தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
ஏஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்டிக வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு, விஜய் யாருடன் இணைவார் என்பது குறித்து விவாதங்கள் கோலிவுட்டில் இப்போதே ஆரம்பித்துவிட்டன.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
விரைவில் மூன்று படங்களுக்கு ஒரே நேரத்தில் பூஜை போடவுள்ளதாம் சூப்பர் குட் பிலிம்ஸ்.
அதில் இந்த நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய்யை நடிக்க வைக்க ஏற்பாடு நடந்துள்ளது.
இதை உறுதிப்படுத்தி இருக்கும் நடிகர் ஜீவா, அதில் தானும் பங்கேற்க நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜீவா.
ஏற்கனவே விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்திருந்தார். அடுத்து சூப்பர் குட் தயாரிப்பில் விஜய் நடித்த ஜில்லா படத்திலும் இணைந்து நடனம் ஆடியிருந்தார்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த 100வது படமான மெர்சல் படத்திலும் விஜய் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Thalapathy Vijay may act in Super Good Films 100th movie