இனி நடிக்கக்கூடாது என நினைத்தேன்.. பிரியா ஆனந்த் முடிவு

priya anandகூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் தாயரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நாயகன் அசோக் செல்வன், நாயகி ப்ரியா ஆனந்த், இயக்குநர் ஞானவேல், எடிட்டர் லியோ ஜான் பால், ஒளிப்பதிவாளர் பிரமோத், கலை இயக்குநர் கதிர், சஞ்சய் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தின் நாயகி ப்ரியா ஆனந்த் பேசியது…

நான் இந்த படத்தின் கதையை கேட்கும் முன் எந்த படத்திலும் இனி நடிக்க கூடாது என்பது போல் என்னுடைய மனநிலை இருந்தது.

கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் கதையை கேட்டதும் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அவ்வளவு பாஸிடிவான கதை இது.

மிக சிறந்த படங்களை தயாரிக்கும் எஸ்.ஆர்.பிரபு அவர்களின் ட்ரீம் வாரியார் நிறுவனத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம்.

நிவாஸ் கே பிரசன்னா தான் படத்துக்கு இசை என்றதும் எனக்கு நல்ல காதல் பாடல் கிடைக்கும் என்று எதிர் பார்த்தேன். தற்போது நான் எதிர்பார்த்ததை விட மிக சிறந்த பாடல்கள் கிடைத்துள்ளது.

விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியது…

கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படம் இதுவரை யாரும் பேசாத மிடில் பெஞ்சர்ஸ் வர்கத்தை பற்றி பேசும் படமாகும். இந்த படத்தின் கதை கேட்டதும் நிச்சயம் இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம்.

பல பிரச்சனைகளை தாண்டி, தடைகளை தாண்டி கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படம் வருகிற ஜூலை 28 ஆம் வெளியாக உள்ளது. தற்போது தயாரிப்பாளர்கள் தான் படத்தை வெளியிட சண்டை போடுகிறார்கள்.

மக்கள் யாரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்க தயாராக இல்லை. “ மக்களுக்காக தான் சினிமா, சினிமாவுக்காக மக்கள் அல்ல “ என்றார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு..

கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்தை பற்றி நடிகர் அசோக் செல்வன்…

கூட்டத்தில் ஒருத்தன் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். நான் இந்த படத்தில் நடிக்க முக்கிய காரணம் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா தான்.

ஆம், என்னுடைய அக்காவின் திருமணத்தை முன்னிட்டு நான் நிவாஸ் கே பிரசன்னாவுக்கு பத்திரிக்கை வைக்க சென்றிருந்தேன்.

அப்போது அவரிடம் அவர் என்ன? என்ன ? படங்களுக்கு இசையமைத்துக்கொண்டு இருக்கிறார் என்று கேட்டேன் அப்போது இந்த படத்தை பற்றியும் இந்த படத்தின் கதையை பற்றியும் என்னிடம் கூறினார்.

கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் கதை சுருக்கத்தை கேட்டவுடன் எனக்கு பிடித்துவிட்டது.

என்னென்றால் நானும் இப்படத்தின் கதையில் வருவது போல் ” மிடில் பெஞ்சர்” தான். கூட்டத்தில் ஒருத்தன் கதைக்கு கதாநாயகன் முடிவாகவில்லை என்பதை தெரிந்து கொண்டு நான் இயக்குநர் ஞானவேல் அவர்களை சந்திக்க அவருடைய அலுவலகத்துக்கு சென்றேன்.

அவரை சந்தித்து நான் ” கூட்டத்தில் ஒருத்தன் ” கதையை படித்தேன் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நானும் ஒரு மிடில் பெஞ்சர் தான். என்னோடு ஒத்துபோகும் கதையில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றேன்.

இயக்குநர் ஞானவேல் நான் இந்த கதையில் நடிப்பதற்கு சம்மதித்த பிறகு இந்த கதைக்காக நான் வேற மாதிரி மாற வேண்டும் என்று கூறி என்னை முற்றிலும் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு மாற்றினார். கூட்டத்தில் ஒருத்தன் முதல் பார்வை போஸ்டரை பார்த்தும் என்னை தந்தை அதில் இருப்பது நான் தான் என்று கண்டுபிடிக்கவில்லை.

இப்போது நிலவி வரும் குழப்பமான சூழ்நிலையில் கூட்டத்தில் ஒருத்தன் மிகவும் பாசிடிவான திரைப்படமாக இருக்கும். எல்லோருக்குள்ளும் ஒரு நல்என்னத்தை விதைக்கும்.

ப்ரியா ஆனந்துக்கு இந்த படத்தில் முதல் பெஞ்ச் மாணவி வேடம் அந்த வேடத்துக்கு அவர் சரியாக பொருந்தியுள்ளார்.

அவர் எப்போதும் செட்டில் கலகலப்பாக இருப்பார். அவரோடு இனைந்து பணியாற்றியது நல்ல அனுபவம்” என்றார் அசோக் செல்வன்.

Priya Anand speech at Kootathil Oruthan

Overall Rating : Not available

Latest Post