சிவகார்த்திகேயனின் ஆசையை நிறைவேற்றும் கவுண்டமணி.; இது வேற லெவல் கூட்டணியாச்சே

சிவகார்த்திகேயனின் ஆசையை நிறைவேற்றும் கவுண்டமணி.; இது வேற லெவல் கூட்டணியாச்சே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘டான்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த படம் இளைஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்ப்பை பெற்றது

தற்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

இப்படம் 2022 தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசாகிறது.

இதனையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘எஸ்.கே 21’ படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இதில் சாய் பல்லவி கதையின் நாயகியாக நடிக்கிறார். இது பற்றி அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் பட குழு அறிவித்து இருந்தது.

இதனையடுத்து ‘மண்டேலா’ பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘மாவீரன்’.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. தெலுங்கில் ‘மகாவீருடு’ என பெயர் வைத்துள்ளனர்.

அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் ‘மாவீரன்’ படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார் கவுண்டமணி.

தற்போது சிவகார்த்திகேயனுக்காக கவுண்டமணி மீண்டும் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கவுண்டமணிவுடன் இணைந்து நடித்த ஆசையாக உள்ளது எனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார் சிவகார்த்திகேயன்.

தற்போது அவரது ஆசையை நிறைவேற்ற உள்ளார் கவுண்டமணி என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Legendary actor Goundamani fulfills Sivakarthikeyan’s wish

நல்லவனா நடிப்பதை விட வில்லனா நடிப்பதே பிடிக்கும்.; ‘நதி’ விழாவில் கரு.பழனியப்பன் கருத்து

நல்லவனா நடிப்பதை விட வில்லனா நடிப்பதே பிடிக்கும்.; ‘நதி’ விழாவில் கரு.பழனியப்பன் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mas Cinemas சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் K.தாமரைசெல்வன் இயக்கத்தில், காதலையும், நட்பையும் மையமாக கொண்டு, சமூக அவலங்களை சாடும், ஒரு கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “நதி”. அனைத்து பணிகளும் முடிந்து, ஜூலை 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வினில்..

கோடங்கி என்ற நடிகர் வடிவேல் முருகன் பேசியதாவது…

“இந்த படத்தின் மூலம் கரு பழனியப்பன் போன்ற ஒரு சகோதரர் எனக்கு கிடைத்துள்ளார். இயக்குநர் எந்தவித பதட்டமும் இல்லாமல், படத்தை எழுதி இயக்கியுள்ளார் தாமரை .

இந்த படம் எனக்கு ஒரு முக்கியமான அனுபவமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் நன்றி”

இயக்குநர் A வெங்கடேஷ் பேசியதாவது..

“AP International உடன் இந்த படத்தை இணைந்து தயாரிப்பாளர் வெளியிடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கயல் ஆனந்தி திரையில் குடும்ப பாங்கான பாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் தாமரைசெல்வன் வேலை பார்க்கும் விதம் இயக்குநர் பாசில் உடைய பாணியில் இருக்கிறது. கோடங்கி இந்த படத்தில் முழுமையாக ஒரு நல்ல பாத்திரத்தில் வருகிறார், அவர் கதாபாத்திரம் அனைவரையும் ஈர்க்கும் படி இருக்கும். இப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும்.”

நடிகை கயல் ஆனந்தி பேசியதாவது…

“இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மதுரையில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையை கேட்கும் போது, இந்த கதாபாத்திரத்தை நிச்சயம் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தேன்.

சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி”

இயக்குநர் நடிகர் கரு பழனியப்பன் பேசியதாவது…

“படத்தின் கதையை பற்றி கூறும் போது, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் தயங்கியபடி கூறினார். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் தான் எனக்கு அதிக விருப்பம்.

வில்லனாக நடிக்கும் போது எப்படி வேண்டுமானாலும் பேச முடியும். நல்லவனாக நடிக்கும் போது அது முடியாது. அதனால் எனக்கு வில்லனாக நடிப்பது பிடிக்கும்.

இயக்குநர் குழப்பமே இல்லாமல், தெளிவாக படத்தை உருவாக்கி முடித்துள்ளார். சின்ன பட்ஜெட்டில் சிறந்த படைப்பை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தின் இண்டர்வல் நிச்சயமாக எல்லோரும் ஆச்சர்யப்படும் ஒன்றாக இருக்கும். ஒளிப்பதிவாளர் பிரபு அவர்களுடைய பணி படத்தின் கதையை விட்டு நகராமல் இருக்கும்.

இந்த படக்குழு இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்தை உடனே உருவாக்க வேண்டும். ஆனந்தி படத்தில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனந்தி உடைய கதாபாத்திரம் இந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் பேசப்படும்.

இந்த படம் கண்டிப்பாக கவனிக்கப்படும், படத்தில் உள்ள அனைவரும் பாராட்டப்படுவார்கள். அனைவருக்கும் நன்றி”

நடிகர் நாயகன் தயாரிப்பாளர் சாம் ஜோன்ஸ் பேசியதாவது…

“நான் அறிமுகமாகும் படம் ஆழமாக இருக்க வேண்டும் என நினைத்து கொண்டு இருந்தேன். இயக்குநர் எனக்கு இந்த கதை சொன்ன போது, அது எனக்கு மிகவும் பிடித்தது.

ஒளிப்பதிவாளர் பிரபு சார் இந்த படத்திற்கு முதுகெலும்பாக இருந்தார், அவர் இப்படத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். ஆனந்தி கதையை கேட்டவுடன் நடிக்க ஒத்துகொண்டார்.

கரு பழனியப்பன் சார் இந்த படத்திற்குள் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தின் கதைக்காக முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் MS பிரபு பேசியதாவது…

“இந்த கதையை விட இயக்குநர் கதையை சொன்ன விதம், என்னை ஈர்க்கும் வகையில் இருந்தது. இந்த படத்தை தயாரிக்க முன்வந்த சாம் ஜோன்ஸ்க்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இருவரும் இணைந்து பொறுமையுடன் ஒரு சிறப்பான படத்தை உருவாக்கியுள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எடிட்டர் சுதர்ஷன் பேசியதாவது…

“இந்த படத்தை உருவாக்கும் போது ஒரு தெளிவு இயக்குநரிடம் இருந்தது. அவர் முழு அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்”

இயக்குநர் தாமரை செல்வன் கூறியதாவது..

“இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. நடிகரும், தயாரிப்பாளருமான சாம் ஜோன்ஸும், நானும் இணைந்து சிறந்த படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், பல கட்டங்களுக்கு பிறகு, இந்த திரைப்படத்தின் கதையை உருவாக்கினோம். படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் தேடிய பயணமே, ஒரு புது அனுபவமாக இருந்தது.

படத்தின் கதாநாயகன் புதுமுகம் என்ற தயக்கம் எதுவும் இல்லாமல், ஆனந்தி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கரு பழனியப்பன் கதையை புரிந்து கொண்டு இந்த படத்திற்குள் வந்தார். படத்தில் பணிபுரிந்த அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் முழு பங்களிப்பை கொடுத்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளது. படம் பார்த்துவிட்டு உங்களது கருத்தை கூறுங்கள். “

நடிகர்கள்: சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, கரு பழனியப்பன், முனிஷ்காந்த்

இயக்குநர்: K.தாமரைசெல்வன்
தயாரிப்பாளர்: சாம் ஜோன்ஸ்
ஒளிப்பதிவு: எம்.எஸ். பிரபு
இசையமைப்பாளர்: திபு நினன் தாமஸ் எடிட்டர்: ஆர்.சுதர்ஷன்
வசனங்கள்: லக்ஷ்மி சரவணகுமார்
கலை இயக்குனர்: விஜய் தென்னரசு
நடன இயக்குனர்: தினேஷ், விஜயா ராணி
மக்கள் தொடர்பு : சதீஷ் AIM

I prefer to act as a villain rather than as a good person.; Karu Palaniappan’s speech at Nadhi event

நடிகரின் சொகுசு கார் பிரச்சினை : விஜய் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நடிகரின் சொகுசு கார் பிரச்சினை : விஜய் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2005-ல் நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக வணிக வரித்துறை உத்தரவிட்டது.

(ரூ. 65 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எஸ்5 காரை இறக்குமதி செய்தார் விஜய்.)

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீண்ட காலம் நிலுவையில் இருந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது

அப்போது வழக்கை தள்ளுபடி செய்ததுடன், நடிகா் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தாா்.

மேலும் சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்க வேண்டும் என கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருந்தார். இது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களிடையே பரபரப்பை உண்டாக்கியது.

மேலும் வரி செலுத்தாமல் வழக்குத் தொடா்ந்த விஜய்யை கண்டித்து இருந்தார்.

இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் விஜய் மேல்முறையீடு செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டதுடன் வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவையும் நிராகரித்தது.

இத்துடன் நுழைவு வரி செலுத்தவும் நடிகர் விஜய்க்கு அறிவுறுத்தியது. இதை அடுத்து ரூ.7.98 லட்சம் நுழைவு வரி விஜய் தரப்பில் செலுத்தப்பட்டது.

ஆனால், அவர் வரி செலுத்தாமல் இருந்த இடைப்பட்ட காலத்துக்கு சுமார் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது தமிழக வணிக வரித்துறை.

(இதனிடையே வரி மற்றும் அபராதத் தொகை இரண்டும் சேர்த்து செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டது வணிகவரித்துறை.)

இந்த அபராதத்தை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் நடிகர் விஜய்.

மார்ச் 14-ம் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபராதம் மாதம் 2% எனக் கணக்கிடப்படாமல் மொத்தமாக 40% எனக் கணக்கிடப்பட்டுள்ளது என தன்னுடைய வாதத்தில் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த வழக்கு தொடுத்ததற்காக அபராதம் விதித்து இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வணிக வரித்துறை தெரிவித்தது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று ஜூலை 15 சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் நடிகர் விஜய் செலுத்தி இருந்தால் அபராதம் விதிக்கக் கூடாது.

2019 ஜனவரிக்குப் பின் நுழைவு வரியை செலுத்தி இருக்காவிட்டால், 2005 காலத்திலிருந்து இல்லாமல் 2019 ஜனவரிக்குப் பிறகான காலத்துக்கு மட்டும் அபராதம் விதிக்கலாம் என வணிக வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Actor’s luxury car issue: court verdict in Vijay case

ஸ்டாலின் – ரஹ்மான் நடித்த செஸ் ஒலிம்பியாட் வீடியோ.. ரஜினி வெளியிட்டார்.; நெட்டிசன்கள் கண்டனம்

ஸ்டாலின் – ரஹ்மான் நடித்த செஸ் ஒலிம்பியாட் வீடியோ.. ரஜினி வெளியிட்டார்.; நெட்டிசன்கள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓடியாடி தெருக்களில் விளையாடும் போட்டிகளை விட வீட்டில் அமர்ந்தபடியே செஸ் விளையாட பலருக்கும் ஆர்வம் உண்டு.

அதுவும் கொரோனா லாக்டவுன் காலத்தில் செஸ் விளையாட்டை நிறைய பேர் கற்றுக் கொண்ட விளையாடினர்.

தற்போது செஸ் ஆர்வலர்களுக்கு ஒரு சிறப்பான செய்தி கிடைத்துள்ளது.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி விரைவில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியானது மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் சர்வதேச அளவில் 185 நாடுகளைச் சேர்ந்த 2100-க்கும் மேற்பட்ட செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதில் பிரபல நடன கலைஞர்களுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் நடித்திருந்தனர்.

இந்த பாடல் டீசரை நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு ட்விட்டரில் வெளியிட்டார்.

தனது ட்விட்டர் பதிவில்.. ”கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும்.

44-வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் அதுவும் நம் தமிழகத்தில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் பெருமை.

அதனை எதிர்வரும் 28-ம் தேதியன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.

போட்டி குறித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வீடியோ தயாரித்துள்ளனர். அதன் டீசரை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்த செஸ் பாடல் நாம் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வாக இருந்தாலும் நம் இந்தியாவிற்கே பெருமை சேர்த்த இரண்டு கலைஞர்களை இந்த வீடியோவில் காட்டாதது நெட்டிசன்களிடையே கடும் கண்டனத்தை உருவாக்கியுள்ளது..

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இளவயது சாதனையாளர் சிறுவன் பிரக்ஞானந்தா ஆகியோரையும் இந்த செஸ் போட்டி தொடர்பான வீடியோக்களில் நிச்சயம் நடிக்க வைத்திருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசாங்க செலவில் தங்களுக்கு மட்டும் விளம்பரம் தேடிக் கொள்கிறார்களோ ஆட்சியாளர்கள்? என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பி உள்ளனர்.

தற்போது வெளியாகி உள்ளது வெறும் 45 நொடி டீசர் மட்டுமே.. ஒருவேளை முழு பாடலில் அவர்கள் இடம் பெற்றாலும் ஆச்சரியம் இல்லை.

நெட்டிசன்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படுமா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Netizens criticized Chess Olympiad video starring Stalin – Rahman Posted by Rajini

‘ஃபாரஸ்ட் கெம்ப்’ ரீமேக் : அமீர்கான் – கரீனா படத்தையும் வாங்கினார் உதயநிதி

‘ஃபாரஸ்ட் கெம்ப்’ ரீமேக் : அமீர்கான் – கரீனா படத்தையும் வாங்கினார் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டின் நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

அதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் சிங் சத்தா’ படத்தை தமிழில் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி, சாதனை படைத்து வருகிறது.

அவரின் உலக அளவிலான ரசிகர்கள், அவரது கதாப்பாத்திரத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்களும் வெளியாகி, இணையத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி, ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இருக்கிறது.

மேலும் படக்குழுவினர், படத்தின் ஆத்மார்த்தமான உணர்வை தாங்கியிருக்கும் பாடல்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த இசையில் பங்களிப்பை வழங்கியிருக்கும் பாடலாசிரியர்கள், இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இன்று பொதுவெளியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

அமீர்கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கிரண் ராவ் மற்றும் வயாகம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ படத்தில், அமீர்கானுடன் கரீனா கபூர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ‘ஃபாரஸ்ட் கெம்ப்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும்.

இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

Udhayanidhi Stalin to present and distribute Laal Singh Chaddha in Tamil through his company Red Giant Movies

மீண்டும் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து ‘ரெய்டு’-க்கு ரெடியான விக்ரம் பிரபு

மீண்டும் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து ‘ரெய்டு’-க்கு ரெடியான விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அசுரன்’ பட நடிகர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ‘டாணாக்காரன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கந்தன் மாறனாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு.

இந்த படம் செப்டம்பர் 30ல் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் விக்ரம் பிரபுவின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இயக்குநர் முத்தையா திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

‘வெள்ளைக்கார துரை’ படத்துக்கு பிறகு விக்ரம் பிரபு – ஸ்ரீவித்யா இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு கதிரவன்… எடிட்டிங் மணிமாறன்.. தயாரிப்பு கனிஷ்க் & மணிகண்ணன்

இந்தப் படத்தின் பர்ஷ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து இன்று வெளியிட்டனர்.

ரெய்டு படம் 2022 செப்டம்பரில் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

Raid First Look

Vikram Prabhu is ready for ‘Raid’ again with Sridivya

More Articles
Follows