பாபா ரீ ரிலீஸ்.; எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது.; பத்திரமா இருங்க – லதா ரஜினி

பாபா ரீ ரிலீஸ்.; எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது.; பத்திரமா இருங்க – லதா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று டிசம்பர் 10ஆம் தேதி ரஜினியின் ‘பாபா’ படம் ரீ ரிலீஸ் ஆகிறது.

இந்த படம் 20 வருடங்களுக்கு முன்பு வந்தாலும் தற்போதும் அதை பரபரப்புடன் புதிய படம் போல காணப்படுகிறது.

நேற்று டிசம்பர் 9ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது.

இந்த சிறப்பு காட்சிக்கு ரஜினி மனைவி லதா, ஐஸ்வர்யா ரஜினி, நடிகர் லாரன்ஸ், நாய் சேகர் இயக்குனர் கிஷோர், கலைப்புலி தாணு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் லதா ரஜினி கூறியதாவது..

“ஒரு புதிய படம் போல பாபா ரி ரிலீஸ்க்கு கூட்டம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ரசிகர்கள் எங்களின் குடும்ப போன்றது. எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு திகட்டாது. அது போல தான் ரசிகர்களுக்கும் ரஜினி படத்தை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது.

தற்போது புயல் மழை உள்ளது. எனவே அனைவரும் பத்திரமாக வீட்டுக்குச் செல்லுங்கள்” என தெரிவித்தார் லதா ரஜினி

மதுரையில் பூஜையுடன் தொடங்கியுள்ள ‘ஜிகர்தண்டா 2’ படப்பிடிப்பு எப்போது..?

மதுரையில் பூஜையுடன் தொடங்கியுள்ள ‘ஜிகர்தண்டா 2’ படப்பிடிப்பு எப்போது..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ என்ற திரைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசானது.

இதில் சித்தார்த் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.வில்லனாக நடித்ததற்காக பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில், ‘ஜிகர்தண்டா 2′ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளார் என சில மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, மலையாள நடிகை நிமிஷா சஜயன் தமிழில் அறிமுகமாகும் கதாநாயகியாக நடிக்கிறார்.

தற்போது, ​​’ஜிகர்தண்டா 2’ படத்தின் பூஜை வரும் டிசம்பர் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைப்பெற உள்ளதாகவும் மேலும், இப்படத்தின் பெரும்பகுதியை மதுரையில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

‘Jigarthanda 2’ to start rolling december 11 in Madurai

வரலட்சுமியின் ‘சபரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்த படக்குழு

வரலட்சுமியின் ‘சபரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு இயக்குநர் அனில் குமார் இயக்கத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்து தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘சபரி’.

இப்படத்தில், கணேஷ் வெங்கட்ராமன், சஷாங், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கோபி சுந்தர் இசையமைக்கும், இப்படத்தை நானி ஸாமிடி ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.

Varalaxmi completes Sabari movie shoot

மறைந்த நடிகர் சேதுவின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படம் வைரல்

மறைந்த நடிகர் சேதுவின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படம் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் டாக்டராக இருந்து நடிகரான சேதுராமன் .

அவர் மேலும் மூன்று படங்களில் நாயகனாக நடித்தார், ஆனால் 2020 இல் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார், இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சேதுவின் மனைவி உமையாள், அவர் இறக்கும் போது தனது இரண்டாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருந்தார்.

தற்போது மறைந்த கணவரால் தொடங்கப்பட்ட தோல் மருத்துவ மனையை நடத்தி வருகிறார். உமையாள் தனது மகன் மற்றும் மகளின் சமீபத்திய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் . அவை வைரலாகி வருகின்றன.

தனுஷுடன் இணையும் ‘கேஜிஎஃப்’ நடிகர் ?

தனுஷுடன் இணையும் ‘கேஜிஎஃப்’ நடிகர் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேஜிஎஃப் 2 இல் மிரட்டல் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனுஷ் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் தனுஷ் மும்மொழி படத்திற்காக இணைந்தார் என்பது ஏற்கனவே தெரிந்ததே.

ஒரு சிறிய பாத்திரத்திற்காக தயாரிப்பு நிறுவனங்கள் சஞ்சய் தத்தை அணுகியதாகவும், நடிகர் ரூ 10 கோடி சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரிக்கப்படும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.

பாக்ஸ் ஆபிஸ் 7 கோடியை தாண்டிய விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’..!

பாக்ஸ் ஆபிஸ் 7 கோடியை தாண்டிய விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்ல அய்யாவு இயக்கி, விஷ்ணு விஷால் நடித்து வெளியாகியப் படம் ‘கட்டா குஸ்தி’.

இப்படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி, கருணாஸ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளனர். இந்த படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் ஆர்.டி. டீம் ஒர்க்ஸ் நிறுவனமும், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன.

‘கட்டா குஸ்தி’ திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகி அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் 7வது நாளின் முடிவில் உலகம் முழுவதும் ரூ.7 கோடியை எட்டியது.

மேலும், இரண்டாவது வார இறுதியில் ரூ 10 கோடியை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘Gatta Kusti’ Crossed 7 Crores at the Box Office

More Articles
Follows