கவண் படத்தில் கலாய்த்த சேனல் இதுதானாம்

கவண் படத்தில் கலாய்த்த சேனல் இதுதானாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kavan stillsகே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டிஆர், மடோனா உள்ளிட்டோர் நடித்த படம் கவண்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, தற்போதும் சில அரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கான வெற்றி விழாவை கேக் வைத்து கொண்டாடினர்.

இப்படத்தில் முழுக்க முழுக்க டிவி சேனல்களை தாக்கியிருந்தனர்.

அது எந்த சேனல் என்ற தகவலை தற்போது தெரிவித்துள்ளனர்.

‘லண்டனில் உள்ள ஒரு தனியார் டி.வி. சேனல்தானாம் அது.

ரியாலிட்டி ஷோக்களில், பங்கேற்பவர்களை அழ வைத்து அதை வைத்து டிஆர்பி எகிற செய்வர்கள் அவர்கள் தான் என தெரிவித்துள்ளனர்.

ஒரு மில்லியன் சாதனை பட்டியலில் இணைந்தார் விஜய்

ஒரு மில்லியன் சாதனை பட்டியலில் இணைந்தார் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayதமிழகத்தில் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் நாம் அறிந்த ஒன்றுதான்.

இவர் ட்விட்டரில் அக்கௌண்ட் வைத்திருந்தாலும் அதிகமாக பதிவிட மாட்டார்.

இறுதியாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக தனது கருத்தை பதிவிட்டு இருந்தார்.

இதுவரை வெறும் 389 டுவிட்களே மட்டுமே செய்திருக்கிறார் விஜய்.

ஆனாலும் தற்போது 1 மில்லியன் நபர்கள் அவரை பாலோ செய்துள்ளனர்.

எனவே, விஜய்யும் தற்போது ஒரு மில்லியன் பாலோயர்களை பெற்ற சாதனை பட்டியலில் இணைந்துவிட்டார்.

சங்கமித்ரா படத்திற்காக கத்தி சண்டை பயிற்சியில் ஸ்ருதிஹாசன்

சங்கமித்ரா படத்திற்காக கத்தி சண்டை பயிற்சியில் ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

C90xWPWVoAAuSZ7சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் சங்கமித்ரா.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் நாயகர்களாக நடிக்கவுள்ளனர்.

இதில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் கேரக்டருக்காக முறைப்படி கத்தி சண்டை பயிற்சியை லண்டனில் மேற்கொண்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகன் என்பதை விட தமிழனே பெருமை… கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டார் சத்யராஜ்

நடிகன் என்பதை விட தமிழனே பெருமை… கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டார் சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Sathyaraj apologizes to kannada organizations in Baahubali 2 release issue at Karnatakaராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள படம் பாகுபலி 2.

இதன் முதல் பாகம் கடந்த ஆண்டே வெளியாகிவிட்டது.

ஆனால் தற்போது இரண்டாம் பாகத்தை வெளியிட கர்நாடகாவில் திரையிட கன்னட அமைப்புகள் அனுமதி மறுத்து வருகின்றன.

9 வருடங்களுக்கு முன் சத்யராஜ் பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரி வருகின்றன.

மேலும், சத்யராஜை எதிர்த்தும், பாகுபலி 2 பட வெளியீட்டை எதிர்த்தும், பாகுபலி 2 படம் உலகம் முழுவதும் வெளியாகும் நாளான ஏப்ரல் 28ம் தேதி பந்த் ஒன்றை நடத்த உள்ளார்கள் என அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இயக்குநர் ராஜமெளலி கூட தன் வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் இந்த விவகாரத்தில் தனது வருத்தத்தை ஒரு வீடியோவில் பதிவு செய்து செய்தியாக வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது…

வணக்கம், 9 வருடங்களுக்கு முன் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள். இதுதொடர்பாக தமிழ் திரையுலகம் சார்பில் நடந்த கண்டன போராட்டத்தின் போது நான் உட்பட பல திரையுலகினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

இதற்காக எனது உருவப்பொம்பை எரிக்கப்பட்டது, கன்னட திரையுலகினர் சிலரும் ஆவேசமாக பேசியிருந்தனர். அதில் நான் பேசிய கருத்து கன்னட மக்களை புண்படுத்துவதாக நான் அறிகிறேன். அதற்காக 9 வருடங்களுக்கு பிறகு கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இதற்காக என் மீது அக்கறை கொண்ட தமிழ் ஆர்வலர்களும், தமிழ் மக்களும், நலம்விரும்பிகளும் என் மீது வருத்தம் கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தில் ஒரு சிறிய தொழிலாளி தான் நான்.

என் ஒருவனுக்காக பல ஆயிரம் பேரின் உழைப்பு மற்றும் பணம் விரையமாக விரும்பவில்லை. அதுமட்டுமல்ல பாகுபலி-2வை கர்நாடகாவில் வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் நஷ்டமடைய வேண்டாம்.
தமிழர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

ஆனாலும் இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் பிரச்னையாக இருந்தாலும், விவசாயிகளின் பிரச்னையாக இருந்தாலும் சரி தமிழர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளுக்கு எனது குரல் ஓங்கி ஒலித்து கொண்டு தான் இருக்கும் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறேன்.

இப்படி நான் செய்வதால், என்னை வைத்து படம் தயாரித்தால் பிரச்னை வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள், இந்த சின்ன நடிகனான சத்யாரஜை யாரும் தங்களது படங்களில் நடிக்க வைக்க வேண்டாம்.

என்னை யாரும் அணுக வேண்டாம், என்னால் யாரும் நஷ்டப்பட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். ஏனென்றால் ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதை விட எந்தவித மூட நம்பிக்கையும் இல்லாமல் ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும் எனக்கு மகிழ்ச்சி.

ஆகவே எனது வருத்தத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு பாகுபலி-2 படத்தை வெளியிட கர்நாடக மக்கள் ஒத்துழைக்க வேண்டும்படி கேட்டு கொள்கிறேன். என் உணர்வுகளை புரிந்து கொண்டு எனக்கு உறுதுணையாக இருந்த தமிழக மக்கள், நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னால் ஏற்பட்ட தொல்லைகளை பொறுத்து கொண்ட இயக்குநர் ராஜமெளலி மற்றும் பாகுபலி தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு சத்யராஜ் அந்த வீடியோவில் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

Actor Sathyaraj apologizes to kannada organizations in Baahubali 2 release issue at Karnataka

வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராக கமல்ஹாசனுக்கு உத்தரவு

வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராக கமல்ஹாசனுக்கு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan stillsசினிமா துறை சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாது, தன் சமூகம் சார்ந்த கருத்துக்களையும் வெளிப்படையாக கூறி வருபவர் கமல்ஹாசன்.

அண்மையில் ஒரு பேட்டியில் மகாபாரதம் குறித்து தன் கருத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்த கருத்து சர்ச்சைக்குரியானது.

இது தொடர்பாக நெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், மகாபாரதத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் கமல் பேசினார்.

இந்துக்களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவு செய்தார்.

இது, என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் இதைப் புலனாய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது, இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் வருகிற மே 5ஆம் தேதி கமல்ஹாசன் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Valliyur Court order in the issue of Kamal speech insulting Hindu epic Mahabharat

தமிழ் முதல் இந்தி வரை… இயக்குநர் தனுஷுக்கு குவியும் வாய்ப்புகள்

தமிழ் முதல் இந்தி வரை… இயக்குநர் தனுஷுக்கு குவியும் வாய்ப்புகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director dhanushகோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்திய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் முதன்முறையாக இயக்கிய ப பாண்டி படம் அண்மையில் வெளியானது.

படம் ரசிகர்களிடையே அமோக ஆதரவைப் பெற்றுள்ளதால் தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், இவர் புதிதாக இயக்க வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

இதுவரை தமிழில் இரண்டு படங்களை இயக்கவும், இந்தியில் ஒரு படத்தை இயக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Dhanush getting chances to direct 2 Tamil and 1 Hindi movie

More Articles
Follows