தேர்தலில் ரஜினி வாய்ஸ் யாருக்கு.? லதா ரஜினி கட்சி தொடங்க வாய்ப்பு..? சுதாகர் அறிக்கை

rajinikanthநடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் கடந்த 2020 டிசம்பர் 3ல் அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

தான் தொடங்கவுள்ள புதிய கட்சிக்கு கட்சிக்கு அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்திருந்தார் ரஜினிகாந்த்.

ஆனால் அதே மாதம் டிசம்பர் 29ல் தன் உடல்நிலையை காரணம் காட்டி “அரசியலும் கிடையாது கட்சியும் கிடையாது” என ட்விட்டரில் நீண்ட விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

அதுபோல் அர்ஜுன மூர்த்தியும் ரஜினி பெயரில் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு நிர்வாகி சுதாகர் அறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில்…

“வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை.

இந்த சட்டமன்ற தேர்தலுக்கு 100% ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்.

அர்ஜூன மூர்த்தி தொடங்கும் கட்சிக்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக பரவும் தகவல் பொய்யானது.

இவ்வாறு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.

#Rajinikanth #TNElections2021 #LathaRajini

RMM press statement on Rajinikanths support in this election

Overall Rating : Not available

Latest Post