‘வலிமை’ அட்டேட் விரைவில் வரும்..; யுவன் பதிலால் அஜித் ரசிகர்கள் ஹாப்பி

‘வலிமை’ அட்டேட் விரைவில் வரும்..; யுவன் பதிலால் அஜித் ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith yuvanதல அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் படம் “வலிமை”.

மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

பிரபல ஹிந்தி பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்துக்கு, யுவன் இசையமைக்கிறார்.

காலா பட நாயகி ஹுமா குரேஷி அஜித் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கு சினிமா ஹீரோ கார்த்திகேயா வில்லனாகவும், யோகி பாபு காமெடியனாக நடிக்கிறார்.

இந்தப் பட இயக்குனர் வினோத் சமீபத்தில் அவரது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு இசை அமைப்பாளர் யுவன் தன் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

‘வலிமை’ வெற்றி பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவிற்கு கமெண்ட் செய்த அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ படம் பற்றி அப்டேட் கேட்டார்.

அதற்கு Coming Soon “விரைவில் வரும்” என யுவன் பதிலளித்துள்ளார்.

நீண்ட காலமாக வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்களுக்கு இந்த செய்தி உற்சாகத்தை கொடுக்கும் என நம்பலாம்.

music composer yuvan shakar raja shares update on valimai

வின்னர் சிக்கன் டின்னர்..; பப்ஜிக்கு பாடை கட்டி இறுதி ஊர்வலம் சென்ற ரசிகர்கள்

வின்னர் சிக்கன் டின்னர்..; பப்ஜிக்கு பாடை கட்டி இறுதி ஊர்வலம் சென்ற ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pubg fansவீடியோ கேம்ஸ்களால் இன்றைய இளைஞர்கள் மொபைல் போன்களுக்கு அடிமையாகவே மாறிவிட்டனர்.

இந்தியாவில் மட்டும் சுமார் 3.5 கோடிக்கும் மேற்பட்டோர் பப்ஜி மொபைல் விளையாட்டை விளையாடி வந்தனர்.

இதனையடுத்து பப்ஜி மொபைல் கேம், கட் கட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம்ஸ் ,கேரம் ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த தடை பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் பப்ஜி பிரியர்கள் வருத்தமடைந்தனர்.

சிலர் மீம்ஸ் மூலம் தங்கள் கருத்தை பகிர்ந்தனர்.

சிலர் ஒரு படி மேலே சென்று பப்ஜின் உருவ படத்திற்கு இறுதி ஊர்வலம் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பப்ஜி போட்டோவுக்கு மாலை அணிவித்து பாடை கட்டி, வெள்ளை நிற உடையணிந்து தோள்களில் சுமந்துகொண்டு ஊர்வலம் மேற்கொண்டனர்.

இறுதி சடங்குகளின் போது ‘வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்’ என்று கோஷமிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PUBG fans take out funeral procession for banned game in TN

ஆன்லைன் புக்கிங் & விளம்பரத்தில் வருவாய்.. க்யூப் கட்டணம் முடியாது..; தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாரதிராஜா போடும் கன்டிசன்ஸ்

ஆன்லைன் புக்கிங் & விளம்பரத்தில் வருவாய்.. க்யூப் கட்டணம் முடியாது..; தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாரதிராஜா போடும் கன்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathirajaதயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிய அணி பாரதிராஜா தலைமையில் அண்மையில் உருவானது.

தற்போது பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் இணைந்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில்…

சின்ன பட்ஜெட் முதல் 70 கோடி வரை ஷேர் வரும் படங்களைத் தயாரித்து வெளியிட்டிருப்பதாகவும், இனிவரும் காலத்தில் இதுபோல் திரைப்படங்கள் வருமா? என்பது இயலாத காரியம்.

எனவே இதைக் கருத்தில்கொண்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செலுத்தி வந்த கியூப் அல்லது யுஎப்ஓ-க்கான கட்டணத்தை இனி வரும் காலங்களில் செலுத்த முடியாது.

திரைப்படத்தின் இடைவேளைகளில்
தியேட்டர்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் அந்த நாளில் திரையிடப்படும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டும்.

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வருவாயில் ஒரு பகுதியைத் தர வேண்டும்.

இத்துடன் சில கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களை திடீரென நிறுத்துவதும், தரமான படங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதும் வேதனையளிப்பதாகக் கூறியுள்ளனர்.

நிறைய திரையரங்குகள் சிலரால் குத்தகைக்கு எடுத்து நடத்தப்படுவதால் தயாரிப்பாளர்களுக்கான வியாபார சுதந்திரம் பறிபோவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tamil Film Active Producers teams conditions to release films

சுசாந்த் சிங் தற்கொலை வழக்கு; காதலி ரியாவை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு

சுசாந்த் சிங் தற்கொலை வழக்கு; காதலி ரியாவை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sushant singh rajput rhea chakrabortyதோனி படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக் கொண்டார்.

எனவே சுசாந்தின் காதலி ரியாவுக்கு இந்த மரணத்தில் தொடர்பு இருப்பதாக சுசாந்த்தின் தந்தை போலீசிடம் புகார் அளித்தார்.

ரியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

விசாரணையின்போது, ரியாவுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

எனவே ரியா இன்று, செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

இந்நிலையில் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக ரியாவைப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்று கைது செய்தது.

கஞ்சா கலந்த சிகரெட்டைப் பயன்படுத்தியாக ரியா கூறியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாம்.

Actress Rhea Chakraborty Arrested, She Reportedly Confessed To Using Drugs

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் எப்படி இருக்கார்.? சரண் அப்டேட்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் எப்படி இருக்கார்.? சரண் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

spb saranகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் ஐசியூ பிரிவில் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. முழுமையாக நினைவு திரும்பியுள்ளது.

எஸ்.பி.பி.யின் உடல்நிலையைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா் என்று எம்ஜிஎம் மருத்துவமனை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவருடைய மகனும் பாடகருமான எஸ்.பி. சரண் கூறியதாவது…

கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.

எஸ்.பி.பிக்கு பொருத்தப்பட்ட வெண்டிலேட்டர் நீக்கப்பட்டுள்ளது.

அவர் ஐபேடில் கிரிக்கெட்டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார்.

தான் பேச நினைப்பது எல்லாம் பேப்பரில் எழுதி காண்பிக்கிறார். இவ்வாறு எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எஸ்.பி.பி அவர்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

25 நாட்களாக தொடர்ந்து செயற்கை சுவாச சிகிச்சையும், எக்மோ கருவியும் பொருத்தப்பட்டதால் அவர் நுரையீரல் குணமடைய தாமதம் ஏற்பட்டுள்ளதாம்

இதேநிலை நீடித்தால் நீண்ட நாட்கள் சிகிச்சையை தொடர முடியாது என்பதால், அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Legendary singer SPB latest health updates

பிக்பாஸ் போட்டியாளர்கள்.. மோனல் கஜ்ஜார் உள்ளிட்ட 16 கலைஞர்கள்

பிக்பாஸ் போட்டியாளர்கள்.. மோனல் கஜ்ஜார் உள்ளிட்ட 16 கலைஞர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

monal gajjar in bigg boss 4இந்தியாவில் எல்லா மொழிகளிலும் கலக்கி வரும் டிவி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் என்றால் அது மிகையல்ல.

தமிழில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளை கமல் தொகுத்து வழங்கி வருகிறார். அவரே சீசன் 4 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளார்.

அதற்காக புரோமோ அண்மையில் வெளியானது.

இதில் கலந்துக் கொள்பவர்கள் யார்? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிப்பரப்பு தொடங்கியுள்ளது.

நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்குகிறார்.

இதில் கலந்துக் கொள்பவர்கள் விவரம் இதோ…

நடிகை மோனல் கஜ்ஜார். இவர் சிகரம் தொடு படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அபிஜீத் – நடிகர்..

சுஜாதா… – டிவி தொகுப்பாளர்

மெஹபூப் தில்சே – நடிகர், நடனக் கலைஞர்.

தேவி நாகவள்ளி – டிவி9 டிவி செய்தி வாசிப்பாளர்.

ஹரிகா – யூடியூப் பிரபலம்.

சையத் சோஹல் ரையன் – நடிகர்

அம்மா ராஜசேகர் – டான்ஸ் மாஸ்டர்

கராத்தே கல்யாணி – நடிகை

சூர்யா கிரண் – டைரக்டர்

லஸ்யா – டிவி தொகுப்பாளர்

அரியானா குளோரி – ஜெமினி காமெடி டிவி தொகுப்பாளர்

திவி – நடிகை

அகில் சர்தக் – மாடல் மற்றும் டிவி தொகுப்பாளர்

கங்காவா – மை வில்லேஜ் ஷோ யூடியூப் சேனல் பிரபலம்

நோயல் சீன் – டிவி தொகுப்பாளர்

Sigaram Thodu heroine Monal Gajjar in Bigg Boss 4 telugu

More Articles
Follows