சத்யஜோதி – ஹிப்ஹாப் ஆதி 3வது முறையாக கூட்டணி.; இப்போவாச்சும் வெற்றி கிட்டுமா.?

சத்யஜோதி – ஹிப்ஹாப் ஆதி 3வது முறையாக கூட்டணி.; இப்போவாச்சும் வெற்றி கிட்டுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘சிவகுமாரின் சபதம்’ & ‘அன்பறிவு’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்தார் ஹிப்ஹாப் ஆதி.

இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. விமர்சன ரீதியாகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

இருந்தபோதிலும் தற்போது மூன்றாவது முறையாக ஹிப் ஹாப் ஆதி மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

அதன் விவரம் வருமாறு..

சத்யஜோதி ஃபிலிம்ஸ்ஸின் அடுத்த படைப்பாக, ஹிப்ஹாப் தமிழா நாயகனாக நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஃபேண்டசி காமெடி ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமாக ‘வீரன்’ அமைந்துள்ளது. இதில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும் வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

மேலும், போஸ் வெங்கட், முனீஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

*தொழில்நுட்பக் குழு விவரம்:*

இசை: ஹிப்ஹாப் தமிழா,
ஒளிப்பதிவு: தீபக் D மேனன்,
எடிட்டிங்: GK பிரசன்னா,
கலை: NK ராகுல்,
ஸ்டண்ட்ஸ்: மகேஷ் மாத்யூ,
விளம்பர வடிவமைப்பு: டனே ஜான் (Tuney John),
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One),
படங்கள்: அமீர்,
ஆடை வடிவமைப்பாளர்: கீர்த்தி வாசன்

படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நிறைவடையும் தருவாயில் படத்தின் இசை, டீசர், ட்ரைய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் தேதி ஆகியவை குறித்தான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும்.

‘வீரன்’ படத்தைத் சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரித்து இருக்கின்றனர்.

Hip hop Aadhi Veeran shooting wrapped up

திருப்பூர் சப்-கலெக்டராக காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் நியமனம்

திருப்பூர் சப்-கலெக்டராக காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் நியமனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019ல் நடைபெற்ற குடிமைப்பணி (UPSC) தேர்வு முடிவுகள் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியானது.

இதில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மை (Lal Bahadur Shastri National Academy of Administration) பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தது.

இவர்களின் பயிற்சி காலம் முடிந்த பிறகு வெளிமாநிலங்களில் களப்பணி பயிற்சி பெற்று வந்தனர்.

அதன்பின்னர் பல்வேறு அரசுத் துறைகளிலும் இவர்கள் பணியாற்றி வந்தனர்.

தற்போது பல்வேறு மாநிலங்களில் இருந்த ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரிகள், 12 பேர் தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளனர்.

அதன்படி மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்தவர் ஸ்ருதன்ஜெய் நாராயணன். இவர் தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக இருந்தார்.

இந்த நிலையில் அவர் திருப்பூர் சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் திருப்பூர் வருவாய் கோட்டத்தின் சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார் ஸ்ருதன்ஜெய் நாராயணன்.

இவர் பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

2020-ல் வெளியான தேர்வு முடிவுகளில் 75-வது ரேங்க் பெற்றவராவார் ஸ்ருதன்ஜெய்.

Actor Chinni Jayanth son Sruthan Jai appointed as tirupur district sub collector

முத்தையா இயக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியான சிம்பு பட நடிகை

முத்தையா இயக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியான சிம்பு பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தை இயக்கியவர் முத்தையா.

இவர் தனது அடுத்த பட அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இந்தப் படமும் வழக்கம் போல கிராமத்து மண்வாசனை கலந்த மசாலா திரைப்படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தையா இயக்கவுள்ள இந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ பட நடிகை சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ஆரியா 34 என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க ஒளிப்பதிவு செய்கிறார் வேல்ராஜ்.

இந்த படத்தை ட்ரம்ப் ஸ்டிக் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இத்தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஆரியா 34

Arya 34 mass rural action movie shooting started with pooja today.

@arya_offl @SiddhiIdnani @dir_muthaiya @VelrajR @gvprakash #AnalArasu @DrumsticksProd @ZeeStudiosSouth @teamaimpr

நிவின்பாலி – அஞ்சலி பட டைட்டிலுக்கு நேரம் குறித்த ‘மாநாடு’ தயாரிப்பாளர்

நிவின்பாலி – அஞ்சலி பட டைட்டிலுக்கு நேரம் குறித்த ‘மாநாடு’ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின்பாலி.

இவர் ‘நேரம்’, ‘பிரேமம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர்.

தற்போது நேரடியாக ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘தங்க மீன்கள், பேரன்பு’ புகழ் ராம் இயக்கி வருகிறார்.

இதில் நாயகியாக அஞ்சலி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார்.

‘மாநாடு’ படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், புரொடக்‌ஷன் நம்பர் -7 ஆக இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தனுஷ்கோடி, கேரளா, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

சென்னை – கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த நிலையில், படத்தின் டைட்டில் அக்டோபர் 11-ம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Nivin Pauly Anjali movie title announcement updates

மீண்டும் மீண்டும் விஜய்யுடன் இணையும் சூர்யா; லோகேஷ் போடும் மாஸ்டர் பிளான்?

மீண்டும் மீண்டும் விஜய்யுடன் இணையும் சூர்யா; லோகேஷ் போடும் மாஸ்டர் பிளான்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதனையடுத்து மீண்டும் ‘மாஸ்டர்’ பட இயக்குனருடன் கை கோர்க்கிறார் விஜய்

விஜய்யின் 67வது படமாக உருவாகும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இதில் விஜய்யுடன் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், பிருத்விராஜ், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்து திருப்புமுனை ஏற்படுத்தியவர் சூர்யா.

இவை மட்டுமல்லாமல் நடிகர் விஜய் உடன் ‘நேருக்கு நேர்’ & ‘ப்ரண்ட்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay and Suriya teams up again for Lokesh

சிறந்த நடிகருக்கான விருது வென்ற குருசோமசுந்தரம்.; எந்த படத்திற்கு தெரியுமா.?

சிறந்த நடிகருக்கான விருது வென்ற குருசோமசுந்தரம்.; எந்த படத்திற்கு தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆசிய திரைப்படங்களுக்கான ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட் 2022 விருதுகள் அறிவிப்பில்
நடிகர் குருசோமசுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

ஆசிய நாடுகளின் திரைப்படங்களுக்கான விருதுகள் ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்’ இந்த வருடம் வழங்கப்பட்டது.

இதில் 16 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழிப் படங்கள் கலந்துகொண்டன.

சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான விருது நடிகர் குருசோமசுந்தரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த விருது ‘மின்னல்முரளி’ படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்டது.

டிசம்பர் மாதம் விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது.

ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகளை சார்ந்த பல்வேறு மொழி திரைத்துறையை சார்ந்தவர்களும் இதில் கலந்துக் கொள்கிறார்கள்.

குருசோமசுந்தரம்

Actor Guru Somasundaram won Best Actor of Asian Continent

More Articles
Follows