‘கவண்’ படக்குழுவை மலைக்க வைத்த மடோனா

‘கவண்’ படக்குழுவை மலைக்க வைத்த மடோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madonnaகே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் கவண்.

இப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் டி.ஆர். ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்து வருகிறார்.

அபிநந்தன் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ ஆதி இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் கேவி ஆனந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

“என் இயக்கத்தில் நடிப்பவர்களை நான் எப்போதும் பாராட்டுவதில்லை என என் யூனிட் ஆட்களே சொல்வார்கள்.

ஆனால் மடோனாவின் நடிப்பை பார்த்து நான் உட்பட எல்லோரும் கைத்தட்டினோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினியை மிரட்டிய வில்லி சூர்யாவுடன் இணைந்தார்

ரஜினியை மிரட்டிய வில்லி சூர்யாவுடன் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ramya-krishnanவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு இதில் முக்கிய நடிகர்களின் கூட்டம் இணைந்து வருகிறது.

சூர்யாவுடன் கீர்த்திசுரேஷ், ரேவதியின் முன்னாள் கணவர் சுரேஷ் மேனன், செந்தில், சத்யன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் படையப்பா படத்தில் ரஜினியை மிரட்டிய நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனும் இணைய உள்ளராம்.

இன்னும் எத்தனை பிரபல நட்சத்திரங்கள் இணைய போகிறார்களோ? பார்க்கலாம்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் இணையும் ‘ஏவிஎம்-கமல்ஹாசன்’

நீண்ட நாட்களுக்கு பின்னர் இணையும் ‘ஏவிஎம்-கமல்ஹாசன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal avm productionsஇந்திய சினிமாவின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒரு நிகரற்ற இடத்தை தக்க வைத்துள்ள நிறுவனம் ஏவிஎம்.

அண்மைகாலமாக டிவி சீரியல்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

இதில் இவர்களின் ஆஸ்தான நாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார்.

மெய்யப்பன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மௌலி இயக்குகிறார்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிறுவனத்தை நிறுவியவர் ஏவி மெய்யப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்கிசான் சாகசங்களை செய்யும் தமிழ் நடிகர் அரசு

ஜாக்கிசான் சாகசங்களை செய்யும் தமிழ் நடிகர் அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thondiyaanஆக்ஷன் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

நாம் நினைக்க முடியாத அளவில் சகாசங்களை தன் படங்களில் செய்து காட்டியவர் இவர்.

தற்போது இவரைப் போல தமிழிலும் ஒரு நடிகர் அறிமுகமாகிறார். அவர் பெயர் அரசு.

தொண்டியான் என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.

யுகே. முரளி இசையமைத்துள்ள இப்படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பாடகரும் பாடலை பாடியுள்ளார். அவர் பெயர் நாராயணன் மோகன்.

இவர்களின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் ஜிப்ஸி ராஜ்குமார் நாராயணன் மோகனை அறிமுகப்படுத்திப் பேசினார். அவர் பேசும் போது…

நான் இயக்கியுள்ள ‘அய்யனார்வீதி’ படத்தில் யு.கே.முரளி இசையில் ஒருபாடல் பாடியிருக்கிறார்.
அவரது இசையார்வம் சாதாரணமானதல்ல. சாதனைகளுக்கு வயது ஒரு தடையில்லை என்று கலாம் சொன்னதற்கு உதாரணமாக இருந்து வருகிறார்” என்றார்.

‘தொண்டியான்’ படத்தின் இயக்குநரும், நாயகனுமான அரசு பேசும் போது…

“நான் ‘தொண்டியான்’படத்தில் வெற்றுடம்புடன் 350 டியூப் லைட்டுகளை உடைத்திருக்கிறேன். வெற்றுடம்புடன் சரவெடிகளை உடம்பில் வெடிக்க வைத்திருக்கிறேன்.

நெருப்பு உடம்பில் எரிவது போல் நடித்திருக்கிறேன். ஜாக்கிசானைப் போல் சாகசங்கள் செய்ய காத்திருக்கிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் யு.கே. முரளி பேசும்போது…

“நாராயணன் மோகன் நல்ல திறமைசாலி. இசையில் அவருக்கு பெரிய ஆர்வம், ஈடுபாடு உண்டு. எங்கள் படங்களில் மட்டுமல்ல இசையமைப்பாளர்கள் அம்பிரிஷ், ரெஹானா இசையிலும் பாடியிருக்கிறார். அவர் சிறந்த பாடகராக வர வாழ்த்துகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் ரெஹானா பேசும்போது…

“அண்மையில் நாராயணன் மோகன் நடத்திய கச்சேரியை நான் பார்த்து வியந்தேன். அதில் நானும் பாடினேன்.
அவரது மனைவி இறைவனின் வரம். சிறந்த பாடகராக வர வாழ்த்துகள்” என்றார்.

திருமதி நாராயணன் மோகன் பேசும்போது…

“எனக்கு ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் எல்லா பாடல்களும் பிடிக்கும். அவரது சகோதரி இங்கு வந்து இருப்பதை நாங்கள் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணர்கிறேன்.” என்றார்.

thondiyan movie press meet

பாடகர் நாராயணன் மோகன் பேசும்போது…

“நாங்கள் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கிறோம். 1980ல் போய் 35 ஆண்டுகளாக அங்கே வசிக்கிறோம்.

நான் அங்கே ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறேன். அதில் எனக்குக் கீழ் 250 பேர் வேலை பார்க்கிறார்கள். பகலில் அலுவலகப் பணி முடிந்து மாலை வீடு வருவேன்.

மாலை 7 மணி முதல் இரவு10 மணி வரை பாடிக் கொண்டே இருப்பேன். இசைப் பயிற்சி செய்துகொண்டே இருப்பேன். சிலநேரம் இரவு முழுதும் பாடி காலை சூரியனின் வெயில் முகத்தில் அடித்தால்தான் நிறுத்துவேன். அவ்வளவு ஆர்வம் எனக்கு.

‘தொண்டியான்’ படத்தில் நான் பாடிய அம்மா பாட்டு பிரபலமாகும் என்று நம்புகிறேன்” என்றார்.

‘தொண்டியான்’ படத்தின் தயாரிப்பாளர் திருமதி சக்தியம்மா பேசும் போது…

“கலைக்கு மொழி இல்லை. சாதி மத வேறுபாடுமில்லாமல் ‘தொண்டியான்’ படம் உருவாகியுள்ளது” என்றார்.

பர்ஸ்ட் லுக்குடன் ரிலீஸ் தேதியை கன்பார்ம் செய்த தனுஷ்

பர்ஸ்ட் லுக்குடன் ரிலீஸ் தேதியை கன்பார்ம் செய்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushகௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுடன் இணைந்து கௌதம் தன் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இதில் படத்தின் இசையமைப்பாளர் உள்ளிட்ட மற்ற டெக்னீஷியன்கள் பெயர்கள் இடம் பெறவில்லை.

ஆனால் இதில் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர்.

இப்படம் அடுத்த வருடம் 2017 காதலர் தின விருந்தாக வெளியாகிறது.

 

enpt

சரத்குமாரை நீக்கியதால் விஷால்-கருணாஸின் கார்கள் மீது தாக்குதல்?

சரத்குமாரை நீக்கியதால் விஷால்-கருணாஸின் கார்கள் மீது தாக்குதல்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nadigar sangam meetingநாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தலைமையில் இன்று நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இதுஒரு புறம் அங்கே நடந்து கொண்டிருக்கும் வேளையில் வடபழனியில் உள்ள விஷால் அலுவலும் மீது மர்மநபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் அங்கே வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கார் மீது தாக்குதல் நடத்தி கண்ணாடி அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதுபோல் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸின் கார் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

சரத்குமார், ராதாரவி ஆகியோரை சங்கத்தில் இருந்து நீக்கியதால் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் முன்னாள் நிறுவனர்களின் ஆதரவாளர்களால் பொதுக்கூட்டத்திலும் பெரும் கைகலப்பு ஏற்பட்டது.

More Articles
Follows