தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைக்கா தயாரிப்பில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா.
இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இதில் முதன்மை நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் நடித்து வருகின்றனர்.
இதில் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கேரக்டரில் நடிக்க அவருக்கு மனைவியாக நிரோஷா நடிக்க ரஜினியின் தங்கையாக ஜீவிதா நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
‘Lal Salaam’ movie shooting wrapped