இசையமைப்பாளர் இமான் பார்த்து பாராட்டிய ஆல்பம் ‘முற்றுப்புள்ளி’

immanஇசையமைப்பாளர் கிறிஸ்டி சினிமா தாகத்தோடு ஒரு திருப்புமுனை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர் .சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்த அவர் கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேற்கத்திய இசை என்று மூன்று வகை இசையிலும் பயிற்சி பெற்றுக் கற்று 15 ஆண்டுகள் செலவழித்துத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டு களத்திற்கு வந்திருப்பவர்.

அவர் இப்போது ‘நறுவி’,’ வன்முறைப்பகுதி’ ‘குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் ‘ என மூன்று படங்களுக்கு இசையமைத்து வருகிறார் .இவை விரைவில் வெளியாக உள்ளன.படங்கள் வெளியாகும் இடைவெளியில் நேரத்தை விரயமாக்காமல் தானே ஒரு கதை எழுதி ஒரு ஐந்து நிமிட மியூசிக் வீடியோ ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார் .அதுதான் ‘முற்றுப்புள்ளி ‘ ‘ சமூக அக்கறையுடன் ஒரு படைப்பு,…கிறிஸ்டிக்கு இசையோடு கதை அமைப்பதிலும் ஆர்வம் உண்டு. அப்படி அவர் சமூகத்தில் இன்றைக்குப் பரவலாக அறியப்படும் பிரச்சினைகளான குழந்தையின்மை,கந்துவட்டிக் கொடுமை,குழந்தைகள் தத்தெடுப்பது என மூன்று கருத்துக்களை மையமாக வைத்து உருவாக்கி இந்தச் சமூகப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவெடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவாக்கியதுதான் ‘முற்றுப்புள்ளி ‘வீடியோ சிங்கிள் ஆல்பம்.

இது ஒரு பைபிள் சார்ந்த கிறிஸ்தவக் கருத்தைக் கூறும் கதை என்றாலும் அனைத்து மதத்தினருக்கும் ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆல்பம் இருக்கும் என்கிறார் . முற்றுப்புள்ளி ஆல்பத்தை ஒளிப்பதிவு செய்து டைரக்ஷன் செய்திருப்பவர் அரவிந்த் ஜெகன்

கேத்தரின் எபிநேசர், பிரணிதி பாடியுள்ளனர்.

இந்த ஆல்பத்தில் நடிகர் மாஸ் ரவி,பவுலின் ஜெசிகா , பிரணிதி, பிரியா,மகேஸ்வரன், தண்டபாணி , லவீன் சேகர் , சிஸ்டர் ரான்சம் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாடல் பாபு, ஒளிப்பதிவு ,எடிட்டிங் அரவிந்த் ஜெகன் .

தனது போராளி கிரியேஷன்ஸ் சார்பில் கதை திரைக்கதை எழுதி இசையமைத்து தயாரித்துள்ளார் கிறிஸ்டி.

தனது திரை வாய்ப்புக்காக பெரிதும் உதவியவர் இயக்குநர் பா. ரஞ்சித் என்று கூறுகிறார்.ஏற்கெனவே அவருடன் இணைந்து குறும்படத்தில் பணியாற்றி இருப்பதாகக் கூறுகிற கிறிஸ்டி, அவரால்தான் ‘நறுவி ‘ பட வாய்ப்பு வந்ததாக நன்றியுடன் கூறுகிறார். இந்த முற்றுப்புள்ளி அனைவருக்கும் பிடித்த சமூக சிந்தனையுள்ள ஆல்பமாகப் பேசப்படும் .

இசை அமைப்பாளர் டி. இமான் இந்த ஆல்பத்தைப் பார்த்து பாராட்டி வாழ்த்தியதுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு சமூக ஊடகங்களுக்கு அறிமுகம் செய்தார். பலரும் பாராட்டி வருகின்றனர்.

சமூக அக்கறையுடன் ஒரு படைப்பு

MUTRUPULLI song link

https://youtu.be/cyXfd0Lx2hM

Music director D Imman praises Mutrupulli album

Overall Rating : Not available

Latest Post