14 வயதில் தொடங்கி 450 படங்களில் நடித்த சௌகார் ஜானகிக்கு பத்மஶ்ரீ விருது..; நாசர் வாழ்த்து

14 வயதில் தொடங்கி 450 படங்களில் நடித்த சௌகார் ஜானகிக்கு பத்மஶ்ரீ விருது..; நாசர் வாழ்த்து

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையும் திரையுலகின் பல சாதனைகள் படைத்திட்ட வரலாற்று புகழ் நடிகை சவுக்கார் ஜானகி அவர்களுக்கு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் பத்மஶ்ரீ விருதை அறிவித்து கௌரவித்துள்ளது.

தமிழ் சினிமா நடிகர் நடிகர் நடிகைகள் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

சௌகார் ஜானகி தன் 14 வயதிலேயே மேடை நாடகம் மூலம் நடிப்பு துறையில் கால்பதித்தவர்.

தன் 18 வயதில் 1949 ஆம் ஆண்டில் ‘சவுக்கார்’ எனும் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ்,தெலுங்கு, கன்னடம் மொழிகளில் 450 க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். கலையுலகிற்கு அவர் செய்திட்ட அறப்பணிகள், சாதனைகள் ஏராளம். மொழிகள் தாண்டி கணக்கிலடங்கா வெள்ளிவிழா வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

81 வயதை கடந்தும் சமீபத்தில் வெளியான நடிகர் கார்த்தியின் “தம்பி”, கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’ படம் வரையிலும் நடிப்பை தொடர்ந்து வருகிறார்.

கலையுலக பொக்கிஷமான நடிகை சவுக்கார் ஜானகி அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது கௌரவம் கிடைத்துள்ளதை தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் சார்பில் நடிகர் நாசர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் நாசர் வெளியிட்ட அறிக்கையில்..

‘ஓ எங்கள் ‘சவுக்கார்’ அம்மா..
அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத எத்தனை நூறு படங்கள்! ஒவ்வொன்றும் முத்தாய்!

ஒன்றில் கண்டது.. இன்னொன்றில் இல்லை.
புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி!
‘புதிய பறவையில்’ மிரட்டியதும்
மிரண்டு போனதும் ஒரே ஜோடிக் கண்களா? ஆச்சர்யம்!

கண்களை மிஞ்சும் உங்கள் முத்துசிரிப்பு! அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான உங்கள் அன்பும் பாசமும்!!
தாங்கள் எங்களுக்கு தந்த கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் முத்தாய் கோர்த்து அழகு பார்த்து
மனமகிழ்ந்து விம்மிய எங்களுக்கு அம் முத்துமாலைக்கு பதக்கமாய்
இன்று “பத்மஶ்ரீ” உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை.

தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள், என்றென்றும் நீடுடி வாழ நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். “பத்மஶ்ரீ” விருது அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்“
என்று தெரிவித்துள்ளார்.

Actor Nassar wishes to legendary actress Sowcar Janaki

கமல்-சிவகார்த்திகேயன் இணையும் படத்தில் சூர்யா-தனுஷ் பட ஹீரோயின்

கமல்-சிவகார்த்திகேயன் இணையும் படத்தில் சூர்யா-தனுஷ் பட ஹீரோயின்

‘விக்ரம்’ படத்தை தொடர்ந்து தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவிருக்கிறார் கமல்ஹாசன்.

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார். இந்த தகவலை அண்மையில் நடைபெற்ற பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவித்தார்.

தற்போதே இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இதில் சாய்பல்லவியை நாயகியாக்க இயக்குனர் முடிவு செய்திருக்கிறாராம்.

தமிழில் சூர்யாவுடன் என்ஜிகே மற்றும் தனுஷிடன் மாரி 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் சாய்பல்லவிக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

ஆனால் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவருகிறார் சாய்பல்லவி.

இவர் நானி உடன் நடித்த ‘ஷ்யாம் சிங்காய் ராய்’ என்ற படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது ராணா டகுபதியுடன் ’விரட்டா பர்வம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் சாய்பல்லவி.

Actress Sai Pallavi to romance Sivakarthikeyan ?

மீண்டும் மீண்டும் தனுஷை பாலிவுட் அழைக்கும் ஆனந்த் எல். ராய்

மீண்டும் மீண்டும் தனுஷை பாலிவுட் அழைக்கும் ஆனந்த் எல். ராய்

கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த தனுஷை பாலிவுட் அழைத்து சென்றவர் டைரக்டர் ஆனந்த் எல். ராய்.

2013ஆம் ஆண்டு ஆனந்த் எல். ராய் இயக்கிய ராஞ்சனா படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார் தனுஷ்.

அதன்பின்னர் பால்கி இயக்கிய ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார் தனுஷ்.

இதன் பின்னர் மீண்டும் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘அட்ரங்கி ரே’ என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். இந்த படம் அண்மையில் வெளியானது.

தற்போது மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க தனுஷை அழைத்திருக்கிறாராம் ஆனந்த் எல். ராய்.

இவரே தயாரித்து இயக்கவுள்ள ஒரு த்ரில்லர் ஆக்ஷன் படத்தில் நடிக்க அழைப்ப விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ், ஹிந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார் தனுஷ்.

தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி (சார்) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் ஆயிரத்தில் ஒருவன் 2, வடசென்னை 2 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

இவையில்லாமல் தெலுங்கு இயக்குனர்கள் சுகுமார் மற்றும் சேகர் கம்முலா ஆகியோரது இயக்கங்களிலும் நடிக்கவும் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

Dhanush and Anand L Roy joins 3rd time

உனக்கு பிடிக்காது… அதான் செஞ்சேன்..; காதலனை கலாய்த்து வாழ்த்திய பிரியா பவானி சங்கர்

உனக்கு பிடிக்காது… அதான் செஞ்சேன்..; காதலனை கலாய்த்து வாழ்த்திய பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமாவில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நாயகி யார் என்றால் அது பிரியா பவானி சங்கர் தான்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான பிளட் மணி, ஓ மணப்பெண்ணே இரண்டும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

தற்போது குருதி ஆட்டம், யானை, பொம்மை, ருத்ரன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களை கை வசம் வைத்திருக்கிறார்.

இவர் டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருக்கும்போதே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார்.

இந்த நிலையில் காதலனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்… ‛‛நீ ஒரு மோசமான டீன்ஏஜ் பாய். ஆனால் இப்போ நல்ல மனிதராக மாறி விட்டாய். நான் அதிர்ஷ்டசாலி. எப்போதுமே புன்னகை, அன்பு, நட்பு, அமைதி,ஆரோக்கியம் என அனைத்தும் உனக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.

இந்த புகைப்படம் உனக்கு பிடிக்காது. அதனால் தான் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளேன்” என காதலனை கலாய்த்து பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

Actress Priya Bhavani Shankar wishes to her boy friend

முன்னாள் உதவி இயக்குனரின் படத்தில் அறிமுகமாகும் ஷங்கர் மகன்

முன்னாள் உதவி இயக்குனரின் படத்தில் அறிமுகமாகும் ஷங்கர் மகன்

இயக்குனர் ஷங்கருக்கு 2 மகள்கள்.. ஒரு மகன். ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகள் அதிதி டாக்டருக்கு படித்திருக்கிறார். அதே சமயம் ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோயாக நடித்து வருகிறார்.

தற்போது தனது மகனையும் ஷங்கர் சினிமாவில் நாயகனாக்க விரும்புகிறார் என்ற செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

தற்போது ஷங்கர் தன் மகன் அர்ஜித்தை யாருடைய இயக்கத்தில் அறிமுகம் செய்ய போகிறார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

தனது முன்னாள் உதவி இயக்குனரின் இயக்கத்தில் தன் மகனை அறிமுகம் செய்யவிருக்கிறாராம்.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் காதல் பார்ட் 2 படத்தில் அறிமுகம் செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது.

அதே சமயம் அட்லீயின் இயக்கத்தில் தன் அறிமுகம் இருந்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்படுகிறாராம் அர்ஜித்.

காதல் படத்தை தயாரித்தவர் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி சக்திவேல், அட்லீ ஆகிய இருவருமே ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குனர்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Arjith Shankar to debut in his father’s associate direction

விஜய் வழக்கு.. கடுமையான நடவடிக்கை வேண்டாம்..; தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

விஜய் வழக்கு.. கடுமையான நடவடிக்கை வேண்டாம்..; தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசுகாரை இறக்குமதி செய்து இருந்தார் நடிகர் விஜய்.

அப்போது.. “வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரியாக ரூ.7.98 லட்சம் செலுத்த வேண்டும்” என வணிகவரித்துறை தெரிவித்தது.

ஆனால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வரியை செலுத்தாத காரணத்தினால், விஜய்க்கு காரின் நுழைவு வரி மற்றும் அபராதத் தொகை என இரண்டும் சேர்த்து செலுத்தவேண்டும் என வணிகவரித்துறை உத்தரவு இட்டது.

இதனையடுத்து நுழைவுவரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், வரி செலுத்த காலதாமானது என விஜய் தரப்பில் சொல்லப்பட்டது.

மேலும் அபராதத் தொகையை ரத்து செய்யவேண்டும் என்றும், விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இத்துடன் அபராதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் எனவும் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கினை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

வரி அபராதத்தை வசூலிப்பது தொடர்பான எவ்வித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டாம் என்றும் தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.

சில தினங்களுக்கு முன் இதே வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறிய எதிர்மறையான கருத்துக்களை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

High court orders TN government in Vijay case

More Articles
Follows