1800.. 1980… 2020… இந்த மூன்றிலும் மணப்பாரா நடிகர் சந்தானம்.?

1800.. 1980… 2020… இந்த மூன்றிலும் மணப்பாரா நடிகர் சந்தானம்.?

Santhanamஇயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேட மேற்று நடித்திருக்கிறார்.

சந்தானம் தோன்றும் ராஜபார்ட்காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறுகின்றன.

அந்தக் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் ராஜாவாக சந்தானம் நடித்து அசத்தினார்.

படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது….
” படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது .

அதனால்தான் படத்துக்குப் ‘பிஸ்கோத்’ என்று பெயர் வைத்தோம். சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப்படுத்தியிருக்கிறோம்.

வடிவேலுவுக்கு எப்படி ‘இம்சை அரசன் ‘அமைந்ததோ அப்படி சந்தானத்துக்கு ‘பிஸ்கோத்’ படம் அமையும். அது போல் பேசப்படும் படமாகவும் இருக்கும்.

இப்படத்தில் இந்த ராஜா காலக்கட்ட காட்சிகள் 30 நிமிடங்கள் வரும்.

இதற்காக அந்தக் காலத்து ஆதாரங்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு கலை இயக்குநர் ராஜ்குமார் அரங்கம் அமைத்தார். இதற்கான உடைகளுக்காக மிகவும் சிரமப்பட்டு உடை அலங்கார நிபுணர் பிரியா உடைகளை வடிவமைத்துக்கொடுத்தார்.

இதற்கான காட்சிகளில் துணை நடிகர்கள் 500 பேர் நடித்தார்கள் அவ்வளவு பேருக்கும் உடைகள் தயாரிக்கப்பட்டன.

காட்சிகள் பெயிண்டிங்கில் போல் வந்துள்ளன. அந்தக்கால பெயிண்டிங் போன்றவற்றை வைத்து ஓவியங்கள் போல் ஒளி அமைப்பு செய்து ‘ 96’ படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்து பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில் வரும் காட்சிகளுக்குத்தான் இப்படி ராஜபார்ட் வேடமும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன.

இன்னொரு பகுதியாக எண்பதுகளில் இடம்பெறும் காட்சிகள் வரும்.

மூன்றாவது பகுதியாக சமகாலத்து காட்சிகள் அதாவது இக்கால 2020க்கான காட்சிகள் அமைந்திருக்கும். இம்மூன்று காலகட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பது படம் பார்த்தால் புரியும். மொத்தத்தில் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படமாக இது இருக்கும்.

சந்தானம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த படமாக ‘பிஸ்கோத்’ இருக்கும். கொரோனா முடக்கத்துக்குப் பிறகு அனைவருக்கும் ஒரு மன அழுத்தம் இருக்கிறது.

அந்த அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற வைக்கும் வகையில் பெரிய மன நிம்மதி அளிக்கும்படியான கலகலப்பான காமெடி படமாக ‘பிஸ்கோத்’ இருக்கும். இந்த படத்திற்காக சந்தானம் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. இப்படத்தில் இடம்பெறும் களரிச் சண்டைக் காட்சிகளுக்காக ஸ்டண்ட் ஹரிதினேஷிடம் களரி கற்றுக் கொண்டார். அதன் பிறகுதான் நடித்தார்.

அந்தக் காலத்தில் சௌகார்ஜானகி ‘தில்லு முல்லு’ படத்தில் நடித்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவர் இந்தப் படத்தில் சந்தானத்தின் பாட்டியாக வருகிறார் .நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார்.

சந்தானத்துடன் ஏற்கெனவே ‘A1’ படத்தில் நாயகியாக நடித்த தாரா அலிஷா பெர்ரி ஒரு நாயகியாகவும் மிஸ் கர்நாடகா விருதுபெற்ற ஸ்வாதி முப்பாலா
இன்னொரு நாயகியாகவும்
யும் நடித்துள்ளார்கள்.

அதுமட்டுமல்ல ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன்,சிவசங்கர்,லொள்ளு சபா மனோகர் , ஆகியோர் படம் முழுக்க வந்து கலகலப்பூட்டுவார்கள்.

மசாலா பிக்ஸ் சார்பில், MKRP புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து நான் இந்த படத்தைத் தயாரித்து இயக்கி இருக்கிறேன்.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் இந்தப் படத்தை வெளியிடுகிறார் .”என்கிறார் இயக்குநர் கண்ணன்.

இப்படத்திற்கு எடிட்டிங் ஆர் .கே. செல்வா, இசை ரதன். இவர் தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி ‘படம் மூலம் புகழ் பெற்றவர். பாடல்கள் கிருதியா,ரதன். நடனம் சாண்டி, சதீஷ்… மக்கள் தொடர்பு ஜான்சன்.

தீபாவளிக்குப் பலகாரங்களுடன் இந்த ‘பிஸ்கோத்’தும் சேர்ந்துள்ளது.

Director Kannan talks about his diwali release Biskoth

தாத்தா ஆனார் விக்ரம்..; மாமனார் ஆகிறார் ஷங்கர்..; இருவர் வீட்டிலும் விசேஷம்.!

தாத்தா ஆனார் விக்ரம்..; மாமனார் ஆகிறார் ஷங்கர்..; இருவர் வீட்டிலும் விசேஷம்.!

vikram shankarமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து – சிவகாம சுந்தரியின் மகள் வழிப் பேரனும், கெவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே.ரங்கநாதன் மகன் மனு ரஞ்சித்துக்கும் நடிகர் சீயான் விக்ரம் மகள் அக்‌ஷிதாவுக்கும் 2017 அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.

தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதன்மூலம் நடிகர் விக்ரம் தாத்தா ஆக புரோமோசன் பெற்றுள்ளார்.

*மற்றொரு செய்தி…*

‘ஜென்டில் மேன்’ பட மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர்.

இப்பட பிரம்மாண்ட வெற்றியால் இவரின் எல்லா படங்களுமே பிரம்மாண்டமான படைப்பாக உருவானது.

காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், ஐ, நண்பன், அந்நியன் என ஒவ்வொரு படமும் இந்தியளவில் பேசப்பட்டது.

ரஜினியுடன் ஷங்கர் இணைந்த சிவாஜி, ‘எந்திரன்’ மற்றும் 2 .ஓ ஆகிய படங்கள் ஹாலிவுட் வரை பேசப்பட்டது.

தற்போது கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ள நிலையில் தன் குடும்ப விசேஷத்தில் ஷங்கர் பிஸியாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர் & ஈஸ்வரி தம்பதிக்கு அதிதி மற்றும் ஐஸ்வர்யா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இதில் அதிதிக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளாராம் ஷங்கர்.

விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Chiyaan Vikram becomes grand father at 54

43 சர்வதேச விருதுகளை வென்ற திரைப்படம்..; தீபாவளிக்கு தியேட்டரில் விருந்து வைக்கும் ‘கோட்டா’

43 சர்வதேச விருதுகளை வென்ற திரைப்படம்..; தீபாவளிக்கு தியேட்டரில் விருந்து வைக்கும் ‘கோட்டா’

QUOTA to arrive as Diwali delight in Theatres அமுதவாணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கோட்டா’ திரைப்படம் இதுவரை 43 சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.

ஜி தமிழ் ஜுனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் வின்னர் பவாஸ், அதே நிகழ்ச்சியின் மற்றொரு வின்னர் நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கேமராமேனாக படத்தின் இயக்குநர் அமுதவாணன் மற்றும் கவாஸ்கர் ராஜு அற்புதமாக பணியாற்றியுள்ளனர்.

இசையை ஆலன் செபாஸ்டின் மற்றும் எடிட்டிங் பொறுப்பை வினோத் ஸ்ரீதர் மிகச்சிறப்பாக செய்துள்ளனர்.

இப்படம் நமக்கு நல்ல அனுபவத்தை வழங்க, வரும் தீபாவளி அன்று திரையில் வெளியாக தயாராக இருக்கிறது.

சர்வதேச அளவில் தன் தடத்தை மிக அழுத்தமாகப் பதித்து பல அங்கீகாரங்களைப் பெற்ற திரைப்படங்களை நம் தமிழ் ரசிகர்கள் கை கொடுக்க என்றும் மறப்பதில்லை.

தீபாவளியை கோட்டா திரைப்படத்துடன் கொண்டாட தயாராகுவோம் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

QUOTA to arrive as Diwali delight in Theatres

நடிகர்கள்

பவாஸ் – ஜீ தமிழ் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2 வின்னர்

நிஹாரிகா – ஜீ தமிழ் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2 ரன்னர்

ஆதில் – விஜய் டிவி தேன்மொழி பி. ஏ. சீரியல் புகழ்

செல்லா – நக்கலைட்ஸ் புகழ்

சஜி சுபர்ணா

“மானஸி” நரேஷ்

“அப்பா” ரவி

தொழில் நுட்பக் கலைஞர்கள்

இயக்குநர் :- ப. அமுதவாணன்

ஒளிப்பதிவு:- ப. அமுதவாணன் மற்றும் கவாஸ்கர் ராஜு

இசை :- ஆலன் செபஸ்டியன்

எடிட்டிங் :-வினோத் ஸ்ரீதர்

பாடல் வரிகள் :- கேமி மற்றும் ஸ்ரீ

வண்ணம் :- ஸ்ரீ ராம்

டிஸைன் :- சசி & சசி

மக்கள் தொடர்பு :- தியாகராஜன்

இதுபோல நாலு ரீசன் இருந்தா எல்லா சீசனிலும் ‘சூரரைப் போற்று’ பாப்பீங்க

இதுபோல நாலு ரீசன் இருந்தா எல்லா சீசனிலும் ‘சூரரைப் போற்று’ பாப்பீங்க

Here is resons Why We should watch Soorarai Pottru சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’.

ஜிவி பிரகாஷ் இசையைமத்துள்ளார். பாடல்கள் வெளியாகி இணையத்தில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் சூர்யாவுடன் மோகன் பாபு, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

குறைந்த விலை விமான சேவையான ஏர் டெக்கானின் நிறுவனரும், ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் கற்பனைக் கதை இது.

ஏன் சூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்பதற்கான 4 காரணங்கள் இதோ

1 – உண்மைக் கதையின் அடிப்படையில் உருவானது – இந்தப் படம் எவ்வளவு தாக்கத்துடன் உருவாகியுள்ளது என்பதே குறிப்பிட்டுப் பேச வேண்டிய விஷயம். நிஜ வாழ்வின் அடிப்படையில் சொல்லப்படும் ஒரு கதை என்பதே ரசிகர்களை சுவாரசியப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகும்.

தேவையற்ற எந்த விஷயங்களும் இன்றி, நிஜ வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்களை எடுத்து அதை இன்று சூரரைப் போற்று இருக்கு வடிவத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். நடந்த சம்பவங்களின் சாரத்துக்கு உண்மையாகவும், அந்த சம்பவங்கள் ரசிகர்களின் கண்களுக்காக அழகாகவும் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

2 – பரபரப்பான கதை – சூரரைப் போற்று, ஊக்கம் தரும், பரபரப்பான, ரசிகர்களை முழுமையாக ஆழ்ந்து ரசிக்க வைக்கும் கதையைக் கொண்ட திரைப்படம். அதிகம் போற்றப்படாத ஒரு நாயகனின் வாழ்க்கையைப் பற்றிய கதையான இது, அவரது பயணம், பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நேர்மையுடன் உழைத்த அவரது துணிச்சல் ஆகியவற்றைப் பேசுகிறது.

இது போன்ற நெருக்கடியான காலகட்டத்தில், இது போன்ற ஒரு கதை கண்டிப்பாக ரசிகர்களின் நெஞ்சில் ஊக்கத்தை நிரப்பி, பல விஷயங்களைக் கற்பிக்கும்.

3 – தேசிய அளவில் அனைவரையும் ஈர்க்கும் படம் – அமேசான் ப்ரைம் வீடியோவுடன், இந்தத் திரைப்படம் சுவாரசியமான கதையம்சத்துடன் 200 தேசங்களில் தரையிறங்குகிறது.

உங்கள் வீட்டின் வசதியான சூழலில் உட்கார்ந்து இந்த அட்டகாசமான ஆக்‌ஷன் கதையை நீங்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பீர்கள் என்பதற்கு இது இன்னொரு காரணம்.

4 – சுதா மற்றும் சூர்யா, சொல்லி அடிக்கும் கூட்டணி – சுதாவின் நுட்பமும், சூர்யாவின் திறமையும் சேர்ந்து கண்டிப்பாக இந்தத் திரைப்படத்தை வெற்றிப் படமாக ஆக்கும்.

துல்லியமான பார்வை இருக்கும் ஒரு இயக்குநராக சுதா அறியப்படுகிறார். இவ்வளவு ஊக்கத்தைத் தரும் ஒரு கதையைச் சொல்ல 2 வருடங்களாக பேரார்வத்துடன் கடுமையாக உழைத்திருக்கிறார்.

சூர்யா, முழுமையான இயக்குநரின் நடிகர். இயக்குநரின் பார்வையைத் திரையில் கொண்டு வர 100 சதவீதம் உழைப்பவர். சுதாவிடமிருந்து சூரரைப் போற்று படப்பிடிப்பில் சூர்யா நிறைய கற்றிருக்கிறார்.

இந்த இயக்குநர் – நடிகர் இணையின் நட்புறவுக்குப் பல ரசிகர்களின் ஆதரவு உள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில், குனீத் மோங்காவின் சீக்யா எண்டர்டெய்மெண்ட் தயாரித்திருக்கும் ‘சூரரைப் போற்று’, நவம்பர் 12ஆம் தேதி (தியேட்டரில் வெளியாகமல் நேரடியாக) அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்தியேகமாக வெளியாகிறது.

தீபாவளி வாழ்த்துக்கள்…

Here is resons Why We should watch Soorarai Pottru

‘மாஸ்டர்’ வரும் வரை மௌனவிரதம்?; நிர்வாகிகளை சந்திக்காத விஜய்?

‘மாஸ்டர்’ வரும் வரை மௌனவிரதம்?; நிர்வாகிகளை சந்திக்காத விஜய்?

thalapathy vijayதன் மகனும் நடிகருமான விஜய் பெயரில் உள்ள அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்,

ஆனால் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என விஜய் மறுத்து அறிக்கை வெளியிட்டார். அதற்கு அடுத்த நாளே விஜய்யின் அம்மா ஷோபா தானும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது விஜய் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இதனையடுத்து மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய் சந்திக்க அவரின் பனையூர் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

ஆனால் மதியம் வரையும் விஜய் வரவே இல்லையாம்.

இதனையடுத்து வந்தவர்களுக்கு விருந்து உபசரிப்பு மட்டும் நடந்ததாம்.

தற்போதுள்ள சூழ்நிலையில் என்ன பேசினாலும் அது அரசியலாக பார்க்கப்படும். மேலும் மாஸ்டர் படம் திரைக்கு வரவேண்டும்.

இப்போது எது பேசினாலும் அது பிரச்சினையில் முடிய வாய்ப்புள்ளதாக மௌனமாக இருக்க முடிவு செய்துவிட்டாராம் இந்த மாஸ்டர்.

Thalapathy Vijay meets the district secretaries of his fan club

வெப் சீரிஸ் காப்பி..? சோத்துல விஷம் வச்சிருக்கலாமே.? கமல்-லோகேஷை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்

வெப் சீரிஸ் காப்பி..? சோத்துல விஷம் வச்சிருக்கலாமே.? கமல்-லோகேஷை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்

உலகநாயகன் கமல்ஹாசனின் 232வது படமாக ‘விக்ரம்’ படம் உருவாகவுள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.

கமல் பிறந்தநாளான நவம்பர் 7ல் இப்பட டைட்டில் டீசர் வெளியானது.

இதுவரை எவரும் செய்யாத வகையில் படத்தின் டைட்டிலையே ஒரு 2 நிமிட டீசராக வெளியிட்டு இருந்தனர்.

ஆனால் இதையும் சிலர் கிண்டலடித்து மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

இது ‘நார்கோஸ் மெக்சிகோ சீசன் 2’ வெப் சீரிஸ் டீசரின் காப்பி என தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த டீசரில் பல விதமான துப்பாக்கிகளை ஒளித்து வைப்பார் கமல். அதன்பின்னர் அவரின் எதிரிகளுக்கு விருந்து சாப்பாடு படைப்பார்.

இதனையடுத்து சாப்பிட தயாரான நிலையில் திடீரென கோடாரியை எடுத்து எதிரி மீது வீசுவார்.

இவ்ளோ செய்ற நீங்க.. சோத்துல விஷம் வச்சிருக்களாமே எனவும் மீம்ஸ் கிரியேட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

Netizens slams Kamal Haasan’s Vikram title teaser

More Articles
Follows