விஜய்சேதுபதி-நயன்தாரா மோதல்… காத்திருக்கும் ரசிகர்கள்

விஜய்சேதுபதி-நயன்தாரா மோதல்… காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi Nayantharaகே.வி. ஆனந்த் இயக்கத்தில் டி.ஆர், விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள படம் கவண்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படத்தை இம்மாத இறுதியில் மார்ச் 31ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்களாம்.

இதே நாளில்தான் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள டோரா படமும் வெளியாகிறது.

இதில் நயன்தாரா உடன் ஒரு கார் மற்றும் ஒரு நாய் ஆகிய இரண்டும் பிரதான கேரக்டர்களாக இருக்கும் என செய்திகள் வந்துள்ளன.

தாஸ் ராமசாமி இயக்கியுள்ள இப்படத்தை இயக்குனர் சற்குணம் தயாரித்திருக்கிறார்.

எனவே இந்த இரண்டு படங்களுக்கும் முறையான மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay Sethupathis Kavan and Nayantharas Dora movie clash on 31st March 2017

சிவகார்த்திகேயன்-சமந்தா இணையும் படத்தகவல்கள்

சிவகார்த்திகேயன்-சமந்தா இணையும் படத்தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan Samanthaமோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதனையடுத்து பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார்.

இமான் இசையமைக்கும் இதன் படப்பிடிப்பு மே மாதம் தென்காசியில் தொடங்கவுள்ளதாம்.

இதுவும் ரஜினி முருகன் படத்தை போன்று கிராமத்து பின்னணியில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தையும் ரெமோ மற்றும் வேலைக்காரன் படங்களை தயாரித்த ஆர்.டி. ராஜாவே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan Samantha project new updates

‘படையப்பா’ பன்ச் டயலாக்கை ஆல்டர் செய்த அஸ்வின் தாத்தா

‘படையப்பா’ பன்ச் டயலாக்கை ஆல்டர் செய்த அஸ்வின் தாத்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ashwin thatha STRஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இதில் சிம்பு உடன் தமன்னா, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் சிம்பு ஏற்றுள்ள கேரக்டரான அஸ்வின் தாத்தா என்ற கேரக்டரின் டீசர் வெளியானது.

2 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதில் சிம்பு ஆம்பள பசங்க எப்படி இருக்க வேண்டும் என பன்ச் டயலாக் பேசுவார்.

அதில்….

பசங்கன்னா பொறுப்பா இருக்கனும் பொறுக்கித்தனம் பண்ணக்கூடாது.

பொறுமையா இருக்கனும். பெர்மிசன் இல்லாம பொண்ண தொடக்கூடாது.

கட்டுபாடுடோட இருக்கனும். குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது.

மொத்தத்துல பசங்கன்னா பசங்களா இருக்கனும் என்று சிம்பு பன்ச் பேசியிருப்பார்.

இதுபோன்ற பன்ச் டயலாக் 1999ஆம் ஆண்டு ரஜினியின் படையப்பா படத்தில் இடம் பெற்று இருந்தது.

அதில் பொம்பளன்னா பொறுமையா இருக்கனும், அமைதியா இருக்கனும் பஜாரித்தனம் பண்ணக்கூடாது என்று ரஜினிகாந்த் பேசியிருப்பார்.

இதை ஆல்டர் செய்து அஸ்வின் தாத்தா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

In Ashwin Thatha teaser simbu alter the Padaiyappa punch dialogue

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் தந்தை காலமானார்

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் தந்தை காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Krishnaraj Rai Father of Aishwarya Rai Bachchan passed awayமுன்னாள் உலகி அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் மும்பையில் இன்று மாலை காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணராஜ் ராய் மும்பையில் உள்ள பிரபல லீலாவதி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இவர் ராணுவத்தில் பயாலஜிஸ்ட்டாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Krishnaraj Rai Father of Aishwarya Rai Bachchan passed away

மலையாள சினிமாவிலும் கால் பதிக்கும் தனுஷ்

மலையாள சினிமாவிலும் கால் பதிக்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tovino thomasதமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வெற்றி பவனி வருகிறார் தனுஷ்.

கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டிலும் படங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் ஹாலிவுட் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது மல்லுவுட் என்று அழைக்கப்படும் மலையாள சினிமாவிலும் நுழைகிறார்.

டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்க நேஹா ஐயர் என்பவர் நாயகியாக நடிக்க உள்ள படத்தை தயாரிக்கிறாராம் தனுஷ்.

இப்படத்தை டாமினிக் அருண் என்பவர் இயக்குகிறார்.

வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் இன்று முதல் தொடங்கியுள்ளது.

Dhanush to enter the Malayalam film industry

ரசிகர் தந்த அன்பு பரிசு; சூர்யாவுக்கு விஜய் நன்றி

ரசிகர் தந்த அன்பு பரிசு; சூர்யாவுக்கு விஜய் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and suriyaஓரிரு மாதங்களுக்கு முன், சிங்கம்3 படத்தின் விளம்பரத்திற்காக சூர்யா கேரளா சென்றிருந்தார்.

அப்போது சூர்யாவை ஒரு விஜய் ரசிகர் சந்தித்துள்ளார்.

மாற்றுத்திறனாளியான இவர், தான் வரைந்த ஓர் ஓவியத்தை விஜய்யிடம் கொடுக்குமாறு சூர்யாவிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் சூர்யாவின் 2D என்டர்டெயிண்மெண்ட் நிறுவன இயக்குனர் ராஜ்சேகரபாண்டியன் அவர்கள் விஜய்யை சந்தித்து அந்த ஓவியத்தை கொடுத்துள்ளார்.

அந்த பரிசைப் பெற்றுக் கொண்ட விஜய், சூர்யாவுக்கு தனது நன்றிகளை தெரிவித்தாராம்.

Vijay thanks Suriya for giving his fans art gift

More Articles
Follows