அசத்திட்டே…. சுரேஷ் காமாட்சி .! – பாரதிராஜா பாராட்டு

அசத்திட்டே…. சுரேஷ் காமாட்சி .! – பாரதிராஜா பாராட்டு

Miga Miga Avasaram movie Trailer launch updatesவசிஷ்டர் வாயால் வாழ்த்துப் பெற்றதற்கு இணையான மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி.

அவர் இயக்கியுள்ள மிக மிக அவசரம் படத்தின் ட்ரைலரை சமீபத்தில் பார்த்துள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. பார்த்ததுமே அவருக்கு மிகப் பிடித்துவிட்டதாம்.

அதை விட, ‘சுரேஷ் காமாட்சி…. அற்புதம். இதை உங்கிட்டருந்து நான் எதிர்ப்பார்க்கவே இல்ல. நல்லா பண்ணியிருக்க,” என்று பாராட்டியுள்ளார்.

இதைப் பார்த்ததுமே, படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட சம்மதித்துள்ளார். மோஷன் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், உடனிருந்த இயக்குநர் ஈ ராமதாஸ் மற்றும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமாரிடம் பாரதிராஜா மிக இயல்பாக இப்படிக் கூறினார்:

“என்னால நம்பவே முடியலய்யா… இப்படி தயாரிப்பாளர்களெல்லாம் டைரக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டா, நாங்கள்லாம் என்னய்யா ஆகிறது.. …,” என்றார் கிண்டலாக..

பாரதிராஜாவின் பாராட்டை ஒன்றுக்கு இருமுறைப் பெற்றுள்ள சுரேஷ் காமாட்சி கூறுகையில், “தமிழ் சினிமாவின் பிதாமகன் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அவரிடமிருந்து தன்னெழுச்சியாக வந்து விழுந்த வார்த்தைகள் அவை. அவரது பாராட்டுகள் மூலம் நான் சினிமாவுக்கு வந்ததன் பலனை அனுபவித்துவிட்டேன்.

அவரது இந்த நல் வார்த்தைகளுக்கு பங்கம் வராத அளவுக்கு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் என் படைப்புகள் அமையும்…” என்றார்.

ஸ்ரீப்ரியங்கா நாயகியாகவும், ஹரீஷ் ஹீரோவாகவும் நடித்துள்ள “மிக மிக அவசரம்” படம் ஜூன் மாத வெளியீடாக வரவிருக்கிறது.

Miga Miga Avasaram movie Trailer launch updates

Miga Miga avasaram trailer launch updates

பாகுபலியால் மிரண்டு போன பைரஸி; ராஜமெளலியின் அடுத்த யோசனை

பாகுபலியால் மிரண்டு போன பைரஸி; ராஜமெளலியின் அடுத்த யோசனை

Baahubali Director SS Rajamoulis idea to destroy Piracyதிருட்டு விசிடியால் சினிமா அழிந்துவிடும் நிலையில் உள்ளது. இணையங்களில் புதிய படங்கள் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டது. இந்த வார்த்தைகளை நாம் தினம் தினம் கேட்டு வருகிறோம்.

பாகுபலி 2 வெளியான நாள் அன்று கூட முதல் காட்சிக்கு முன்பே இணையங்களில் இப்படம் வெளியானது.

ஆனால் எத்தனை இடையூறுகள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது.

இந்திய சினிமாவே இதன் வசூல் சாதனையை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது.

திருட்டு விசிடியில் வெளியிட்டவர்களே இதை கனவிலும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

இந்நிலையில் பைரஸி குறித்து தன் அண்மை பேட்டியில் ராஜமௌலி கூறியுள்ளதாவது…

உலக சினிமாவுக்கே பைரஸிதான் பெரும் பிரச்சினை.

தியேட்டர் வெளியீட்டுக்கும், தொலைக்காட்சிக்கும் எனத் தனியாக வியாபாரம் செய்து வருகிறோம்.

ஆனால், இணையத்தில் வியாபாரம் செய்ய தவறிவிட்டோம்.

இதை பைரஸியில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தியேட்டர், டிவி, கம்ப்யூட்டரை போன்று சிலருக்கு மொபைல் போன்களில் படம் பார்ப்பது பிடித்துள்ளது.

எனவே அவர்களுக்கு ஏற்றவாறு, நல்ல தரத்தில் படத்தை கொடுத்து, பிரிண்ட் நன்றாக இருக்கும் வகையில் இணையத்தில் வெளியிட வேண்டும்.

அப்போது பணம் கொடுத்து அவர்களும் படம் பார்ப்பார்கள். பைரஸியை தேடிச் செல்ல மாட்டார்கள்” என்று யோசனை தெரிவித்துள்ளார் ராஜமெளலி.

Baahubali Director SS Rajamoulis idea to destroy Piracy

மூன்று நாட்களில் ரூ. 540 கோடியை தாண்டி பாகுபலி சாதனை

மூன்று நாட்களில் ரூ. 540 கோடியை தாண்டி பாகுபலி சாதனை

Baahubali 2 collected Rs 540 crores in Worldwide within 3 daysராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் இரு வேடங்களில் நடித்துள்ள படம் பாகுபலி 2.

இப்படத்தில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் இந்திய சினிமா வசூலில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் ரூ. 335 கோடிகளையும், வெளிநாட்டில் ரூ. 125 கோடிகளையும் வசூலித்துள்ளது.

ஆக மொத்தம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 540 கோடியை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Baahubali 2 collected Rs 540 crores in Worldwide within 3 days

இரண்டு மில்லியன் பாலோயர்களை பெற்று சிம்பு சாதனை

இரண்டு மில்லியன் பாலோயர்களை பெற்று சிம்பு சாதனை

simbu artசிம்பு நடித்த வாலு, இது நம்ம ஆளு உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸின்போது பெரும் பிரச்சினைகளை சந்தித்தது.

இதனிடையில் சிம்பு பாடிய பீப் சாங் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

அண்மையில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் தாமதத்திற்கு கூட சிம்புவே காரணம் என சொல்லப்பட்டது.

இதன் பின்னரும் கூட சிம்புவை இயக்க தான் காத்திருப்பதாக கௌதம் மேனன் தெரிவித்திருந்தார்.

இப்படி திரையுலகில் சிம்புக்கு எதிராக எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், அவருக்கான ரசிகர் பட்டாளம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அதனை நிரூபிக்கும் வகையில் சிம்புவின் ட்விட்டர் பக்கத்தை தற்போது இரண்டு மில்லியன் (20 இலட்சம்) பேர் பின் தொடர்கின்றனர்.

தமிழ் நடிகர்களில் ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் மட்டுமே 2 முதல் 3 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu got 2 million followers on Twitter

மே மாத இறுதியில் மீண்டும் விஜய ‘பைரவா’ விருந்து

மே மாத இறுதியில் மீண்டும் விஜய ‘பைரவா’ விருந்து

Vijaya Bairavaa movie release on May endபரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சிஜா ரோஸ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்த படம் பைரவா.

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படம் கடந்த பொங்கல் தினத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகி வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டப்பிங் மே மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு தெலுங்கில் விஜயபைரவா எனப் பெயரிட்டுள்ளனர்.

Vijaya Bairavaa movie release on May end

ரஜினி-ராஜமவுலி இணைந்தால் ‘அவதார்’ அவுட்; சொன்னது யார் தெரியுமா.?

ரஜினி-ராஜமவுலி இணைந்தால் ‘அவதார்’ அவுட்; சொன்னது யார் தெரியுமா.?

alphone putharanஹிந்தி சினிமாவின் பிரபல நட்சத்திரங்களே ரஜினி படத்தின் ரிலீஸ் சமயத்தில் தங்கள் படங்களை வெளியிட தயங்குவார்கள்.

ரஜினி படத்திற்கான வரவேற்பு அப்படி ஹைலெவலில் இருக்கும்.

அதற்கு நிகராக தற்போது வெளியாகியுள்ள ராஜமௌலியின் பாகுபலி2 படத்திற்கும் கிடைத்துள்ளது.

இதனால், ரஜினியும் ராஜமௌலியும் இணைந்து பணியாற்றுவருவார்களா? என்ற கேள்வி அண்மை காலமாக தென்னிந்திய சினிமாவில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மேலும், சூப்பர் ஸ்டாரை டைரக்ட் செய்ய வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்று ராஜமவுலியும் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

‘எஸ்.எஸ்.ராஜமவுலியும் ரஜினிகாந்தும் ஒரு படத்தில் இணைவார்கள் என நினைக்கிறேன். அப்படி நடந்தால், ’அவதார்’ பட வசூலை அது முறியடிக்கும்.’ என தெரிவித்துள்ளார்.

If Rajini and Rajamouli joins Avatar record will be broken

More Articles
Follows