அஜித் பிறந்தநாளில் ஏகே 62 ட்ரீட்.; ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தளிக்கும் லைக்கா

அஜித் பிறந்தநாளில் ஏகே 62 ட்ரீட்.; ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தளிக்கும் லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அவரின் 62 ஆவது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவார் எனக் கூறப்பட்டு பின்னர் அவர் விலகியதால் மகிழ் திருமேனி இயக்குவார் எனக் கூறப்பட்டு வருகிறது.

இது உறுதியானாலும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் மே 1 தேதி நடிகர் அஜித் தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அதனை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் இதர விவரங்களை லைக்கா நிறுவனம் வெளியிடும் என தகவல்கள் வந்துள்ளன.

‘துணிவு’ படத்திற்குப் பிறகு எந்த ஒரு தகவலும் இல்லாததால் அப்செட் ஆகியிருந்த அஜித் ரசிகர்களுக்கு மே 1ம் தேதி இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும் என நம்பலாம்.

Lyca gives double treat on Ajith’s birthday

ரஜினியின் அரசியல் பேச்சை வச்சி செய்த முன்னாள் ஜோடி ரோஜா

ரஜினியின் அரசியல் பேச்சை வச்சி செய்த முன்னாள் ஜோடி ரோஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று விஜயவாடாவில் நடைபெற்ற என் டி ஆர் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

அப்போது அதில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் பாலையா ஆகியோரை புகழ்ந்து பேசினார் ரஜினிகாந்த்.

பாலையா பற்றி குறிப்பிட்டு பேசும் போது.. “ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோரால் செய்ய முடியாததை பாலையா செய்வார். அவர் எதை செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்” என புகழ்ந்து பேசினார்.

அதன் பின்னர் சந்திரபாபு நாயுடு குறித்து பேசும் போது.. “சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்கு பார்வை கொண்டவர். ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக உருவெடுக்கு காரணமே சந்திரபாபுவின் தொலைநோக்கு பார்வை தான். நியூயார்க் நகரம் போல் அபிவிருத்தி அடைந்துள்ளது” என பேசியிருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சை கலாய்க்கும் வகையில் அவருடன் நடித்த நடிகையும் தற்போதைய அமைச்சருமான ரோஜா கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் ‘வீரா’ மற்றும் ‘உழைப்பாளி’ படங்களில் ஜோடியாக நடித்தவர் ரோஜா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா பேசியதாவது…,

“ஒரு நடிகராக ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், அவருக்கு தெலுங்கு மாநில அரசியல் பற்றி தெரியவில்லை.

விஷன் 2047 என்று தொலைநோக்கு பார்வையில் சிந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு என ரஜினி குறிப்பிட்டு இருந்தார்.

சந்திரபாபுவின் விஷன் 2020 காரணமாக தான் தெலுங்கு தேசம் கட்சிக்கு 23 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

அப்படியானால் 2047-ல் சந்திரபாபு எங்கே இருப்பார் என்று யாருக்கும் தெரியும்.

சந்திரபாபு நாயுடு மீது என் டி ராமராவ் ஆசிகளை பொழிகிறார் என பேசினார் ரஜினி.

என்டிஆர் மரணத்திற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான். தன் கடைசி காலத்தில் சந்திரபாபு நாயுடு பற்றி பேசிய என்டி ராமராவ்.. அவருடைய மருமகன் ஒரு திருடன்.. யாரும் நம்பாதீர்கள் என்று சொன்னார்.

ரஜினிக்கு இது தெரியல. என்டி ராமராவ் பேச்சு அடங்கிய CDயை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். அந்த சிடியை போட்டு பார்த்து ஆந்திர அரசியல் பற்றி ரஜினிகாந்த் தெரிந்து கொள்ளட்டும்” என கலாய்க்கும் வகையில் ரோஜா தெரிவித்துள்ளார்.

Minister Roja trolls Rajinikanths knowledge in politics

விலையில்லா விருந்தகத்திற்கு பணம் வேணுமா.? நெஞ்சில் ஆட்டோஃகிராப் கேட்டவருக்கு விஜய் அட்வைஸ்

விலையில்லா விருந்தகத்திற்கு பணம் வேணுமா.? நெஞ்சில் ஆட்டோஃகிராப் கேட்டவருக்கு விஜய் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஏப்ரல் 28ஆம் தேதி பனையூரில் உள்ள தன் இல்லத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தார் நடிகர் விஜய்.

அப்போது அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல்களை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்..

இவை மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு மேலாக விலையில்லா விருந்தகம் என்ற ஒரு ஹோட்டலை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நடத்தி வருகிறார்கள்.

இந்த உணவகம் திருச்சி, சேலம், தஞ்சை உள்ளிட்ட 22 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர்.

இவர்களையும் நேற்று சந்தித்த விஜய் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விருந்தகம் நடத்த பணம் வேண்டும் என்றால் தன்னிடம் கேளுங்கள், என கூறினாராம் விஜய்.

இத்துடன் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் நெஞ்சில் ஆட்டோகிராப் போடச் சொன்னாராம். அதை அப்படியே பச்சை குத்தி கொள்வதாகவும் தெரிவித்தாராம்.

அதை எல்லாம் மறுத்த விஜய் ஒரு வெள்ளை காகிதத்தில் மட்டும் கையெழுத்திட்டு கொடுத்து அப்படி எல்லாம் செய்யக்கூடாது என அறிவுரை சொல்லி அவரை அனுப்பி வைத்தாராம் விஜய்.

Vijay’s advice to those who asked for an autograph on their chest

வித்தைக்காரனுடன் இணைந்த கவிதைக்காரன்.; வைரமுத்துவை வரவேற்ற சதீஷ்

வித்தைக்காரனுடன் இணைந்த கவிதைக்காரன்.; வைரமுத்துவை வரவேற்ற சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படங்களில் காமெடியனாக நடித்து வந்த சதீஷ் ஏஜிஎஸ் என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரித்த ‘நாய் சேகர்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார்.

இதன் பின்னர் சன்னி லியோன் நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கதையின் நாயகனாக ‘வித்தைக்காரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜன் உதவியாளர் வெங்கி என்பவர் இயக்கியுள்ளார்

இந்தப் படத்துக்கு யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, விபிஆர் இசையமைக்க அருள் இ சித்தார்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் படத்தில் மோஷன் போஸ்டரை வெளியிட்டு பட குழுவினரை வாழ்த்தி இருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 29ஆம் தேதி இந்த படம் தொடர்பான ஒரு அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

வித்தைக்காரன் படத்தில் பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுத உள்ளார் என அறிவித்து அவரை வரவேற்றுள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்! ❤️❤️

வித்தைக்காரன்

Welcome on Board Sir @Vairamuthu as Lyricist in #Vithaikkaaran

@vijaywcf @Venki_Dir #SimranGupta @vbrcomposer @iamyuvakarthick @R_chandru @editorsiddharth @Gdurairaj10 @Muralikris1001

Vithaikkaaran – Motion Poster

https://t.co/QpeeogQNih

Vithikaaran movie song line writen vairamuthu

மீண்டும் தேர்தலில் போட்டி.?; காங்கிரஸ் கட்சிக்கு கமல் பிரச்சாரம்.; ராகுல் காந்தி அழைப்பு.!

மீண்டும் தேர்தலில் போட்டி.?; காங்கிரஸ் கட்சிக்கு கமல் பிரச்சாரம்.; ராகுல் காந்தி அழைப்பு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்தாண்டு 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மநீம கட்சி முன்னேற்பாடுகள் தொடர்பாக, கட்சியின் கோவை – சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது.

இதில் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசும்போது.. “நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க மநீம கட்சியின் செயல்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும்.

மேலும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பும் அங்கீகாரமும் வழங்கப்படும்.” என்று பேசினார்.

இதனையடுத்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது…

‘‘வரும் மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என்றார்.

மேலும்… கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.” என்றார்.

இதன்படி மே மாதம் முதல் வாரம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகத்தில் கமல்ஹாசன் பிரச்சார மேற்கொள்ள உள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்திருந்தார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

Rahul requesting Kamal to campaign in Karnataka polls

கவர்ச்சி நடிகையாக மாற ஆசைப்பட்டு உயிரிழந்த மாடல் கிறிஸ்டினா

கவர்ச்சி நடிகையாக மாற ஆசைப்பட்டு உயிரிழந்த மாடல் கிறிஸ்டினா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகை கிம் கர்தர்ஷியான்.

இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

பிரபலங்களுக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் அவர்களைப்பாேல மாற விரும்பி சில செயல்களை செய்வர்.

இன்னும் சிலர், அந்த பிரபலத்தை போலவே முக அமைப்பு வேண்டும் என ஆசைகொண்டு, முகமாற்று அறுவை சிகிச்சை எனப்படும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முதல் பல சிகிச்சை செயல்களை செய்வர்.

கிம் கர்தர்ஷியான் போல் மாற வேண்டும் என்ற ஆசைப்பட்ட கிறிஸ்டினா என்ற மாடல் அழகி பல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதனால் அவருக்கு உடல் நலம் பாதித்ததை அடுத்து சமீபத்தில் அவர் காலமானார்.

இந்த நிலையில், 34 வயதான கிறிஸ்டினா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கிறிஸ்டினா பிளாஸ்டிக் சிகிச்சை செய்த போது ஏற்பட்ட தவறு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

kim kardashian lookalike america model christina dies

More Articles
Follows