தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கால் கிட்டத்தட்ட 8 மாதங்கள் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு கிடந்தன.
இதனையடுத்து நவம்பர் 10ஆம் தேதி இன்று முதல் தியேட்டர்களை திறந்து கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
வி.பி.எஃப். கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளா்கள் அறிவித்தனர்.
இதனால் புதிய பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் விபிஎஃப் கட்டணத்தை நவம்பர் வரை தள்ளுபடி செய்கிறோம் என டிஜிட்டல் புரொஜக்சன் நிறுவனங்கள் அறிவித்தன.
இதனால் தயாரிப்பாளர்களும் படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர்.
அதன்படி இதுவரை 3 படங்கள் தங்கள் ரிலீசை உறுதி செய்துள்ளன.
ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் – பிஸ்கோத்.
தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்லா, ஆடுகளம் நரேன், செளகார் ஜானகி போன்றோர் நடித்துள்ளார்கள்.
இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் தற்போது தானே நாயகனாகி இரண்டாம் குத்து என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
மகேஷ் பாபு, ராஷ்மிகா இணைந்துள்ள சரிலேரு நீக்கெவரு என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் டப்பிங் ’இவனுக்கு சரியான ஆள் இல்லை’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
இவையில்லாமல் சத்யராஜ் & சசிகுமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர். மகன், ஜீவா & அருள்நிதி நடித்துள்ள களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட மற்ற படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Mahesh babu and Santhanam movies confirmed for this diwali