JUST IN கால் மீ லைலா.; கார்த்தியை டார்ச்சர் பண்ணிட்டேன்.; மித்ரன் ஓபன் டாக்

JUST IN கால் மீ லைலா.; கார்த்தியை டார்ச்சர் பண்ணிட்டேன்.; மித்ரன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி மாறுப்பட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்தார்’. அவர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

இதில் ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் முனீஷ்காந்த், குட்டி ரித்விக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜீவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரூபன் எடிட்டிங் செய்ய ஸ்பை த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.

தீபாவளி வெளியீடாக அக்டோபர் 21ல் படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை ப்ரோம் மாலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சர்தார்

தற்போது இயக்குனர் மித்ரன் பேசுகையில்…

“இந்தப் படத்தில் கார்த்தி மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அவரை மிகவும் டார்ச்சர் செய்து விட்டேன். அவர் நடித்த படங்களில் இது வித்தியாசமாக இருக்கும்.

லைலா மேடம் நடித்த படங்களை என் பள்ளி பருவத்தில் பார்த்திருக்கிறேன். அவரை மேடம் என கூப்பிட்டால் பிடிக்காது. கால் மீ லைலான்னு சொல்வார். அவரின் கேரக்டர் சூப்பராக இருக்கும்.

ரித்விக் ஒரு குட்டி ஸ்டார். அவன் தான் ஹீரோ.

ரஜிஷா கேரக்டர் தைரியமான கேரக்டர். நன்றாக செய்துள்ளார்.

ராஷிகண்ணா வட இந்தியாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழில் பேசி அசத்தினார்.

படம் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் நன்றாக வந்துள்ளது.” என பேசினார் மித்ரன்.

சர்தார்

Director PS Mithran open talk about Sardar movie characters

நாகசைதன்யா – வெங்கட்பிரபு படத்தில் அரவிந்த்சாமி சரத்குமார் ப்ரியாமணி

நாகசைதன்யா – வெங்கட்பிரபு படத்தில் அரவிந்த்சாமி சரத்குமார் ப்ரியாமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாகசைதன்யா நடிக்கும் NC 22 படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்காலிகமாக NC 22 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

நாகசைதன்யா இதுவரை கதாநாயகனாக நடித்துள்ள படங்களில் NC 22 படம்தான் அதிக பொருட்செலவில் உருவாகி வரக்கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இணைந்துள்ள தொழில்நுட்பக் குழு மற்றும் நடிகர்கள் குறித்தான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுடைய வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த திறமையான நடிகர்கள் அரவிந்த்சாமி, சரத்குமார், தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி ஆகியோர் இந்த ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர்.

ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத்ராஜ் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் இந்தப் படங்களில் இணைந்துள்ள மற்ற முக்கிய நடிகர்கள்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இசையில் மேதமை கொண்ட தந்தை மகனுமான ’இசைஞானி’ இளையராஜா மற்றும் ’லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றனர்.

பவன்குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். அபூரி ரவி இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுத, SR கதிர் ஒளிப்பதிவை கையாள்கிறார்.

நடிகர்கள்: நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, ப்ரியாமணி, சரத்குமார், ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத் ராஜ், வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர்.

*தொழில்நுட்பக் குழு விவரம்*:

கதை, திரைக்கதை, இயக்கம்: வெங்கட்பிரபு,
தயாரிப்பு: ஸ்ரீனிவாசா சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்,
வழங்குபவர்: பவன்குமார்,
இசை: மாஸ்ட்ரோ இளையராஜா, லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: SR கதிர்,
எடிட்டர்: வெங்கட் ராஜன்,
வசனம்: அபூரி ரவி,
ப்ரொடக்‌ஷன் டிசைனர்: ராஜீவன்,
சண்டைப் பயிற்சி: யானிக் பென், மகேஷ் மாத்யூ,
கலை இயக்குநர்: DY சத்யநாராயணா

JUST IN சத்யாவை கொன்ற சதீஷை அதேபோல தண்டிக்க வேண்டும் – விஜய்ஆண்டனி

JUST IN சத்யாவை கொன்ற சதீஷை அதேபோல தண்டிக்க வேண்டும் – விஜய்ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரால் சினிமாவில் அறிமுகமானவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.

இதன் பின்னர் படிப்படியாக இசையமைப்பாளராக வளர்ந்தார்.

அதன்பின்னர் கதையின் நாயகனாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

நான், சலீம், பிச்சைக்காரன், எமன், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்கள் இவருக்கு ஹீரோ அந்தஸ்தை உருவாக்கியது.

ஒரு கட்டத்தில்
தான் நடிக்கும் சினிமா படங்களை தயாரிக்கும் ஆரம்பித்தார்.

அவ்வப்போது தன் டிவிட்டர் பக்கத்தில் சமூக கருத்துக்களை கூறி வருகிறார் விஜய் ஆண்டனி.

சில தினங்களுக்கு முன் அவரின் ட்விட்டர் பதிவில்…

“உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க?
அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க???
கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க?

எனப் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இன்று…

தன் முன்னாள் காதலி சத்யா என்பவரை ரயிலில் தள்ளி விட்டு கொலை செய்த சதீஷ் என்பவர் குறித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்…

சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்? https://t.co/b8h5CPb4hg

கூடுதல் தகவல்…

கடந்த ஏழு வருடங்களாக சத்யா மற்றும் சதீஷ் காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் சதீஷிடம் ஆறு மாதங்களாக பேசாமல் இருந்துள்ளார் சத்யா. இதனையடுத்து இருவருக்கும் மோதல் உருவானது.

தன் காதலியை சந்திக்க சென்ற சதீஷ் அவரிடம் வாக்குவாதம் செய்யவே அது முற்றி சத்யாவை திடீரென ரயில் முன்பு தள்ளிவிட்டு உள்ளார் சதீஷ். இதனால் சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சத்யாவின் தந்தை மகள் இறந்த காரணத்தால் அதிர்ச்சி தாங்க முடியாமல் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யாவை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சதீஷை காவல்துறையினர் இன்று அக்டோபர் 14ஆம் தேதி கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

30 நாட்கள்.. 3 மொழி.. 3 படங்கள்.. 3 படம் கைவசம்.; ஐஸ் மழையில் நனையும் ஐஸ்வர்ய லட்சுமி

30 நாட்கள்.. 3 மொழி.. 3 படங்கள்.. 3 படம் கைவசம்.; ஐஸ் மழையில் நனையும் ஐஸ்வர்ய லட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம் நற்பெயரை சம்பாதித்த உற்சாகத்தில் இருக்கிறார்.

விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இவர், ‘கார்கி’ என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர் தற்போது உற்சாகமாக காணப்படுகிறார்.

மகிழ்ச்சிக்கான காரணத்தை பற்றி அவரே விவரிக்கையில்…

” செப்டம்பர் 30-ம் தேதி அன்று மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ வெளியானது. அதில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இதற்கு எதிர்பாராத இடங்களிலிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை உற்சாகமடைய செய்திருக்கிறது.

தற்போது ‘அம்மு’ என்ற பெயரில் தயாராகி இருக்கும் தெலுங்கு திரைப்படமொன்று அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாகிறது. இதிலும் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன்.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி அன்று ‘குமாரி’ என்ற மலையாள படமும் வெளியாகிறது. ‘கார்கி’ படத்தைத் தொடர்ந்து, ‘குமாரி’ படத்திலும் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறேன்.

இந்தப் படத்திலும் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறேன். முப்பது நாட்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், முத்தான மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தயாரித்து, நடித்திருக்கும் ‘குமாரி’ திரைப்படம் இதுவரை வெளிவராத ஜானர் என்றும், புராண இதிகாசம் தொடர்புடைய திரில்லர் திரைப்படம் என்றும் தகவல்கள் வெளியாகி இருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே எழுந்திருக்கிறது.

‘குமாரி’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாக உற்சாகத்துடன் தெரிவிக்கும் அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகையுமான ஐஸ்வர்யா லட்சுமி, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தில் பூங்குழலியாக நடித்ததற்கு கிடைத்த வரும் பாராட்டுக்கள் எதிர்பாராதவை என்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

‘பூங்குழலி’, ‘அம்மு’, ‘குமாரி’ என ஒரே மாதத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து திறமையை வெளிப்படுத்தியிருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு சக கலைஞர்களும், மூன்று மொழி திரையுலகினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் ‘கட்டா குஸ்தி’ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குநர் ப்ரியா இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் அசோக் செல்வன் மற்றும் வசந்த் ரவி ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.

‘கிறிஸ்டோபர்’ எனும் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகளாகவும், ‘கிங் ஆஃப் கோதா’ எனும் மலையாளப் படத்தில் துல்கர் சல்மானின் ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

நடிக்க தானே வந்தேன்னு கேட்டாரு விஜய் – சத்யா.; ‘சஞ்ஜீவனுக்கு முன்பே சூர்யா – ஜெய் படங்கள் வந்துட்டு – திவ்யா

நடிக்க தானே வந்தேன்னு கேட்டாரு விஜய் – சத்யா.; ‘சஞ்ஜீவனுக்கு முன்பே சூர்யா – ஜெய் படங்கள் வந்துட்டு – திவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மணி சேகர் இயக்கி இருக்கும் படம் சஞ்ஜீவன். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் வினோத், நிஷாந்த், சத்யா என்.ஜே., யாஷின், நடிகைகள் திவ்யா துரைசாமி, ஹேமா இயக்குனர் மணி சேகர், தயாரிப்பாளர் மலர்கொடி மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

நடிகர் நிஷாந்த் பேசும்போது,

‘சுமார் 15 நிமிடம் ஓடக் கூடிய குறும்படமாகத் தான் இயக்குனர் எனக்கு காட்டினார். ஐவரில் ஒருவராக நீங்கள் நடிக்க போகிறீர்கள் என்று கூறினார். ஐவரும் ஐந்து விதமான குணங்கள் கொண்டவர்கள். ஒருவன் அமைதியாக இருப்பான், இன்னொருவன் எல்லாவற்றிலும் சரியாக இருப்பான். மற்றொருவன் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்பவன். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். அவர்களுடன் 4 மாத பயணம், சூழ்நிலைக்கேற்றவாறு அவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. இப்படம் நடிக்கும்வரை எனக்கு ஸ்னூக்கர்ஸ் தெரியாது. இயக்குனர் சொந்தமாக ஸ்னூக்கர் நிலையம் வைத்திருந்தார். அங்கு சென்று ஸ்னூக்கர்ஸ் விளையாட கற்றுக் கொண்டேன்’ என்றார்.

நடிகர் வினோத் பேசும்போது,

‘புதிய குழு மற்றும் புதிய முயற்சிக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி. முதல் முறையாக ஸ்னூக்கர்ஸ் படம் வருகிறது. இயக்குனர் பாலுமகேந்திரா சாரின் இயக்கத்தில் ஒரு ஃபிரேமிலாவது நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தற்போது அவருடைய மாணவர் மணி சேகர் ஆக்ஷன் கூறி நடிப்பதில் பெருமையாக இருக்கிறது. சஞ்ஜீவன் படத்தை பத்திரிகையாளர்கள் மூலம் தான் மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும் எனவே ஆதரவு தாருங்கள். அனைவருக்கும் நன்றி’ என்றார்.

நடிகர் சத்யா என்.ஜே. பேசும்போது,

‘இந்த படம் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வரும் ஸ்னூக்கர் படம். நான் கிரிக்கெட் விளையாடுபவன், ஸ்னூக்கர் பற்றிய முழு படமாக ஆர்வமாக பார்க்க முடியுமா? என்று நினைத்திருந்தேன். ஆனால், இயக்குனர் மிக அழகாக எடுத்திருக்கிறார். ஒரு ஏரியாவில் 5 நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை சுற்றி நகரும் கதை.

நம் எல்லோரையும் தொடர்புபடுத்திக் கொள்ளும் படமாக இருக்கும். தொழில்நுட்ப கலைஞனராக 13 வருடங்கள் இந்த துறையில் இருந்திருக்கிறேன். அதற்கு காரணம் உங்களுடைய ஆதரவு தான்.

முக்கியமாக இப்படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி கூற வேண்டும். தயாரிப்பாளரின் மகன் நிஷாந்த் ஐவரில் ஒருவராக நடித்திருக்கிறார். ஆனால், என்னுடைய பையனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், தனிப் பாடல், சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்று கூறாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறினார். நிஷாந்தும் எங்கள் ஐவரில் ஒருவராகவே பழகினார்.

விஜய் சாருக்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தான் இந்த துறைக்கு வந்தேன். தெறி படத்தின் வெற்றிவிழாவில், நீ நடிக்க வேண்டும் என்று தானே இந்த துறைக்கு வந்தாய்? என்று விஜய் சார் என்னிடம் கேட்டார்.

என்னை நடிகனாக அங்கீகரித்து நடிக்க போ, என்று முதலில் கூறியது விஜய் சார் தான். அவர் கூறிய வார்த்தை தான் எனக்குள் ஏதோ இருக்கிறது என்று நடிக்கத் தூண்டியது. ஆகையால், விஜய் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன். இந்த சமயத்தில் லோகேஷ் கனகராஜ் சாரிடம், இந்த தோற்றத்திற்கு ஏற்ற கதாபாத்திரம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

நடிகர் யாசின் பேசும்போது,

‘பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வந்த மாணவன். இது என்னுடைய முதல் படம். அனைவரின் ஆதரவும் தேவை என்று வேண்டுகோள் வைக்கிறேன்’ என்றார்.

திவ்யா துரைசாமி பேசும்போது,

‘செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். என்னை நம்பி இந்த படத்தில் இயக்குனர் மணி சேகர் வாய்ப்பு கொடுத்தார். சஞ்ஜீவன் படத்திற்கு தான் முதலில் கையெழுத்திட்டேன்.

ஆனால், இப்போது தான் வெளியாகிறது. எனக்கு மட்டுமல்லாது பலருக்கும் இப்படம் முதல் வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இந்த படத்தில் கையெழுத்திடும் போதுதான் தயாரிப்பாளரை பார்த்தேன். அதன்பிறகு இப்போது தான் பார்க்கிறேன். மிகவும் சுதந்திரம் அளிக்கக் கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார்.

இந்த படத்திற்கு பிறகு தான் ஜெய் மற்றும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தேன். ஆனால், அப்படங்கள் முன்பே வெளியாகிவிட்டது. இருப்பினும், சஞ்ஜீவன் படம் என்று எப்போதும் சிறப்பான படம் தான்.

இந்த துறைக்கு வரும் அனைவருமே சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று வருபவர்கள் தான். அவர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

நடிகை ஹேமா பேசும்போது,

‘ஒன்றரை வருடத்திற்கு முன்பு இயக்குனர் மணியுடன் குறும்படத்தில் நடித்தேன். பிறகு இந்த படத்திற்கு தொடர்பு கொண்டு சஞ்ஜீவன் படத்தில் நாயகனின் அம்மா கதாபாத்திரம் இருக்கிறது. உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று அழைத்தார். இந்த வாய்ப்புக் கொடுத்த மணி சேகருக்கு நன்றி’ என்றார்.

இயக்குனர் மணி சேகர் பேசும்போது,

இது என்னுடைய முதல் படம். சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொருவரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது? என்ற எதார்த்தத்தை சொல்லும் படமாக ‘சஞ்ஜீவன்` உருவாகி இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் ஸ்னூக்கர் விளையாட்டை மையமாக வைத்துள்ளோம். தென்னிந்தியாவில் முதல் ஸ்னூக்கர் படமாகவும் இந்த படம் வந்துள்ளது. இந்த படத்தில் நடித்த பெரும்பாலானோருக்கு இது முதல்படம். குறிப்பாக என்னை போன்ற பாலு மகேந்திரா சாரின் பட்டறையில் பயிற்சி பெற்றோர் பலரும் கைகோர்த்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். நிச்சயம் இந்த படம் நல்லதொரு பொழுதுபோக்கு படமாகவும், எதார்த்த நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும் நல்லதொரு படமாகவும் இருக்கும்’ என்றார்.

‘ஆச்சார்யா’ அட்டர் ப்ளாப்.: 80% பணத்தை திருப்பி கொடுத்த சிரஞ்சீவி – ராம்சரண்

‘ஆச்சார்யா’ அட்டர் ப்ளாப்.: 80% பணத்தை திருப்பி கொடுத்த சிரஞ்சீவி – ராம்சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் பிரபலமான அப்பா – மகன் நட்சத்திரங்கள் என்று சொன்னால் அது சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் ஆகியோரை சொல்லலாம்.

சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இணைந்து நடித்த ‘ஆச்சார்யா’ படம் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி வெளியானது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான கொரடாலா சிவா இயக்கி இருந்தார். ராம்சரண் இந்த படத்தை தயாரித்து இருந்தார்.

தந்தை, மகன் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் படம் வெளியான முதல் நாள் முதலே மோசமான விமர்சனங்கள் வந்தன. எனவே படமும் படுதோல்வியை தழுவியது.

இதனால் இந்த நஷ்ட ஈட்டை சரி கட்ட வேண்டும் என விநியோகஸ்தர்கள் போர்கொடி தூக்கினர். பெரும்பாலான விநியோகஸ்தர்கள் படம் படுதோல்வியை தழுவியதால் தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் ஆகியோரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சிரஞ்சீவி ஒரு விழாவில் கலந்து கொண்ட போது ஆச்சார்யா நஷ்ட ஈடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சிரஞ்சீவி பதிலளிக்கும்போது.. ”ஆச்சார்யா படம் நஷ்டம் ஆணதால் நானும், ராம்சரணும் 80% பணத்தை திருப்பி கொடுத்துவிட்டோம். படம் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

More Articles
Follows