விஜய்.? விஷால்.? யாருடைய வாக்கு ஜெயிக்கப் போகிறது…?

விஜய்.? விஷால்.? யாருடைய வாக்கு ஜெயிக்கப் போகிறது…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vishalமெர்சல் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் எந்த மாற்றமும் இருக்காது. படம் சொன்னப்படியே வெளியாகும் என தேனாண்டாள் நிறுவனம் சார்பில் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளனர்.

ஆனால் கேளிக்கை வரி பிரச்சினையால், சினிமா டிக்கெட் விலை உயர்வு விவகாரத்தில் முடிவு எட்டப்படும் வரை புதிய படங்கள் எதுவும் வெளியாகாது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

இதனால் சினிமா ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

எனவே யார் சொன்ன வாக்கு நிறைவேறப் போகிறது? என ரசிகர்கள் காத்திருக்கிறார்களாம்.

Mersal Diwali release and New movie release banned updates

நல்லவைகளின் மறுஉருவம் ரஜினி… – காலா நாயகி அஞ்சலி பாட்டீல்

நல்லவைகளின் மறுஉருவம் ரஜினி… – காலா நாயகி அஞ்சலி பாட்டீல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anjali Patil shares her experience with Rajinikanth in Kaala movieரஞ்சித் இயக்கிவரும் சூப்பர் ஸ்டாரின் காலா படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் ரஜினியுடன் நானா படேகர், பங்கஜ் த்ரிபாதி, ஹ்யூமா குரேஷி, சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ், அஞ்சலி பாட்டீல், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ரஜினியுடன் நடிப்பது குறித்து நடிகை அஞ்சலி பாட்டீல் கூறியதாவது…

“என் நடிப்பு திறமையைக் காட்ட காலா படத்தில் வாய்ப்பிருக்காது என்பது தெரியும்.

ஆனால் ரஜினியுடம் இணைந்து நடிக்க வேண்டும். அதில் கிடைக்கும் உற்சாகம் வேண்டும் என்பதற்காக ஒப்புக்கொண்டேன்.

அவர் நல்லவைகளின் மறுவடிவம். அவரைப் போன்ற மனிதர்களை கற்பனைக் கதைகளில் மட்டுமே கேட்டிருப்போம். பார்த்திருப்போம்.

ரஜினியை பார்க்கவே ஒவ்வொரு நாளும் கூட்டம் திரளும். அந்த மக்கள் வெள்ளத்தில் நடிப்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது” என கூறியுள்ளார்.

Anjali Patil shares her experience with Rajinikanth in Kaala movie

கோலிவுட்டின் ராசியான நடிகராக சிவகார்த்திகேயன் மாறியது எப்படி?

கோலிவுட்டின் ராசியான நடிகராக சிவகார்த்திகேயன் மாறியது எப்படி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan became lucky actor in Kollywoodசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் கடந்த 2016ஆம் ஆண்டு விஜயதசமி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆனது.

அதன்பின்னர் ஆரம்பிக்கப்பட்ட வேலைக்காரன் படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்தாண்டு 2017 டிசம்பர் மாதம்தான் வெளியாகவுள்ளது.

ஆனால் இந்த ஒரு வருடத்திற்குள் சிவகார்த்திகேயன் பற்றிய செய்திகள் ஏதாவது ஒன்று வந்துக்கொண்டேதான் இருக்கிறது.

அது எப்படி? என்று கவனித்தீர்களா?

பெரும்பாலான படங்கள் டீசர், டிரைலர் அல்லது பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில் வெளியிடுகிறார்.

இதனால் அவரை பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஓரிரு தினங்களுக்கு வரலட்சுமி நடிக்கும் சக்தி மற்றும் கார்த்திக் மற்றும் கௌதம் இணைந்து நடிக்கும் மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் டைட்டிலை வெளியிட்டார்.

சற்றுமுன் கூட ஒரு பக்க கதை படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலை வெளியிட்டார்.

நாளை அக். 12ஆம் தேதி உதயநிதி நடித்துள்ள இப்படை வெல்லும் படத்தின் பாடல்களை வெளியிட உள்ளார்.

இப்படி ஏதாவது ஒன்றை சிவகார்த்திகேயன் வெளியிட்டு அந்த படங்களின் விளம்பரத்திற்கு மறைமுகமாக உதவி வருகிறார்.

இது அவரின் நல்ல மனசை காட்டுகிறது எனலாம்.

மேலும் அவர் ராசியான நடிகர் என்றும் மாஸ் நடிகராக உருவாகி வருகிறார் என்பதால் அவர் மூலமாக வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Sivakarthikeyan became lucky actor in Kollywood

கர்நாடகாவிலும் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்

கர்நாடகாவிலும் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijay posterரஜினிகாந்த்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லமில்லாமல் இந்தியா முழுவதும் ரகிகர்கள் உள்ளனர்.

அண்மைகாலமாக இவரது படங்கள் ரிலீஸ் ஆகும் நாளன்று தமிழகத்தில் வேறு படங்கள் வெளியாகாது.

எனவேதான் இவரை சூப்பர் ஸ்டார் என இன்று வரை அழைக்கிறோம்.

இந்நிலையில் ரஜினிக்கு அடுத்த மாஸ் இடத்தை பிடித்து வருகிறார் விஜய்.

இவரது மெர்சல் படம் கர்நாடகாவில் மட்டும் ரூ.5.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம்.

இதை ஹாரிசான் ஸ்டூடியோ என்ற நிறுவனம் பெற்றுள்ளது.

இதற்கு முன் வேறு எந்த தமிழ் படங்களும் (அதாவது ரஜினி படம் தவிர) இந்த விலைக்கு போனதில்லையாம்.

இதுபோல் கேரளாவிலும் கபாலி படத்தை அடுத்து மெர்சல் பெரும் தொகைக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Mersal Karnataka Theatrical rights snapped by Horizon Studio

விஜய்-அஜித்தின் நண்பனாக நினைத்த என்னை தனுஷ் வளர்த்துவிட்டார் – சிவகார்த்திகேயன்

விஜய்-அஜித்தின் நண்பனாக நினைத்த என்னை தனுஷ் வளர்த்துவிட்டார் – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and dhanushசினிமாவை தாண்டியும் படு பிஸியாக நடிகராக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன்.

பல படங்களின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகிறார். பல படங்களின் பர்ஸ்ட் லுக் முதல் டிரைலர், டீசர் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் ஒரு கல்லூரி விழா ஒன்றில் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது…

டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது பெரிய ஹீரோ ஆவேன் என்ற எண்ணம் இல்லை.

விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களின் நண்பனாக சின்ன சின்ன வேடங்களில் கிடைத்தால் போதும் என்றே நினைத்தேன்.

சின்ன சின்ன ரோல்களை எதிர்பார்த்த எனக்கு எனக்கு தனுஷ், இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர்தான் வாய்ப்புகள் வழங்கி வளர்த்து விட்டார்கள்.

ஆனால் இன்று யார் சினிமாவுக்கு வந்தாலும் சிவகார்த்திகேயன் போல வளர்ந்துவிடுவார்கள் என்று மற்றவர்கள் பேசுவதை கேட்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.” என்று பேசினார்.

உலகளவில் 3500 தியேட்டர்களை நெருங்கும் மெர்சல் ரிலீஸ்

உலகளவில் 3500 தியேட்டர்களை நெருங்கும் மெர்சல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal stillsஅட்லி-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் படம் பல தடைகளை கடந்து அக்டோபர் 18-ல் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சில தியேட்டர்களில் இப்போதே முன்பதிவுகள் தொடங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், உலகமெங்கும் 3292 திரையரங்குகளில் ‘மெர்சல்’ படம் வெளியாகவுள்ளதாகவும் இது இது நிஜமாலுமே ‘மெர்சல்’ தீபாவளி”தான் என படத் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் இந்த தியேட்டர் எண்ணிக்கை 3500ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தங்களது 100-வது படைப்பாக வெளியிடவுள்ளது.

More Articles
Follows