சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு ஐகோர்ட் தடை

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு ஐகோர்ட் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan in Heroபி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ள படம் ஹீரோ.

சமுமூகத்தில் நடக்கும் அவலங்களை அடையாளம் கண்டு அதற்கு காரணமானவர்களை தோலுரிக்க முகமூடி அணிந்த ஒருவனாக வருகிறார் இந்த ஹீரோ.

இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது.

கிறிஸ்மஸ் விருந்தாக அடுத்த மாதம் டிசம்பர் 20 ஆம் தேதி இப்படம் வெளியிட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில்கடந்தாண்டுடி.ஆர்.எஸ். பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜ 10 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

அதற்குரிய வட்டியையும், அசல் பணத்தையும் அவர் திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதோடு, இந்த படத்தை கேஜேஆர் நிறுவனத்திற்கு கைமாற்றியுள்ளார்.

எனவே டிஆர்.எஸ். நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதாவது ஹீரோ உள்பட 24 ஏ.எம்.நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று டிஆர்.எஸ் பிலிம்ஸ் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வழக்கில் ஹீரோ படத்திற்கு இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் ஹீரோ படத்தை தயாரிக்கும் கேஜேஆர் நிறுவனம் நிச்சயம் படம் திட்டமிட்டப்படி வெளியாகும் என அறிவித்துள்ளது.

அறிவிப்புக்கு முன்பே ட்விட்டரில் விஸ்வாசம் கொண்டாட்டம்

அறிவிப்புக்கு முன்பே ட்விட்டரில் விஸ்வாசம் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajiths Viswasam tops Twitters influential moments in 2019 நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் இந்தாண்டு 2019 பொங்கல் சமயத்தில் வெளியான படம் விஸ்வாசம்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார்.

இந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

மேலும் ரஜினியின் பேட்ட படத்துடன் மோதியதால் இந்த படம் கவனம் பெற்றது.

இந்த நிலையில் ட்விட்டரில் விஸ்வாசம் ஒன்று சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியானது.

அதாவது 2019ம் ஆண்டு ட்விட்டரில் அதிக செல்வாக்குடன் முன்னணியில் இருந்த ட்ரெண்டுகள் வெளியாகியுள்ளது.

இதில் முதல் இடத்தை பிடித்துள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதான் இறுதியான ரிசல்ட்டா என்பதும் இன்னும் முடிவாகவில்லை. அதற்குள் இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Ajiths Viswasam tops Twitters influential moments in 2019

கமலுடன் வடிவேலு நடிப்பாரான்னே தெரியல அதுக்குள்ள ஆர்.கே. புகாரா.?

கமலுடன் வடிவேலு நடிப்பாரான்னே தெரியல அதுக்குள்ள ஆர்.கே. புகாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor RK complaint against Comedy actor Vadiveluஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல்.

இதனையடுத்து கமல் இயக்கவுள்ள ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை ‘தேவர் மகன்’ பட பார்ட் 2ஆக எடுக்கவிருக்கிறாராம்.

இதில் வடிவேலு நடிக்கவுள்ளதாக வந்த தகவல்களை பார்த்தோம். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் வடிவேலுவால் மற்றொரு படத்திற்கு ஒரு பிரச்சினை எழுந்துள்ளது.

நடிகர் ஆர்.கே. நாயகனாக நடித்து, தயாரிக்க இருந்த ‘நானும் நீயும் நடுவுல பேயும்‘ என்ற படத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களாம்.

இதற்காக வடிவேலுக்கு அட்வான்ஸ் ரூ. 1 கோடியை கொடுத்துள்ளனர்.

ஆனால், கதையில் சில மாற்றங்கள் தேவை என வடிவேலு சூட்டிங் வரமால் இழுத்தடியுள்ளார்.

இதனால், முன்பணம் கொடுத்த 1 கோடி ரூபாயைத் திரும்ப கேட்டுள்ளார் ஆர்.கே.

அதையும் வடிவேலு திரும்ப அளிக்கவில்லை என ஆர்.கே. புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில்.. ‘‘தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்கட்டும். அதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை.

ஆனால், எனக்குக் கொடுக்க வேண்டிய 1 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் வடிவேலு நடிப்பாரா? என்பது கூட இன்னும் முடிவாகவில்லை. அதற்குள் இந்த அலப்பறையா?

Actor RK complaint against Comedy actor Vadivelu

சங்கத்தமிழன் ரிலீஸ் இல்லை; டுடே ஆக்சன் மட்டும்தான்

சங்கத்தமிழன் ரிலீஸ் இல்லை; டுடே ஆக்சன் மட்டும்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sanga Thamizhan not releasing today Action movie releasedஇன்று நவம்பர் 15ல் விஷால் நடித்த ஆக்சன் மற்றும் விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி விஷாலின் ஆக்சன் படம் ரிலீசாகிவிட்டது. ஆனால் 2 நாட்களாக பேசப்பட்ட சங்கத்தமிழன் பிரச்சினை இன்னும் தீரவில்லை என்பதால் இந்த படம் இன்று வெளியாகவில்லை.

சங்கத்தமிழன் படத்தை விஜய்சந்தர் இயக்க விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தை லிப்ரா புரொடக்‌ஷனின் ரவீந்தர் சந்திரசேகர் வெளியீடுகிறார்.

இவரின் முந்தைய பட விநியோகம் பிரச்சினை காரணமாக சில ஏரியாக்களில் படத்தை வெளியிட மறுத்தனர்.

மேலும் அஜித்தின் வீரம் பட ரிலீசின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இன்னும் விநியோகஸ்தர்களுக்கு விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பணபாக்கி வைத்திருப்பதாலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு ஒருவேளை இன்று மாலை அல்லது நாளை அக். 16ல் சங்கத்தமிழன் ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகிறது.

Sanga Thamizhan not releasing today Action movie released

சினிமாவில் அறிமுகமாகும் லாஸ்லியா; ரசிகர்கள் குஷி

சினிமாவில் அறிமுகமாகும் லாஸ்லியா; ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss fame Losliya prepares for movie debut in Kollywoodகமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 பங்கேற்று படு பிரபலமானவர் லாஸ்லியா.

இவர் இலங்கையைச் சேர்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை வந்தாலும் 3வது நபராக வெற்றி பெற்றார்.

ஆனால் லாஸ்லியாவை பிடிக்காதவர்களே இல்லை என்னுமளவுக்கு அனைவரையும் கவர்ந்தார்.

இந்த நிலையில், இவருக்கு சினிமாவில் நடிக்க நிறைய சான்ஸ் வருவதா தகவல்கள் வந்துள்ளன.

இவர் சினிமாவில் நடிக்க போகும் தகவலை இவருடைய அக்கா தர்ஷி என்பவர் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையறிந்த லாஸ்லியா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Bigg Boss fame Losliya prepares for movie debut in Kollywood

அஜித்-விஜய் படம் நான் பண்ணல; சாவடிக்கிறாங்க.. – சுரேஷ் காமாட்சி குமுறல்

அஜித்-விஜய் படம் நான் பண்ணல; சாவடிக்கிறாங்க.. – சுரேஷ் காமாட்சி குமுறல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suresh Kamatchi slams theater owners in issue of Miga Miga Avasaramஸ்ரீபிரியங்கா நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘மிக மிக அவசரம்‘.

இதில் ஸ்ரீ பிரியங்காவுக்கு ஜோடியாக அரீஷ்குமார் நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் சீமான் நடித்திருந்தார்.

இப்படத்தை லிப்ரா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் இதன் ரீலீஸ் தள்ளிக் கொண்டே போனது.

தற்போது 150க்கும் அதிகமான தியேட்டர்களில் நவம்பர் 8-ம் தேதி ‘மிக மிக அவசரம்‘ வெளியானது.

இதனிடையில் தியேட்டர்கள் கிடைத்தாலும் காட்சிகள் அனைத்துமே காலையில்தான் போடப்படுகிறது. அதாவது 11:30 மணி, மதியம் 2:00 மணி காட்சிகளாகவே இருக்கின்றன.

இது தொடர்பாக ‘மிக மிக அவசரம்‘ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி கோபமாக தெரிவித்துள்ளதாவது…

“கொடுக்கிற மாதிரி கொடுப்பாங்களே அப்படித் தான் ஆகிப் போச்சு.

திரையரங்குகள் ‘மிக மிக அவசரம்’ படத்திற்குக் கிடைத்தது. காலை ஷோ, மதிய ஷோவா கொடுத்தா யார் சார் தியேட்டருக்கு வருவாங்க? நான் விஜய் சார், அஜித் சார் படமா பண்ணியிருக்கேன்? சின்ன படங்களை சாவடிக்கிறாங்க..” என தெரிவித்துள்ளார்.

Suresh Kamatchi slams theater owners in issue of Miga Miga Avasaram

More Articles
Follows