ஜீலை 14ஆம் தேதி ரிலீசுக்கு மல்லுக்கட்டும் 6 படங்கள்

ஜீலை 14ஆம் தேதி ரிலீசுக்கு மல்லுக்கட்டும் 6 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nearly 5 tamil films confirming their release on 14th July 2017கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு இருந்தன.

இதனால் நேற்று ஜீலை7 தியேட்டர்கள் திறக்கப்பட்டும் புதுப்படங்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், அடுத்த வாரம் ஜூலை 14ஆம் தேதியை குறிவைத்து ரிலீசுக்கு புதுப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

‘பண்டிகை’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ மற்றும் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ மற்றும் ரூபாய் ஆகிய படங்கள் ரிலீசை உறுதிப்படுத்தி விட்டன.

மேலும் ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘நிபுணன்’ ஆகிய படங்கள் தணிக்கையில் பிரச்சினையில் சிக்கி, மறுதணிக்கைக்கு சென்றுள்ளது.

எனவே அந்த படங்களும் ஜூலை 14 ரேசில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Nearly 5 tamil films confirming their release on 14th July 2017

லைக்கா நிறுவனத்துடன் இணையும் ராஜமௌலி.?

லைக்கா நிறுவனத்துடன் இணையும் ராஜமௌலி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SS Rajamouli Raju Mahalingamஇந்திய சினிமாவையே தன் இயக்கத்தால் மிரள வைத்தவர் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி.

இவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? நடிகர், நடிகைகள் யார்? தயாரிப்பாளர் யார்? என்ற கேள்வி நாடெங்கும் கேட்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் ராஜமௌலியை சந்தித்துள்ளார் லைக்கா நிறுவனத்தை சேர்ந்த ராஜீ மகாலிங்கம்.

இதுதொடர்பான புகைப்படத்தையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவர்கள் சந்திப்பின் முக்கியத்துவம் என்ன? என்ற விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

ஆனால் இவர்கள் இருவரும் விரைவில் ஒரு பிரம்மாண்ட படத்தில் இணையக்கூடும் என கிசுகிசுக்கப்படுகிறது.

Lyca Raju Mahalingam meet Baahubali director Rajamouli

கமல்-அஜித்-சூர்யா-சிம்பு பாணியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

கமல்-அஜித்-சூர்யா-சிம்பு பாணியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Rajesh follows Kamal Ajith Suriya and Simbuதன் அழகான நடிப்பால் தேசிய விருதை வெல்லும் அளவுக்கு பெர்மான்ஸ் கொடுப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அழுத்தமான உணர்வுபூர்வமான கேரக்டர் என்றால் கூப்பிடு ஐஸ்வர்யா ராஜேஷை என்கிற அளவுக்கு பெயர் பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்த இளம் வயதிலேயே கிழவி வேடம் போல இவர் வேஷம் போட்டுக் கொண்ட ஒரு படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இது எந்தப் படத்திற்கான கெட்டப் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்தியன் படத்தில் கமல், வரலாறு படத்தில் அஜித், வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா, AAA படத்தில் சிம்பு ஆகியோர் வயதான வேடத்தில் நடித்திருந்தனர்.

தற்போது அவர்களைப் போல் ஐஸ்வர்யாவும் வயதான மேக்-அப் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Rajesh follows Kamal Ajith Suriya and Simbu

அஜித் பட வாய்ப்பை தவறவிட்ட விஷ்ணு; இப்போ ஃபீல் பண்றாராம்

அஜித் பட வாய்ப்பை தவறவிட்ட விஷ்ணு; இப்போ ஃபீல் பண்றாராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

office fame vishnuசின்னத்திரை பிரபலங்கள் பெரிய திரையில் பிரகாசிப்பதும், பெரிய திரை பிரபலங்கள் சின்னத்திரையில் சிக்ஸர் அடிப்பதும் இன்றைய டிரெண்டாகி வருகிறது.

விஜய் டிவியின் பிரபலமான ஆபிஸ் தொடரில் நடித்தவர் விஷ்ணு.

இவர் நாயகனாக நடித்த இவன் யாரென்று தெரிகிறதா? என்ற படம் அண்மையில் வெளியானது.

இதுகுறித்த இவரின் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“வீரம் படத்தில் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனது துரதிர்ஷ்டத்தால் அந்த வாய்ப்பு நழுவிவிட்டது.” என்று கூறியுள்ளார்.

I missed out Ajith movie chance says Actor Vishnu

 

ரஜினி பிறந்த தினமே படமானது; சிவகார்த்திகேயனும் இணைகிறார்

ரஜினி பிறந்த தினமே படமானது; சிவகார்த்திகேயனும் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini birth date became movie title Sivakarthikeyan launching first lookசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் நடித்த படங்கள், அதன் தலைப்புகள், பாடல்கள் என பலவற்றை தொடர்புப்படுத்தி நிறைய படங்கள் வெளியாகியுள்ளன.

பல சூப்பர் ஹிட் படங்கள் ரீமேக்கும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இவர் பிறந்த தினத்தை அதாவது டிசம்பர் 12, 1950 படத்தலைப்பாக கொண்டு ஒரு படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை இன்று மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிடவிருக்கிறார்.

இப்படத்தின் கலைஞர்கள் குறித்த விவரங்கள் அதில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Rajini birth date became movie title Sivakarthikeyan launching first look

rajini b date sivakarthi

தலைவா தந்த தலைவலி; தெலுங்கு சினிமாவுக்கு செல்ல நினைத்த விஜய்

தலைவா தந்த தலைவலி; தெலுங்கு சினிமாவுக்கு செல்ல நினைத்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Vijay and Actor Vijayகடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதரவோடும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி அல்லாமல் மாநில அரசு தனியாக 30 சதவீத கேளிக்கை வரியை தமிழ் சினிமா மீது விதித்தது. இதனால் தமிழ்நாடு முழுக்க உள்ள திரையரங்குகள் ஜூலை 3ஆம் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டன.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், இன்றுமுதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டு விட்டன.

இதுகுறித்து பேச வனமகன் மற்றும் இவன் தந்திரன் படக்குழுவும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது இயக்குனர் விஜய் பேசியதாவது…

இரண்டாவது வாரம் 30 திரையரங்குகள் அதிகமாகி, வினியோகஸ்தர்கள் சந்தோஷப்பட்டு, வணிக வெற்றி பெறும் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் தான் இந்த ஸ்ட்ரைக் ஆரம்பித்தது.

நான், இயக்குனர் கண்ணன் எல்லாம் தயாரிப்பாளர் ஆனது ஒரு விபத்து. இதற்கிடையில் சிடியில் நிறைய பேர் பார்த்து விட்டு என்னிடம் பேசினார்கள். இதே மாதிரி ஒரு அனுபவம் தான் தலைவா படத்தின் போதும் எனக்கு ஏற்பட்டது.

எனக்கே கூட தெலுங்கு சினிமா அல்லது விளம்பரப் படம் எடுக்க போய் விடலாமா என்று தோன்றியது. இந்த சினிமாவை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. நீங்கள் தான் ஆதரவு தர வேண்டும்” என்றார் இயக்குனர் விஜய்.

More Articles
Follows