திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் மிஸ்டர் லோக்கல் பட டீசர்

திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் மிஸ்டர் லோக்கல் பட டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanநகைச்சுவை என்பது சிவகார்த்திகேயன் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரிடம் இருந்தும் பிரிக்க முடியாத ஒரு அங்கம். அனைத்து தரப்பு, குடும்ப ரசிகர்களையும் அதன் மூலம் ரசிக்க வைக்கிறார்கள். அவர்கள் இருவரும் மிஸ்டர் லோக்கல் மூலம் ஒரே படத்தில் இணைகிறார்கள் என்ற முதல் அறிவிப்பு வந்ததில் இருந்து, அடுத்தடுத்த அறிவிப்பு மூலம் இன்று வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தற்போது அதன் டீஸர் வெளியாகி அனைவரையும் திரும்ப திரும்ப பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு டீஸரை உருவாக்குவது என்பது நிறைய திறமையும், பொறுப்பும் தேவை. ஏனெனில் படத்தில் என்ன இருக்கிறது என்பதை ரசிகர்களுக்கு சரியாக சொல்ல வேண்டும். இந்த மிஸ்டர் லோக்கல் டீஸரில் பிரதான கதாபாத்திரங்களான மனோகர் (சிவகார்த்திகேயன்) மற்றும் கீர்த்தனா (நயன்தாரா) ஆகியோரிடையே உள்ள மோதல்கள் மிகத்துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தில் அவரது நகைச்சுவை உணர்வும், மாஸ் தருணங்களும் மிகச் சரியாக காட்டப்பட்டுள்ளன. கூடுதலாக, முன்னணி கதாபாத்திரங்களுக்கிடையே நாம் பார்க்கும் வாய்மொழி சண்டை, முழுப்படமும் எப்படி இருக்கும் என்பதை காண நம்மிடையே எதிர்பார்ப்புகளை உண்டாக்குகிறது. ஹிப் ஹாப் தமிழாவின் கவர்ந்திழுக்கும் பின்னணி இசையும் டீஸரில் கூடுதல் சிறப்பு.

மே 1ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தை ராஜேஷ் இயக்கியிருக்கிறார், ஸ்டுடியோகிரீன் ஃபிலிம்ஸ் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகிபாபு, சதீஷ் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரோகேஷ், மிர்ச்சி விஜய் மற்றும் கே.ஆர்.தரண் பாடல்களை எழுதியுள்ளனர். தினேஷ்குமார் நடனத்தையும், அன்பறிவு சண்டைப்பயிற்சியையும் கவனிக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் உருவாகும் இரண்டாம் படம்

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் உருவாகும் இரண்டாம் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan new film poojaமுதல் படமான கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தற்போது “தயாரிப்பு எண் 2” படத்தை மிக வேகமாக முடித்து வருகிறது. ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன.

படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, “இது வழக்கமான விஷயமாக தோன்றலாம், ஆனால் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி தெரிவிப்பதை தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை. வாய்ப்பு அளித்ததையும் தாண்டி, எங்களை ஊக்கப்படுத்தியதும், எங்கள் படைப்பு சுதந்திரத்தில் எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் முழு சுதந்திரம் கொடுத்ததும் எங்களை படத்தை மிகச் சிறப்பாக கொண்டு செல்ல உற்சாகம் அளித்தது. இப்போது படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம், அதே சமயத்தில் டப்பிங் பணிகளையும் துவக்கியிருக்கிறோம்” என்றார்.

படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினரை பற்றி அவர் கூறும்போது, “நடிகர்களை பற்றி நான் என்ன சொல்ல முடியும், அவர்கள் ஏற்கனவே தங்கள் திறமையால் மிகவும் புகழ் பெற்றவர்கள். ரியோ ஏற்கனவே ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் விரும்பப்படும் நபராக மாறிவிட்டார். நான் அவருடன் பணிபுரிந்த வரை, அவரின் அர்ப்பணிப்பும், சிறப்பானதை வழங்குவதில் அவரின் உறுதியையும் உணர்ந்தேன். அதே போலவே ஷிரினும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ராதாரவி சார் எங்கள் படத்தில் நடிக்க வந்தது எங்கள் அதிர்ஷ்டம். நாஞ்சில் சம்பத் சார் எங்கள் படத்துக்கு ஒரு வைரக்கல். நான் சில நேரங்களில் நாஞ்சில் சம்பத் சாரின் எளிமையான மற்றும் நேர்மையான வாழ்க்கையை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். நிச்சயமாக, ஆர்.ஜே. விக்னேஷ்காந்தும் அவர் பங்குக்கு நகைச்சுவை விஷயங்களை அளித்திருக்கிறார்” என்றார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த “தயாரிப்பு எண் 2” ஒரு நகைச்சுவை படம் ஆகும். ஷபிர் (இசை), U.K. செந்தில்குமார் (ஒளிப்பதிவு), ஃபென்னி ஆலிவர் (படத்தொகுப்பு), பிரதீப்குமார் (சண்டைப்பயிற்சி), கமலநாதன் (கலை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் பற்றிய அறிவிப்புகள் எந்த நேரத்திலும் தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய மேடையில் அனைவரையும் ஈர்த்திருக்கும் LKG

உலகளாவிய மேடையில் அனைவரையும் ஈர்த்திருக்கும் LKG

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

LKG movie stillsஅரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்ட படங்கள் ரசிகர்களை ஈர்க்க முதல் காரணம், சமகாலத்தில் நிகழும் சம்பவங்களை பகடி செய்வது தான். நையாண்டி என்பது நிகழும் சம்பவங்களை பற்றிய கோபத்தின் அல்லது விமர்சனத்தின் வெளிப்பாடு தான். அது தான் எல்லைகள் மற்றும் மொழியியல் தடைகளைத் தாண்டி பிரபலமானதாகிறது. ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படமான ‘LKG’ உலகளாவிய மேடையில் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. படத்தின் டிரெய்லர் சில யூடியூப் சேனல்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகி வரும் இந்தியா, நியூஸிலாந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஸ்ருதிஹாஸன் பாடிய சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டிருப்பது இந்த திரைப்படத்திற்கு ஒரு பெரிய பூஸ்டாக மாறியிருக்கிறது. கூடுதலாக, LKG படக்குழு ட்விட்டர் இந்தியாவில் படத்தின் புரமோஷன் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இயக்குனர் கே.ஆர் பிரபு கூறும்போது, “இதுபோன்ற எதையும் நாங்கள் முன்னதாக திட்டமிடவில்லை, இது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. வெகுஜனங்களிடையே திரைப்படத்தை கொண்டு சேர்க்க பல தனித்துவமான, சிறப்பு உத்திகளை கையாளும் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் சார் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்திற்கு மட்டுமல்ல, அவர் தயாரிக்கும் அனைத்து படங்களுக்கும் தனித்துவமான விளம்பரங்களை செய்கிறார். அவர் தயாரித்துள்ள LKG குழுவில் பங்கு பெற்றது எங்கள் அதிர்ஷ்டம். எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களின் வெற்றிக்கு காரணமாக இருப்பதோடு, படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறார்கள் ரசிகர்கள். டிரெய்லர் மற்றும் பாடல்களை பற்றிய பாராட்டுகளை கேட்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ராம்குமார், ஜே.கே.ரித்தீஷ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார். பா.விஜய் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் வரிகளுக்கு லியான் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார்.

LKG அவசியமான படம்; ஆர்.ஜே. பாலாஜி எனக்கு ஜூனியர் சோ.. சக்திவேல்

LKG அவசியமான படம்; ஆர்.ஜே. பாலாஜி எனக்கு ஜூனியர் சோ.. சக்திவேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lkg stillsவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கும் படம் எல்.கே.ஜி. வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படத்தின் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பேசிய தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் கூறும்போது, “எல்.கே.ஜி எனது ஹோம் பேனரின் முதல் தயாரிப்பாகும். என் தந்தை ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக சினிமாவில் நுழைவதற்கு ஒரு கனவு கண்டார், ஆனால் துரதிருஷ்டவசமாக 46 வயதில் காலமானார். இந்த படத்தின் மூலம் அந்த கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவருடைய மொத்த குழுவும் சொன்னபடியே படத்தை முடித்து தந்திருக்கிறார்கள். எனவே அது எங்கள் ஸ்டூடியோவில் வெளியாகும் முதல் படமாகி இருக்கிறது. காரில் ஒன்றாக பயணிக்கும்போது ஆர்.ஜே. பாலாஜி இந்த படத்தின் அடிப்படை கருத்தை எனக்கு விளக்கினார், அது என்னை மிகவும் ஈர்த்தது. உடனடியாக படத்தை தயாரிக்க முடிவு செய்தோம். நேற்று இரவு நாங்கள் இந்த படத்தின் இறுதி பிரதியை பார்த்தோம். ஆர்.ஜே.பாலாஜியை பாராட்டுவதை என்னால் நிறுத்த முடியவில்லை. இது மற்றவர்களை கலாய்த்து எடுக்கப்படவில்லை, ஒரு நல்ல செய்தியை தாங்கி வந்திருக்கிறது. தனிப்பட்ட முறையில், இப்போது வரை கொண்டாடப்படும் சத்யராஜ் சாரின் அமைதிப்படை படத்தின் மிகத் தீவிரமான ரசிகன். அந்த வரிசையில் இப்போது LKG படமும் சேரும்” என்றார்.

ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்துக்கு இசையமைக்க முதல் முறையாக என்னை அணுகியபோது, நான் மிகவும் உற்சாகமாகமானேன். படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், பின்னணி இசையமைக்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். படத்தை பார்த்த உடனேயே ஆர்.ஜே. பாலாஜியை அழைத்து சமீபத்தில் என்னை கவர்ந்த முதல் அரசியல் திரைப்படம் இது தான் என்று கூறினேன். அதனால் சிறந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசையை வழங்கும் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருந்தது” என்றார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.

கடந்த 4-5 ஆண்டுகளாகவே ஆர்.ஜே. பாலாஜி அண்ணாவுடன் நான் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறேன். அவர் செய்யும் நல்ல செயல்களுக்கு எல்லாம் அவ்வப்போது அவரை வாழ்த்துவேன். இந்த படத்தை முடிவு செய்ததும், கதையின் படி நிறைய விஷயங்கள் தேவைப்பட்டன. அவற்றில் முக்கியமான ஒன்று கூட்டம். சரியான திட்டமிடல் மற்றும் நல்ல குழுவால், நாங்கள் திட்டமிட்ட நேரத்தில் படத்தை முடிக்க முடிந்தது. படம் நிச்சயமாக பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தில் குடிப்பது, புகைப்பது போன்ற காட்சிகள் ஏதும் கிடையாது. குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என்றார் ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா.

ஆரம்பத்தில் இந்த திரைப்படத்திற்கு என்னை அணுகியபோது, அது பாஸிடிவ்வான முன்னணி கதாபாத்திரமாக இருக்கும் என நினைத்தேன். இந்த படத்தில் ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்று இப்போது வரை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் உண்மையில் ஜிகர்தண்டா பாபி சிம்ஹா கதாபாத்திரம் போன்றது தான் என் நிலை என்பதை இப்போது நான் உணர்கிறேன். நடிகர்கள் மற்றும் ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்குகளில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ஆர்.ஜே. பாலாஜியை உங்கள் படங்கள் எதிலும் தவற விடக்கூடாது என்று ஐசரி கே கணேஷ் அவரிடம் நான் அடிக்கடி சொல்லுவேன். அவரின் எனர்ஜியும் அர்ப்பணிப்பும் அப்படிப்பட்டது” என்றார் நடிகர் ஜே.கே.ரித்தீஷ்.

ஆர்.ஜே. பாலாஜி உடன் பணிபுரிய மிக மகிழ்ச்சியான காரணம், சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதன் முதலில் சித்தார்த்துடன் இணைந்து உதவியது அவர் தான். ஒட்டு மொத்த குழுவும் மிகவும் உற்சாகமாக வேலை செய்தனர். இந்த படத்தில் உள்ள அனைவரும் நல்ல மனதுடன் இருக்கிறார்கள், இதுவும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும்” என்றார் நடிகர் மயில்சாமி.

நேற்று இரவு இந்த படத்தை பார்க்க நேர்ந்தது, படம் உருவாக்கப்பட்ட விதம் முற்றிலும் வியப்பாக இருந்தது. ஆர்.ஜே. பாலாஜிக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் சாதாரணமாக ஒரு படத்தில் நடித்து விட்டு போயிருக்கலாம். ஆனால் அவர் ஒரு அவசியமான திரைப்படத்தில் நடித்திருக்கிறார், அவர் எனக்கு ஜூனியர் சோ ராமசாமி சார் போல தெரிகிறார். சமூகத்தை பற்றிய அவரது சிந்தனை அப்படி தான் இருக்கிறது. சார்லி சாப்ளின் ஹிட்லர் படத்தை எடுத்தது போல, சோ ராமசாமி சார் முகம்மது பின் துக்ளக் படத்தை எடுத்தது போல, எல்.கே.ஜி படம் ஆர்.ஜே.பாலாஜிக்கு இருக்கும் என்று நிச்சயமாக உறுதியளிக்கிறேன்” என்றார் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன்.

இத்தகைய ஒரு நல்ல படக்குழுவின் ஒரு பகுதியாக நானும் இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, ஆர்.ஜே.பாலாஜி போன்ற யாரையும் புண்படுத்தாத நல்ல சிந்தனைகளை உடைய ஒருவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. மேலும், நான் அவருடன் பல கல்லூரிகளுக்கு சென்றிருக்கிறேன், அவர் அங்கு பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசுவதை எண்ணி பெருமைப்படுகிறேன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி” என்றார் நாயகி பிரியா ஆனந்த்.

ஆர்.ஜே. பாலாஜி உடன் பணிபுரிவது எனது தம்பியுடன் நேரம் செலவழிப்பது போன்றது. அவரது கிரியேட்டிவிட்டி அபாரம். அவர் புது புது விஷயங்களை சிந்தித்துக் கொண்டே இருக்கிறார். அது போஸ்டர்களில் கூட தெரிகிறது” என்றார் கலை இயக்குனர் டி.பாலசுப்ரமணியம்.

படத்தை பற்றி சக்திவேலன் சார் சொன்னது தான் முற்றிலும் உண்மை. கணேஷ் சார் இந்த படத்துக்கு தயாரிப்பாளராக இருந்தது எனக்கு பெருமை. இங்கு எல்லோரும் படத்தை பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். பார்வையாளர்களுக்கு இது ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும், அவர்களும் படத்தின் சொல்லப்படும் கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன் என்றார் இயக்குனர் கே.ஆர்.பிரபு.

ராம் குமார் சாரின் நடிப்பை நாம் ஒரு சில படங்களை தவிர வேறு எதிலும் பார்த்ததில்லை. இந்த படத்தில் அவர் நடித்தது எங்களுக்கு கிடைத்த வரம். நாஞ்சில் சம்பத் சார் ஒரு தாழ்மையான மனிதர். இந்த படத்திற்கு நாங்கள் அவரை அணுகியபோது, அவர் கேட்ட முதல் விஷயம், அவருடைய மகனின் கல்லூரி கட்டணத்திற்கு பணம் கட்ட முடியுமா என்பது தான். இத்தகைய மோசமான சூழ்நிலையில் அவரைப் பார்க்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு மோசமான அரசியல்வாதியின் கதாபாத்திரத்திற்காக நாங்கள் அவரை அணுகிணோம். ஆனால் அவரைப் பற்றிய எனது கருத்துகள் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருந்தன. அவர் ஒரு அற்புதமான மனிதர். இப்போது சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அவர் நடித்து வருகிறார், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் பிஸியான நடிகராக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்.

கடந்த சில ஆண்டுகளாகவே நான் நகைச்சுவை நடிகராக நடிக்கவில்லை, அதில் எனக்கு திருப்தியே இல்லை. நிறைய பேர் கிடைக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணாத, நடிச்சி நல்லா பணம் சம்பாதி என அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அந்த நேரத்தை நான் LKG ஸ்கிரிப்ட் எழுத உபயோகித்துக் கொண்டேன். சென்னை வெள்ளம் முடிந்து வந்த தேர்தலில் வெறும் 57% வாக்குகள் பதிவான போது தான், இளைஞர்கள் யாருக்கு, ஏன் வாக்களிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். LKG படத்தை பார்த்த பிறகு, அவர்கள் நிச்சயம் வெளியே வந்து வாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பார்கள் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். இது ஒரு ஸ்பூஃப் படம் அல்ல, பார்வையாளர்களை ஏதாவது ஒன்றை பற்றி சிந்திக்க வைக்கும் படம். இது என் சொந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு படம் அல்ல, சமூகத்திற்கு ஏதாவது செய்யும் படம். பிப்ரவரி 22 அன்று படம் வெளியான ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து இந்த படத்தை ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார் நாயகன் ஆர்.ஜே.பாலாஜி.

யாருக்கும் ஆதரவில்லை; தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பவர்களுக்கு ஓட்டு : ரஜினி

யாருக்கும் ஆதரவில்லை; தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பவர்களுக்கு ஓட்டு : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth announced not to contest in Parliament electionவருகிற மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது.

தேர்தல் நெருங்கி வருவதால் வழக்கம்போல தன் அரசியல் நிலைப்பாட்டை ரஜினிகாந்த் அறிவித்துள்ளர்.

அதில் இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ரஜினியின் கையெழுத்து இடப்பட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல்தான் எங்களது இலக்கு.

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது.

அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக் கூடாது.

மேலும் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண திட்டங்களை வைத்திருக்கும் கட்சிக்கு சிந்தித்து வாக்களியுங்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

Rajinikanth announced not to contest in Parliament election
RMM

காதலர்களை கவர்ந்த ‘காத்து வாக்குல ஒரு காதல்’ பட டீசர்; யோகிபாபு பாராட்டு

காதலர்களை கவர்ந்த ‘காத்து வாக்குல ஒரு காதல்’ பட டீசர்; யோகிபாபு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Yogi babu praises Kaathu Vaakula oru Kadhal movie teaserஇந்தப் பூமியில் எங்கும் நிறைந்திருப்பது காற்று மட்டுமல்ல காதலும் தான். இரண்டையுமே கறுப்பா சிவப்பா என்று பார்க்க முடியாது. இனிப்பா கசப்பா என்று சுவைக்க முடியாது. ஆனால் உணர மட்டுமே முடியும்.

காற்றில் கலந்து வரும் பூமணம் போலவும் துர் மணம் போலவும் காதலில் காமம் கலந்த கெட்ட காதலும் உண்டு. அன்பு செறிந்த தூய நல்ல காதலும் உண்டு. அப்படி ஒரு புனிதமான காதலை இரண்டு மயிலிறகு மனசுகளை இனம் பிரித்து ஒரு கதையாக இழை பிரித்து உருவாகும் படம் தான் ‘காத்து வாக்குல ஒரு காதல்’.

சீரடி சாய்பாபா வழங்கும் எஸ். பூபாலன் தயாரிப்பில் லைக் அண்ட் ஷேர் மீடியா இணை தயாரிப்பில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி நாயகனாக நடித்து இயக்குகிறார் மாஸ் ரவி. நாயகியாக லட்சுமிபிரியா நடிக்கிறார்.

மற்றும் தெறி வில்லன் சாய்தீனா , கல்லூரி வினோத் , ஆதித்யா கதிர் , லொள்ளு சபா ஆண்டனி ஆகியோருடன் புதுமுகங்கள் சிலரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு சுபாஷ் மணியன். எடிட்டிங் ஸ்ரீ ராஜ்குமார் இவர் ஏ. வெங்கடேஷ், எஸ். எஸ். குமரன் படங்களின் படத்தொகுப்பாளர்.
இசை ஜுபின். இவர் பழைய ‘வண்ணாரப்பேட்டை’, ‘விண்மீன்கள்’ படங்களின் இசையமைப்பாளர். பப்ளிசிட்டி டிசைன் ரெட் லைன்.

படம் பற்றி இயக்குநர் மாஸ் ரவி கூறும் போது , ” படம் பார்த்து விட்டு இப்படி ஒரு காதலி கிடைக்கவில்லையே என ஆண்களும் இப்படி ஒரு காதலன் கிடைக்கவில்லையே என பெண்களும் ஏங்கும் அளவுக்கான காதல் கதை.

காதலின் மகத்துவம் கூறும் இந்தப் டத்தின் டீஸரை காதலர் தினத்தில் வெளியிட்டோம். டீஸர் வெகுஜன ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகர் யோகிபாபு, இயக்குநர்கள் சுப்ரமணிய சிவா , விஜய்சந்தர் ஆகியோர் பாராட்டியதை மறக்க முடியாது. ” என்கிறார்.

படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

Actor Yogi babu praises Kaathu Vaakula oru Kadhal movie teaser

 

More Articles
Follows