விநாயகர் சதுர்த்தியில் மோதும் MURUGAS கார்த்தி & சிவகார்த்திகேயன்

விநாயகர் சதுர்த்தியில் மோதும் MURUGAS கார்த்தி & சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆகஸ்ட் 31ல் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘விருமன்’ படம் வெளியாகவுள்ளது.

இந்த அறிவிப்பை படத்தயாரிப்பாளர் நடிகர் சூர்யா அறிவித்தார்.

விநாயகர் சதுர்த்திக்கு சூர்யா – கார்த்தி தரும் ‘விருமன்’ விருந்து

தற்போது இதே நாளில் சிவகார்த்திகேயன்-இன் 20வது படமும் வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகவுள்ள SK20 படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தை அனுதீப் இயக்க சத்யராஜ், உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா, பிரேம்ஜி, நவீன் பொலிசெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாத நிலையில் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Karthi and Sivakarthikeyan to clash in Ganesh Chaturthi

BEST ANIMAL ACTOR விருது வேண்டும்.; ‘777 சார்லி’-யை பார்த்து ஷாக்கான கார்த்திக் சுப்புராஜ் & எஸ்ஜே சூர்யா & சக்தி

BEST ANIMAL ACTOR விருது வேண்டும்.; ‘777 சார்லி’-யை பார்த்து ஷாக்கான கார்த்திக் சுப்புராஜ் & எஸ்ஜே சூர்யா & சக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் கிரண்ராஜ் K இயக்கத்தில், ரக்‌ஷித் ஷெட்டி நடித்துள்ள திரைப்படம் ‘777 சார்லி’

‘சார்லி’ என்ற நாய்க் குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமே 777 சார்லி.

அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வினில்

‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ என்ற பன்மொழி திரைப்படத்தில் கடைசியாக நடித்த ரக்ஷித், தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸின் சார்பில் 777 சார்லியை தயாரித்துள்ளதோடு தர்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

*சக்தி பிலிம்ஸ், சக்தி வேலன் கூறியதாவது*

கார்த்திக் சுப்ராஜ் இந்த படத்தை எனக்கு போட்டு காட்டி, இதை வெளியிட வேண்டும் என்றார். இந்த படத்தில் நடித்த நாய்க்கு சிறந்த விலங்கு நடிகருக்கான விருது வழங்க வேண்டும். இந்த படத்தில் ஹீரோவுக்கும், நாய்க்குமான உறவை எப்படி வெளிக்கொண்டு வந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பிரமிப்பாக இருக்கிறது.

குழந்தைகளுக்கும், செல்லபிராணி வளர்ப்பவர்களுக்கும் இந்த படம் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.

*ராஜ் பி ஷெட்டி கூறியதாவது…*

இந்த படத்தில் கால்நடை மருத்துவராக நடித்துள்ளேன். இந்த படத்தை சிறப்பாக எடுக்க முயற்சிக்கும் குழுவில் ஒரு ஆளாக இருக்க விரும்பினேன். நான் கூட இந்த படம் எடுக்க முன்வர மாட்டேன்.

இந்த படம் அத்தனை கடினமானது. நிச்சயமாக சிறந்த அனுபவமாக இருக்கும். இயக்குனர் கிரண்ராஜ், ரக்‌ஷித் ஷெட்டி அவர்களுக்கு நன்றி. படத்தை வெளியிடும் ஸ்டோன் பெஞ்ச்-நிறுவனத்திற்க்கு நன்றி.

*ஸ்டோன் பெஞ்ச் கார்த்திகேயன், கூறியதாவது…*

இந்த படத்தை எங்களுக்கு போட்டு காட்டிய போது பிரமித்து போனோம். நானும், கார்த்திக் சுப்புராஜும் படத்தை பார்த்துவிட்டு எப்படி இப்படி ஒரு படத்தை எடுத்தார்கள் என தெரியவில்லை பேசிக்கொண்டோம்.

திரைப்படங்கள் மீது பெரிய காதல் இருந்தால் தான் இப்படி எடுக்க முடியும். நாங்கள் இந்த படத்தை பார்த்தவுடன் வெளியிட விரும்பினோம். எங்களுக்கும் இந்த படம் பெரிய உத்வேகத்தை கொடுத்தது. ரக்‌ஷித் ஷெட்டி, இயக்குனர் கிரணுக்கு வாழ்த்துகள். ஒரு நாயை இப்படி நடிக்க வைத்தது பெரிய சவாலான விஷயம்.

சார்லி உடைய நடிப்பு அபாரமாக இருக்கிறது. டப்பிங்க் பணிகளை பார்த்துகொண்ட டப்பிங் குழு இதை ஒரு நேரடி தமிழ் படம் போல் உருவாக்கியுள்ளனர். எஸ் ஜே சூர்யா சாருக்கு நன்றி கூறிகொள்கிறேன். 777 சார்லி – க்கு வாழ்த்துகள் கூறிகொள்கிறேன்.

*நடிகை சங்கீதா கூறியதாவது…*

செல்லப்பிராணி நாய் உடன் பணிபுரியும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. இந்த படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்த படத்தில் பணியாற்றியதில் பெருமைபடுகிறேன்.

இயக்குனர், தயாரிப்பாளர், எடிட்டர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். நீங்கள் படம் பார்த்து ஆதரவு தர வேண்டும்.

*இயக்குனர் கிரண்ராஜ் கூறியதாவது..*

நான் செல்லபிராணி விரும்பி, அதனால் தான் இந்த கதையை தேர்ந்தெடுத்தேன். இந்த படத்தில் சவால்கள் நிறைய இருக்கும் என தெரியும். இருந்தாலும் பரவாயில்லை என்று தான் இந்த படத்தை துவங்கினோம்.

ரக்‌ஷித் ஷெட்டி கதையை கேட்டு, நாம் கண்டிப்பாக இந்த படத்தை செய்வோம் என கூறினார். பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் கதையை உருவாக்கு என ரக்‌ஷித் ஊக்கமளித்தார். நடிகர்கள் ரக்‌ஷித், ராஜ், சங்கீதா என பலரும் 3 வருடங்களை இந்த படத்துக்காக கொடுத்துள்ளனர்.

கன்னடம் போல் மற்ற மொழிகளிலும் திறமையான ஆட்களிடம் இந்த படத்தை கொடுக்க வேண்டும் என விரும்பினோம். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் படத்தை வெளியிட முன் வந்தார். அது எங்களுக்கு உத்வேகம் அளித்தது. டப்பிங் என்று வரும் போது, தமிழ் டப்பிங் குழு மிகதிறமையானவர்கள், தமிழ் டப்பிங் கலைஞர் சேகர், ஹீரோவை விட சிறப்பாக பேசியுள்ளார்.

இந்த கதையில் எனக்கு இருந்த தெளிவு, தயாரிப்பாளருக்கும் இருந்தது. இந்த படத்தை நீங்கள் தமிழில் பார்த்தால், இதை டப்பிங் படம் என்று கூறமாட்டீர்கள், நேரடி தமிழ் படம் என்று கூறுவீர்கள். இந்த படத்தில் நடித்த நாய்(சார்லி)யை தேர்ந்தெடுக்க நாங்கள் பல இடங்களில் தேடிகொண்டிருந்தோம். பின்னர் பல நாள் கழித்து இந்த நாயை கண்டுபிடித்தோம். நீங்கள் படம் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.

*இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது…*

கொரோனாவிற்கு பிறகு, இப்போது தான் சினிமா மீண்டு வருகிறது. எனக்கு எப்போதும் கன்னட துறையுடன் எனக்கு தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். ரக்‌ஷித் ஷெட்டி படங்களை முன்பே பார்த்துள்ளேன்.

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இப்படத்தின் ஒரு 15 நிமிட காட்சியை பார்த்தேன். கேங்ஸ்டர் படமென நினைத்த எனக்கு பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். இந்த படம் ஒரு பெரிய உணர்வை எனக்கு கொடுத்தது.

நான் இந்த படத்தை தமிழில் வெளியிட வேண்டும், அதில் நான் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்த படத்தின் வெற்றி மீது மிக உறுதியாய் இருக்கிறேன். இந்த படம் எனக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுத்த படம். இயக்குனர் கிரண்ராஜ்க்கு இது முதல் படம் என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது.

நாயை நடிக்க வைப்பது கஷ்டமான விஷயம். ‘இறைவி’ படத்தின் நாய் காட்சி எடுக்கமுடியாமல் தூக்கி விட்டோம். இப்படத்தை எப்படி எடுத்தார்கள் என தெரியவில்லை இந்த படத்தின் கதை நிச்சயமாக கூற பட வேண்டிய கதை.

இந்த படம் பார்த்த பின்னர் வாழ்கை மேல் ஒரு நம்பிக்கை வரும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை. படம் பார்த்துவிட்டு கூறுங்கள் நன்றி

*நடிகர் எஸ் ஜே சூர்யா கூறியதாவது…*

நான் நல்லவனாக வலம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். அவருக்கு நன்றி. இப்படத்தை விட படத்தில் பணியாற்றிய நாய், படக்குழு மற்றும் இயக்குனருடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

இயக்குனர் உடைய ஆர்வம் தான் இந்த படத்தை அவரை எடுக்க வைத்திருக்கிறது. படம் சிறிய பட்ஜெட் என நினைத்தேன், ஆனால் இந்தியாவின் பல இடங்களில் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளனர்.

இந்த நாய் (சார்லி) ஒரு பெரிய நடிகனாய் நடித்துள்ளான். படத்தின் காட்சிகளில் அது கொடுத்த உணர்வுகள் அபாரமாக உள்ளது.

777 சார்லி ஒரு சிறந்த கதையம்சம் கொண்ட படம். ஸ்டோன் பெஞ்ச் மூலமாக இந்த படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சி. அவர்கள் நல்ல படங்களை தவறவிடமாட்டார்கள்.

இந்த படம் தமிழுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். ரக்‌ஷித் சாருடைய அர்பணிப்பை நான் பாராட்டுகிறேன். தமிழக மக்கள் 777 சார்லி க்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி

*நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி கூறியதாவது…*

இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமான சிறப்பான படைப்பு . சார்லி 777 என் வாழ்கையில் பல விஷயங்களை மாற்றியது. 1 1/2 வருடத்திற்கு முன்னரே படம் முடிந்துவிட்டது.

நான் இந்த படத்தை தயாரித்துள்ளேன், அதனால் எனக்கு படம் ஓடிடிக்கு அனுப்பலாமா என்ற எண்ணம் எனக்கு இருந்தது. நான் படத்தை முழுமையாக பார்த்தபிறகு, என்ன நடந்தாலும் படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என முடிவு செய்தேன். படத்தை பார்த்த பிறகு கிடைக்கும் அனுபவம் விலைமதிப்பற்றது. எல்லா படங்களும் பான் இந்தியா படங்கள் இல்லை என எங்களுக்கு தெரியும்.

ஆனால் பான் இந்தியா படமாக மாற முழு அம்சமும் இந்த படத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் முதலில் இணைந்த நிறுவனம் ஸ்டோன் பெஞ்ச்.

ஸ்டோன் பெஞ்ச் எப்பொழுதும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும். அவர்களுடன் இணைந்தது மகிழ்ச்சி, ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தாருங்கள் நன்றி.

777 சார்லியை ரக்ஷித் ஷெட்டி மற்றும் ஜி எஸ் குப்தா இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தை தமிழில் இயக்குநர், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜும், தெலுங்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டக்குபதியும், மலையாளத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான பிருத்விராஜ் சுகுமாரனும் வழங்குகிறார்கள்.

மைசூர், பெங்களூரு, சிக்மங்களூர், கோவா, பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் 777 சார்லி படமாக்கப்பட்டுள்ளது.

ராஜ் பி ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை நோபின் பால் அமைத்துள்ளார். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவையும், படத்தொகுப்பை பிரதீக் ஷெட்டியும் கையாண்டுள்ளனர்.

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 777 சார்லி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Karthik Subburaj, SJ Surya and Shakti shocked to see ‘777 Charlie’

இந்திய சினிமாவின் ‘டான்’ ரஜினி.; ஒன் ஹவர் பேசினோம்.; சிலிர்க்கும் சிவகார்த்திகேயன் & சிபி

இந்திய சினிமாவின் ‘டான்’ ரஜினி.; ஒன் ஹவர் பேசினோம்.; சிலிர்க்கும் சிவகார்த்திகேயன் & சிபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யாவுக்கு அடுத்து வசூலை குவிக்கும் டானாக உயர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் கடைசியாக ரிலீசான டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன.

சில தினங்களுக்கு முன்… ‘டான் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்து பாராட்டியதாக ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் & இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து பேசி உள்ளார்.

இதுதொடர்பான ஒரு போட்டோவை பகிர்ந்து ட்விட்டரில் சிவகார்த்திகேயன் கூறியதாவது…

‛‛இந்திய சினிமாவின் ‛டான்’ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன்.

60 நிமிடங்கள், என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். உங்களின் பொன்னான நேரத்திற்கும், டான் படத்திற்கு நீங்கள் தெரிவித்த கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி தலைவா” என மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சிபியும் தன் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

அதில்…

ஒரு மகத்தான நாள்
Met Superstar @rajinikanth sir, blessed with a conversation for an hour about #DON,life & cinema.His presence was divine,his words were Wisdom & We were on cloud9 When he said
“What a film,What an emotion”
All we could say is “What a Man”
Love you Thalaiva https://t.co/FgnzkpXkPS

Rajini is a Don of Indian cinema says Sivakarthikeyan

ரஜினி விஜய் ரோல் மாடல்.; விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.. ‘தி லெஜண்ட்’ ஹீரோ பேட்டி

ரஜினி விஜய் ரோல் மாடல்.; விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.. ‘தி லெஜண்ட்’ ஹீரோ பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர்.

‘தி லெஜன்ட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

‘தி லெஜண்ட்’ படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. இளமை ததும்பும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ளார்.

இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் ’மொசலோ மொசலு’-வை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி மற்றும் சுகுமார் வெளியிட்டனர்.

பா விஜய் பாடல் வரிகளை இயற்ற, அர்மான் மாலிக் பாடியுள்ளார்.

ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள ‘மொசலோ மொசலு’ பாடலில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோருடன் தோன்றும் லெஜண்ட் சரவணனன், தனது நடன அசைவுகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இப்படத்தின் இரண்டாம் பாடலான பென்னி தயாள் மற்றும் ஜொனிதா காந்தி பாடி கவிஞர் சினேகன் எழுதிய ‘வாடி வாசல்’ சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் ‘தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வரும் நேற்று ஞாயிறு (மே 29) அன்று நடைபெற்றது.

இசை விழாவில் தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ராய் லட்சுமி, யாசிகா, ஊர்வசி ரவுட்டேலா உள்ளிட்ட 9 முன்னணி நாயகிகள் பங்கேற்றனர்.

விழா முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார் லெஜண்ட் சரவணன்.

அப்போது… “ரஜினிகாந்த் & விஜய் என் ரோல் மாடல். தன்னை விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்”

தி லெஜண்ட் படம் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் உருவாகி உள்ளதால், 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிடப்படவுள்ளது.

விழாவில் பங்கேற்ற நடிகை தமன்னா பேசியதாவது
.

“சினிமாவில் நடிப்பது லெஜண்ட் சரவணனுக்கு நீண்டகால விருப்பம். என்றார்.

நாசர் பேசும் போது.

“நடிகர்சங்க கட்டிடம் கட்டுவதற்கு 3 கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்தவர் சரவணன் என்றும் அந்த பணம் 1000 குடும்பங்களின் பசியை போக்குவதாகவும் பாராட்டினார்

ஹாலிவுட் படத்திற்கு இணையான கதை என்பதால் இசையமைக்க ஒப்பு கொண்டதாகவும் ஹாரிஸ் ஜெயராஜ் பேசினார்

Rajini and Vijay Role Model says Legend Saravanan

மரணமடைந்த ரசிகரின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சூர்யா.; ரசிகர்களுக்கு வேண்டுகோள்

மரணமடைந்த ரசிகரின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சூர்யா.; ரசிகர்களுக்கு வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா.

இவருக்கு சினிமாவை தாண்டியும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சூர்யாவின் கல்விச் சேவை மனப்பான்மை.

சூர்யாவை தொடர்ந்து அவரது ரசிகர்களும் சமூக அக்கறையோடு பல்வேறு மக்கள் நலப் பணிகளை அவ்வப்போது செய்து வருவகின்றனர்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற செயலாளரான ஜெகதீஷ் என்பவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலறிந்த நடிகர் சூர்யா சென்னையில் இருந்து கார் மூலம் நாமக்கல் சென்றுள்ளார்.

இதன்பின்னர் நாமக்கலில் உள்ள ஜெகதீஷின் இல்லத்திற்கு நேரில் சென்றார்.

ஜெகதீஷின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த சூர்யா, பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ஜெகதீசனின் மனைவி ராதிகாவிடம்..

குழந்தைகளுக்கான படிப்புச் செலவை ஏற்பதாகவும், குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். எந்த உதவியாக இருந்தாலும் தன்னிடம் தயங்காமல் கேட்கும்படி சொன்னாராம்.

மேலும் வாகனங்களில் செல்லு போது பாதுகாப்பாக செல்லுமாறு தனது ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Surya to bear the study expenses of the children of the deceased fan;

கலைஞர் பெயரில் விருது & 10 லட்சம் பொன்முடிப்பு.; ஸ்டாலினுக்கு நாசர் – விஷால் நன்றி

கலைஞர் பெயரில் விருது & 10 லட்சம் பொன்முடிப்பு.; ஸ்டாலினுக்கு நாசர் – விஷால் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெறுநர் :
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தலைமை செயலகம்,
சென்னை.

பேரன்பிற்கும், மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,

தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்………..

பாடிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா பேசவாரம்பிப்பதற்கு அதிமுக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒலிக்க, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல, அதன்மூலம் மக்களிடையே ஒரு பேரெழிச்சியை கொண்டு வரக்காரணமாய் இருந்த வித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது” மற்றும் பத்து இலட்சத்துக்கான பொன்முடிப்பும் வழங்கப்படுமென்பதை அறிவித்த தங்களுக்கு நன்றிகள் பல கோடி…………

கலைஞர்களுக்கு பொருள் அல்ல ப்ரதானம். சமூகத்தில் அங்கீகாரமும் பாராட்டும் தான். “கலைமாமணி” என்ற விருதமைத்த கலைஞரின் பெயரால் இருக்கும் இவ்விருது பெற்றிடும் பெரும் கலைஞர்கள் மனமகிழ்வார்கள்.

அத்தகைய விருதினை பெறுவதற்கான சான்றோரை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைத்தமைக்கும், அக்குழுவில் ஒருவனாக இந்த எளிய நடிகனையும் நியமித்தமைக்கு நன்றி…………….

கொடுக்கப்பட்ட இப்பணியினை முத்தமிழறிஞர் ஆசியோடு செவ்வனே செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்.

உண்மையுடனும், அன்புடனும்,

(ம.நாசர்)

பெறுநர்,

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தலைமை செயலகம்,
சென்னை.
கடித எண். 65/தெ.ந.ச./2022 நாள் 30.05.2022

பேரன்பிற்கும், மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,

வணக்கம். நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும், தமிழ் திரையுலகையும் பிரிக்க முடியாது. வரிவிலக்கு முதல் பையனூரில் வீடு கட்ட இடம் வரை திரைத்துறையினர் ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்தார்.

தமிழ் திரையுலகை தாய் வீடாக நினைத்து வழி நடத்திய கலைஞர் அவர்களின் பெயரால் அவரது பிறந்தநாள் அன்று தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதும்”, ரூபாய் பத்து லட்சம் ரொக்கப்பணமும் மற்றும் நினைவுப்பரிசும் தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும் என்று அறிவித்தபோதே அகமகிழ்ந்தோம்.

அதற்கு ஒரு குழு அமைத்து அந்த குழுவின் தலைவராக மூத்த இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்களையும், உறுப்பினர்களாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் அவர்களையும், மற்றொரு உறுப்பினராக நடிகரும், இயக்குனருமான திரு.கரு.பழனியப்பன் அவர்களையும் நியமித்து ஆணை பிறப்பித்து நடிகர் சங்கத்துக்கு பெருமை சேர்த்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்கள் உண்மையுடனும், பேரன்புடனும்,

(விஷால்)
பொதுச்செயலாளர்

Award in the name of the Kalaignar & 10 lakh gold .; Nasser – Vishal thanks Stalin

More Articles
Follows