே பெற்றோர்களும் மூத்தவர்களும் தயங்குகின்றனர்.

வன்முறை காட்சிகளை தவிர்த்து குடும்பம் சென்டிமென்ட் உள்ளிட்ட காட்சிகளை வைத்தால் குடும்பத்தோடு படம் பார்க்க வருவார்கள். இதனால் படத்தின் வசூலும் நிறைய வருமே.

இந்த வன்முறை இப்படியே தொடர்ந்தால் வளரும் குழந்தைகளும் வன்முறை உணர்வோடு வளர மாட்டார்களா?

இந்த நிலை மாறுமா? தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களும் சிந்திப்பார்களா?

Kollywood heroes earn money through violence

BREAKING NEWS சூப்பர் ஹீரோவாக மாறிய நடிகர் ஜெய்

BREAKING NEWS சூப்பர் ஹீரோவாக மாறிய நடிகர் ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக K திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் படம் BREAKING NEWS

இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாகவும் அற்புதமாகவும் படமாக்கி உள்ளனர்.

ஜெய்

படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன.

நாயகியாக தெலுங்கின் பானு ஸ்ரீ நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

மேலும், பழ கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

ஜெய்

*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்*:

ஒளிப்பதிவு: ஜானிலால், செவிலோ ராஜா,
விஷுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைசர்: பிரபாகர் மேற்பார்வையில் இந்தியாவில் உள்ள பல ஸ்டுடியோக்களில் பணி நடந்து வருகிறது.
எடிட்டர்: அந்தோணி,
கலை: NM மகேஷ்,
சண்டைப் பயிற்சி: ஸ்டன்னர் சாம்,
நடனம்: ராதிகா,
பாடல்கள் இசை: விஷால் பீட்டர்,
பின்னணி இசை: LV முத்து கணேஷ்.
ஒலி வடிவமைப்பு: ரமேஷ்,
சவுண்ட் FX: ரேண்டி,
எழுத்து & இயக்கம்: ஆண்ட்ரூ பாண்டியன்

ஜெய்

actor Jay turned superhero

விவாகரத்துக்கு செல்லும் சினேகா, பிரசன்னா? – உண்மையை அறிய வைரலான புகைப்படத்தை பாருங்கள்

விவாகரத்துக்கு செல்லும் சினேகா, பிரசன்னா? – உண்மையை அறிய வைரலான புகைப்படத்தை பாருங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்களின் முக்கியமான குடும்ப தருணங்களின் புகைப்படங்களை இடுகையிடுவதன் மூலம் ரசிகர்களுக்கு தொடர்ந்து இன்ப அதிர்ச்சி வழங்கி வந்தனர் சினேகா – பிரசன்னா ஜோடி .

இதற்கிடையில் சினேகாவும் பிரசன்னாவும் விவாகரத்து செய்யப்போவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவ ஆரம்பித்தன.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் அவர்களது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும், சினேகா தனது கணவருடன் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டு, வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார்.

சமூக வலைதளங்களில் இணைய உள்ளாரா அஜித்குமார் ?

சமூக வலைதளங்களில் இணைய உள்ளாரா அஜித்குமார் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் தனது ரசிகர்களுடன் நேரடியாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவர் தனக்கென ஒரு சமூக ஊடக சுயவிவரத்தை உருவாக்குவார் என கூறப்படுகிறது .

நடிகருடன் சாலைப் பயணத்தில் இருந்த அவரது நண்பர் அல்லது அவரது சக நடிகர்களால் அவரது பல படங்கள் பகிரப்பட்டன.

“இப்போது, ​​​​அஜித் தனது சமூக ஊடக கணக்கில் தனது சொந்த புகைப்படங்களை நேரடியாக பதிவேற்ற விரும்புகிறார் என சொல்லப்படுகிறது .

More Articles
Follows