கமல்-விஜய்யை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் சூப்பர் ஸ்டார்

கமல்-விஜய்யை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and mohan lalமலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் தமிழ் படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலையாள நடிகர்கள் அவ்வளவாக தமிழ் படங்களில் நடிப்பதில்லை.

அதற்கு முக்கிய காரணம், அவர்களது பெரும்பாலான படங்கள் இங்கு தோல்வியிலேயே முடிக்கின்றன.

ஆனால் மோகன்லால், மம்மூட்டி, ஜெயராமன் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களை மட்டுமே தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கமல் நடித்த உன்னை போல் ஒருவன் படத்தில் நடித்திருந்தார் மோகன்லால். இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சில ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்தார் மோகன்லால். இதுவும் வெற்றிப் பெற்றது.

இப்போது கேவி. ஆனந்த் இயக்கும் படத்தில் சூர்யாவுடன் இணைந்துள்ளார்.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மோகன்லால் உடன் நடிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி என சூர்யா தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் நேரிடையாக மோத தயாராகும் அமீர்

ரஜினியுடன் நேரிடையாக மோத தயாராகும் அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and ameerரஜினிகாந்த் நடிப்பில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் வரும் ஜூன் மாதம் 7 ம் தேதி லைகா வெளியீட திட்டமிட்டுள்ளப்படம் ‘காலா’.

இதன் இசை நேற்று வெளியானது.

பெரும் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைப்பெற்றது.

இந்நிலையில் இயக்குநர் அமீர் தயாரிப்பில் அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த முத்துகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’ .

படத்தின் தலைப்பிற்கேற்றார் போல் தமிழகத்தில் உள்ள பல பிரச்சனைகளை மையைப்படுத்தியும் அதில் ஒரு பிரச்சனையை பிரதானாப்படுத்தியும் படம் தயாரிக்கப்பட்டுள்ளது,

இயக்குநர் அமீரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்,.

பொதுவாகவே பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும்போது சிறிய பட்ஜெட் படங்களை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள் காரணம் தியேட்டர் ஒதுக்கீடு பெரியதாக கிடைக்காது என்பதால், அந்த விசயங்களை பற்றி கவலை அடையாமல் தான் தயாரித்துள்ள படத்தை காலா வெளியாகும் அதே நாளில் வெளியிட தாயராகியுள்ளார் தயாரிப்பாளர்,.

இயக்குநர் அமீர், மக்கள் பிரச்சனையை மையப்படுத்தி எடுத்துள்ளதால் இப்படத்தை மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையே இப்படத்தை வெளியிட முதல் காரணமாம்.

தோழிகளிடம் சவால் விட்டு சாதித்து காட்டிய விஜய்யின் தீவிர ரசிகை

தோழிகளிடம் சவால் விட்டு சாதித்து காட்டிய விஜய்யின் தீவிர ரசிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay with diehard fanநடிகர் விஜய்க்கு தமிழகத்தை போல் கேரளாவிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

அவரின் தீவிர ரசிகர்கள் கேரளாவின் சில பகுதிகளில் விஜய்க்கு சிலையும் வைத்துள்ளனர்.

இதில் சரண்யா என்ற விஜய் ரசிகை தன் தோழிகளிடம் தான் விஜய் அண்ணாவை நேசிப்பதாக கூறியுள்ளார். அடிக்கடி அவர் விஜய்யை பற்றியே பேசிக் கொண்டிருப்பாராம்.

எப்படியாவது ஒருநாள் விஜய் அண்ணனுடன் நான் போட்டோ எடுத்துக்கொள்வேன் என்றும் கூறினாராம்.

அதெல்லாம் உன்னால சத்தியமா முடியாது. என தோழிகள் இவரை நக்கலடித்துள்ளனர்.

இந்நிலையில் இவர் போராடி விஜய்யுடன் ஒரு போட்டோவை ஒன்றை எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில்… விஜய் அண்ணாவை பார்த்தபோது ஒருநிமிடம் ஷாக் ஆகிவிட்டேன்.

அவர் என்னை அவர் அருகில் வரச் சொன்னார். பின்னர் அழகாக சிரித்துக் கொண்டே கேமராவிற்கு என்னை போஸ் கொடுக்கச் சொன்னார்.

அப்போது நான் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது” என பதிவிட்டுள்ளார்.

ஜெயிச்சாலும் தோத்தாலும் இனிமே அரசியல்தான்… : கமல்ஹாசன்

ஜெயிச்சாலும் தோத்தாலும் இனிமே அரசியல்தான்… : கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanஇந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டமைப்பு கூட்டத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது…

டாஸ்மாக் கடைகளை யார் வேண்டுமானாலும் நிர்வகிக்க முடியும்.

ஆனால் தொழில் நடத்தவும், நிர்வாகத்தை நிர்வகிக்கவும் தகுதி, திறன் வாய்ந்தவர்களால் தான் முடியும்.

பி.இ., பி.எச்.டி படித்தவர்கள் எல்லாம் விஏஒ., ஆக வேலை செய்யும் சூழல் உள்ளது. இந்த அவலநிலை மாற வேண்டும்.

நான் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அரசியலில் தொடர்வேன். காவிரி விவகாரம் எளிதில் தீர்க்கக்கூடியாது.

காவிரி பிரச்னையில் உரிமைக்காக நாம் போராடி ஆக வேண்டும். காவிரி விவகாரத்தில் அரசியல் உள்ளது.

அதை எதிர்த்து நிச்சயம் போராடுவோம். தமிழகத்தில் மழைநீர் அதிகளவு உள்ளது. அதனை நாம் சேகரித்து வைக்க வேண்டும்.

இணையத்தை கலக்கும் அஜித்தின் விஸ்வாசம் படங்கள்

இணையத்தை கலக்கும் அஜித்தின் விஸ்வாசம் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

viswasamவிவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கிறார் அஜித்.

சத்யஜோதி தயாரிக்கும் இப்படத்திற்கு விஸ்வாசம் என தலைப்பிட்டுள்ளார்.

இப்படத்திற்கு இமான் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.

இதன் சூட்டிங் ஒரு சில தினங்களுக்கு ஹைதராபாத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் அஜித் நடிக்கும் ரோபோ சங்கர் படங்கள், அஜித்துடன் இமான் இருக்கும் புகைப்படங்கள் ஆகியவை இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.

என் கருத்துக்களை ரஜினி மூலம் சொல்கிறேன்; ரஞ்சித் ஓபன் டாக்

என் கருத்துக்களை ரஜினி மூலம் சொல்கிறேன்; ரஞ்சித் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I am using Rajini voice to say my thoughts says Ranjithகபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியை இயக்கும் வாயப்பை பெற்றார் ரஞ்சித்.

இவர் இயக்கியுள்ள காலா படத்தின் இசை வெளியீடு நேற்று (மே 9ஆம்) சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது ரஞ்சித் பேசியதாவது…

படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.

“ரஜினி சாருக்கு பவர்ஃபுல்லான வாய்ஸ். அவர் ஒரு விஷயத்தை பேசினார் அதன் ரீச் பெரியளவில் இருக்கும். அதை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன் என நினைக்கிறேன்’ என தெரிவித்தார்.

I am using Rajini voice to say my thoughts says Ranjith

More Articles
Follows