சென்னையில் ‘ஜப்பான்’ இசை விழா.; 24 படங்களின் கலைஞர்களை அழைத்த கார்த்தி

சென்னையில் ‘ஜப்பான்’ இசை விழா.; 24 படங்களின் கலைஞர்களை அழைத்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமீர் இயக்கிய ‘பருத்திவீரன்’ படத்தில் அறிமுகமானார் நடிகர் கார்த்தி. இவரது முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் முதல் படத்திலேயே அசத்தலான சிறந்த நடிப்பை கொடுத்திருந்தார் கார்த்தி.

அதன்பின்னர் பல படங்களில் பல வேடங்களை ஏற்று இன்று முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. தற்போது இவரது நடிப்பில் 25வது படமாக உருவாகி உள்ளது ‘ஜப்பான்’ படம்.

ராஜூமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. அனு இமானுவேல் நாயகியாக நடிக்க இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை அக்டோபர் 28ஆம் தேதி மாலை 6 மணி அளவில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமான தன்னுடைய முந்தைய 24 படங்களில் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை அழைத்து கௌரவிக்க இருக்கிறாராம் நடிகர் கார்த்தி.

ஜப்பான்

Karthi starrer Japan audio launch in grand level

ஸ்டாலின் – திருமாவளவன் வரிசையில் நடிகரான அரசியல்வாதி முத்தரசன்

ஸ்டாலின் – திருமாவளவன் வரிசையில் நடிகரான அரசியல்வாதி முத்தரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் எப்போதுமே அரசியலுக்கும் சினிமாவுக்கும் தொடர்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

சினிமாவில் ஜொலித்த பல நட்சத்திரங்கள் அரசியலில் நுழைந்து சாதனை செய்திருக்கின்றனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களும் அரசியல் களத்தில் ஜொலித்தனர். அதுபோல அரசியலில் பிரபலமான சிலர் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வந்துள்ளனர்.

தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நாயகனாக நடித்தவர் தான். அதுபோல விடுதலைச் சிறுத்தை கட்சி திருமாவளவன் சினிமாவில் நடித்துள்ளார்.

இந்த வரிசையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசனும் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

விஜயகுமார் என்பவர் இயக்கத்தில் உருவாகும் ‘அரிசி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Politician Mutharasan debut movie Arisi

OFFICIAL இந்தியர்களுக்கான திருநாளில் விக்ரமின் ‘தங்கலான்’ படம் ரிலீஸாகிறது

OFFICIAL இந்தியர்களுக்கான திருநாளில் விக்ரமின் ‘தங்கலான்’ படம் ரிலீஸாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கு ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார் பா ரஞ்சித்.

நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க முக்கிய வேடத்தில் பசுபதி நடித்திருக்கிறார்.

ஸ்டூடியோ கீரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படம் கேஜிஎஃப் பாணியில் கோலார் தங்கவயல் பற்றிய கதைக்களம் ஆகும்.

‘தங்கலான்’ பட டீசர் நவம்பர் 1ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளார் நடிகர் விக்ரம். அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 26 குடியரசு தினத்தில் படம் வெளியாகும் என அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Thangalaan release date 26th January 2024

கமல் படங்கள் அப்டேட் : பிறந்தநாளில் மணிரத்னம் தரும் ட்ரீட்.. வினோத் இயக்கும் படத்தலைப்பு

கமல் படங்கள் அப்டேட் : பிறந்தநாளில் மணிரத்னம் தரும் ட்ரீட்.. வினோத் இயக்கும் படத்தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்க உள்ள படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கமல்ஹாசனை 233 வது படத்தை எச் வினோத் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. தற்போது இதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில் இந்த படத்திற்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற தலைப்பு வைக்கப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன.

இந்த படம் விவசாயம் மற்றும் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் தனது படத்திற்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற தலைப்பு அறிவித்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்ட நிலையில் தற்போது கமல் -;வினோத் இணையும் படத்திற்கு ‘தலைவன் இருக்கிறான்’ என்ற தலைப்பு வைக்கப்பட உள்ளது.

இதன் பின்னர் கமல்ஹான் 234வது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். இப்பட புரோமோஷன் டீசர் வரும் நவம்பர் 7 தேதி கமல் பிறந்தநாளன்று வெளியாக உள்ளது.

இதற்கான சூட்டிங் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. ‘நாயகன்’ படம் வெளியாகி 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – மணிரத்னம் மீண்டும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal movies updates Maniratnam and Vinoth directorial

‘தளபதி 68’ படக்கதை இதானா.? விஜய்க்காக ஏஐ தொழில்நுட்ப பணியில் வெங்கட் பிரபு

‘தளபதி 68’ படக்கதை இதானா.? விஜய்க்காக ஏஐ தொழில்நுட்ப பணியில் வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் இசை அமைத்து வருகிறார்.

இதில் விஜய் உடன் பிரசாந்த், மோகன், ஜெயராம், பிரபுதேவா, சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்த படமும் ‘மாநாடு’ படத்தைப் போல டைம் ட்ராவல் கதை என தெரியவந்துள்ளது.

இந்த படத்தில் விஜய் இரண்டு விதமான தோற்றங்களில் தோன்ற உள்ளார்.

24 வயது மற்றும் 54 வயது ஆகிய ஙயதில் விஜய் நடிக்கிறாராம். இது ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட உள்ளது.

எனவே தான் அமெரிக்கா சென்று அங்கு ஸ்கேனிங் பணியில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் ஈடுபட்டனர் என்பது தெரிய வந்துள்ளது.

Venkat Prabu used AI technology for Thalapathy 68

OFFICIAL விக்ரம் – ரஞ்சித் இணைந்த ‘தங்கலான்’ பட ரிலீஸ் அப்டேட்

OFFICIAL விக்ரம் – ரஞ்சித் இணைந்த ‘தங்கலான்’ பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை தொடர்ந்து ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார் பா ரஞ்சித்.

சீயான் விக்ரம் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க முக்கிய வேடத்தில் பசுபதி நடித்திருக்கிறார்.

ஸ்டூடியோ கீரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படம் ‘கேஜிஎஃப்’ பாணியில் கோலார் தங்கவயல் பற்றிய கதைக்களம் ஆகும்.

‘தங்கலான்’ பட டீசர் நவம்பர் 1ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு ‘தங்கலான்’ பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்து ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை நடிகர் விக்ரம் வெளியிடுவார் எனவும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

‘தங்கலான்’ டீசர் குறித்து ஜிவி பிரகாஷ் சொல்லும்போது சம்பவம் உறுதி என தெரிவித்திருந்தார். அதுபோல ‘தங்கலான்’ படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு புதிய மைல் கல்லை எட்டும் என்றும் விக்ரம் நடிப்புக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் எனவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்திருந்தார்.

மேலும் திட்டமிட்ட பட்ஜெட்டை விட மிகப் பெரிய பட்ஜெட்டில் ‘தங்கலான்’ உருவாகி உள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Thangalaan release date will be unveiled by Vikram

More Articles
Follows