கமலின் நாயகன் நஷ்டம்.. புரொடியூசருக்கு ரஜினி உதவி செய்யல.. தற்கொலை செஞ்சுக்க துப்பாக்கி கேட்டார்..; குமுறிய K.T. குஞ்சுமோன்

கமலின் நாயகன் நஷ்டம்.. புரொடியூசருக்கு ரஜினி உதவி செய்யல.. தற்கொலை செஞ்சுக்க துப்பாக்கி கேட்டார்..; குமுறிய K.T. குஞ்சுமோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் “கடல போட ஒரு பொண்ணு வேணும்”. ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில், காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று 27.02.2022 தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் ராபின் பேசியதாவது…

ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது எவ்வளவு கஷ்டம் என்பதை இந்தப்படத்தில் தான் தெரிந்து கொண்டேன். நிறைய பேர் படமெடுத்து ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். இங்கு மேடையில் இருக்கும் பெரியவர்கள் அந்த கஷ்டங்களை அறிந்தவர்கள், அவர்கள் இங்கு எங்களை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. எங்கள் குழு மிக கடினமாக உழைத்து இப்படத்தை எடுத்துள்ளோம், அடுத்த படத்தை இன்னும் பெரிதாக செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அடுத்த மாதம் இப்படத்தை திரையரங்கில் வெளியிடவுள்ளோம், இந்த படத்திற்கு உங்கள் ஆதரவை தந்து எங்களை வாழ்த்தி வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி.

அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது…

இங்கு என்னை நடிகர் என்று இங்கு மேடைக்கு அழைத்த போது, எனக்கு கூச்சமாக இருந்தது. நான் நடிகன் அல்ல. தமிழ் நாட்டில் தலை சிறந்த பேச்சாளர்களில் ஒருவனாக என்னை வளர்த்து கொண்டவன். நான் இரண்டு திரைப்படங்களில் தான் நடித்து இருக்கிறேன். இந்தப்படத்திலும் நடித்துள்ளேன். இந்தப்படத்தில் தம்பி அசாரின் நடிப்பும் பாட்டும் உற்சாகம் கொள்ள வைக்கிறது. காட்சிகளை பார்க்க பிரமிப்பாக குதூகலம் தருவதாக அமைந்துள்ளது. ஒரு படத்தை எடுத்து வெளியிட கோடிக்கணக்கில் தேவைப்படும் எனும் நிலையை ரசிகர்கள் மாற்றிக்காட்ட வேண்டும், தம்பி அசாரின் நடிப்பில் இப்படம் அதனை மாற்றிக்காட்டும். இந்தப்படம் காதலை நகைச்சுவையுடன் ரசிக்கும் படி சொல்லியிருக்கிறது. கடலை போட பொண்ணு வேணும் படம் பற்றி பேச எனக்கு தகுதி இல்லை, ஏனெனில் நான் கடலை போட்டதில்லை. காதலுக்கு கடலை போடுவதை தாண்டி நிறைய இருக்கிறது என நம்புபவன் நான். காதல் புனிதமானது, மகத்தானது அதை சமகாலத்தில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் தம்பி ஆனந்த ராஜன் சொல்லியுள்ளார். அனைவரையும் கவரும் படமாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது…

இப்படத்தின் பாடல்கள் பார்த்தேன் ரொம்பவும் அருமையாக இருந்தது. தம்பி அசார் அழகான நடிப்பில் ஈர்க்கிறார். தயாரிப்பாளர் இல்லாமல் சினிமா இல்லை தயாரிப்பாளரை ஏமாற்றாதீர்கள், அனைவரும் இணைந்து ஈகோ இல்லாமல் வேலை பார்த்தால் சினிமா ஒரு அருமையான தொழில், ஆனால் இங்கு அது நடப்பதில்லை. தயாரிப்பாளர் குஞ்சுமோன் வந்துள்ளார் இயக்குநர் ஷங்கரை உருவாக்கியவர், ஆனால் அவர் இப்போது படமெடுப்பது இல்லை , கோடிகளை கொட்டும் தயாரிப்பாளர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. தயாரிப்பாளருக்கு லாபம் வந்தால் மீண்டும் படம் தான் எடுப்பார்கள் ஆனால் ஹீரோவுக்கு கொடுக்கும் பணம் என்னவாகிறது?, திரும்ப வருவதே இல்லை. கடலை போட பொண்ணு வேணும் ஆனால் இந்த காலத்தில் பெண்ணிடம் கடலை போட்டுட்டு, கடலில் போட்டு விடுகிறீர்களே ? காதல் செய்து ஏமாற்றாதீர்கள். கடினமாக உழைத்து படமெடுத்துள்ளார்கள் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். வாழ்த்துக்கள்

நடிகை ரிஷா
இந்த படத்தில் ஒரு பாடல் நான் ஆடியிருக்கிறேன் தீனா மாஸ்டர் கோரியோகிராபி செய்துள்ளார். இயக்குநர் ஆனந்த்ராஜ் சார் தான் இந்த வாய்ப்பை தந்தார். உங்கள் எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும் நன்றி.

தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் பேசியதாவது…
திரைப்பட விழாக்களை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் விழாக்கள் நடப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் பாடல்கள் பார்த்தேன் அருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் நிறைய செலவு செய்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் நிறைய படங்கள் நான் விநியோகம் செய்திருக்கிறேன். கேரளாவில் பண்ணியிருக்கிறேன், ஒரு படம் எப்படி வியாபாரம் ஆகிறது என்பது தெரியும், மணிரத்னம் உடைய நாயகன் படத்தை முதலில் நான் விநியோகம் செய்ய மாட்டேன் என சொன்னேன், அவரது அண்ணன் ஜீவி நீங்கள் தான் பண்ண வேண்டும் என்றார். அதற்காக பண்ணினேன்.

நாயகன் படம் எனக்கு லாபம் இல்லை. கேரளாவில் ரிலீஸ் செய்தேன். கமல் நடிப்பு பிரமாதம். ஆனால் படம் கமர்ஷியலாக ஓடல..

இங்கு தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை, யாரும் உதவுவதில்லை, மணிரத்னம், ரஜினி யாரும் ஜீவிக்கு கடைசி நேரத்தில் உதவி செய்யவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டார். என்னிடம் கூட ஒருமுறை துப்பாக்கி கேட்டார். நான் கொடுக்கல.

இந்த நிலை தான் இங்கு இருக்கிறது, தயாரிப்பாளர் இல்லை என்றால் சினிமா இல்லை.

இயக்குநர்கள், நடிகர்கள் இல்லை, தமிழ் மக்கள் தான் என்னை வாழவைத்தார்கள். எனக்கு கமர்ஷியல் படங்கள் தான் பிடிக்கும் இந்த படத்தில் நல்ல கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறது இந்தப்படம் ஜெயிக்க வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது…
கடலை போட ஒரு பொண்ணு வேணும் டைட்டில் நன்றாக இருக்கிறது. இப்படியெல்லாம் டைட்டில் வைத்தால் தான் இளைஞர்கள் சினிமாவுக்கு வருகிறார்கள். நான் ராஜாதிராஜா, குலோத்துங்க சோழன் பட டைட்டில் வைத்த போது, எல்லோரும் திட்டினார்கள் ஆனால் அந்தப்படம் ஜெயித்தது. இப்போதெல்லாம் பெரிய படத்திற்கு தான் கூட்டம் வருகிறது. விஜய் பீஸ்ட்டுக்கு வெயிட் பண்ணுகிறார்கள். அனிரூத் சிவகார்த்திகேயன் கலக்குகிறார்கள். பெரிய படமெடுத்தால் தான் மக்கள் பார்க்க வருகிறார்கள். சின்ன படத்திற்கு வருவதில்லை. மத்திய அரசு மக்களிடம் வரி போட்டு எல்லாவற்றையும் பிடுங்கி விடுகிறது. மக்களிடம் பணமில்லை, மக்கள் சந்தோஷமாக இருந்தால் தானே படத்திற்கு வருவார்கள், விஜய்யை ஷீட்டிங்கிலிருந்து வரி ஏய்ப்பு விசாரணை என கூட்டி போனார்களே அதை யாராவது கேட்டார்களா? நான் மட்டும் தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். எல்லோரும் இணைந்து போராட வேண்டும், ஹீரோ ஹீரோயின் நன்றாக நடித்துள்ளார்கள், இந்த கடலை போட பொண்ணு வேண்டும் ஜெயிக்க வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் ஜிபின் பேசியதாவது..
இந்த படத்தில் ஷங்கர் மகாதேவன் ஒரு பாடல் பாடியிருக்கிறார், அதற்காக மும்பை போய் வந்தோம், தயாரிப்பாளர் செலவு பற்றி கவலை படாமல் நன்றாக வர வேண்டும் என்றார். சங்கர் மகாதேவன் பாடும்போதே இந்தப்பாடல் ஜெயிக்கும் என்றார். இந்தபடத்தில் யுக பாரதி மூன்று பாடல் எழுதியுள்ளார். நான் இரண்டு பாடல் எழுதியுள்ளேன், இந்தப்படத்திற்காக எல்லோரும் கடினமாக உழைத்துள்ளோம். இந்தப்படத்தை கொண்டு வந்ததற்கு ராபின் சாருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். டைட்டிலை தப்பாக நினைக்காதீர்கள், காதல் செய்ய பொண்ணு வேணும் என்பது தான் கதை. இந்தப்படம் உங்களுக்கு பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது…
கடலை போட ஒரு பொண்ணு வேணும் இந்தப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி, ஆனந்த்ராஜ் சாரின் அடுத்த படத்திலும் நடித்திருக்கிறேன், அவர் நிறைய படங்கள் எடுக்க வேண்டும், அதில் நான் நடிக்க வேண்டும் நன்றி

நடிகர் ராதாரவி பேசியதாவது…
இந்த படத்தின் நாயகன் அசார் டிவியிலிருந்து வந்தவர் உனக்கு உதாரணமாக பலரை சொல்லுவார்கள் அதை கேட்க கூடாது. உனக்கு என்று தனியாக பெயர் கிடைக்கும், இந்தப்படத்தின் ஒரிஜினல் டைட்டில் தெரியும், ஆனால் சொல்ல மாட்டேன், இந்தப்படம்
கண்டிப்பாக வெற்றிபெறும், நாஞ்சில் சம்பத் நான் நடிகன் இல்லை ஆனால் இரண்டு படம் இருக்கு என்றார், ஆனால் இங்கு நடிகனுக்கு படமே இல்லை, உங்களுக்கு படமிருக்கு என்று சந்தோசப்படுங்கள், சினிமாவில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும், அதற்காக தான் நான் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கிறேன். வசதி இலவசமாக வருவது சினிமாவில் தான். தயாரிப்பாளர்களால் தான் சினிமா வாழ்கிறது. இந்தப்படம் பாடல் எல்லாம் அற்புதமாக உள்ளது ஒளிப்பதிவாளர் மிரட்டியிருக்கிறார். நான் ஆறுபடம் எடுத்தேன், கடனாகி தான் விட்டேன். சினிமா வாழ வேண்டுமானால் இந்த மாதிரி சின்ன படங்கள் ஓட வேண்டும். நான் அடுத்ததாக 10 சின்ன படங்கள் எடுக்க போகிறேன். ஒரு நல்ல செய்தி தயாரிப்பாளர்களுக்கும் பெப்சிக்கும் அமைச்சர் முன்னால் ஒப்பந்தம் உருவாக போகிறது. அதனால் சினிமா கண்டிப்பாக வளரும், இந்தப்படம் டைட்டிலுக்கே ஓடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நாயகன் அசார் பேசியதாவது..,

இங்கு பேசுவது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. பிக்பாஸ் மாதிரி குடும்பத்தில் நிறைய சண்டை வரும், ஆனால் கடைசியில் வீடு ஒன்றாக இருக்கும், அதே மாதிரி தான் எங்கள் குடும்பமும், பெரிய படங்களில் நடிக்கும் யோகி பாபு அண்ணன் எங்கள் சின்ன படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் ஆனந்த் நடித்து காட்டுவதை தான் இதில் நான் செய்துள்ளேன், அவரது சொந்தக்கதையை படமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நிறைய நல்ல அனுபவம் இருக்கிறது., இந்தப்படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

இயக்குநர் ஆனந்த்ராஜ் பேசியதாவது…
ராபின்சன் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும், நான் மிக கஷ்டமான சூழ்நிலையில் இருந்த போது எனக்கு இந்த வாய்ப்பு தந்தார். அவருக்கு நான் டைட்டில் சொன்னவுடனேயே பிடித்துவிட்டது. இப்படம் முழுக்க முழுக்க ஜாலியான படமாக இருக்கும் ஒரு இரவில் நடக்கும் கதை ஒரு காமெடியான டிராவலாக இருக்கும். உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

KT Kunjumon controversy speech at recent event

ரியல் ஹீரோயின்.: அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை அகிலா

ரியல் ஹீரோயின்.: அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை அகிலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடுவதையே பலர் சாதனையாக கருதும் நிலையில், கலைத்துறையில் மட்டும் இன்றி ராணுவத்திலும் இணைந்து தமிழ் நடிகை ஒருவர் சாதித்திருக்கிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் திரைப்படமான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர் அகிலா நாராயணன்.

அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிப்போடு பிரபல பாடகியாகவும் வலம் வந்த அகிலா நாராயணன், கலைத்துறையோடு தனது சாதனை பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல், ராணுவத்தில் இணைய வேண்டும் என்று முடிவு செய்தார்.

மிக கடினமான பயிற்சிகளை கொண்ட அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது என்றாலும், தனது மகளின் விருப்பத்துக்கு அகிலாவின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க, கடுமையான பல மாத பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்ற அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கும் அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தின் பலவிதமான கடின பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து வீரமும், விவேகமும், பலமும் கொண்ட பெண்மணியாக தன்னை நிரூபித்துள்ளார்.

மேலும், இளைய சமூகத்தினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் சமூகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் அகிலா நாராயணன், தான் கற்றதை பிறருக்கும் கற்பிக்கும் வகையில், ‘நைட்டிங்கிள் ஸ்கூல் ஆஃப் மியூசிக்’ (Nightingale School of Music) என்ற இசைப் பள்ளியை ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறார்.

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கும் அகிலா நாராயணன், தான் வாழும் நாட்டுக்காக சேவை செய்வதற்காகவே இத்துறையில் இணைந்துள்ளார்.

அவரது இத்தகைய சேவை மனப்பான்மைக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருவதோடு, அவரது குடும்பத்தாரையும் வாழ்த்தி வருகிறார்கள்.

இதன் மூலம், நடிகை அகிலா நாராயணன் மட்டும் இன்றி அவருடைய குடும்பத்தை சார்ந்த , சுமதி நாராயணன், நாராயணன் நரசிங்கம், ஐஸ்வர்யா நாராயணன், சேகர் குழந்தைவடிவேலு, உமா சேகர், ஆதித்யா சேகர், அரவிந்த் சேகர் என அனைவரும் தங்களை ராணுவ குடும்பம் என்று பெருமையாக சொல்லிக்கொள்வதோடு, அமெரிக்க ராணுவத்திற்கு சேவை செய்வதை தங்களது கடமையாகவும் கருதுகிறார்கள்.

Tamil Actress Akila graduated US Army Combat Training

முதல்வரின் திட்டங்கள் மக்களை சென்றடைய சிவா – வசந்தபாலன் – சிங்காரவடிவேலன் – அம்ரீஷ் கூட்டணி

முதல்வரின் திட்டங்கள் மக்களை சென்றடைய சிவா – வசந்தபாலன் – சிங்காரவடிவேலன் – அம்ரீஷ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வரும் சிங்கார வடிவேலன் திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர்.

முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடம் எளிதில் சேரும் வகையில் சில குறும்படங்களை அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கிட்டத்தட்ட 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார்.

அந்த வகையில் மிகவும் முக்கியமான திட்டமான ‘மக்களை தேடி மருத்துவம்’ என்கிற திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு குறும்படமாக தயாரித்துள்ளனர் தயாரிப்பாளர் டி சிவா மற்றும் சிங்கார வடிவேலன் இருவரும்.

நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் என்பதால் அதை சிறப்பிக்கும் விதமாக இந்த குறும்படத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி உருவாகியுள்ள ‘தலைவன்’ என்கிற குறும்படத்தையும் வெளியிடும் விழா இன்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, இயக்குனர் இமயம் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி, விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரபு ராஜா தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும் நடிகருமான பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் படக்குழுவினருடன் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தலைவன் குறும்படத்தை அமைச்சர் சாமிநாதன் வெளியிட இயக்குனர் இமயம் பாரதிராஜா பெற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் குறும்படத்தை பூச்சி எஸ்.முருகன் வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் தேனாண்டாள் முரளி பெற்றுக்கொண்டார்

தலைவன் என்கிற பாடலை தயாரிப்பாளர் சிவாவே எழுதியுள்ளார் இந்த பாடலுக்கு அம்ரீஷ் இசையமைக்க, தினேஷ் மாஸ்டர் அற்புதமாக நடனம் வடிவமைத்துள்ளார்.

அதேபோல மக்களை தேடி மருத்துவம் குறும்படத்தை எளிதில் மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக அழகாக இயக்கியுள்ளார் இயக்குனர் வசந்தபாலன்.

கோபிநாத் இந்த குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த குறும்படத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் பலனை சொல்லும் ஒரு வேன் டிரைவர் கதாபாத்திரத்தில் நடிகர் சுப்பு பஞ்சு நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசும்போது,…

“இந்த மக்களை தேடி மருத்துவம் என்கிற மகத்தான திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சிறு துளியாக இருக்க விரும்பினேன். அதன் முயற்சியாகத்தான் நானும் சிங்கார வடிவேலனும் இந்த முயற்சியில் இறங்கினோம்.

தலைவன் குறும்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் தனது படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டு வந்து நடனக்காட்சியை வடிவமைத்துக் கொடுத்தார். அதுமட்டுமல்ல இன்று அவர் வேறொரு படப்பிடிப்பில் இருப்பதால் இதுவரை எந்த விழாவிற்கும் அழைத்துச் செல்லாத தனது மனைவியை முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அனுப்பி வைத்துள்ளார்.

இந்த பாடலை எழுதுவதற்காக நான் மிகப்பெரிய அளவில் மெனக்கெடவில்லை.. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சாதனைகளை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக தொகுத்தேன். இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையில் அழகான பாடலாக அது உருவாகிவிட்டது” என்று கூறினார்

வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் பேசும்போது,….

“முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எந்நேரமும் மக்கள் பணி மக்கள் பணி என்றே பாடுபட்டு வருகிறார். இந்த இரண்டு குறும்படங்களையும் இனி வரவிருக்கும் குறும்படங்களையும் இரட்டை குழல் துப்பாக்கியாக இருந்து அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் சிங்கார வடிவேலனும் உருவாக்கி இருப்பதில் மகிழ்ச்சி.

அதேபோல திரையுலகிற்கு தேவையான அருமையான அறிவிப்புகளை விரைவில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் அவர்கள் வெளியிட இருக்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்

இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது,…

“மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விழா நடைபெறுவது மகிழ்ச்சி தருகிறது. தமிழர்களையும் தமிழையும் காக்கும் முயற்சியில் மு.க ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார் அதேபோல சினிமாவிற்கு தேவையான நலத்திட்டங்களை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அடுத்தடுத்து அறிவிப்பார் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை..

தயாரிப்பாளர் சிவா எப்போதுமே பொதுநலன் கருதி பல் விஷயங்களில் ஈடுபடுபவர்.. அதனால் தான் இப்படி ஒரு முயற்சி எடுத்துள்ளார்.. அவருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரபாகர் ராஜா பேசும்போது…

, “மக்களை தேடி மருத்துவம் என்பது பார்ப்பதற்கு ஏதோ ஒரு சாதாரண திட்டம் போல தெரியலாம்.. ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில் முதியவர்கள் பலரால் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை நிலவியது.

அப்படிப்பட்டவர்களுக்கு அதுபோன்று சிரமம் கொடுக்காமல் மருத்துவமே அவர்களது வீடு தேடி வந்து சேவை செய்யும் அருமையான திட்டம் இது. இந்த திட்டத்தில் இதுவரை 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் பயன் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறினார்.

அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசும்போது,….

“தேர்தல் முடிந்ததும் அந்த சமயத்தில் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்ததால் அடுத்த இரண்டு மாதங்கள் முழுவதும் அதிலேயே கவனம் செலுத்தும்படி முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.. அந்த வகையில் நீண்ட நாட்கள் கழித்து இந்த நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக கலந்து கொள்கிறேன்..

மக்களை தேடி மருத்துவம் என்கிற இந்த திட்டத்தை சினிமா வாயிலாக மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி எடுத்த தயாரிப்பாளர் சிவா, சிங்கார வடிவேலன் ஆகியோரை பாராட்டுகிறேன்.. இதேபோன்று மாண்புமிகு கலைஞர் ஆட்சியில் வருமுன் காப்போம் என்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

ஆனால் இடையில் அந்த திட்டம் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் அந்த திட்டம் மு க ஸ்டாலின் அவர்கள் துவங்கப்பட்டுள்ளது..

இதுதவிர இன்னுயிர் 48 என்கிற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நாம் சாலையில் செல்லும்போது யாராவது விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்ப்போருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இது. பாதிக்கப்பட்டவருக்கு 48 மணி நேரம் இலவச சிகிச்சை வழங்கப்படும்.

கலைஞர் முதல்வராக இருந்தபோது இந்த திட்டத்தின் அவசியத்தை நானே நேரில் உணர்ந்துள்ளேன். கலைஞருடன் பிரச்சாரத்துக்காக காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து அடிபட்டு விட்டார். வேகமாக அவரை சென்று தூக்கி எனது காரிலேயே அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம்.

அன்று இந்த திட்டம் இருந்திருந்தால் எனக்கு 5000 ரூபாய் கிடைத்திருக்கும்” என்று இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கூறினார் அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன்.

அதுமட்டுமல்ல இந்த திட்டம் மக்களுக்கு எவ்வளவு பயனுள்ளது என்பதை அவர்கள் அனைவரும் அறியச்செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘மக்களை தேடி மருத்துவம்’ என்கிற குறும்படத்தை, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் பெற்று, திரையரங்குகள் அனைத்திலும் ஒளிபரப்ப விரைவில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நன்றியுரை ஆற்றினார் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.

இந்த விழாவை தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தொகுத்து வழங்கினார்.

Chief Minister MK Stalin birthday special Thalaivan song released

..த்தா உன்னால என்னடா செய்ய முடியும்.?; தனுஷின் ‘மாறன்’ ட்ரைலரை வெளியிட்ட ரசிகர்கள்

..த்தா உன்னால என்னடா செய்ய முடியும்.?; தனுஷின் ‘மாறன்’ ட்ரைலரை வெளியிட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தியாவின் பெருமைமிகு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாறன்” படத்தின் டிரெய்லரை, தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடைய ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் போன்றவை பெரும் பிரபலங்களாலும், தயாரிப்பாளர்களாலும் வெளியிடப்படும், ஆனால் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்பட டிரெய்லரை, டிவிட்டர் தளத்தின் புதிய வசதியை பயன் படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

டிவிட்டரின் இந்த புதிய வசதியான Twitter Unlock மூலம், நடிகர் தனுஷ் உடைய தீவிர ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து ஒன்றிணைந்து, இந்த டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்திய முதல் படமாக “மாறன்” திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

ரசிகர்கள் இந்த புதிய அனுபவத்தால் மிகப்பெரும் உற்சாகத்துடன் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். மாறன் டிரெய்லர் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் அதன் அதிகரப்பூர்வ YouTube பக்கத்திலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

மாறன் டிரெய்லர் இணையெங்கும் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

“மாறன்” திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் TG தியாகராஜன் வழங்குகிறார், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணைந்து ஷர்பு மற்றும் சுஹாஸ் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் பிரத்யேகமாக வெளியாகிறது.

Fans revealed Dhanush in Maaran trailer

இயக்குனர்கள் சங்கத் தேர்தல் : மீண்டும் தலைவரானார் ஆர்கே செல்வமணி..; பாக்யராஜ் தோல்வி.!

இயக்குனர்கள் சங்கத் தேர்தல் : மீண்டும் தலைவரானார் ஆர்கே செல்வமணி..; பாக்யராஜ் தோல்வி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் இன்று 27 பிப்ரவரி சென்னையில் நடந்தது.

இயக்குனர் சங்கத்தில் மொத்தம் 2,600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட வாக்களிக்கப்பட தகுதியுடைய உறுப்பினர்களாக 1,900 பேர் உள்ளனர்.

இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.

செந்தில்நாதன் தலைமையில் நடந்த இந்த தேர்தல் தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது.

காலையில் துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

இதனை அடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு இயக்குநர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியாகின.

இன்று நடந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் 100 உட்பட 1,525 ஓட்டுகள் பதிவாகின.

மொத்தம் பதிவான வாக்குகள் -1,525
செல்வமணி பெற்ற வாக்குகள் -955

பாக்யராஜ் பெற்ற ஓட்டுகள் – 566.

ஆக 389 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆர் கே செல்வமணி இயக்குனர் சங்கத் தலைவராகிறார்.

Tamil Cinema Directors Union Election Result RK Selvamani won

மோதிய இரு அணிகள் விவரம் இதோ… :

புதுவசந்தம் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி. இமயம் அணியின் தலைவர் பாக்யராஜ்.

புது வசந்தம் அணியில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைவர் பதவிக்கும், செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமார், பொருளாளர் பதவிக்கு பேரரசு ஆகியோர் போட்டியிட்டனர்.

புது வசந்தம் அணியில் இணைச் செயலாளர்கள் பதவிக்கு இயக்குநர்கள், சுந்தர் சி, ஏ.ஆர். முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு இயக்குநர்கள் மனோஜ்குமார், மனோபாலா, ரமேஷ்கண்ணா, வெங்கடேஷ், சரண், ரவிமரியா, திருமலை, நம்பிராஜன் நம்பி, ஆர்.கே. கண்ணன், முத்துவடுகு, ரமேஷ் பிரபாகரன், க்ளாரா ஆகியோர் போட்டியிட்டனர்.

இமயம் அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு ஆகியோர் போட்டியிட்டனர்.

இமயம் அணியில் இணைச் செயலாளர்கள் பதவிக்கு ஜெகதீசன், ஜெனிஃபர் ஜூலியட், கமலக்கண்ணன் என்கிற விருமாண்டி, ராஜா கார்த்திக், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், பாலசேகரன், கே.பி.ஜெகன், நாகேந்திரன், கே.பி.பி. நவீன், பாண்டியராஜன், பிரபாகர், சசி, சிபி, ஸ்டேன்லி, சாய் ரமணி வேல்முருகன் ஆகியோர் போட்டியிட்டனர்.

விஜய்சேதுபதி படத்தை குஜராத்தி மொழியில் ரீமேக் செய்யும் நயன்தாரா

விஜய்சேதுபதி படத்தை குஜராத்தி மொழியில் ரீமேக் செய்யும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rowdy Pictures தயாரிப்பாளர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் நிறுவனம் மூலம் தரமிக்க படங்களை வழங்கி பெரும் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் மேலும் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இப்போது இந்த தயாரிப்பு நிறுவனம், மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு மற்றும் ரித்திகா சிங் முக்கிய வேடங்களில் நடித்த, தமிழ் திரைப்படமான ஆண்டவன் கட்டளையின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ‘சுப் யாத்ரா’ மூலம் குஜராத்தி சினிமாவில் அதன் பயணத்தை துவங்கவுள்ளது.

இந்த ரீமேக் திரைப்படத்தில் குஜராத்தி சூப்பர் ஸ்டார் மல்ஹர் தாக்கர் மற்றும் மோனல் கஜ்ஜர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

இத்திரைப்படத்தை குஜராத்தி திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் மனிஷ் சைனி இயக்குகிறார். தயாரிப்பாளர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இப்படம் மூலம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி என்றும், மேலும் குஜராத்தி திரையுலகில் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Nayanthara to produce Andavan Kattalais Gujarati remake

More Articles
Follows