அசுரகுருவில் விக்ரம் பிரபுவுடன் இணையும் மஹிமா நம்பியார்

அசுரகுருவில் விக்ரம் பிரபுவுடன் இணையும் மஹிமா நம்பியார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram prabhu and mahima nambiar‘பக்கா’ மற்றும் ‘துப்பாக்கி முனை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு.

விரைவில் இந்த படங்கள் வெளியாகவுள்ள நிலையில், இவரின் அடுத்த படம் ‘அசுரகுரு’ என அறிவிக்கப்பட்டது.

இப்படத்தை ராஜ்தீப் இயக்குகிறார்.

இதில் நாயகியாக நடிக்க மஹிமா நம்பியார் தேர்வாகியுள்ளாராம்,

அண்மையில் வெளியான ‘குற்றம்-2’3, ‘கொடி வீரன்’ ஆகிய படங்களில் மஹிமா நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் அருள்நிதியுடன் மகிமா நடித்துள்ள ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

மழை நீரை சேமிக்க வலியுறுத்தி ரூ.25 லட்சம் கொடுத்த அக்‌ஷய்குமார்

மழை நீரை சேமிக்க வலியுறுத்தி ரூ.25 லட்சம் கொடுத்த அக்‌ஷய்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Akshaykumar donated Rs 25lakhs to make well to store Rain waterதமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.

விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் விவசாயம் அழிந்து வருகிறது.

இதனால் மனம் உடையும் விவசாயிகளும் தற்கொலை செய்து வருகின்றனர்.

இது குறித்து பல்வேறு தரப்பினர் வாய் வலிக்க பேசி வந்தாலும், விவசாயிகளுக்கு ஆதரவாக யாரும் களம் இறங்கவில்லை.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் அவர்கள் மகாராஷ்டிராவின் சதாராவில் உள்ள ஒரு Pimpode Budruk என்ற கிராமத்தில் மழை நீரை சேகரிக்க வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு குளம் வெட்ட ரூ. 25 லட்சமும் கொடுத்து உதவியிருக்கிறாராம்.

இத்தோடு ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு அவரே நேரில் சென்று விவசாயிகளுடன் குளம் வெட்டும் பணியில் இறங்கியுள்ளார்.

Akshaykumar donated Rs 25lakhs to make well to store Rain water

akshay kumar farmer help

Breaking: தேசிய விருது எண்ணிக்கையில் இளையராஜாவை முந்திய ஏஆர்.ரஹ்மான்

Breaking: தேசிய விருது எண்ணிக்கையில் இளையராஜாவை முந்திய ஏஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahman beat Ilaiyaraja in Number of National awardsசினிமா கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் கடந்த 64 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

இன்று 65வது ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழ் சினிமா துறையை சார்ந்தவர்களுக்கு 4 விருதுகள் கிடைத்தன.

ஏஆர். ரஹ்மான் 2 விருதுகளையும், பின்னணி பாடகி சாஷா திரிபாதி அவர்கள் ஒரு விருதையும் இன்னும் திரைக்கு வராத டூ லெட் படம் சிறந்த பட விருதையும் வென்றுள்ளது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகளில் இதுவரை இளையராஜா 5 தேசிய விருதுகளை வென்றிருந்தார். ரஹ்மான் 4 விருதுகளை மட்டுமே வென்றிருந்தார்.

இன்று இரண்டு விருதுகள் ஏஆர். ரஹ்மானுக்கு கிடைத்துள்ளதால், இளையராஜாவை முந்திவிட்டார். தற்போது அவருக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு இளையராஜா பெற்ற தேசிய விருதுகள் மற்றும் ஆண்டு

31வது ஆண்டு சகார சங்கமம் தெலுங்கு படம் 1983
33வது ஆண்டு சிந்து பைரவி தமிழ் படம் 1985
36வது ஆண்டு ருத்ர வீணா தெலுங்கு படம் 1988
57வது ஆண்டு பழசிராஜா மலையாள படம் 2009
63வது ஆண்டு தாரை தப்பட்டை தமிழ் படம் 2015

ஏஆர்.ரஹ்மான் பெற்ற விருதுகள்.. (ஏப்ரல் 13, 2018 வரை)

40வது ஆண்டு ரோஜா தமிழ் படம் 1992
44வது ஆண்டு மின்சார கனவு தமிழ் படம் 1996
49வது ஆண்டு லகான் ஹிந்தி படம் 2001
50வது ஆண்டு கன்னத்தில் முத்தமிட்டால் தமிழ் படம் 2002
65வது ஆண்டு மாம் ஹிந்தி படம் 2017
65வது ஆண்டு காற்று வெளியிடை தமிழ் படம் 2017

AR Rahman beat Ilaiyaraja in Number of National awards

#Breaking: ஆசிபாவை சிதைத்த மிருகங்களை மக்களே தண்டிக்கனும்: விவேக்

#Breaking: ஆசிபாவை சிதைத்த மிருகங்களை மக்களே தண்டிக்கனும்: விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vivek condemn for 8 years old girl Asifa murderஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எட்டு‌வயது சிறுமி ஆசிபா கடந்த ஜனவரி 10 ஆம் தேதி காணாமல் போனாள்.

அதன்பின்னர் சில நாட்களுக்கு பின்னர் அவளின் உடல் ஒரு காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணையில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து அவளை ஒரு கோயிலில் மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அவளுக்கு உணவு தராமல் மயக்கத்திலேயே வைத்திருந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதற்காக அவர்கள் பயன்படுத்திய மருந்தால், அவளது இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் என்பதுதான் மிகவும் வேதனையான விஷயம்.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான 18 வயது நிரம்பாத ஒருவன்தான் இந்த சிறுமியை அடித்து கொலை செய்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த 8 பேரில் 4 பேர் காவல்துறையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் வேளையில் நடிகர் விவேக்கும் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவு இதோ…

Vivekh actor‏Verified account @Actor_Vivek 7m7 minutes ago

வன்முறை,பயங்கரவாதம்,இவற்றை விட கொடியதும் கேவலமானதும் பாலியல் பலாத்காரம்.

அதிலும் பெண் குழந்தையை சிதைக்கும் இந்த மிருகங்கள் மக்கள் முன் அல்லது மக்களால் தண்டிக்கப்பட வேண்டும். அதுவும் உடனே!

அந்த சின்ன தேவதை ஆசிபாவின் மலர் உடலுக்கு என் கண்ணீர் பூக்கள்

Actor Vivek condemn for 8 years old girl Asifa murder

Breaking: 65வது தேசிய விருதுகள் அறிவிப்பு; சிறந்த படம்? நடிகர்கள் யார்?

Breaking: 65வது தேசிய விருதுகள் அறிவிப்பு; சிறந்த படம்? நடிகர்கள் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

List of Winners of 65nd Indian National Film Awards 2018இந்திய நாட்டின் 65வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றை இங்கே தொகுத்து வருகிறோம்.

சிறந்த ஹிந்தி படம் நியூட்டன்

சிறந்த மலையாள படமாக பகத் பாசில் நடித்த தொண்டிமுத்தலும் திரிக்சாக்‌ஷியம் அறிவிப்பு

டேக் ஆஃப் (மலையாளம்) படத்திற்காக நடிகை பார்வதி மேனனுக்கு சிறப்பு தேசிய விருது அறிவிப்பு.

65-வது தேசிய திரைப்பட விருது : சிறந்த தமிழ் படமாக “டூலெட்” தேர்வு.

இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்தை செழியன் இயக்கியுள்ளார்

ஸ்பெஷல் எஃப்க்ட்ஸ்க்காக பாகுபலி 2 திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிப்பு.

சிறந்த பொழுது போக்கு பிரபலமான திரைப்படம் படமாக பாகுபலி2 தேர்வு.

ராணா நடித்த காஸி சிறந்த தெலுங்கு படமாக தேர்வு.

பெங்காலி நடிகர் ரித்திசென்…சிறந்த நடிகருக்கான தேசியவிருது பெறுகிறார்.

சிறந்த துணை நடிகர் பஹத் பாசில்.

‘மாம்’ (பின்னணி இசை) &‘காற்று வெளியிடை’  (பாடல்கள்) படத்தை இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது.

காற்று வெளியிடை படத்தில் வான் வருவான் பாடலை பாடிய ஷாஷா திருப்பதிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது

மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது.

சிறந்த பாடகருக்கான தேசிய விருது யேசுதாஸ்-க்கு அறிவிப்பு.

பொய் மறஞ்ச காலம் மலையாள பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது யேசுதாஸ்-க்கு அறிவிப்பு.

இந்தி நடிகர் வினோத் கண்ணாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது

தமிழ் சினிமா வெறும் 4 விருதுகளை மட்டுமே பெற்றுள்ளது.

ஏஆர். ரஹ்மான் 2 விருதுகளையும், பின்னணி பாடகி சாஷா திரிபாதி ஒரு விருதையும் இன்னும் திரைக்கு வராத டூ லெட் படம் சிறந்த பட விருதையும் வென்றுள்ளது.

List of Winners of 65nd Indian National Film Awards 2018

பரதேசி பட ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற டூ லெட்(சிறந்த மாநில மொழி தமிழ்) படத்தில் ஒரு காட்சி. இன்னமும் தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகவில்லை.

to let tamil movie

டபுள் மீனிங் இல்ல; ஓபனாவே சொல்லிட்டோம் : IAMK பற்றி கௌதம் கார்த்திக்

டபுள் மீனிங் இல்ல; ஓபனாவே சொல்லிட்டோம் : IAMK பற்றி கௌதம் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Karthik talks about his Iruttu Araiyil Murattu Kuththuஹரஹர மஹாதேவகி படத்தை தொடர்ந்து மீண்டும் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

அந்த படமே A லட்சணத்தில் இருந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த செய்திதான்.

அப்படியென்றால் அதே கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் டபுள் A ஆக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.

இந்நிலையில் இந்த படம் குறித்து நாயகன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

இருட்டு அறையில் முரட்டு குத்து காமெடி கலந்த ‘அடல்ட்’ பேய் படம்.

குறிப்பிட்ட ரசிகர்களை மனதில் வைத்தே, இப்படத்தை எடுத்துள்ளோம்.

கல்லுாரி மாணவர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இப்படத்தில் உண்டு.

ஹரஹர மஹாதேவகி படம் யாருக்கு எல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கு எல்லாம் இந்த படமும் பிடிக்காது.

அந்த படத்தில் டபுள் மீனிங் டயலாக் இருந்திருக்கும். ஆனால் இதில் எல்லாத்தையும் ஓபனாவே சொல்லியிருக்கோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Gautham Karthik talks about his Iruttu Araiyil Murattu Kuththu

More Articles
Follows