எனக்கு முதல் படம் போல கடைசி படமும் வெற்றி.; உற்சாகத்தில் உதயநிதி

எனக்கு முதல் படம் போல கடைசி படமும் வெற்றி.; உற்சாகத்தில் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை கொண்டாடி நன்றி தெரிவிக்க பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது…

‘மாமன்னன்’ படக்குழு அனைவருக்கும் நன்றி, நல்ல படத்தை மக்களுக்கு கொண்டு சென்றுள்ளீர்கள், எனக்கு முதல் படம் போலக் கடைசி படமும் வெற்றி. படம் இன்றும் பல திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பாடலாசிரியர் மற்றும் ஒளிப்பதிவாளர் அவர்களுக்கு நன்றி. இயக்குநர் மாரிதான் நடன இயக்குநராகவும், சண்டைக் காட்சிகள் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

இடைவேளை சண்டைக்காட்சிகள் அனல் பறக்கும் படத்தில் மட்டுமல்ல, படப்பிடிப்பே, அப்படித்தான் இருந்தது. படப்பிடிப்பில் நிறையக் காயங்கள் ஏற்பட்டது, எல்லாமே ரியலாக இருந்தது. படத்தில் இருக்கும் அழுத்தம் படப்பிடிப்பில் இல்லை எல்லோரும் ஜாலியாக தான் படத்தை எடுத்தோம்.

இந்நேரத்தில் படக்குழுவிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். வடிவேலு அண்ணன் நடித்த காட்சிகளை பார்த்த பிறகு தான் எனக்கு இந்த கதையைப் பற்றி புரிந்தது. உண்மையிலேயே இந்த படத்தை அவர்தான் தாங்கியுள்ளார்.

பஹத் பாசில் பற்றி நான் சொல்லத் தேவையில்லை தேசிய விருது பெற்ற நடிகர் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது அவரது நடிப்பு. ரஹ்மான் சாருக்கு நன்றி படத்தின் கதையை போல இசையும் பெரும் வலு சேர்த்தது.

செண்பகமூர்த்தி சாருக்கு நன்றி ரெட் ஜெயன்டை நன்றாக வழி நடத்திச் செல்கிறார். என் படத்தைக் கொண்டு சேர்த்ததற்கு நன்றி. உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி படத்தின் 50வது நாள் வெற்றி விழாவில் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன் நன்றி.

My first and last movie became mega hit says Udhayanidhi

ஸ்டாலின் போன் செஞ்சாங்க.. ரஜினி போன் செஞ்சாங்க.; மகிழ்ச்சியில் ‘மாமன்னன்’ வடிவேலு

ஸ்டாலின் போன் செஞ்சாங்க.. ரஜினி போன் செஞ்சாங்க.; மகிழ்ச்சியில் ‘மாமன்னன்’ வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை கொண்டாடி நன்றி தெரிவிக்க பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இந்த விழாவில் நடிகர் வடிவேலு பேசியதாவது…

இத்தனை நாட்களாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்தேன், ஆனால் இந்தப் படம் எனக்கு இன்னொரு உருவத்தைக் கொடுத்துள்ளது, இந்தக் கதையை முதலில் உதய் சார் தான் என்னைக் கேட்கச் சொன்னார்.

அதன் பின் கதையைக் கேட்டேன். அவர் முதலில் என்னிடம் சொன்னது ஒரு காட்சி கூட உங்களுக்கு நகைச்சுவை இல்லை என்றார். முதலில் நான் கொஞ்சம் பயந்தேன், ஆனால் முழு கதையைக் கேட்டதும் நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டேன்.

இயக்குநர் மாரி செல்வராஜிற்கு ஒரு 30 படம் செய்த இயக்குநருக்கு உள்ள அனுபவம் இருந்ததை நான் அறிந்தேன், அவரது வலியை நடிகர்களுக்கு சுலபமாக உணரவைத்து விடுவார், என்னை முழுதாக மாற்றி இருக்கிறார். சிரிக்கவே கூடாது என்று சொல்லிவிட்டனர். அது கஷ்டமாகத்தான் இருந்தது. இப்போது வரும் பாராட்டுக்கள் மகிழ்ச்சியாக உள்ளது.

படப்பிடிப்பு ஜாலியாக இருக்கும் ஆனால் மாரி செல்வராஜ் அவர் குறிக்கோளை விட்டு விலகவே இல்லை. படம் பார்த்து அனைவரும் எனக்கு போன் செய்தனர், முதலமைச்சர் ஸ்டாலின் சார் எனக்கு போன் செய்து வாழ்த்துக் கூறினார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்தார், எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு வாய்ப்பை இழக்க பார்த்தேன் அதற்கு உதய் சாருக்கு தான் நன்றி கூற வேண்டும்.

படப்பிடிப்பு முடிந்தது போக நான் பாடல் பாடியதும் ஒரு நல்ல அனுபவம் தான், இந்த படத்தை உலகத்தில் உள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர். மொத்த படக்குழுவும் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர், எங்கள் அனைவரையும் தாண்டி ஒரு படி மாரி செல்வராஜ் உழைப்பைக் கொடுத்தார். இந்தப் படம் அனைவருக்கும் பிடித்துள்ளது, பத்திரிக்கையாளர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

CM Stalin and Rajini appreciated me says Vadivelu

நடைமுறையை உடைத்த மாரி.; இனி இளம் இயக்குனர்களுக்கு ஆரம்பம்.. – கீர்த்தி சுரேஷ்

நடைமுறையை உடைத்த மாரி.; இனி இளம் இயக்குனர்களுக்கு ஆரம்பம்.. – கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை கொண்டாடி நன்றி தெரிவிக்க பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது…

இப்படி ஒரு வெற்றி விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, படக்குழு அனைவருக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம். இயக்குநர் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி. வீடியோ காலில் பேசி கதை சொல்லி இன்று இந்த வெற்றியில் நிற்கிறது, உதயநிதி சாருக்கு நன்றி. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி.

பெரிய படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் அதைத் தகர்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் சாருக்கு எனது வாழ்த்துக்கள்.

இனிமேல் வரும் இளம் இயக்குநர்களுக்கு இது ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கும் அதற்கு நன்றி. உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டனர், படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி , மீண்டும் ஒரு வெற்றி விழாவில் சந்திப்போம்.” என்றார்.

Mari broken big movies heroines formula says Keerthy Suresh

பாஞ்சாலங்குறிச்சி படத்தில் பாரதிராஜாவை மிரள வைத்தவர் வடிவேலு – விஜயகுமார்

பாஞ்சாலங்குறிச்சி படத்தில் பாரதிராஜாவை மிரள வைத்தவர் வடிவேலு – விஜயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை கொண்டாடி நன்றி தெரிவிக்க பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இந்த விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது…

பத்தாவது முறை பாதம் தடுக்கி விழுந்தவனை பூமித்தாய் சொன்னாள் ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ என ஈரோடு தமிழன்பனின் கவிதை ஒன்று உள்ளது.

எப்போது வெற்றி விழா நடந்தாலும் இந்தக் கவிதை ஞாபகம் வரும். இந்த வெற்றிக்குக் காரணம் பத்திரிக்கையாளர்கள் உங்களுக்கு நன்றி. நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது என்றொரு கவிதை உள்ளது.

அது போல் நினைவில் அன்புள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது என்பது போலானவன் மாரி. அவன் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. எல்லாவற்றிருக்கும் காரணமாக இருந்த ஏ ஆர் ரஹ்மான் சாருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

நடிகர் விஜயகுமார் பேசியதாவது…

இந்த படத்தில் எனக்கு டயலாக்கே இல்லை. இப்படி ஒரு படத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். மாரி செல்வராஜ் இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார்.

பாஞ்சாலங்குறிச்சி படத்தில் நடித்த போது பாரதிராஜாவிடம் வடிவேலுவை இந்த படத்தில் போடுங்கள் என்றேன். பாரதிராஜாவையே அந்தப்படத்தில் மிரட்டி விட்டார். அவரை இந்த படத்தில் பார்ப்பது மகிழ்ச்சி. உதயநிதி இந்தப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவராக நடித்துள்ளேன்.

இடைவேளைக்கு முன்பு ஒரு சண்டைக் காட்சி இருக்கும். நான் எத்தனையோ படங்களில் நடித்து விட்டேன். ஆனால் உதயநிதி நடித்த சண்டைக்காட்சி போல எந்த படத்திலும் பார்க்கவில்லை.

‘மாமன்னன்’ படம் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் லால் பேசியதாவது…

நன்றி சொல்வதா வாழ்த்து சொல்வதா தெரியவில்லை. மாமன்னன் சிறப்பான படம். பெரிய வெற்றிப்படம். முதலில் நான் நன்றியை என்னைத் தமிழில் அறிமுகப்படுத்திய சித்திக் சார் வெற்றி படைப்பைத் தந்த லிங்குசாமிக்கு சாருக்கு சொல்லிக்கொள்கிறேன்.

மாரியின் இரண்டு படத்தில் நடிக்க அதனால் தான் வாய்ப்பு கிடைத்தது. மற்றொரு மொழியில் நடிப்பதே பெரிய விஷயம் அதிலும் சி எம் ஆக நடிப்பது மகிழ்ச்சி. உதய் சார் கீர்த்தி எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

Bharathiraja surprised by Vadivelu act says Vijayakumar

டயலாக் இல்ல… ஆனா பகத்பாசில் ஜோடி.; ரவீணாவுக்கு மாரி தந்த இன்ப அதிர்ச்சி

டயலாக் இல்ல… ஆனா பகத்பாசில் ஜோடி.; ரவீணாவுக்கு மாரி தந்த இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன்.

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் படக்குழுவினர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பேசியதாவது…

மாமன்னன் மிக முக்கியமான படம். உதய் சார் வாழ்வில் மிக முக்கியமான படம். மாரி செல்வராஜ் சார் எப்போதும் பதட்டமாகவே இருப்பார். மிகப்பெரிய நடிகர் கூட்டத்தை கட்டி இழுத்து வர வேண்டும். நான் கம்போஸ் செய்வதை வேண்டாம் என்று சொல்லிவிடுவார். இந்த படத்தில் எல்லாமே ஒரிஜினல். ஒரிஜினலாக அடி வாங்கித் தான் ஆக்சன் சீக்குவன்ஸ் எடுத்தோம். உதய் சார் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். வடிவேலு சார் மலைமேல் நின்று கண்கலங்கும் காட்சியில் எல்லோரும் கலங்கி விட்டார்கள். படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் ராமகிருஷ்ணன் பேசியதாவது…

முதலில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. மிகப்பெரிய படத்தில் வரலாற்றில் இடம்பெறும் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. நன்றி.

நடிகர் மதன் பேசியதாவது…

வடிவேலு சாருடன் நடித்தது மகிழ்ச்சி. மாரி செல்வராஜ் சாரின் கர்ணன் படத்திலும் நடித்தேன். இந்தப்படத்தில் உதய சாருடன் நடித்தது மகிழ்ச்சி. தொடர்ந்து மாரி சார் படங்களில் நடிக்க ஆசை. எல்லோருக்கும் நன்றி.

நடிகை ரவீணா ரவி பேசியதாவது…

இயக்குநர் முதலில் பேசும்போது இந்தப்படத்தில் ஒரு ரோல் ஆனால் டயலாக் இல்லை என்றார். மாமன்னனில் பங்குபெறுவதே சந்தோஷம் என்றேன்.

பகத் சாருக்கு ஜோடி என்றார் இதை விட சந்தோஷம் இல்லை. இப்போது பெரிய பாராட்டு கிடைத்து வருகிறது. மிகப்பெரிய சந்தோஷம் அனைவருக்கும் நன்றி.

Raveena reveals how she committed Maamannan

நீதி கிடைக்காதவர்களின் குரலாக ‘அநீதி’ ஒலிக்கும்.; வசந்தபாலன் நம்பிக்கை

நீதி கிடைக்காதவர்களின் குரலாக ‘அநீதி’ ஒலிக்கும்.; வசந்தபாலன் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘அநீதி’.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை டைரக்டர் ஷங்கர் வெளியிடுகிறார். ஜூலை 21ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த விழாவில் இயக்குநர் வசந்த பாலன் பேசியதாவது…

“வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி என்ற இந்த காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல இந்த ‘அநீதி’ திரைப்படம் வருகிறது.

நீதி கிடைக்காதவர்கள் குரலாக இப்படம் ஒலிக்கும். எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை இது பிரதிபலிக்கும். மொத்த உலகமும் சிறு அன்பை எதிர்பார்த்தே சுழல்கிறது. அதை இப்படத்தின் மூலம் சொல்ல முயற்சித்துள்ளோம்.

நண்பர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இப்படத்தை தயாரித்துள்ளோம். இயக்குநர் ஷங்கர் சார் ‘வெயில்’ படத்தை தயாரித்து எனக்கு வாய்ப்பளித்தார்.

நான் தயாரிப்பாளராக மாறி உள்ள ‘அநீதி’ படம் குறித்து அவருக்கு தெரிவித்த போது, தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் அதை வழங்குவதற்கு வழி முன் வந்தார். அவருக்கு மிக்க நன்றி. இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கி உள்ளார்கள்.

இவர்களை எல்லாம் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி. அர்ஜுன் தாஸ் ஷாருக்கான் போன்று வருவார் என்று இங்கு கூறினார்கள். உண்மையிலேயே அவருக்கு அதற்கான திறமை இருக்கிறது. இந்த படத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் உருவாக்கி இருக்கிறோம், அனைவருக்கும் நன்றி.”

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, வசந்த பாலனின் படைப்பான ‘அநீதி’, இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பாக தமிழ் மற்றும் தெலுங்கு (‘பிளட் அண்டு சாக்லேட்’) மொழிகளில் ஜூலை 21 அன்று வெளியாகவுள்ளது.

Vasantha Balans confident on Aneethi and Arjundas

அநீதி – குழுவினர்

நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா, இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன், தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா

பட நிறுவனம்: அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்

எழுத்து & இயக்கம்: வசந்த பாலன்

தயாரிப்பு: எம். கிருஷ்ணகுமார் முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், G. வசந்த பாலன்

ஒளிப்பதிவு: எட்வின் சகாய்

கலை இயக்கம்: சுரேஷ் கல்லேரி

படத்தொகுப்பு: M.ரவிக்குமார்

வசனம்: ’இயக்குநர்’ எஸ்.கே.ஜீவா

நிர்வாகத் தயாரிப்பு: J.பிரபாகர்

சண்டை வடிவம்: ‘டான்’ அசோக்-’பீனிக்ஸ்’ பிரபு

ஒலிக்கலவை: M.R.ராஜாகிருஷ்ணன்

ஸ்டில்ஸ்: R.S.ராஜா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

Press Meet of Vasantha Balan’s Aneethi to be released by director Shankar

More Articles
Follows