அசுரனை அடுத்து தெலுங்கில் ரீமேக்காகும் ‘கர்ணன்’.; தனுஷ் கேரக்டரில் இவரா.?

bellamkonda srinivasதாணு தயாரிக்க வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘அசுரன்’.

இதன் தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரோடக்‌ஷன்ஸோடு இணைந்து தயாரித்திருக்கிறார் தாணு.

‘நாராப்பா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடித்திருக்கிறார்.

இந்தாண்டு மே 14ல் ரிலீசாகும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாணு & தனுஷ் வெற்றிக் கூட்டணியின் அடுத்த படமான் ‘கர்ணன்’ படமும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாம்.

இதற்கான உரிமையை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் இருந்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் என்பவர் பெற்று இருக்கிறாராம்.

நாயகனாக அவரது மகன் பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ் நடிக்கவிருக்கிறாராம்.

இந்த நாயகன் இதற்கு முன்பே ‘சுந்தரபாண்டியன்’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருக்கிறார்.

தற்போது, ‘கர்ணன்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார்.

இப்பட இயக்குநர் யார் என்பது விரைவில் முடிவாகும்.

இதுவரை 8 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் சாய் ஶ்ரீநிவாஸ்.

மேலும் ராஜமெளலி இயக்கிய ‘சத்ரபதி’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார் சாய் ஶ்ரீநிவாஸ் என்பது கூடுதல் தகவல்.

Karnan telugu remake updates

Overall Rating : Not available

Latest Post