கபாலி-விவேகம் சாதனைகளை மெர்சல் தெறிக்க விட்டது எப்படி.?

Mersal beat Kabali and Vivegam records in box officeநேற்று தீபாவளி திருநாளில் விஜய் நடித்த மெர்சல் படம் ரிலீஸ் ஆனது.

இப்படத்திற்கு இதுவரை பாசிட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே வந்துள்ளது.

படத்தை பார்த்த பலரும் விஜய்யின் ஆக்ட்டிங் மற்றும் அட்லியின் மேக்கிங் ஆகியவற்றை பாராட்டியே வருகின்றனர்.

எனவே படத்தின் வசூலும் பாராட்டும்படியே வந்துள்ளது.

சென்னையில் மட்டும் முதல்நாளில் ரூ. 1.5 கோடி வசூலை எட்டியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் வெளியான அஜித்தின் விவேகம் படம் முதல்நாளில் ரூ.1.2 கோடி மட்டும் வசூலித்து இருந்தது.

அதுபோல் கடந்த 2016ஆம் ஆண்டில் வெளியான ரஜினியின் கபாலி படம் ரூ. 1.1 கோடியை வசூலித்தது.

முதன்முறையாக ரஜினி படம் வசூலை விஜய், அஜித் ஆகிய நடிகர்கள் முறியடிக்க, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியும், மாநில அரசின் கேளிக்கை வரியும்தான் காரணம் என கூறப்படுகிறது.

அதாவது 2017 ஜீலை 1 முதல் ஜிஎஸ்டி வரி இந்தியா முழுவதும் அமுலானது.

அதன்பின்னர் விவேகம் வெளியானது. தற்போது தமிழக அரசின் கேளிக்கை வரி அமுலுக்கு வந்த பின்னர் மெர்சல் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mersal beat Kabali and Vivegam records in box office

மற்ற படங்கள்…

Top 5 Day 1 Gross in #Chennai
#Mersal 1.52 Cr
#Vivegam 1.21 Cr
#Kabali 1.12 Cr
#Theri 1.05 Cr
#Bairavaa 0.92 Cr

Overall Rating : Not available

Related News

அண்மைக்காலமாக அஜித் நடித்த வீரம், வேதாளம்,…
...Read More
தெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு…
...Read More

Latest Post