‘களத்தில் சந்திப்போம்’… ஜீவா-அருள்நிதிக்கு கைகொடுக்கும் ஆர்யா-விஜய்சேதுபதி

‘களத்தில் சந்திப்போம்’… ஜீவா-அருள்நிதிக்கு கைகொடுக்கும் ஆர்யா-விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்.ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி இணைந்துள்ள படம் ‘களத்தில் சந்திப்போம்’.
இப்படம், ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும், 90வது படமாகும்.

நாயகிகளாக மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். ‘அப்பச்சி’ என்ற வித்தியாசமான வேடத்தில், ராதாரவி அசத்தியுள்ளார். மேலும், ரோபோ சங்கர், பாலசரவணன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம், இரண்டு நண்பர்களின் நட்பை மையமாக கொண்ட ஆக் ஷன், கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீசரை நாளை அக்டோபர் 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆர்யா மற்றும் விஜய்சேதுபதி இணைந்து வெளியிடவுள்ளனர்.

இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Arya and Vijay Sethupathi to reveal the teaser of Kalaththil Sandhippom tomorrow

Kalaththil Sandhippom

சிவாவை இயக்கும் ‘தில்லுக்கு துட்டு’ பட இயக்குனர்..; இப்படியொரு டைட்டிலா?

சிவாவை இயக்கும் ‘தில்லுக்கு துட்டு’ பட இயக்குனர்..; இப்படியொரு டைட்டிலா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தனியார் டிவியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இயக்குனர் ராம் பாலா.

இவர் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு-2 ஆகிய படங்களை இயக்கி பேய் ஹிட்டு கொடுத்தார்.

தற்போது மிர்ச்சி சிவாவை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

மிர்ச்சி சிவா மற்றும் நிக்கி கல்ராணி ஜோடியாகும் இந்த படத்திற்கு ‘இடியட்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் முழு நீள காமெடி பேய் படமாக உருவாகவுள்ளது.

தற்போது ‘இடியட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகிவருகிறது.

Director Ram Bala’s next is titled as Idiot

Tamil movie Idiot

விக்ரம் பிரபு & வாணி போஜன் இணையும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’

விக்ரம் பிரபு & வாணி போஜன் இணையும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்கத்தில் விக்ரம் பிரபு மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு படம் “பாயும் ஒளி நீ எனக்கு” என்று தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார்.

பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவும், மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் முதன் முறையாக தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தேசிய விருது பெற்ற கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

மகாலட்சுமி ஆர்ட்ஸ் குமாரசுவாமி பத்திக்கொண்டா படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார். அடுத்த மாதம் நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Vikram Prabhu and Vani Bhojan to team up for Paayum Oli Nee Enakku

 Paayum Oli Nee Enakku

‘திரெளபதி’ படக்குழுவின் அடுத்த ஆட்டம் ‘ருத்ர தாண்டவம்’

‘திரெளபதி’ படக்குழுவின் அடுத்த ஆட்டம் ‘ருத்ர தாண்டவம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்ன பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் திரெளபதி. ஆனால் இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சிகள் திரையிடப்பட கூடிய சூழ்நிலையை இந்த படத்தின் டிரைலர் உருவாக்கியது.

இதனால் படத்தின் வசூலும் தாறுமாறாக உயர்ந்தது.

மோகன்.ஜி என்பவர் இயக்கிய இந்த படத்தில் ரிச்சர்ட் மற்றும் ஷீலா ஜோடியாக நடித்திருந்தனர்.

தற்போது இதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

தங்களது அடுத்தப்பட அறிவிப்பை மோகன் மற்றும் ரிச்சர்ட் வெளியிட்டுள்ளனர்.

இன்று சரஸ்வதி பூஜை அக்., 25ல் அடுத்தப்படத்திற்கு “ருத்ர தாண்டவம்” என பெயரிட்டு பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளனர்.

மோகன் ஜி இயக்கி, தயாரிக்கிறார். திரௌபதி பட நாயகனாக நடித்த ரிஷி ரிச்சர்டு இதிலும் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் துப்பாக்கி, தோட்டா, கைவிலங்கு, மீடியா மைக், ஊசி மற்றும் கிறிஸ்துவ ஜப மாலை போன்றவை இடம் பெற்றுள்ளன.

‘அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்போம்’ என்ற சப்டைட்டிலும் பர்ஸ்ட் லுக்கில் இடம் பெற்றுள்ளது.

பரூக் ஒளிப்பதி செய்ய, ஜூபின் இசையமைக்கிறார்.

நாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது.

Draupathi director Mohan’s next film announced

ruthra thandavam

மதத்தை வைச்சி தமிழ்நாட்டுல ஓட்டு வாங்க முடியல..; நயன்தாராவையும் அரசியல் பேச வைத்த ஆர்ஜே. பாலாஜி

மதத்தை வைச்சி தமிழ்நாட்டுல ஓட்டு வாங்க முடியல..; நயன்தாராவையும் அரசியல் பேச வைத்த ஆர்ஜே. பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகராக உருவெடுத்த ஆர்.ஜே.பாலாஜி தற்போது இயக்குனராகியிருக்கிறார்.

இவரும் என்.ஜே.சரவணன் என்பவரும் இணைந்து ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தை இயக்கியுள்ளனர்.

இதில் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார்.

இவர்களுடன் மவுலி, ஊர்வசி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் டிஸ்னிஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் இப்பட டிரைலரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் படத்தை தயாரித்துள்ளார். எல்கேஜி டீம் இப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிரைலரில் நயன்தாரா மற்றும் பாலாஜியின் டைமிங் காமெடிகளும் செமயாய் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. கூடவே ஆன்லைன் க்ளாஸ் மற்றும் அரசியல் என அனைத்தையும் அலசியுள்ளனர்.

”கடவுள் இல்லை என்று சொல்பவன் ஓகே., ஆனால் ஒரு கடவுளை உயர்த்தி, மற்றொரு கடவுளை திட்டுபவன் ரொம்ப டேஞ்சர்” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

”தமிழ்நாட்டுல மட்டும் தான் மதத்தை வைத்து இன்னும் ஓட்டு வாங்க முடியல, அடுத்த 5 வருஷத்துல அத மாத்தி காட்டுறேன்” என்று வில்லன் நடிகர் சொல்வது போல காட்சிகள் உள்ளன.

இந்த படம் சமகால அரசியலையும், போலி சாமியார்களை அம்பலப்படுத்தும் என நம்பலாம்.

ஆக.. நயன்தாரா அம்மனையும் அரசியல் பேச வைத்துவிட்டார் ஆர்ஜே. பாலாஜி.

Lady Super Star Nayanthara and RJ Balaji take potshots at religious politics

பாண்டிராஜ் இயக்கும் சூர்யா-40.; அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்

பாண்டிராஜ் இயக்கும் சூர்யா-40.; அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் ஓடிடியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இதன்பின்னர் கலைப்புலி தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இதற்காக நீண்ட தலைமுடியை வளர்த்து வருகிறார். நேற்றைய ‘சூரரைப் போற்று’ படம் தொடர்பான வீடியோவில் கூட அந்த ஹேர் ஸ்டைலை காண் முடிந்தது.

இந்நிலையில் சூர்யாவின் அடுத்தப்பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அக்டோபர் 25ஆம் தேதி மாலை வெளியிட்டுள்ளது.

சூர்யாவின் 40வது படமாக உருவாகவுள்ள படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.

Suriya 40 to be directed by Pandiraj and produced by Sun Pictures

suriya 40

More Articles
Follows