ஒரே நேரத்தில் 2 படங்களில் கமிட் ஆன நயன்தாரா

ஒரே நேரத்தில் 2 படங்களில் கமிட் ஆன நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை நயன்தாரா இரண்டு பிரபல இயக்குனர்களுடன் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மித்ரன் ஜவஹர் இயக்கும் புதிய படத்தில் நயன் நடிக்கவிருப்பதாகவும், இது ஹீரோயின் சார்ந்த கதையாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘யாரடி நீ மோகினி’ படத்திற்குப் பிறகு மித்ரன் ஜவஹருடன் அவர் இணைந்துள்ள இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மோகன்ராஜாவின் ‘தனி ஒருவன் 2’ படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Lady Superstar Nayanthara signs two new projects after a long time

பிரபுதேவாவின் ‘வுல்ஃப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…

பிரபுதேவாவின் ‘வுல்ஃப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினு வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா ‘வுல்ஃப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அஞ்சு குரியன், லட்சுமி ராய், எம்.எஸ்.பாஸ்கர், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீகோபிகா மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அம்பரீஷன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று பிப்ரவரி 3 அன்று ‘வுல்ஃப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும், ‘வுல்ஃப்’ படத்தை மார்ச் மாதம் திரையரங்களில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Prabhu Deva’s ‘Wolf’ First look poster released

சர்ப்ரைஸ் வீடியோவால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த தளபதி 67 டீம்

சர்ப்ரைஸ் வீடியோவால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த தளபதி 67 டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு சிறந்த தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இந்த வாரம் முழுவதும் ‘தளபதி 67’ படத்தின் அப்டேட்களை வழங்கியுள்ளனர் . லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு விளம்பர வீடியோவுடன் அறிவிக்கப்பட உள்ளது.

காஷ்மீரில் ஒரு புதிய ஷெட்யூல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படக்குழு பயணித்த விமானத்தின் வீடியோவை வெளியிட்டது . நடிகர்கள் மற்றும் குழுவினரின் காஷ்மீர் விமான பயணத்தின் சூப்பர் வீடியோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.

‘Thalapathy 67’ team stun the fans with a surprise video!

‘ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ்’ பட காப்பியா ‘தளபதி 67’.? பிப்ரவரி 3ல் டைட்டில் ரிலீஸ்

‘ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ்’ பட காப்பியா ‘தளபதி 67’.? பிப்ரவரி 3ல் டைட்டில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 67’.

இந்த படத்தின் டைட்டில் இன்று பிப்ரவரி மூன்றாம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடிகர் சிம்புவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி 67 படம் ஹாலிவுட்டில் வெளிவந்த ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் படத்தின் தழுவலா? என சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது.

மேலும் CODE RED கோட் ரெட் என்ற வார்த்தையை அழுத்தமாக பதிவு செய்யும் வகையில், கைதி, விக்ரம் படங்களை தொடர்ந்து தளபதி 67 படத்தின் போஸ்டரும் சிகப்பு வண்ணத்தால் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இப்படம் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவர்சில் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விக்ரம் படத்தில் பாஸ்வேர்டு CODE RED வார்த்தையை விஜய் சேதுபதியிடம் கமல் சொல்வார். இதே போன்று விக்ரம் படத்தின் புரமோஷன் போஸ்டர்களிலும் CODE RED என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டது என்பது தங்களுக்கு
நினைவிருக்கலாம்.

Is ‘Thalapathi 67’ copy of ‘History of Violence’ movie?

JUST IN ‘பரியேறும் பெருமாள்’ பட நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்

JUST IN ‘பரியேறும் பெருமாள்’ பட நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’.

இந்த படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.

இதில் கதிரின் தந்தையாக நடித்தவர் நெல்லை தங்கராஜ். நாட்டுப்புற கலைஞரான இவர் அருமையான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல் நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு ரசிகர்கள் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடியிருக்க சொந்த வீடு இல்லாமல் ஓலை குடிசையில் வசித்து வந்த அவருக்கு அந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

JUST IN ‘Pariyerum Perumal’ actor Nellai Thangaraj passed away

JUST IN கமல் விஜய் தனுஷ் ஆகியோருடன் நடித்த ‘தாதாசாகேப் பால்கே’ கே.விஸ்வநாத் மரணம்

JUST IN கமல் விஜய் தனுஷ் ஆகியோருடன் நடித்த ‘தாதாசாகேப் பால்கே’ கே.விஸ்வநாத் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கியவர் கே.விஸ்வநாத்.

இவர் 1975-ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். இதற்கு நந்தி விருது வழங்கப்பட்டது. பல வெற்றி படங்களை இயக்கினார்

இவர் தமிழில் குருதிப்புனல், முகவரி, ‘காக்கைச் சிறகினிலே, ‘பகவதி’ யாரடி நீ மோகினி’, அன்பே சிவம், சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் தனது நடிப்பின் மூலம் முத்திரையை பதித்துள்ளார்.

திரைப்படத் துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் எட்டு முறை நந்தி விருது, ஆறு முறை தேசிய விருது, ஒன்பது முறை ஃபிலிம் பேர் விருதை பெற்றுள்ளார்.

தமிழில் கடைசியாக , ‘சொல்லி விடவா’ என்கிற படத்திலும் நடித்திருந்தார். மேலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே வயது முதிர்வு மற்றும் நோயால் அவதிப்பட்டுவந்த இவர், நள்ளிரவு தனது 93 வயதில் ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

விஸ்வநாதன் மறைவுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது..

அதில்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.
606, அண்ணாசாலை
சென்னை-60006

இரங்கல் செய்தி

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என். இராமசாமி
(முரளி ராமநாராயணன் ) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்…

“திரைப்பட இயக்குனரும் தாதாசாகிப் பால்கே விருது பெற்றவரும் ஒன்பது முறை நந்தி விருது பெற்றவருமான திரு.கே.விஸ்வநாத் அவர்களின் இறப்பு தென்னிந்திய திரைப்பட உலகிற்கு பெரிய இழப்பாகும்.

கே. விஸ்வநாத் அவர்கள் ” சலங்கைஒலி, ” “சங்கராபரணம்” உட்பட தமிழ் தெலுங்கு மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்.

யாரடி நீ மோகினி, பாசவலை, குருதிப்புனல், ராஜபாட்டை, முகவரி உட்பட தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.

60 வருடங்களுக்கும் மேலாக திரை உலகில் கோலோச்சி வந்த கே.விஸ்வநாத் அவர்களின் மறைவு தெலுங்கு மற்றும் தமிழ் திரை உலகிற்கு பேரிழப்பாகும்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Veteran film maker K Viswanath dies at 92

More Articles
Follows