விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் ‘கேஜிஎஃப்-2’ நடிகர்.; இயக்குனர் இவரா?

விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் ‘கேஜிஎஃப்-2’ நடிகர்.; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பீஸ்ட்’ படத்தை முடித்துவிட்டு வம்சி இயக்கும் ‘தளபதி-66’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைத்து வருகிறார்.

இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தளபதி 67 படத்தை ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கமலின் விக்ரம் படத்தை முடித்துவிட்டு விஜய் படத்தை லோகேஷ் இயக்குவார் என தகவல்கள் வந்துள்ளன.

இந்தாண்டு 2022 இறுதியில் தளபதி 67 படத்தில் விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது.

இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அண்மையில் வெளியான ‘கேஜிஎஃப் 2’ படத்தில் நடித்து மிரட்டியிருந்தார் சஞ்சய் தத் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy 67 gets KGF 2 actor for villain role ?

ரஜினி படத்தில் மீண்டும் ‘எந்திரன்’ & ‘படையப்பா’ ஹீரோயின்ஸ்.?

ரஜினி படத்தில் மீண்டும் ‘எந்திரன்’ & ‘படையப்பா’ ஹீரோயின்ஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பீஸ்ட்’ படத்தை முடித்துவிட்டு ரஜினி நடிக்கவுள்ள அவரின் 169 படத்தை இயக்கவுள்ளார் நெல்சன்.

தற்காலிகமாக ‘தலைவர் 169’ என படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இதில் நாயகியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே ரஜினிக்கு ஜோடியாக எந்திரன் படத்தில் நடித்திருந்தார்.

ரஜினியின் மகளாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

இதன் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் தொடங்கவுள்ள படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினி நடிப்பில் 1999-ல் வெளியான படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார் ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திற்கு ஒவ்வொரு கேரக்டரையும் போஸ்டராக வெளியிட்டு இருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Padayappa and Enthiran stars are part of Thalaivar 169?

கமல் விஜயகாந்த் பிரசாந்த் விஜய் படங்களில் நடித்த சலீம் கவுஸ் மரணம்

கமல் விஜயகாந்த் பிரசாந்த் விஜய் படங்களில் நடித்த சலீம் கவுஸ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990களில் தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன்களில் ஒருவர் நடிகர் சலீம் கவுஸ்.

இவர் கமல் பிரபு நடித்த வெற்றிவிழா, விஜயகாந்த் நடித்த சின்னக் கவுண்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் சில வருடங்களுக்கு முன் வெளியான வேட்டைக்காரன் படத்திலும் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார்.

மகுடம், தர்மசீலன், திருடா திருடா, சாணக்கியா, ரெட் ஆகிய படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

மோகன் ஜோஷி ஹாசிர் ஹோ’, ‘திரிகல்’, ‘அகாத்’ உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இத்துடன் சின்னத்திரையிலும் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

ராமர், கிருஷ்ணர் மற்றும் திப்பு சுல்தான் வேடங்களில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர்.

தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

இந்த நிலையில், மும்பையில் வசித்து வரும் சலீம் கவுஸ் தனது 70வது வயதில், உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

Veteran actor Salim Ghouse passes away

கலையுலகில் நுழைகிறார் கிரிக்கெட் கடவுள் சச்சின் மகள்

கலையுலகில் நுழைகிறார் கிரிக்கெட் கடவுள் சச்சின் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர்.

இவரின் மனைவி பெயர் அஞ்சலி. இந்த தம்பதிகளுக்கு மகள் ஷாரா, மகன் அர்ஜுன் என குழந்தைகள் உள்ளனர்.

மூத்த மகள் ஷாரா லண்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டருக்குப் படித்து முடித்துள்ளார்.

ஷாராவுக்கு நடிகையாக வேண்டும் என்பதும் அவரது லட்சியத்தில் ஒன்றாம்.

தற்போது ஷாராவுக்கு 24 வயதாகிறது.

இந்த நிலையில் விரைவில் ஹிந்திப் படம் ஒன்றில் நாயகியாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. எனவே காத்திருப்போம்…

Is Sara Tendulkar all set to make her big Bollywood debut?

கீர்த்தி சுரேஷ் & செல்வராகவனை செலக்ட் செய்தது ஏன்.? ‘சாணிக் காயிதம்’ இயக்குனரின் தேடல் ஒரு பார்வை

கீர்த்தி சுரேஷ் & செல்வராகவனை செலக்ட் செய்தது ஏன்.? ‘சாணிக் காயிதம்’ இயக்குனரின் தேடல் ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாணிக் காயிதம்‘ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடிப்பது குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் கருத்து…

முதல் வெற்றிப் படமான ராக்கி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படத் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்போது தற்போது அவரது அடுத்த அருமையான படைப்பான “சாணிக் காயிதம்” திரைப்படம் பிரைம் வீடியோவில் மே 6 ஆம் தேதி ரிலீசாகிறது.

பழிக்குப் பழி கதைக்களம் கொண்ட இந்த ஆக்‌சன்-டிராமாவில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

பன்முகத் திறன் கொண்ட கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூறும்போது..

“நான் மகாநடி (தமிழில் நடிகையர் திலகம்) திரைப்படத்தில் அவரது நடிப்பைக் கண்டு வியந்தேன். அதனால் ‘சாணி காயிதம்’ எடுக்கும் போது இப்படத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பாரென அவரை என் மனதில் குறித்து வைத்திருந்தேன்.

இப்படத்தில் அவர் நடிக்கும் பாத்திரம் அவர் இதுவரை செய்திராத ஒரு புதுமையான பாத்திரம். அவர் கண்டிப்பாக இதற்கு சரியாகப் பொருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

அவரை புதுமையான தோற்றத்தில் ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதால் அவர் எனது முதல் தேர்வாக இருந்தார். இக்கதாபாத்திரத்தை அவர் ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.

கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாகும் செல்வராகவன் சாணிக் காயிதத்தில் உருக்கமான பதிவு

தனது கதாநாயகியின் பாத்திரத்திற்கு ஏற்ற நடிகரை முழு நம்பிக்கையோடு தேர்வு செய்த பின் அவரது சகோதரனாக நடிக்கச் சிறந்த நடிகரைத் தேடிய பயணித்ததைப் பற்றி கூறிய இயக்குனர்…

“செல்வா சார் திரைப்படத் துறையில் பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்ட இயக்குனர், அவர் இக்கதாபாத்திரத்தை ஏற்பது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.” என்றார்.

சாணிக் காயிதம் படத்தில் நடிக்க இயக்குனர் செல்வராகவனை அணுகி தனது விருப்பத்தை வெளிப்படுத்திய சூழல் குறித்து அருண் கூறுகையில்…

“சித்தார்த் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்) செல்வா சாரின் நெருங்கிய நண்பர் என்பதால் செல்வா சாரை அணுகுவது எளிதாக இருந்தது. அவரைச் சந்தித்து கதையைச் சொன்னேன், அவருக்கு கதை பிடிக்கவே விரும்பி ஏற்றார்” என்றார்.

நான் அவரை ஒரு இயக்குனராகப் பார்த்தேன், அவர் அட்வைஸ் தருவாரா ? அல்லது எங்கள் பார்வைகள் வேறுபாட்டின் காரணமாக படைப்பு வேறுபாடுகள் இருக்குமா ? என்றெல்லாம் யோசித்தேன்.

ஆனால் தன்னை வெறும் நடிகராகவும், என்னை இயக்குனராகவும் நினைத்து கொண்டு என்மீது முழுமையான நம்பிக்கை வைத்து எனது தேவையற்ற சந்தேகங்களை அவர் பொய்யாக்கினார்.” என்றார்.

இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் (சின்னி என்ற பெயரில்) வெளியாகவுள்ளது.

Saani Kaayitham director talks about movie cast and crew

‘விக்ருதி’ ரீமேக்..: விதார்த்தின் வித்தியாசமான நடிப்பில் ‘பயணிகள் கவனிக்கவும்’..; பிரபலங்கள் பாராட்டு

‘விக்ருதி’ ரீமேக்..: விதார்த்தின் வித்தியாசமான நடிப்பில் ‘பயணிகள் கவனிக்கவும்’..; பிரபலங்கள் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்‘. மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்த படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர்கள் விதார்த், கருணாகரன், சரித்திரன், நடிகைகள் லட்சுமி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ் பி சக்திவேல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தின் வெளியாகும் முதல் ஒரிஜினல் படைப்பு. இந்த திரைப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இதற்காக திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

இதில் நட்சத்திர நடிகர்களான சூரி, இயக்குநர்கள் அறிவழகன், சாம் ஆண்டன், ரவிக்குமார், கேபிள் சங்கர், கார்த்திக் யோகி, படத்தின் இயக்குநர் சக்திவேல், நடிகர்கள் விதார்த், கருணாகரன், மாசூம் சங்கர், நடிகை ரூபா மஞ்சரி, மணிகண்டன், வினியோகஸ்தர் சக்திவேல், தயாரிப்பாளர் எஸ் தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்படத்தை பார்வையிட்ட அனைவரும் சமூக வலைதளம் குறித்த சரியான பார்வையை இந்த திரைப்படம் இளைய தலைமுறையினருக்கு வழங்கியிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நடிகர் சூரி பேசுகையில்,…

‘ பயணிகள் கவனிக்கவும் படத்தை மக்கள் அனைவரும் கவனிக்க வேண்டும். மிகவும் அற்புதமான படம். நல்ல படத்தை பார்த்த சந்தோசம் மனதில் இருக்கிறது. மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் என்னுடைய நண்பர் சக்திவேல் இயக்கியிருக்கிறார். இன்றைய சூழலில் சமூக வலைதளங்களை எந்த அளவிற்கு பயன்படுத்தவேண்டும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.

ஒரு போட்டோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி… ஒரு வீடியோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி… அல்லது அதுகுறித்து கருத்துக்கள் தெரிவித்தாலும் சரி.. அதை எவ்வளவு கவனத்துடன் கையாள வேண்டும் என்பதையும், தவறாக பதிவிட்டால் எத்தனை பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதையும் எடுத்துக்காட்ட இந்த ஒரு படம் போதும்.

சமூக வலைதளங்களை நல்ல விதத்தில் பயன்படுத்தினால் ஒருவருடைய வாழ்க்கை எப்படி மேன்மை அடைகிறது என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

நான்கு பேருக்கு முன்னால் நன்றாக வாழவேண்டும் என்பதை விட நான்கு செல்போன்களுக்கு இடையே மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. இதை தெளிவாக சொல்லியிருக்கும் திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’.

பொதுவாக பல படங்களை ரீமேக் செய்கிறார்கள். ஆனால் எந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதோ…!

அந்தப் படத்தை ரீமேக் செய்வதுதான் சரி. அந்தவகையில் சமூகத்திற்கு நலன் பயக்கும் தரமான படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள். படத்தை தயாரித்த நண்பர் விஜய், இயக்கிய சக்திவேல் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்னுடைய பங்காளி, நண்பர் விதார்த் படம் முழுவதும் அற்புதமாக நடித்திருக்கிறார். பேசாமல், தன்னுடைய உடல் மொழியால் ரசிகர்களை அழ வைத்திருக்கிறார். சிரிக்க வைத்திருக்கிறார். அவர் ஒரு முழுமையான நடிகர் என்பதை மீண்டும் இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார். அவர் மேலும் பல உயரங்களைத் தொட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

இது போன்ற தரமான படங்களை ஊக்குவிக்கும் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தை பாராட்டுகிறேன். இது போன்ற நல்ல படங்களை வெளியிடுவதற்கு உங்களின் பேராதரவு தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

இதனிடையே ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தை பிரத்யேகமாக பார்வையிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் தங்களது நேர்மறையான விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றி, இந்தப் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஹா டிஜிட்டல் தளம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் பல்வேறு வகையிலான ஒரிஜினல் படைப்புகளையும் வழங்கவிருக்கிறது.

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தைத் தொடர்ந்து கே. எஸ். ரவிக்குமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கூகுள் குட்டப்பா’, ஜீ வி பிரகாஷ்குமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஐங்கரன்’ மற்றும் முன்னணி இயக்குநர்களின் கைவண்ணத்தில் தயாராகி வரும் புத்தம் புதிய வலைத்தளத் தொடர்களும் ஆஹா ஒரிஜினல்ஸில் வெளியாகவிருக்கிறது.

நெட்டிசன்களின் பொறுப்புணர்வு.; மலையாளத்தில் ‘விக்ருதி’ தமிழில் ‘பயணிகள் கவனிக்கவும்’ என்றானது
https://www.filmistreet.com/cinema-news/payanigal-gavanikkavum-departs-significantly-from-the-malayalam-original-vikruthi-says-director/

Celebrities praises Vidharth’s Payanigal Gavanikkavum

More Articles
Follows