விருச்சிககாந்துக்கு உதவிய நடிகர்கள் அபிசரவணன்-மன்சூரலிகான்

விருச்சிககாந்துக்கு உதவிய நடிகர்கள் அபிசரவணன்-மன்சூரலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mansoor Ali Khan and Abi Saravanan helped Kadhal fame Viruchikakanthகடந்த ஒரு வாரமாக காதல் படத்தில் நடித்த ‘விருச்சிக காந்த்’ சென்னையில் உள்ள ஒரு கோயிலில் மனநலம் பாதித்தவர் போல் உள்ளார். அவரை திரையுலகம் கண்டு கொள்ளுமா என செய்திகள் வந்து கொண்டிருந்தது.

கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ‘வேகத்தடை ‘ குறும்பட நிகழ்ச்சி திரையிடலுக்கு சிறப்பு விருந்தினராக வந்த அபி சரவணன் கூடவே நடிகர் ‘விருச்சககாந்த்’ அவர்களையும் அழைத்து வந்து அவருக்கு தேவையான சில உதவிகளை செய்தார்.

நேற்றும் ‘உறுதிகொள்’ ஆடியோ விழாவில் ‘விருச்சககாந்த்’ அவர்களுக்கு ஒரு காசோலையை அளித்தார்.

நிகழ்ச்சி முடிந்து சென்ற வரை. சில மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் உங்களை பார்க்க முடிந்தது. இன்னைக்கு ‘விருச்சககாந்த்’ அவர்களுக்கு உதவி. சொல்லுங்க. இவரை எப்படி தொடர்பு கொண்டீங்க என்ற போது…

முதலில் இதற்கு காரணமான அண்ணன் சாய் தீனா & மோகன் அவர்களுக்கு நன்றி!

மனதை ஒருவாரமாக உறுத்திகொண்டிருந்த ஒரு செய்தி. பிச்சை எடுத்த நடிகர் ‘விருச்சககாந்த்”. அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்தும் இயலாத நிலையில் வாட்ஸ்அப்பில் அண்ணன் சாய்தீனா அவர்களுடன் வீடியோவாக கண்டேன்.

உடனடியாக சாய்தீனா. அண்ணனை தொடர்புகொண்டேன். மோகன் அவர்கள் உதவியுடன். அவரிடம் பேசி என்ன மாதிரியான உதவிகள் தேவை என கேட்டறிந்தேன். மன இறுக்கம் காரணமாக மட்டுமே அவர் இப்படி ஆனதாகவும் அவருக்கு தேவை.

சினிமாவில் நல்ல வாய்ப்பும். தங்க இடமும். தொடர்புகொள்ள ஒரு மொபைல்போனும். நல்ல உடையும் போதும் என்றார்.

சரியாக மாலை நான்கு மணிக்கு தான் தகவல் கிடைத்தது.

இன்று மாலை ஆர்.கேவி யில் ஒரு குறும்படத்தின் வெளியீடுக்காக சிறப்புவிருந்தினராக ஆறுமணிக்கு செல்ல வேண்டியிருந்தது . எனவே விழா நடைபைறும் இடத்திற்க்கு விருச்சிககாந்த் அவர்களை வரவழைத்தேன்.

அந்த விழா மேடையில் உடனடி அவருக்கு தேவையான ஒரு புதிய சாம்சுங் ஆண்ட்ராய்டு மொபைல் போனும். ஒரு செட் சர்ட்ம் ஜீன்ஸ்ம் நானும் நண்பர் ‘ஓவியா’ எனும் படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான காண்டீபனும் இணைந்து வழங்கினோம்.

தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் எனது படத்தின் இயக்குனரை தொடர்பு கொண்டு தகவலை கூறியவுடன். நாளையே அவருக்கான நடிப்பு வாய்ப்பை வழங்கினார்.

மேலும் அடுத்த வாரமே தொடங்க இருக்கும் எனது புதுப்படமான “சூறாவளி”யின் இயக்குனர் குமார் நந்தாவும் ‘விருச்சிகாந்த்’ நடிக்க வாய்ப்பு உடனே வழங்கினார்.

இன்றும் அண்ணன் மன்சூரலிகான் எனது வேண்டுகோளை ஏற்று அவரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கி உள்ளார்.

மேலும் பெங்களூருவை சேர்ந்த பேஷன் டிசைனர் ‘கிரிஷ்’, விருச்சிககாந்த் மனநல சிகிச்சைக்கு உதவுவதோடு அவரை மாடலாகவும் பயன்படுத்தி கொள்கிறேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.

சக நடிகரான ‘விருச்சிக காந்த்’ அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை உடனடியாக சில மணி நேரத்திற்குள் செய்ய உதவிய இறைவனுக்கு நன்றிகள் என்கிறார் அபி சரவணன் மிக மகிழ்ச்சியோடு.

Mansoor Ali Khan and Abi Saravanan helped Kadhal fame Viruchikakanth

vegathadai short film

SIIMA விருதை வென்ற விஜய்-சிவகார்த்திகேயன்-நயன்தாரா-நைனிகா

SIIMA விருதை வென்ற விஜய்-சிவகார்த்திகேயன்-நயன்தாரா-நைனிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Nainika Sivakarthikeyan Nayanthara won SIIMA awards 2017தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது SIIMA வழங்கும் விழா அபுதாபியில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலக சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இதில் தெறி படம் 3 விருதுகளை பெற்றது.

• சிறந்த என்டர்டெயினர்- விஜய்
• சிறந்த இயக்குனர்- அட்லீ
• ஸ்பெஷல் ஜுரி விருது- நைனிகா

மற்ற விருதுகளை அள்ளிய தமிழ் நட்சத்திரங்கள் இவர்கள்தான்…

சிறந்த நடிகர்: சிவகார்த்திகேயன் (ரெமோ)
சிறந்த நடிகை: நயன்தாரா (இருமுகன்)
சிறந்த அறிமுக இயக்குனர்: கார்த்திக் நரேன் (துருவங்கள் 16)
சிறந்த அறிமுக நடிகை: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
சிறந்த படம்: (இறுதிச்சுற்று)
சிறந்த நெகட்டிவ் ரோல் நடிகை: த்ரிஷா
சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான் ( அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பாடகர்: அனிருத் (ரெமொ)
சிறந்த பாடகி: சித்ரா (சேதுபதி)
சிறந்த பாடலாசிரியர்: மதன் கார்க்கி (மிருதன்)

விஜய் பட வியாபாரத்தை பார்த்து மெர்சலான கோலிவுட்

விஜய் பட வியாபாரத்தை பார்த்து மெர்சலான கோலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijayவிஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவான ‘தெறி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனையடுத்து இவர்கள் தற்போது இணைந்துள்ள மெர்சல் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனவே படத்தின் வியாபாரமும் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளதாம்.

இந்நிலையில் ‘மெர்சல்’ படத்தின் சாட்டிலைட் உரிமைக்கு பல சாட்டிலைட் நிறுவனங்கள் போட்டியிட்டதாம்.

இறுதியில் ஜீ டிவி நிறுவனம் ரூ.30 கோடிக்கு இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இவ்வளவு விலைக்கு விஜய் படம் விற்கப்பட்டுள்ளதால், கோலிவுட் வட்டாரமே மெர்சலாகியுள்ளதாம்.

Mersal satellite rights bagged by Zee Tv for Rs 30 crores

விஐபி2 படத்தில் ரஜினி கேரக்டரில்தான் அவர் நடித்தாரா?

விஐபி2 படத்தில் ரஜினி கேரக்டரில்தான் அவர் நடித்தாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vip2 teamசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி2.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இம்மாதம் ஜீலை 28ஆம் தேதி தனுஷ் பிறந்தநாளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் கஜோல் கேரக்டரில் தன் தந்தை ரஜினியை நடிக்க வைக்க முதலில் முடிவு செய்து வைத்திருந்தாராம் சௌந்தர்யா.

அதற்காகவே ரஜினி கேரக்டரை பட்டைத் தீட்டி வைத்திருந்தாராம்.

ஆனால் தன் அப்பாவும் அக்கா கணவரும் முறைத்துக் கொண்டு மோதிக் கொள்வது போல் இருந்தால், அது சரியாக வராது என்று பின்னர் முடிவு செய்து, அந்த திட்டத்தை சௌந்தர்யா கைவிட்டு விட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Did Kajol role written for Rajinikanth in VIP2

பிக்பாஸ்க்கு முன்பே பிரபலமான நடிகை ஜுலி; ஆதார வீடியோ சிக்கியது

பிக்பாஸ்க்கு முன்பே பிரபலமான நடிகை ஜுலி; ஆதார வீடியோ சிக்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jallikattu and BigBoss fame Julie acted in Album Secret leakedகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் சினிமாவை சேர்ந்த 14 பிரபலங்கள் மற்றும் சாதாரண பெண் என்று அறியப்பட்ட ஜல்லிக்கட்டு போராளி ஜுலியானாவும் கலந்துக் கொண்டார்.

அவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பேசும்போது, தான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், நர்ஸ் என்றும் சாதாரண பெண் என்றும் அடிக்கடி கூறி வந்தார்.

இதற்கு முன் கேமரா முன் தான் தோன்றியதில்லை என்றும் கூறிவந்தார்.

இந்நிலையில், என் காதல் சொல்ல வந்தேன் என்ற ஒரு ஆல்பம் பாடலில் அவர் தோன்றி நடித்திருக்கிறார் என்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இப்பாடல் கடந்த 2015ஆம் ஆண்டு ஜீன் மாதமே யூடிப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jallikattu and BigBoss fame Julie acted in Album Secret leaked

இதோ அந்த வீடியோ பாடல்…

நாசர் வீட்டுக்கு சென்று மகன் ஆசையை நிறைவேற்றிய விஜய்

நாசர் வீட்டுக்கு சென்று மகன் ஆசையை நிறைவேற்றிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay nassar son faizalதன்னை நேசிக்கும் ரசிகர்களின் நிறைவேறாத ஆசையை பல சந்தர்ப்பங்களில் நிறைவேற்றி வைப்பவர் விஜய்.

இந்நிலையில் பிரபல நடிகர் நாசர் மகன் பைசல் அவர்களின் ஆசையை ஒரு சந்தர்ப்பத்தில் நிறைவேற்றினாராம்.

அந்தப் புகைப்படத்தை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் நாசரின் மனைவி கமீலா.

சில ஆண்டுகளுக்கு முன்பு பைசல் ஒரு விபத்தில் சிக்கியிருந்தார். தற்போது குணமடைந்து வருகிறார்.

அவரை நலம் விசாரிக்க நாசர் வீட்டுக்கு விஜய் சென்றிருந்தாராம்.

அந்த சந்திப்பின் போதுதான் விஜய்யுடன் செல்ஃபி எடுக்க விரும்பி, ஒரு படத்தை எடுத்துள்ளார் பைசல்.

இதை தன் ட்விட்டர் பக்கத்தின் புரொபைல் படமாக வைத்துள்ளார் நாசர் மனைவி கமீலா.

Vijay fulfilled actor Nassar son Faizals long time wish

More Articles
Follows