தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘முண்டாசுப்பட்டி’ படத்தில் நடித்தபோதே ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் முனீஷ்காந்த்.
இப்படம் வெற்றி பெறவே இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.
‘ஜிகர்தண்டா’, ‘இன்று நேற்று நாளை’, ‘10 எண்றதுக்குள்ள’, ‘மரகத நாயணம்’ ‘பசங்க2’, மாநகரம் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் பிஸியாகிவிட்ட இவர் இனிமேல் தாம்பத்ய வாழ்க்கையிலும் பிசியாக உள்ளார்.
இவருக்கும் தேன்மொழி என்பவருக்கு சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர்கள் காளி வெங்கட், நானும் ரௌடிதான் புகழ் ரியாஸ் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Mundasupatti Muniskanth got married today 26th March 2018







