இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் #கட்டில் திரைப்பட குழுவினரின் #பொங்கல் கொண்டாட்டம்

இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் #கட்டில் திரைப்பட குழுவினரின் #பொங்கல் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kattil stillsமேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் “கட்டில்” திரைப்படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்க, உடன் பல பிரபலங்கள் இப்படத்தில் நடிகர்களாக இணைந்துள்ளனர்.

படப்பிடிப்பின் போது “கட்டில்” திரைப்படத்தின் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை “கட்டில்” படத்தின் கதாநாயகியாக நடிக்கும் மும்பை பெண் சிருஷ்டிடாங்கே மற்றும் படக்குழுவினரோடு கொண்டாடியது தனிச்சிறப்பு என்றார் இ.வி.கணேஷ்பாபு.

இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் “கட்டில்” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என இ.வி.கணேஷ்பாபு கூறினார்.

தர்பார் படத்துடன் போட்டி போட விரும்பாத ‘வாழ்க விவசாயி’

தர்பார் படத்துடன் போட்டி போட விரும்பாத ‘வாழ்க விவசாயி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vazhga vivasayeeவிவசாயம் பற்றியும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றியும் விவசாயம் நலிவடைந்திருப்பதன் பின்னுள்ள வணிக அரசியல் பற்றியும் பேசும்படம் ‘வாழ்க விவசாயி’.

அப்புகுட்டி நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்துள்ளனர். ‘வழக்கு எண்’ முத்துராமன், ‘ஹலோ’ கந்தசாமி உள்ளிட்ட குணச்சித்திர நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.பி.எல், பொன்னி மோகன் இயக்கியுள்ளார். கதிர் பிலிம்ஸ் சார்பில் ‘பால்டிப்போ’ கே.கதிரேசன் தயாரித்துள்ளார்.

இப்படம் தயாராகி பொங்கலுக்கு வெளியிடுவதாக எதிர்பார்ப்புடன் இருந்த படக்குழுவினர். ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ பொங்கலுக்கு வருவதால் சற்று இடைவெளி விட்டுச் வெளியீட்டை த் தள்ளி வைத்துள்ளனர்.

படம் தாமதமானது குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசும்போது,

“எனக்கு இப்போதும் வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன .இப்போது எட்டு படங்களில் நடித்து வருகிறேன் . ,’வல்லவனுக்கு வல்லவன்’, ‘பூம் பூம் காளை’, ‘வைரி’, ‘ரூட்டு’.’மாயநதி’ ,’ குஸ்கா’ ‘இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு’ , ‘பரமகுரு’ , ‘கல்தா’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன .எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனக்கு எந்த வருத்தமும் இல்லை மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். நான் நடித்து ‘வாழ்க விவசாயி’, வெளிவரத் தயாராக இருக்கின்றன .இதில் ‘வாழ்க விவசாயி’ படம் எனக்கு ஸ்பெஷலான படம். ஒரு விவசாயியின் மகனான நான் இதில் விவசாயியாக வாழ்ந்திருக்கிறேன்.எனக்கு இப்படத்தின்மீது மதிப்பு உள்ளது. நான் நடித்த விவசாயி பாத்திரத்திற்காகப் பெருமைப்படுகிறேன். அந்தப் படம் என் எதிர்பார்ப்புக்குரிய படம் என்பேன்.அந்தப் படம் பொங்கலுக்கு வர வேண்டியது ,தாமதமானது சற்று வருத்தமான விஷயம்தான். வாழ்க விவசாயி படம் பொங்கலுக்கு வருவதற்கு சரியான காரணம் உண்டு என்பேன்.

தை மாதம் பொங்கல் காலம் என்பது விவசாயிகளின் அறுவடைக் காலம். விவசாயம் முடிந்து அறுவடை செய்யும் அந்தக் காலக்கட்டத்தில் விவசாயிகள் பற்றிய படம் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தில் பொங்கலுக்காகத் திட்டமிடப்பட்டது..ஆனால் ‘தர்பார்’ போன்ற பிரமாண்ட வணிக ரீதியான படங்களின் வெளியீட்டின்போது வெளியிட்டால் வெற்றி பாதிப்பது மட்டுமல்லாமல் இம்முயற்சி கவனம் பெறாமல் போய்விடும் என்பதால் சற்றுத் தள்ளி வைத்துள்ளனர். நம் படம் சரியான நேரத்தில் வர வேண்டும். இல்லையேல் சரியான விதத்தில் மக்களைச் சென்றடைய வேண்டும். எனவே சற்று தாமதமானாலும் சரியான விதத்தில் இன்னொரு நாள் வெளியாகி மக்களைச் சென்றடைந்தால் மகிழ்ச்சிதான்.விவசாயிகளின் வாழ்க்கை, ஒரு போராட்டமாக இருப்பது போல் இந்தப் படத்தின் வெளியீடும் ஒரு சவாலாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

சாகுபடி செய்யும் போது ஒரு விவசாயி புயல், காற்று , கனமழை, வெள்ளம் போன்ற அனைத்து இயற்கைச் சீற்றங்களையும் தடைகளையும் சந்தித்துத்தான் மகசூல் அறுவடை செய்கிறான். அதுபோல்தான் இந்தப் படமும் சவால்களையும் தடைகளையும் தாண்டி வெற்றி மகசூலை அறுவடை செய்யும் .l

இப்படத்திற்கான படப்பிடிப்பு ராஜபாளையம், தென்காசி, வத்திராயிருப்பு ,ஸ்ரீவில்லிபுத்தூர், அதன் அருகிலுள்ள சொக்கம்பட்டி, விருதுநகர் போன்ற ஊர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நடந்துள்ளது. விவசாயம் சாகுபடி செய்து அறுவடைக் காலம் வரை எடுக்க வேண்டி இருந்ததால் இந்த படத்தில் முற்றிய நெல் இடம் பெறுவது அவசியம் என்பதால் உரிய காலம் வரும்வரை நீண்ட நாள் காத்திருந்து எடுத்துள்ளனர்.

படம் பற்றி நடிகர் அப்புக்குட்டி கூறும்போது ” ஒரு நல்ல நோக்கத்தில் ஒரு நல்ல கருத்து சினிமா என்கிற ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்த விரும்பினேன். விவசாயம் பற்றி, விவசாயிகளின் வாழ்வியல் பற்றி நேர்மையாகவும் உண்மையான கரிசனத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவேண்டும் அல்லவா?

‘ தர்பார்’ போன்ற பெரிய படம் வரும் நேரத்தில் வெளியிட்டால் நம் நோக்கம் சிதைந்துவிடும் என்பதால் சற்றுத் தள்ளி வைத்திருக்கிறோம். விவசாயி என்றைக்கும் எளிமையானவன். யாருடனும் போட்டி போட விரும்பாதவன் .அதனால் ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ வரட்டும் அதற்காகவே பொங்கல் வெளியீடு என்பது மாறியுள்ளது. எனவே இந்த நேரத்தில் வெளியிட விரும்பவில்லை.விவசாயிகளின் அறுவடைக் காலத்தில் படம் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதில் நாயகன் அப்புகுட்டி மட்டுமல்ல படக்குழுவினரே வருத்தத்தில்தான் இருக்கிறோம். .

நாங்கள் இந்த விவசாயம் சார்ந்த கதையை தயாரிப்பாளரிடம் சொல்லிச் சம்மதம் பெற்ற காலம் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு எல்லாம் முந்தியது .ஆனால் அதற்குப் பிறகு விவசாயம் சார்ந்து நிறைய படங்கள் வந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தது. ஆனால் அதுபற்றி நான் பதற்றம் அடையவில்லை; வருத்தப்படவில்லை . ஏனென்றால் நான் எடுத்துக் கொண்டுள்ள கதையும் கருத்தும் அழுத்தமானவை .என்னுடைய படத்தின் மீதும் கதையின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சொல்லியுள்ள விதத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே இந்தப்படம் விவசாயம் சார்ந்த படங்களில் பத்தோடு பதினொன்றாக நிச்சயமாக இருக்காது .அதே சமயம் விவசாயம் சார்ந்த மற்ற படங்களை விரோதமாகவும் போட்டியாகவும் பார்க்கவில்லை . விவசாயம் பற்றிய எல்லா திரைப்படங்களையும் நான் மதிக்கிறேன். வரவேற்கிறேன். விவசாயம் என்று வரும் அத்தனை கதைகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.விவசாயம் ஒரு இழிவான தொழில் அல்ல.மதிப்பிற்குரிய தொழில்,அறம் சார்ந்த தொழில் இது என்பதைப் படத்தில் சொல்லியிருக்கிறோம். உலகத்தின் தொழில் சங்கிலித் தொடரில் அனைத்தும் விவசாயத்தை சுற்றித்தான் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதைப் பார்க்கின்ற பார்வையில் மதிப்பில்லை., வணிக உலகம் விவசாயத்தின் மீது காட்டுகிற பார்வையும் தவறாக உள்ளது. விவசாயம் செய்யும் மக்களின் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாகும்படி விவசாயியை இந்த உலகமும் தாழ்வாக நினைக்கிறது.வணிகச் சந்தையும் தாழ்த்தப்பட்டவர்களாகவே பார்க்கிறது.

விவசாயத்துக்கு எதிரான வணிக அரசியலை மறைமுகமாக சொல்லியிருக்கிறோம் .கருத்துப் பிரச்சாரம் செய்யாமல் அதைப் புரிய வைத்திருக்கிறோம். இந்தப் படத்தில் போராட்டம் இருக்காது . கிளர்ச்சி, புரட்சி எதுவும் இருக்காது .ஆனால் நெகிழ்ச்சிகள் இருக்கும் .” என்கிறார்.

படத்திற்கான ஒளிப்பதிவு கே.பி.ரதன் சந்தாவத், இசை -கே.ஜெய் கிருஷ் , எடிட்டிங் பா.ப்ரவீன் பாஸ்கர் .படத்தில் யுகபாரதியின் வரிகளின் விளைச்சலில் ஆறு பாடல்கள் உள்ளன .

குறிப்பாக, ’அம்மாடி அம்மாடி நெல் வாசம்.. அன்பை அள்ளித் தந்திருச்சு உன் பாசம் …
வெள்ளாம எல்லாமே தண்ணீரிலே …”என் எல்லாமே உன் கண்ணீரிலே…’
என்கிற இந்தப் பாடல் காதல் பாடல் போலவும் விவசாயம் சார்ந்து உணர்வுகளைத் தொடும் வகையிலும் இருக்குமாம். நம்பிக்கையுடன் கூறுகிறார்அப்புக்குட்டி..!

’வாழ்க விவசாயி’ விரைவில் திரைகளில்

சந்தானத்தின் டகால்டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சந்தானத்தின் டகால்டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhanam dagaalty18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்த்த பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள ” டகால்டி ”
தணிக்கையானது. இம்மாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது.

சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகக சார்ந்த முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகை சார்ந்த பிரம்மானந்தம், இந்திப் பட உலகை சார்ந்த தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி.

கார்கி பாடல்களையும், விஜயநாராயணன் இசையையும், தீபக்குமார் பாரதி ஒளிப்பதிவையும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பையும், ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சியையும், ஜாக்கி கலையையும், ஷோபி நடன பயிற்சியையும், சுவாமிநாதன் தயாரிப்பு மேற்பார்வையையும், ரமேஷ்குமார் இணைத்தயாரிப்பையும், கவனித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் விஜய் ஆனந்த்.

சந்தானத்துடன் யோகி பாபு இணைந்து நடிக்கும் முதல் படம்.

ஷங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கும் முதல் படம்.

பாடகர் விஜயநாராயணன் இசைமைக்கும் முதல் படம்.

எஸ்.பி.செளத்ரி தயாரிக்கும் முதல் படம் என பல முதல்களுடன் ” டகால்டி ” வருகிறது.

ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி ” படத்திற்காக தொடர்ந்துமூன்று நாட்கள் படப்பிடிப்பு

ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி ” படத்திற்காக தொடர்ந்துமூன்று நாட்கள் படப்பிடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jithan Rameshஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி ” படத்திற்காக

தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு

கோவாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு உருவாகி உள்ளது

ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி ”

Take Ok Creations என்ற பட நிறுவனம் சார்பில் பி.ராஜன் தயாரிக்கும் படம் ” மிரட்சி ”

ஜித்தன் படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்த நடிகர் ஜித்தன் ரமேஷ் இந்த படத்தின் மூலம் சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ரவி.V

எடிட்டர் – N.ஹரி

இசை – ஆனந்த்

பாடல்கள், வசனம் – N.ரமேஷ்

தயாரிப்பு – P.ராஜன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – M.V.கிருஷ்ணா

படம் பற்றி இயக்குனர் M.V.கிருஷ்ணா கூறியதாவது..

முழுக்க முழுக்க திரில்லர் கதையாக உருவாக்கி இருக்கிறோம். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கோவாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை உருவாக்கப் பட்டுள்ளது. ஜித்தன் ரமேஷ் இதுவரை நடித்திராத ஒரு நடிப்பை இந்த படத்தில் பார்க்கலாம்.

படத்தில் உள்ள ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் ஒருமணிநேரம் இடைவேளை விட்டு படப்பிடிப்பை நடத்தி இந்த படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடித்தோம். தொடர்ந்து 3 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியது மிகவும் சவாலானதாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டு எடுத்த அந்தக்காட்சிகளை திரையில் பார்க்கும் போது மிக பிரமிப்பாக இருக்கும்.

இந்த அதி தீவிர திரில்லர் கதையை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது.இந்த மிரட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்து மிரளவைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது, விரைவில் படம் வெளியாக உள்ளது என்கிறார் இயக்குனர் M.V.கிருஷ்ணா.

கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜீவா !

கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜீவா !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jiiva in 83கிரிக்கெட் இந்திய தேசத்தின் ஆத்மா. ஜாதி, மத பேதம் கடந்து, மொழி கடந்து, இந்தியர் அனைவரையும் உணர்வால் ஒன்றிணைப்பது கிரிக்கெட். கிரிக்கெட் இந்தியாவில் அனைவரும் போகிக்கும் தனி மதம். கிரிக்கெட் வீரர்கள் இங்கே கடவுள். கிரிக்கெட்டை விரும்பாத ஒரு ஜீவனைக்கூட நீங்கள் இந்தியாவில் காணமுடியாது. இங்கே கிரிக்கெட் வீரர்கள் இளைஞர்கள் பலரின் ஆதர்ஷம். கிரிக்கெட்டை இளைஞர்களிடம் சிறுவர்களிடம் கொண்டு போவதில் பல முன்னணி வீரர்கள் இந்தியாவின் அடையாளமாய் இருக்கிறார்கள். அப்படி தமிழகத்திற்கு ஒரு அடையாளமாய் இங்கே கிரிக்கெட்டை பரப்பிய ஆளுமைகளுல் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் மிக முக்கியமானவர். தனது தனித்த திறமையாலும், ஸ்டைலான ஆட்டத்தாலும் பலரையும் கவர்ந்தவர். 1983 உலககோப்பை வாங்கிய அணியில் பெரும் பங்கு வகித்தவர். இப்போது இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, உலககோப்பை வென்ற கதையை சொல்லும் “83” படத்தில் ஶ்ரீகாந்தாக அவதாரமெடுத்துள்ளார் நடிகர் ஜீவா.

நடிகர் ஜீவா பற்றி இயக்குநர் கபீர்கான் கூறியதாவது…

முதலில் இந்தப்படத்திற்காக கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தை பற்றி யோசித்தபோது அவரது துறுதுறுப்பும், சுறுசுறுப்பும் தான் மனதின் முன் வந்து நின்றது. அவர் தனி ஒரு பேட்டிங் ஸ்டைல் கொண்டிருந்தாலும், அவரது விளையாட்டையும் தாண்டி அவரது சுறுசுறுப்பான குணம் அவரை எல்லோரிடத்திலும் பிரபலமாக வைத்திருந்தது. 1983 உலககோப்பையை மையமாக வைத்து படத்தை உருவாக்க ஆரம்பித்த போது அணியில் பங்கு பெற்ற ஒவ்வொரு கிரிக்கெட் வீரரையும் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனமாக இருந்தோம். கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் கேரக்டரை செய்வதற்கு அவரைப்போலவே சுறுசுறுப்பும் திறமையும் நிறைந்த ஒருவரை தேடினோம். ஜீவாவின் சில படங்களை பார்த்தபோது இவர்தான் பொருத்தமானவர் என மொத்தக்குழுவும் சேர்ந்து முடிவு செய்தோம். அனைவரையும் கவர்ந்தவராக ஜீவா இருந்தார். மேலும் அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது படத்திற்கு இன்னும் பெரிய பலமாக இருந்தது. என்ன தான் அவர் கிரிக்கெட் வீரராக இருந்தாலும் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் அவர்களது பேட்டிங் ஸ்டைலை தன்னுள் கொண்டு வர, ஜீவா நிறைய பயிற்சி மேற்கொண்டார். படத்தில் அவரை ஜீவா தத்ரூபமாக பிரதிபலித்துள்ளார். படத்தை பார்க்கும் போது ரசிகர்களை கண்டிப்பாக ஆச்சர்யப்படுத்துவார் என்றார்.

தனது கதாப்பாத்திரம் குறித்து நடிகர் ஜீவா கூறியதாவது…

கிரிக்கெட் சிறுவயது முதலே எனக்கு மிகவும் விருப்பமான விளையாட்டு. 1983 படத்தில் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் கதாப்பாத்திரம் என்னை தேடி வந்த போது நான் மகிழ்ச்சியில் வாயடைத்து போனேன். வாழ்வில் இரண்டு லட்சியங்கள் ஒருசேர நிறைவேறாது என்பது என் வாழ்வில் பொய்துவிட்டது. நடிகனாக ஆன பிறகு எனக்கு மிகப்பிடித்த கிரிகெட் வீரரை திரையில் பிரதிபலிப்பதை விட பெரிய மகிழ்ச்சி வேறென்ன இருந்து விட முடியும். கிரிக்கெட்டை தமிழக வீதிகள் தோறும் அறிமுகப்படுத்திய கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் அவர்களின் பாத்திரத்தை ஏற்று நடிப்பது என் வாழ்வின் வரம். என்னை இந்தகதாப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் கபீர்கான் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் மிகப்பெரும் நன்றி . மேலும் இக்கதாப்பாத்திரத்திற்கு தயாரவதற்கு நிறைய அவகாசம் தந்து, என்னை சரியாக நடிக்க வைத்துள்ளார்கள். இந்தியாவின் மிகத் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங்குடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். ரசிகர்கள் இப்படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை பார்க்க மிகுந்த ஆவலாக இருக்கிறேன். 4 தசாப்தமாக கிரிக்கட்டை விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் பெருவிருந்தாக இருக்கும். 83 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலககோப்பையை வென்ற போட்டியை பார்த்தவர்களுக்கு இப்படம் பல மலரும் நினைவுகளை உண்டாக்கும். அந்த காலகட்டத்தில் அதனை பார்த்து ரசிக்காதவர்களுக்கு இப்படம் தத்ரூபமாக அவர்கள் கண்முன் அந்த தருணத்தை கொண்டு வரும்.
மொத்தத்தில் இப்படம் இந்திய முழுதுமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.

“83” திரைப்படம் ஒரே நேரத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் 2020 ஏப்ரல் 20 அன்று வெளியாகிறது.

விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது

விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathi fansமக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சாலிகிராமத்தில் சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது அதில் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் குழந்தையின்மை அக்குபஞ்சர் ஆகிய பரிசோதனைகளும் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து இன்று கண் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்ய இருக்கிறது அதன் முதல் கட்டமாக ஒருவருக்கு , இன்றைய தினமே கண் சிகிச்சை இலவசமாக அளிக்க இருக்கிறது .

More Articles
Follows