தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் தங்களது 90வது படமாக ‘களத்தில் சந்திப்போம்’ என்ற படத்தை தயாரித்துள்ளது.
இதில் படத்தயாரிப்பாளர் ஆர்பி. சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா, அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் & மஞ்சிமா மோகன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இதுகுறித்து பிரபல ஊடகத்திற்கு ஆர்.பி.சவுத்ரி அளித்த பேட்டியில்…
“இன்றைக்கு டிரண்ட் மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்ப நாங்களும் மாறி களத்தில் சந்திப்போம் படத்தை உருவாக்கி உள்ளோம்.
இதுவரை ஆண்டுக்கு 4 படங்கள் தயாரித்தோம். இனி ஆண்டுக்கு 2 படங்கள் தயாரிக்க உள்ளோம்.
மலையாளத்தில் வெளிவந்த லூசிபர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறோம். இதை மோகன்ராஜா இயக்க சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கின்றனர்.
இது எங்களின் 93வது படமாகும்.
விரைவில் எங்கள் நிறுவனம் 100வது படத்தை எட்டிவிடும். 100வது படத்தை பிரமாண்டமாக தயாரிப்போம்.
அதில் விஜய் நடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. விஜய் எங்கள் ஹீரோ. அவருக்கு 6 ஹிட் படங்களை கொடுத்துள்ளோம்..” என்றார்.
Super Good Films upcoming films details