கன்னட சில்க் ஸ்மிதா சென்னைக்கு வராத காரணத்தினால் மைசூருக்கே சென்று சூட்டிங் நடத்திய ‘சூறாவளி’ படக்குழு

கன்னட சில்க் ஸ்மிதா சென்னைக்கு வராத காரணத்தினால் மைசூருக்கே சென்று சூட்டிங் நடத்திய ‘சூறாவளி’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kannada actress Aalishaவடமாநிலங்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட ஒரு கும்பல் அங்கிருந்து தப்பித்து தமிழ்நாட்டுக்குள் வருகிறது.

இங்கே வந்த அந்த கிரிமினல்ஸ் கும்பல் பல வீடுகளில் வேலை செய்வது போல் சென்று அங்குள்ள குளியல் அறைகளில் கேமராவை மறைத்து, பெண்கள் குளிப்பதை படமெடுத்து, அதை வைத்து அப்பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து பணம் பறிப்பதை ஒரு வேலையாக செய்கின்றனர்.

பல இடங்களில் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்கவே காவல்துறை உஷாராகிறது.

ஒரு பண்னையாரிடம் கூலி வேலைக்கு சென்ற நாயகன் பண்னையாரின் மகளை நேசிக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில் அந்த கும்பல் கதாநாயகி வீட்டிலும் அதே கைவரிசையை காட்ட, இதை அறிந்து கொண்ட ஹீரோ அக்கும்பளை சூறாவளி போல் சூறையாட தயாராகிறார்.

அவர்களை காவல்துறை சூறையாடுகிறதா? அல்லது ஹீரோ சூரசம்ஹாரம் செய்தாரா?

கதை சுருக்கம்

தமிழில் கவர்ச்சியில் புகழ் பெற்ற சில்க் ஸ்மிதா அளவுக்கு கன்னடத்தில் தற்போது கவர்ச்சியில் கலக்கும் ஆலிஷா “சூறாவளி” தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கார்.

சென்னைக்கு வர தேதியில்லாததால் சூறாவளி படக்குழுவினர் மைசூர்க்கு சென்று அரசுக்கு சொந்தமான ஒரு காட்டு பங்களாவில் அனுமதி வாங்கி படப்பிடிப்பிற்கு தயாரான, கூட்டத்தை பார்த்து மிரண்டு போன அதிகாரிகள் அனுமதி மறுக்க அன்று ஒரு இரவுக்கு மட்டும் அனுமதி வாங்கி அன்றே படப்பிடிப்பை முடித்து திரும்பியிருக்கிறார்கள்.

பாடல் சூப்பராக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

தயாரிப்பு நிறுவனம் – லால்ராய் அசோசியேட்ஸ்

நடிகர்கள் – தர்மா, தர்ஷினி, ஆலிஷா

இசை அமைப்பாளர் – ஜேக்கப் சாம்யேல்

கேமராமேன் – சந்திரன்சாமி

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாலு & பால்கி

தயாரிப்பு – P. லால்பகதூா்

Sooravali movie shoot wrapped up in mysore

சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’ நடிகை பிரியாலால் தெலுங்கில் அறிமுகம்.!

சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’ நடிகை பிரியாலால் தெலுங்கில் அறிமுகம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Priya Lalமலையாள நடிகையான பிரியால்லால் – தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஜீனியஸ் ‘ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

படம் வெளியாகி, சிறந்த நடிகைக்கான அந்தஸ்தைப் பெற்றார். அதன்பிறகு பட்ட படிப்பிற்காக லண்டன் சென்றார்.

படிப்பை முடித்து விட்டு இப்பொழுது, தெலுங்கு படமான ‘குவா கோரிங்க’* (Love Birds) படத்தில் அறிமுகமாகிறார்.

டிசம்பர் 17-ம் ஆமேசான் ப்ரைம் ஓ டி டி தளத்தில் வெளியாகிறது .

இப்படம், பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் இணை இயக்குனர் மோகன் பம்மிடி இயக்கும் முதல் படம் இது .

கல்லூரி காதலை மய்யமாக கொண்ட இப்படத்தில் இளம் கதாநாயகன் சத்தியதேவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் .

சமீபத்தில் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பு கிடைத்தது படக்குழுவினருக்கு பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது . கொரோனா லாக் டவுண் காரணமாக படத்தின் வெளியீட்டு தாமதமானதால் படம் முடிந்தும் ஒரு வருடமாக தன்னம்பிக்கையோடு ‘குவா கோரிங்கா’வை ஆவலுடன் காத்திருக்கிறார் பிரியாலால்.

தமிழில் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்பது தான் தனது ஆசையும் லட்சியமும் என்கிறார்.

இதற்காக தமிழ் நன்றாக படிக்கவும் பேசவும் கற்று கொண்டுள்ளார்.
துபாயிலுள்ள ராசல் கைமாவில் பிறந்து, லண்டனில் படித்து வளர்ந்த பிரியாலால் சிறு வயதிலிருந்தே நடனம் கற்று வந்துள்ளார் .

சிறுவயதிலேயே சினிமா நடிகை ஆக வேண்டும் என்று மனதில் ஆசை வளர்த்த பிரியாலால் ஒரு முறை விடுமுறை காலத்தில் இந்தியா வந்த போது , தனது பனிரெண்டாம் வயதில் மோகன்லால் சுரேஷ் கோபி நடித்த ‘ ஜனகன் ‘ படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்து தனது சினிமா பிரவேசத்தை துவங்கினார் .

அவ்வப்போது விடுமுறை காலங்களில் மட்டும் இந்தியா வந்து படங்களில் நடித்து வந்த இவர் பட்ட படிப்பு முடித்து தற்போது சினிமாவில் கவனம் செலுத்துவதற்க்கென்றே கேரளாவில் குடிபெயர்த்துள்ளார்.

Actress Priya Lal makes her entry in Telugu industry

ஏமாந்தது போதும்… வரியே இல்லா தமிழகம்.. இலவச நீர் மருத்துவம் கல்வி வழங்க உதயமானது ‘மை இந்தியா பார்ட்டி’

ஏமாந்தது போதும்… வரியே இல்லா தமிழகம்.. இலவச நீர் மருத்துவம் கல்வி வழங்க உதயமானது ‘மை இந்தியா பார்ட்டி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anil Kumar Ojhaஇந்தியாவின் முன்னணி நிறுவனமான எஸ்எல்ஓ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அணில் குமார் ஓஜா, தொழில்துறை மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

புல்லாதேவி அறக்கட்டளையின் அறங்காவலரான அணில் குமார் ஓஜா, இந்த அறக்கட்டளையின் மூலம் மக்களுக்கு பெரும் தொண்டாற்றி வருகிறார்.

குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் மற்றும் கல்விச் சேவையில் பல காலம் தொண்டாற்றி வருகிறார்.

தமது தொழிலில் மாற்றத்தை கொண்டுவந்து முன்னேற்றத்தை கண்ட அணில் குமார் ஓஜா, தற்போது அதே முன்னேற்றத்தை தமிழகத்திலும் ஏற்படுத்தி, தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்ல புதிய திட்டங்களுடன் மை இந்தியா பார்ட்டி (எனது இந்தியா கட்சி) எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார்.

‘போதும்!… போதும்!!… ஏமாந்தது போதும்!!!…’ என்ற கோஷத்தை முன்வைத்து தொடங்கப்பட்டுள்ள இந்த கட்சியின் கனவுத் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் வருமாறு:

அனைவருக்கும் இலவச தண்ணீர்:

தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குழாய் இணைப்புடன் தூய்மையான குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்க வழிவகை செய்யப்படும். அரசாங்கம், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கிராமப்புற முன்னேற்றத்திற்காக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் கொடுக்கிறது, மாறாக அரசாங்கம் நினைத்திருந்தால் இந்த நிதியை வைத்து, நதிகளை இணைப்பதுடன், ஏரி, குளங்களை தூர்வாரி புத்துயிர் அளித்திருந்தால் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திருக்கும், தண்ணீர் பஞ்சமும் தீர்ந்திருக்கும்.

ஆனால் செய்யவில்லை.
அனைவருக்கும் இலவச மருத்துவம்:
அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்படும். ஏழை, பணக்காரர் என வேறுபாடு இன்றி எந்த ஒரு தனியார் மருத்துவமனையிலும் இலவச சிகிச்சை பெறலாம்.

அனைவருக்கும் இலவச கல்வி:

ஏழை, பணக்காரர் என வேறுபாடு இன்றி அனைவருக்கும் கல்வி இலவசமாக்கபடுவதுடன், கட்டாயமும் ஆக்கப்படும்.

மேலும் மாணவர்களின் கல்விக் கடன்கள் அனைத்தும் மை இந்தியா பார்ட்டியின் ஆட்சி காலத்தில் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.

தமிழகத்தில் தொழில் தொடங்க தமிழர்களுக்கே முன்னுரிமை:

இப்போது வியாபாரம் என்ற பெயரில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்து வந்து, நாட்டை கொள்ளையடிக்க வைக்கிறார்கள்.

மை இந்தியா பார்ட்டி ஆட்சிக்கு வரும் பொன்னாளில் தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சட்டம் ஒழுங்கு ( ZERO CRIME STATE ):

மை இந்தியா பார்ட்டி ஆட்சிப் பொறுப்பெற்ற 6 மாதத்திற்குள், சட்டம் ஒழுங்கை சரி செய்து, குற்றமற்ற முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்காட்டுவோம்.

ஊழலை ஒழித்து தமிழகத்தை TAX FREE TAMILNADU ஆக மாற்றிக் காட்டுவோம்:

மை இந்தியா பார்ட்டி ஆட்சிக்கு வந்தால், ஊழலை வேருடன் அகற்ற வகை செய்யும், கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும்.

அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியப்படுத்தப்படும். தேவையானவர்களுக்கு திட்டத்தின் முழு பலனும் எந்தவித ஊழல் குறுக்கீடுகளும் இல்லாமல் சென்றடையுமாறு நிறைவேற்றப்படும்.

மாநகராட்சி, நீர் மற்றும் கழிவு நீர் வரிகள் முற்றிலுமாக நீக்கப்படும்.

பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்படும்.

மின்கட்டண விலை 20 சதவீதம் குறைக்கப்படும்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10 சதவீதம் குறைக்கப்படும்.

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இயற்க்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு இலவச இயற்க்கை உரங்கள் வழங்கப்படும்.

60 வயதிற்க்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 5000 பென்ஷனாக வழங்கப்படும்.

கேஸ் விலை தற்போதைய விலைக்கு 100 ரூபாய் குறைக்கப்படும்.

மை இந்தியா பார்ட்டி ஆட்சிக்கு வந்தால் தமிழக நிறுவன முதலீட்டாளர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்:

6000 கோடி முதலீட்டு செய்த நிசான் நிறுவனத்திற்கு, இந்திய அரசாங்கம் அந்த முதலீட்டு தொகைக்கு சமமான அளவிற்கு மானியம் கொடுத்துள்ளது.

இதே மானியம் தமிழக முதலீட்டாளர்களுக்கு அளித்திருந்தால் நம் மக்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்திருக்கும். மை இந்தியா பார்ட்டி ஆட்சிக்கு வந்தால் தமிழக நிறுவன முதலீட்டாளர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

New political party My India Party’s plans and policies

மக்கள் தியேட்டருக்கு வர வேண்டும்… ‘மாஸ்டர்’ மெகா ஹிட்டாக வேண்டும்..; விஜய் போடும் வியூகம்

மக்கள் தியேட்டருக்கு வர வேண்டும்… ‘மாஸ்டர்’ மெகா ஹிட்டாக வேண்டும்..; விஜய் போடும் வியூகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

master vijayஒரு படம் பிரபலமாக அதன் விளம்பரங்களே முக்கிய பங்கு வகுக்கின்றன.

தற்போது கொரோனா காலம் என்பதால் மக்களை தியேட்டருக்கு வரவைக்க பல்வேறு யுக்திகளை திரையுலகினர் கையாளுகின்றனர்.

விரைவில் ‘மாஸ்டர்’ படம் வெளியாகவுள்ளது. எனவே படம் ரிலீஸ் தொடர்பான வேலைகளில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

எனவே மக்களை கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மீண்டு தியேட்டருக்கு கொண்டு வர தியேட்டர் விசிட் அடிக்கவுள்ளாராம்.

தலைவா’ படத்திற்காக சன் டிவிக்கு விஜய் ஒரு பேட்டி கொடுத்தார்.

பிறகு டிவி பேட்டிகள் கொடுப்பதைத் தவிர்த்தார்.

அதேபோல, ‘வில்லு’ படத்திற்கு தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட் அடித்தார் விஜய்.

அதன்பிறகு தியேட்டர் விசிட்டையும் தவிர்த்தார்.

தற்போது மாஸ்டர் படத்திற்காக தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Vijay plan to vist theatres when master release

தமிழருவி மணியன் அர்ஜுனமூர்த்தி சுதாகர் ஆகியோருக்கு போஸ்டர்களில் இடமில்லை..; ரஜினி உத்தரவு

தமிழருவி மணியன் அர்ஜுனமூர்த்தி சுதாகர் ஆகியோருக்கு போஸ்டர்களில் இடமில்லை..; ரஜினி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthநடிகர் ரஜினிகாந்த் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளார்.

இந்த கட்சியில் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில்…

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்களில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், மாநில நிர்வாகி சுதாகர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

ரஜினி புகைப்படத்துடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Rajinikanth says no to photos of Party coordinator and supervisor

சன் ரைசர்ஸ் பாணியில் ‘அண்ணாத்த’ ரஜினிக்கு பயோ பபுளை உருவாக்கும் சன் நிறுவனம்

சன் ரைசர்ஸ் பாணியில் ‘அண்ணாத்த’ ரஜினிக்கு பயோ பபுளை உருவாக்கும் சன் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

annaattheதனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட உள்ளார் ரஜினி.

அதே போல ‘அண்ணாத்த’ படத்தை முடித்துக் கொடுக்க வேண்டியது தனது கடமை என ரஜினி கூறியிருந்தார்.

இந்நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

செட் போடப்பட்டு இன்டோர் சூட்டிங் நடத்தவுள்ளனர்.

கொரோனா அச்சம் அதிகமாக உள்ளதால் படக்குழுவினர் அனைவரையும் உள்ளடக்கிய பயோபபுள் உருவாக உள்ளதாம்.

அதாவது… ஐபிஎல் தொடரில் சன் நிறுவனத்தின் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு இதே போல பயோ பபுள் உருவாக்கியிருந்தனர்.

முழுப்படப்பிடிப்பு முடியும் வரை எவரும் வெளியே செல்லக்கூடாதாம். சென்றால் உள்ளே வரக்கூடாதாம்.

இப்போது அண்ணாத்த படக்குழுவுக்கு பயோபபுள் உருவாக உருவாகிறது.

Rajinikanth and his team to shoot in bio bubble

More Articles
Follows