எல்லாமே ஒருவன்தான்.; இணையத்தை மிரட்டும் ‘சர்தார்’ கார்த்தி

எல்லாமே ஒருவன்தான்.; இணையத்தை மிரட்டும் ‘சர்தார்’ கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி வித்தியாசமான வயதான வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘சர்தார்’.

இவருடன் ராஷி கண்ணா, ஷங்கி பாண்டே, லைலா, முனீஷ்காந்த், முரளி சர்மா, இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர்.

பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தை இயக்க பிரின்ஸ் பிக்சர் பேனில் எஸ்.லக்‌ஷ்மன் தயாரித்துள்ளார்.

இப்பட திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ். இதன் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி பெற்றுள்ளது.

இந்த படம் 2022 தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், படத்தின் டீசர் வெளியானது.

இந்த டீசரில்..”இந்திய ராணுவ ரகசியங்களை உளவாளி ஒருவர் பார்க்கிறார். இதனையடுத்து பலவிதமான கெட் அப்புகளில் கார்த்தி தோன்றுகிறார்.

எல்லாமே ஒருவன்தான் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.

இந்த டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார்.

The striking Sardar Teaser goes viral

https://t.co/VWBq8OL7AA

@Karthi_Offl @Prince_Pictures @Udhaystalin @Psmithran @gvprakash @RaashiiKhanna_ @lakku76 @rajishavijayan @ChunkyThePanday @george_dop @AntonyLRuben @dhilipaction @SonyMusicSouth @kalaignartv_off @teamaimpr

‘நானே வருவேன்’ பட முதல் நாள் வசூலை அறிவித்து செல்வராகவனை நேரில் பாராட்டிய தாணு

‘நானே வருவேன்’ பட முதல் நாள் வசூலை அறிவித்து செல்வராகவனை நேரில் பாராட்டிய தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் இரு வேடங்களில் நடித்த ‘நானே வருவேன்’ நேற்று செப்டம்பர் 29 இல் வெளியானது.

செல்வராகவன் இயக்கி கௌரவ தோற்றத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார்.

யுவன் இசையமைத்திருந்த இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.

வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் 10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் செல்வராகவனை சந்தித்து மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

சினிமாவில் அறிமுகமாகும் கிரீட்டி.; ‘ஜூனியர்’ டைட்டில் லுக் ரிலீசானது

சினிமாவில் அறிமுகமாகும் கிரீட்டி.; ‘ஜூனியர்’ டைட்டில் லுக் ரிலீசானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளரும், அரசியல்வாதியும், தொழிலதிபருமான ஜனார்த்தன் ரெட்டியின் மகனான கிரீட்டி நடிகராக அறிமுகமாகிறார்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை அவர் நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

கன்னட திரையுலகில் நடிகர் கிரீட்டி புதுமுக நாயகனாக அறிமுகமாகிறார். இதற்கான தொடக்க விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னணி நட்சத்திர இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, ” கிரீட்டி நடிகராக அறிமுகமாவதற்கு தன்னுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியிருக்கிறார். அவர் கடினமாக உழைத்து பெரிய உயரத்தை எட்டுவார்” என பாராட்டினார்.

இவர் திரைத்துறையில் அறிமுகமாகும் போது பெயரிடப்படாத அந்தப் படத்தின் டீசர் வெளியாகி, கன்னட திரையுலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது அவர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப் படத்தை பற்றிய புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

கிரீட்டியின் திரையுலகப் பிரவேசம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றதைப் போல், அவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.

தற்போது படக் குழுவினர், அவரது பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 29ஆம் தேதி) படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிட்டு, அதன் டைட்டில் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் கிரீட்டியுடன் வி. ரவிச்சந்திரன், ஜெனிலியா, ரித்தேஷ் தேஷ் முக், ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

‘பாகுபலி’ படப் புகழ் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு, ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ரவீந்தர் கவனிக்க, மெய்சிலிர்க்கும் சண்டைக் காட்சிகளை முன்னணி சண்டை பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்ன் மேற்கொண்டிருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வாராஹி ‌ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கும் 15ஆவது திரைப்படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

நடிகர் க்ரீட்டி கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகும் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் தயாராகிறது. தமிழில் வெளியான க்ரீட்டி படத்தின் அறிமுக டீசரில் அவரே சொந்தக் குரலில் பேசியிருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விசயம்.

ஒட்டுமொத்த இந்திய திரை உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் கன்னட திரை உலகத்திலிருந்து புதுமுக நடிகர் கிரீட்டியின் அறிமுகம் அனைவரையும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.

Kireeti starer movie title & look released

The Cholas Are Coming: Snack Bar & Rest Room வசதியுடன் ‘பொன்னியின் செல்வன்’ Special Bus

The Cholas Are Coming: Snack Bar & Rest Room வசதியுடன் ‘பொன்னியின் செல்வன்’ Special Bus

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்திற்கு தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்து உலக மக்களும் பெரும் ஆதரவளித்து வருகின்றனர்.

படக்குழுவை அனைத்து தரப்பும் மக்களும் பாராட்டி வரும் வேளையில் பொன்னியின் செல்வன் படம் தொடர்பான ஒரு சிறப்பு பேருந்தை அறிமுகம் செய்துள்ளது பிவிஆர்.

தமிழ் சினிமாவின் பெருமையான, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை கொண்டாட, அது போன்ற பிரம்மாண்டமான சில விஷயங்களும் நமக்கு தேவைதானே?

*நாள் 1*: இதனை ஒட்டி, வசந்த் & கோ’ஸ் சென்னை பிரிவின் நிர்வாக இயக்குநர் முதல் நாளில் பஸ் டூர் ஒன்றை தொடங்கி வைக்கிறார். அதே போல, மாலை சென்னை நகரத்துக்குள் மற்றொரு ஃபன் டூர் ஒன்றை லலிதா ஜுவல்லர்ஸ்ஸின் நிர்வாக இயக்குநர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

*நாள் 2-5:* இரண்டாம் நாளில், 150+ வாடிக்கையாளர்கள் மற்றும் ப்ராண்ட் பிரதிநிதிகளுடன் உற்சாகமான நடைப்பயணம் இருக்கும்.

மேலும், இந்த பஸ் டூர் சத்யம் சினிமாவில் தொடங்கி எங்கெல்லாம் பார்வையாளர்கள் ‘பொன்னியின் செல்வன்1’ படத்தை பார்த்து கொண்டாடி அன்பை தருகிறார்களோ அங்கெல்லாம் செல்ல இருக்கிறது.

படத்தில் உள்ள நட்சத்திரங்களின் படங்களும் இந்தப் பேருந்தில் மக்களின் கவனத்தை குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாது வசதியான plush இருக்கைகள், பேருந்துக்குள்ளே கழிப்பறை, ஸ்நாக் பார் போன்ற பல வசதிகள் செய்யப்பட்டு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும்.

PVR-ல் விளம்பரம் செய்யுங்கள்!!!

இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இது தொடர்பான அனைத்து சுவாரஸ்யமான விஷயங்களையும் பார்க்க தவறாதீர்கள்!

தளபதி விஜய் – கௌதம் மேனன் கூட்டணி கடைசியில் நடக்குமா?

தளபதி விஜய் – கௌதம் மேனன் கூட்டணி கடைசியில் நடக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மற்றும் த்ரிஷா நடிக்கும் ‘தளபதி 67’ இல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னை அணுகியதாக வெந்து தணிந்தது காடு பட வெளியீட்டிற்கு முன் ஒரு நேர்காணலில் கௌதம் வாசுதேவ் மேனன் வெளிப்படுத்தியிருந்தார்.

சமீபத்தில், VTK வெளியீட்டிற்குப் பிறகு சமீபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் கௌதம் இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டதாக உறுதிப்படுத்தினார். ஆதாரங்களின்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி 67 படத்திற்காக அவர் 45 நாட்களுக்கு மேல் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமா?

ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் ’ படத்தின் விளம்பரப் பணியில் ஈடுபட்டிருந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், விமான நிலையத்தில் அதிக அளவு உடையில் தோன்றியதால் கர்ப்பம் பற்றிய வதந்திகள் பரவின.

இருப்பினும், இந்த ஊகங்கள் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராய் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

பிரபல தமிழ் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 1955 நாவலை அடிப்படையாகக் கொண்ட பொன்னியின் செல்வன் படத்தில் ராணி நந்தினியின் பாத்திரத்தை அவர் சித்தரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows